Sunday, April 26, 2020

இது புலிவால்...

இது எனக்கு வாட்ஸ்அப்ல வந்தது
உண்மையா தெரியவில்லை
தோழமைகளின் கருத்துக்களை எதிர்நோக்கி

கொரொனாவை விட கொடூரமானது ஆன்லைன் ரம்மி.

ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் ரம்மி கொண்டு போய்விடும். பொதுமக்கள் போண்டி ஆகிவிடுவார்கள் - அது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும்

இந்தியா சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும் மேல்தட்டு மக்களின் கிளப்புகள் - மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான்

இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள் இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது கூகுள் நிறுவனம் தான் என்பது கொடுமையிலும் கொடுமை

சுந்தர் பிச்சையின் கேரியரில் இது ஒரு கரும்புள்ளி பிச்சை பொதுமக்களை பிச்சை எடுக்க வைக்கப் போகிறார். ன்லைனில் எப்படி பணம் பறிபோகிறது

ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் நீங்கள் உடனே ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய் என்று துண்டில் இடுவார்கள்

விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் வரும் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விபரத்தை அனுப்புவீர்கள்

அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு "சிறப்பு சாப்ட்வேர்" மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும்

உங்கள் அக்கவுண்டில் 1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்

நீங்கள் ரம்மி விளையாட்டில் கில்லி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள் அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும்.. நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும்

இதுதான் இன்றைய நிலைமை ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்..அது இந்தியாவில் சட்ட விரோதம் அதை தடை செய்ய வேண்டும் எனவும் நான் பலமுறை பதிவுகள் இட்டுள்ளேன்

பாமகா நிறுவனர் ராமதாஸ் மட்டும் ஆன்லைன் ரம்மியால் விளையும் ஆபத்து குறித்து கூறி..அதனை தடை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தார் அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை

மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப்போகும் ஆபத்து குறித்து உணரவில்லை தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் போண்டி ஆகிவிடுவார்கள் எனவே,சமூக அக்கறையோடு.. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரியும் அதன் ஆபத்து குறித்து அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டும்

அரசியல் காட்சிகள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வழியுறுத்த வேண்டும் மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை இந்தியாவில் தடை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்

கொரோனாவை விட கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில்.. தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. தடைசெய்..தடைசெய் ஆன்லைன் ரம்மி எனும் சீட்டு விளையாட்டை தடை செய்  ...இது புலிவால் பிடித்துவிடவேண்டாம்..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்... இதுவும் ஒரு போதை...

இதை விட இன்னும் நிறைய முகநூலில் Apps- உண்டு... அதை பயன்படுத்தி, தனது பெருமைகள் பலவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள்... அவை நம் தகவல்களை எளிதாக திருடும்...

bandhu said...

இது போன்ற சூதாட்டங்களை தடை செய்தே ஆகவேண்டும். இதில் google க்கு எந்த பொறுப்பும் இல்லை என நினைக்கிறேன். அவர்கள் தளத்தில் யார் விளம்பரம் செய்தாலும் அதை காண்பிப்பார்கள், தடை செய்யாத வரை.

நெல்லைத்தமிழன் said...

ஆன்லைன் ரம்மி - சார்... குடிப்பதில் ஆரம்பித்து போதையான சமாச்சாரத்தில் குடும்பங்கள் அழிவது புதிதா? இதில் ரம்மியை மட்டும் ஏன் தடை செய்யணும்?

புத்தி உள்ளவன் பிழைக்கட்டும், இல்லாதவன் குடித்து அழியட்டும் என அரசுகளே நினைக்கும்போது, ரம்மியினால் மட்டும் கெட்டுப் போவார்கள்னு ஏன் நினைக்கணும்?

வெங்கட் நாகராஜ் said...

இந்த மாதிரி நிறைய ஆன்லைனில் இருக்கிறது. இதுவும் போதை மாதிரி தான். பார்த்து சூதானமாக இருப்பது நல்லது.

Post a Comment