Saturday, May 9, 2020

மூலம் அறிதலே தெளிவு

பயணத்தின் இலக்கே
பயணத்தை அர்த்தப்படுத்தும்

பயணத்தின் அர்த்தமே
தூரம் குறித்துச் சிந்திக்கும்

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

இத்தனையும்  பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

எழுத்தின் நோக்கமே
கருவை முடிவு செய்யும்

கருவின் தாக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு
சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
முதலில்
மூலம் அறியும்
ஞானம் பெறுவோம்

பின்எச்செயலையும்
நிறைவாய்ச்   செய்து
சுகமாகவே
சிகரம் தொடுவோம்

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயணமும் எழுத்தும் - நல்ல ஒப்பீடு.

ஸ்ரீராம். said...

ஒன்றையொன்று சார்ந்தே அடுத்தது...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை. பயணத்தையும், சிந்தனைகளால் எழும்பும் எழுத்துக்களையும் ஒப்பிட்டு கூறியதை ரசித்தேன். இரண்டையும் இணைத்து அழகான கவிதையாக்கியதற்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

மனோ சாமிநாதன் said...

பயணமும் சரி, எழுத்தும் சரி, நோக்கமும் மூலமும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சிகரம் தொட முடியும் என்று அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!!

Kasthuri Rengan said...

சிகரம் தொடுவோம் தோழரே

ரமேஷ்/ Ramesh said...

அற்ப்புதமான கவிதை

Post a Comment