Sunday, April 26, 2020

இருளில் ஒளிக்கீற்றாய்...

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் *

திரு.ஆதித்யா பூரி இந்திய பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்.

அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:

1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.

2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், மற்ற ஐரோப்ப நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனாவின் ஆரோக்கிய பாதிப்பு, இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கிறது.

3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன்,  மீண்டும் வலுவாகி விடும்.

4. எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் பிற செலவுகளை வெகுவாக குறைக்கும்.

5. நம் நாட்டின் உள் நுகர்வு அதாவது உள்நாட்டு தேவை மிக வலுவானது, அதிகமானது.

6. இந்தியாவை 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் என மேலும் சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால் கூட, அது ஒரு பெரிய விஷயமே அல்ல.

7. இந்தியாவை சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால், பங்குச்சந்தை சரிந்து, முக்கியமாக தானியங்கி வழிமுறைகள் காரணமாக பங்கு விற்பனையை கட்டாய படுத்துகின்றன. ஆனால் இதில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

8. வீட்டிலிருந்து வேலை செய்வது, நிறுவனங்களுக்கான அனைத்து செலவுகளையும் குறைக்கிறது. இது இறுதியில் கம்பெனிக்கு இலாபத்தை அதிகரிக்கும்.

இந்த இருண்ட நாட்களால், சில முக்கிய நிகழ்வுகள், இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நாடு இந்தியாவாக இருக்கும்.

2. ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமக்கு இருக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நம்மை விரைவில் இந்த சிக்கலில் இருந்து விடுபட வைக்கும்.

3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம். மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரோக்வினின் போன்றவற்றை நம்மிடம் வழக்கமாக வாங்குவதற்கு உலகம் தயாராக இருக்கும்.

4. இதுவரை சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த, உலகெங்கிலும் உள்ள பல நாட்டு நிறுவனங்கள், சீனாவை ஒதிக்கி, இனி இந்தியாவில் உற்பத்தி வசதிகளை மேற்கொள்வார்கள்.

100 அமெரிக்கா மற்றும் 200 ஜப்பானிய கம்பெனிகள் ஏற்கனவே சீனாவை விட்டு கிட்டத்தட்ட வெளியேறுகிறார்கள்.

மொபைல் போன்கள் முதல் மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா மாறும்.

இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள் என இதுவரை மதிப்பிடப்பட்டவர்கள் என்பதை, உலகின் மிக பெரிய மற்றும் சிறந்த பிராண்ட் கம்பெனிகள் இனி உணரும்.

5. வேலை வாய்ப்பு இந்தியாவில் பெருகும்.

6. நமது சைவ உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரத்தை உலக நாடுகளால் மேலும் மேலும் இனி பாராட்டப்படும்.

7. உலகெங்கிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்பாக மக்கள் வரிசையில் நிற்பார்கள்.

இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள், சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும்.

சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இனி இங்கு வருவார்கள்.

8. இந்தியாவில், குறைந்த செலவிலான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பது மற்றும் விரைவாக குணமாவது ஆகியவற்றால் உலக அளவில் பாராட்டப்படும்.

9. இந்திய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிடும். யோகா மற்றும் பிராணயம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆப்டெரால், ஃபைப்ரோஸிஸுக்கு சிறந்த தீர்வு, நுரையீரலுக்கு உடற்பயிற்சி செய்வது.

10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த, சிறந்த மூளை கொண்ட இந்தியர்கள், தங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் சம்பளமும் எதிர் பார்க்கும் அளவில் அவர்களுக்கு கிடைக்கும். ஏனெனில் மேக் இன் இந்தியா உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், மிக சுலபமாகவே கிடைக்கும்.

11. 2020 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது இந்தியாவுக்கு முழுவதுமாக சாதகமாக இருக்கும்.

மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையாக தோன்றலாம்
ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு தங்க பறவையாக - இந்தியாவை பார்ப்போம்.

ஆங்கிலத்தில் வந்த பதிவு......

இவர் கூறி இருப்பது சற்று ஆறுதலாக..நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை...(வாட்ஸ் அப்பில் கிடைத்தது..)

👍👍👍.....🙋‍♂️ BE POSITIVE

8 comments:

சிகரம் பாரதி said...

வலைத்திரட்டி: வலை ஓலை

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்

எமது திரட்டியில்: கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டு

தங்கள் பதிவு - எமது திரட்டியில்: இருளில் ஒளிக்கீற்றாய்…

சிகரம் பாரதி said...

பதிவின் படி அனைத்தும் சாதகமாக நடக்கும் என நம்புவோம்!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த அத்தியாயம் எழுத தீநுண்மி காத்திருக்கும் வேலையை முறியடித்து, நல்லதே நடக்க வேண்டும்...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.

நல்ல கட்டுரை.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லது நடக்கட்டும்

bandhu said...

இதில் பெரும்பாலான விஷயங்கள் நடக்கும் சாத்தியம் மிக அதிகமாக உள்ளது. சீனாவுக்கு எதிரான மனநிலையை உலகெங்கும் கரோனா பரப்பியிருக்கிறது. இயற்கையாகவே இது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. இந்தியா இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதே போல், உலகின் number one travel destination ஆக இந்தியா கூடிய விரைவில் மாறும்!

மனோ சாமிநாதன் said...

தலைப்பு போல திரு ஆதித்யா பூரி சொன்னவையும் மிக அழகாக இருப்பது மட்டுமல்ல, நீங்களே கூறியிருப்பது போல, கண்ணெதிரே தெரியும் அடர்ந்த இருட்டில் நம்பிக்கையெண்ணும் ஒளிக்கீற்று பிரகாசமாகத்தெரிகிறது!

Kasthuri Rengan said...

ஒகே நல்லது நடந்தால் சரி

Post a Comment