Friday, December 31, 2021

சுகவாழ்வு கொள்வோம்..

 சக்தி இருந்தும்

சமாதானமாய்

வசதி இருந்தும்
எளிமையாய்

அதிகாரமிருந்தும்
பணிவாய்

அறிவிருந்தும்
அடக்கமாய்

நியாயமிருந்தும்
பொறுமையாய்

பாண்டித்தியமிருந்தும்
மிக இயல்பாய்

மொத்தத்தில் ....

சந்தோஷத்தில்
துள்ளாது

சஞ்சலத்தில்
துவளாது

இருப்பவன்
அகராதியில்

என்றும்

வெற்றியன்றி
தோல்வியில்லை

சுகமன்றி
சங்கடங்களில்லை

இயற்கையின்
என்றும் மாறா

நியதி  இதனை

மனதில் தெளிவாய்
மறையாய்க் கொள்வோம்

இன்றைய புத்தாண்டு நாள் முதல்

இனி வாழ் நாளெல்லாம்
சுகவாழ்வு கொள்வோம்

7 comments:

Unknown said...

யதார்த்த வாழ்க்கையின் அற்புத சொற்கள்

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு அன்று சிறப்பான யோசனை. பாராட்டுக்கள். தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

ஞான நிலை!

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை் ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான சிந்தனை

துளசிதரன்

மாதேவி said...

நல்ல அறிவுரை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Satheesh Muthu Gopal said...

புத்தாண்டு வாழ்த்துகள்

Post a Comment