Wednesday, May 6, 2020

பூந்தியாகும் லட்டுகள்

"ஸ்வீட் மாஸ்டர் பேசுகிறார்
என்னன்ன்னு கேளுங்கோ "என
அலைபேசியயைக் கொடுத்துப்போனாள் மனைவி

வாங்கிப் பேசினேன்

"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்
லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ
சின்ன ஆர்டர்ன்னு
அஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்
கொஞ்சம் பதம் விட்டுவிட்டான்
லட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்
மன்னிச்சுடுங்கோ
பூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே " என்றார்

சரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது

"சரி அப்படியே செய்துடுங்கோ
இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் "என்றேன்
ஏதாவது சொல்லவேண்டுமே என்று

"ஒண்ணும் இல்லேண்ண
இரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்
சைஸ்தான் வித்தியாசம்
இது உருண்டை அது உதிரி " என்றார்

பல சமயம்
எப்படி முயன்றும்
ஒரு கட்டுக்குள் அடங்காது
வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகளின் ஞாபகம்
ஏனோ எனக்கு உடன் வந்து போகுது.......(yaathoramani.blogspot.com ) 

6 comments:

நாகு கணேசன்... said...

நானும் இப்படித்தான் எழுதி விடுகிறேன் அய்யா

ஸ்ரீராம். said...

உண்மைதான் இல்லை?!

நெல்லைத்தமிழன் said...

ஆஹா.... இப்படி ஒரு காரணமா? நான், அவர்களுக்கு (பெரும்பாலானவர்களுக்கு) மரபுக் கவிதை எழுதும் திறமை இல்லாத்தால் மடித்து மடித்து வசன கவிதையாக ஆக்கிவிடுகின்றனர் என நினைத்தேன்.

அதுசரி... ரொம்ப நல்ல பூந்தி (நாங்க குஞ்சாலாடுன்னு சொல்லுவோம்) எங்க கிடைக்கும். நானும் ஏகப்பட்ட கடைகளில் வாங்கிச் சாப்பிட,டு, சிறுவயதில் கல்யாண வீடுகளில் சுவைத்த டேஸ்ட் கிடைக்காமல் இருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

எது'வென்றாலும்'
சுவையே
முக்கியம்...

கரந்தை ஜெயக்குமார் said...

திண்டுக்கல்லாரின் கருத்தினை வழி மொழிகின்றேன்

வெங்கட் நாகராஜ் said...

பூந்தியாக இருந்தாலும் லட்டாக இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் - அது மட்டுமே தேவை.

Post a Comment