Monday, January 17, 2022

காலச் சூழல்..

 காலச் சூழல்

தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை


6 comments:

ஸ்ரீராம். said...

எம்முள் எந்த மாற்றமும் இல்லை;  எமக்குத் தேவையானது எளிதில் கிடைப்பதுமில்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதனைத் தவிர்க்கவும் முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல கருத்துள்ள கவிதை நன்று. காலம் மாறிக் கொண்டேதான் இருக்கும்.நாம் நம் இயல்பின்படி சென்று விட்டால் எவருக்கும், எதற்கும் பாதகமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Jayakumar Chandrasekaran said...

ஐயா நான் முரண்படுகிறேன். தேவைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதே என் கருத்து. தாத்தாவிற்கு தாத்தா காலத்தில் நெல்லு சோறு என்பதே பண்டிகை காலத்தில் தான். தற்போது 10 வகை பதார்த்தங்கள் இல்லாவிட்டால் பண்டிகை இல்லை. வருடத்திற்கு ஒரு வேஷ்டி சட்டை புடவை என்பது போய் மாதத்திற்க்கு ஒன்றாக தேவை அதிகரித்து இட்டது. இது போன்று பல உதாரணங்கள் கூறலாம். இது காலச்சூழல் அல்லாது வேறு என்ன? 

வெங்கட் நாகராஜ் said...

மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது எனும் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

Post a Comment