இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்எப்போதும் போலவே
இயற்கைக்கு எதிராக
எங்கள் வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள் செய்தக் கொடுமைகளை
அது தானாகத் தன்னைச்
சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல
அது எங்களுக்குப் பேரிடராய்
பெரும் அழிவாய்
எம் அன்றாட வாழ்வைப் பாதிக்க
இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத் தெளிவாய்ப் புரியக்
காடுகளை அழிப்பதில்லை
கண்மாய் குளங்களை ஆக்கிரமிப்பதில்லை மண்வளமகெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என
இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே
ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட
இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க
இனி குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக் குடிகாரனைப்போலவே
இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே
செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்
எண்ணத்தால் இமயம் அசைப்பதில் வெற்றுச் சொல்லால் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்
இம்முறையும் .....
3 comments:
சரி தான் (!)
உறுதிமொழியை சீக்கிரம் முடிக்கச் சொல்லுங்க... டாஸ்மாக் மூடிடுவாங்க.. போவணும்...
டிட்டோ! அடுத்த முறை உறுதிமொழி எடுக்க இப்போதிலிருந்தே தயார் செய்து கொண்டிருக்கிறோம்!!!!!
கீதா
Post a Comment