மதுபானக் கடைத் திறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்கள் யாரும் தன் கட்சியினர் யாரும் குடிக்கக் கூடாது என ஏன் சொல்வதில்லை...சொன்னால் கட்சி காணாமல் போய்விடும் அதனால்தான். தங்கள் தெருவில் மதுக்கடையைத் திறக்க அரசு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டும் பொதுஜனம் ஏன் குடிக்க வருபவர்களை மறிப்பதில்லை..அதற்குள் சொந்தபந்தம் உண்டு..வீண்பிரச்சனை வேண்டாம் என்றுதான்... விதிமீறலுக்கு குடிமகன்களை சாலையில் அந்த அடி அடித்த காவலர்கள் அதே விதிமீறலுக்கு "குடி"மகன்களை பாரினில் அடிப்பதில்லை ஏன்.?அடித்தால் வருமானம் குறையும்..அதனால் அரசுக்கும் வலிக்கும் அதனால்தான். மதுக்கடை திறப்பதால் சமூக விலகல் பாதிக்கும் எனத் தெரிந்தும் அரசு அதைத் திறந்தது எதனால்...சமூக விலகல் பாதிப்பால் குரோனா பெருகும் ..குடிப்பவர்கள் சாவதால் குடியும் படிப்படியாய் குறையும் என்பதால் அதுசரி இத்தனை களேபரங்களுக்கு இடையில் குடிக்காத பெரும்பாலோர் இந்தக் கருமாந்திரங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருப்பது எதனால்.. இனத்தால் மதத்தால் வர்க்க பேதத்தால் இணைய முடியாதபடி எல்லோரும் பிரிந்து கிடப்பதால்தான்...
4 comments:
ஆகக்கூடி மதுவால் தொல்லைதான்!
மன நோய்...
மது அரக்கன் இந்த மாந்தர்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறான். மதுவும் விலகப் போவதில்லை. மனிதர்களும் திருந்தப் போவதில்லை.
தெரிந்தே செய்யும் தவறுகள்
Post a Comment