Sunday, May 10, 2020

கர்ப்பக் காலக் கோளாறுகள்...

எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

5 comments:

G.M Balasubramaniam said...

நினைத்ததை கவிதையில் சொல்லும் உங்களுக்கு பாராட்டுகள்

kowsy said...

கரு கிடைத்துவிட்டால் கலைவதற்கு முன் படைத்து விட வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

அருமை ஐயா.. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

குறைப்பிரசவத்துக்கும் மனசு இருப்பதில்லை.

Post a Comment