Tuesday, June 1, 2021

முதல் பிரசவம் (9 /--)

 விமர்சன ஆர்வத்தில் தூங்க 

வெகு நேரம் ஆனதால் காலையில்

எப்போதையும் விட தாமதமாகவே 

எழ நேர்ந்ததால் நூலகம் செல்லவும்

அன்று தாமதமாகிவிட்டது


நான் உள்ளே நுழைகையில் கைப்பிரதித்

தொடர்புடையவர்கள் அனைவரும் 

நூலகரைச்சுற்றி சேரில் அமர்ந்திருந்தார்கள்..


நான் உள்ளே நுழைந்ததும் " வாங்க

கவிஞரே வாங்க வாங்க ..உங்களுக்காகத்தான்

எல்லோரும் காத்திருக்கிறோம் "

என்றதும் எனக்கு வெகு லஜ்ஜையாயிருந்தது.


என்னையும் ஒரு சேரை எடுத்து அவர்

முன்னால் உட்காரச் சொன்னார்.

நான் இதுவரைஅவர் முன்னால் அப்படி

உட்கார்ந்ததில்லை என்பதால்

 உட்காரத் தயங்கினேன்..


அதற்குள் காண்டீபனே ஒரு சேரை 

எடுத்து வந்து அவர் அருகில் போட்டு

என் தோள்பட்டையை அழுத்தி 

உட்கார வைத்தார்..


பின் நூலகர் " உண்மையில் கைப்பிரதி

மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது.

புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை

எனது கருத்தை பின் பக்கம் நானே

விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்

படித்துக் கொள்ளுங்கள் " எனக் கைப்பிரதியை

சேதுப்பாண்டியனிடம் கொடுத்தார்.


அவர் படித்து அடுத்தவரிடம் கொடுக்க

அப்படியே கைமாறி கை மாறி என் கையில்

வந்து சேர்ந்தது..அவர் அதில் அனைவரின் 

படைப்புகள் குறித்தும் சுருக்கமாக தனித்தனியாக

எழுதி இருந்தார்.


அதில் என் கவிதை குறித்து இப்படி

எழுதி இருந்தார்." அற்புதமான கவிதை

இது வரி வடிவில் வேண்டுமானால் முதல்

கவிதையாக இருக்கலாம்.மற்றபடி இயல்பாகவே

கவித்துவமிக்கவராக இல்லாத ஒருவரால்

முதல் கவிதையையே இவ்வளவு சிறப்பாக

எழுத முடியாது..வாழ்த்துக்கள்" என

எழுதி இருந்தார்.


தலையில் ஒரு பானை ஐஸ் கட்டியைக்

கொட்டியது போல் இருந்தது..


பின் நூலகர் முன் வராண்டாவில் பேப்பர்

பகுதியில் படித்துக் கொண்டிருந்த என் வயதொத்த

பையனை அழைத்து இதை உள்ளே

வார மாத இதழ்கள் இருக்கும் பகுதியில்

போடச் சொல்லிவிட்டு அவர் கணக்கில்

உடுப்பி கடையில் ஆறு கேஸரியும்

இரண்டு மிக்ஸர்  பாக்கெட்டும் வாங்கி வரச்

சொன்னார்.


எப்போதும் முக்கியஸ்தர்கள் யாரும் வந்தால்

இதுபோல் கடைக்குச் செல்பவனாக நானே

இருந்திருக்கிறேன்.இப்போது முக்கியஸ்தர்போல்

நானிருப்பதே மிகப் பெரிய கௌரவத்தை

அடைந்தது போல் இருந்தது..


பின் நூலகர் "எதிரே சுதந்திரா ஷாப்பில் எனக்கு

அக்கவுண்ட் உள்ளது.கைப் பிரதிக்கான

பேப்பர் கலர் பென்சில் எதுவானாலும்

நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்..

ஒவ்வொரு முறையும் கேட்கச் சங்கடப்படுவீர்கள்

என்பதால்தான் இந்த ஏற்பாடு

வேறு காரணமில்லை "என்றார்


நாங்கள் அவருக்கு எப்படி நன்றி சொல்வது

எனத் தெரியாமல் மலைத்து நின்றோம்


அதற்கிடையில் தோழர் நூலகரிடம்

ஒரு வெள்ளைத் தாளை வாங்கி என்னிடம் கொடுத்துஎன் கவிதையை நிறுத்தி அழகாக எழுதிகீழே என் வீட்டு விலாசத்தையும்எழுதித் தரச் சொன்னார்.


எழுதி கொடுத்து விட்டு மெல்ல

"இது எதற்கு " என்றேன்


" சும்மா பசிக்கிற போது வறுத்துத் திங்கத்தான்"

எனச் சிரித்தபடிச் சொல்லி நான்காக 

அழகாக மடித்து பையில் வைத்துக் கொண்டார்


அவர் எதற்காக வாங்கினார் என்பது

இரண்டு மாதம் கழித்து  எனக்குத் தெரிய

விக்கித்துப் போனேன்..


(தொடரும் )

5 comments:

ஸ்ரீராம். said...

தீக்கதிரிலோ அல்லது வேறு பத்திரிகையிலோ வெளிவந்திருக்கும் என்று யூகிக்கிறேன்.    முதல் அக்கவிதை, முதல் பாராட்டு எதுவும் வாழ்வில் மறக்காது.  எங்கள் நூலகர் இந்த அளவு வாசிப்பனுபவம் இருப்பவர் அல்லர்.  பிழைப்புக்கு வேலைக்கு வந்தவர்!

KR Kumar said...

Megalai

KR Kumar said...

MEGALAI

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சுவாரசியமாக உள்ளது ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... பத்திரிகை எதற்கும் அனுப்பி இருப்பாரோ... மேலும் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

Post a Comment