தலைப்பின்றி
எழுதியவர் பெயருமின்றி
ஒரு கவிதையைக் கொடுத்து
வாசிக்கச் சொன்னார்
எம் பத்திரிக்கை ஆசிரியர்
படித்துப் பார்த்தேன்
எதுவும் புரியவில்லை
"எதுவும் புரிந்ததா ?" என்றார்
"இல்லை " என்றேன்
பின் தலைப்பை மட்டும் சொல்லி
"இப்போது புரிகிறதா ? " என்றார்.
"புரிவது போலவும் இருக்கிறது
புரியாதது போலவும் குழப்புகிறது "
என்றேன்
பின் மெல்லச் சிரித்தபடி
எழுதியவர் பெயரைக் காட்டி
"இப்போதாவது புரிகிறதா ? " என்றார்.
அவர் பிற(ர)பலக் கவிஞராய் இருந்தார்
மீண்டும் "இப்போது..."என்றார் ஆசிரியர்
நானும் இப்போது மெல்லச் சிரித்தபடி
"புரிவதோடு மட்டும் இல்லை
மிகச் சிறந்த கவிதையாகவும்..."என்றேன்
3 comments:
ஆகா!
படைப்பாளியைப் பொறுத்து (பார்த்து) பாராட்டும் பேதைமை...
நல்ல சோதனை.
Post a Comment