தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)
6 comments:
சிறப்புகள் பெருகட்டும்.
டும் டும் டும். 21 ஐ தொலையட்டும் என்று வழியனுப்பி 22ஐ நம்பிக்கையுடன் வரவேற்கும் இன்றைய கவிதை பாரதியாரையும் (நிற்பதுவே...) நினைவூட்டியது.
அருமை.
Jayakumar
அருமை...
முதல் இரண்டிரண்டு வரிகள் போல் மற்றவைகளும் இருப்பதே நல்லது...
நடுவில் உள்ள இரு வரிகளை மட்டும் படித்தால்...
...
அடடே...! சில வருட நம் நாடு நடப்பு...!
ஹா...ஹா...
சிறப்பான வேண்டுதல்! வாழ்க வளமுடன்
நல்ல டும்டும்டும் அனைத்தும் பெருகிடட்டும்! 2022லும் 2022லிருந்தும்.
கீதா
🙏👌
Post a Comment