Saturday, January 22, 2022

படித்து விட்டு...?

 


நீங்கள் பிஜேபிக்கு வோட்டு போடுங்க ; இல்லை 60வருடம் ஏமாற்றி பிழைக்கும் திமுகவுக்கு வோட்டு போடுங்க. அது உங்கள் இஷ்டம் - ஆனா பிஜேபி மோடி ஆதரவாளராக நான் கேட்டு கொள்வது :


1.பிரதமர் காப்பீட்டு திட்டம்( Pradhan Mantri Suraksha Bima Yojana)


வருடம் 12ரூபாய் மட்டுமே உங்கள் வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனால் எதிர்பாராத விபத்துகளுக்கு 2லட்சம் வரை உங்களுக்கு காப்பீடு கிடைக்கும்.  அதிகம் பயணம் செய்யும் அனைவரும் இதை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள். 


2015 புள்ளிவிவரம் கூறும் தகவல்படி - வருடத்திற்கு சுமார் 2,75,000நபர்கள் விபத்துகளில் பெரிய காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 400பேர் சாலை விபத்தால் உயிர் இழக்கிறார்கள். உடனே இதை அரசு தான் காரணம் என்று வழக்கம் போல குறை சொல்வதே புத்தியாக இல்லாமல் கொஞ்சம் பிரச்சனையும் எதார்த்தம் புரிந்து காப்பீட்டை எடுத்து கொள்ளுங்கள்.


(தயவு செய்து உடனே கார்ப்பரேட் எதிர்ப்பு!!! - ஒருதனுக்கு 12 ரூபாய் அப்போ 10கோடி மக்கள் , 100கோடி மக்கள் என்று கிறுக்கன் போல கணக்கு போடாதீர். உலக நாடுகள் அனைத்திலும் இது தான் காப்பீட்டு நடைமுறை. எல்லோருமே உங்களை ஏமாற்றுவது போல ஒரு வியாதி பிடித்திவிட்டது தமிழகத்தில். நீங்கள் சிந்திக்க வேண்டியது: வருடம் 12 ரூபாய் கொடுத்தேனா - 2லட்சம் காப்பீடு - இது உனக்கு லாபமா? இல்லையா? என்று மட்டும் யோசி. அதையும் அரசே கட்டலாமே என்று ஆரம்பித்துவிடாதே.)

------------------------------------------

2.ஓய்வுஊதிய திட்டம் (Atal Pension Yojana)


60 வயது தாண்டி ஒரு தடுமாற்றம் இல்லாத வாழ்வை கிடைக்க மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியம் தேவை. அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பின் நிம்மதியாக வாழ வழிசெய்யும் ஓய்வூதியம் என்பது அரசு கொடுப்பது அல்ல - அவர்கள் வருமானத்தில் பிடித்தம் செய்து அவர்களுக்காக உருவாக்கபட்ட பாதுகாப்பு அது.


அது போல அனைவரும் கிடைக்க வழிவகை செய்யும் இந்த திட்டத்தில் கட்டாயம் காய்கறி, மீன் வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபரிகள் முதல் அனைத்து  - தொழிலாளர்கள் வரை அனைவர் கட்டாயம் செய்ய வேண்டியது நம் கடமை.  மாதம் 168ரூபாய் சேமிப்பில் - ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் 4000கிடைக்கும் என்றால் அது பாதுகாப்பான திட்டம் தானே. 

-----------------------------------------


3.இறப்பு காப்பீட்டு (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)


குடும்பத்தில் தலைவராக ஆண் / பெண் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்க - ஆனா எதிர்பாராத மரணம் உங்கள் வீட்டை நட்டாத்தில் நிறுத்திட கூடாது. நல்ல பொறுப்பான குடும்ப தலைவனுக்கு அழகு எது? " குடும்பம் பொருளாதார நிலைதன்மையுடன்(economic stability) இருக்க வேண்டும் - அது குடும்ப தலைவன் இருந்தாலும் இல்லை என்றாலும்". 


அதாவது நீ ஒருவேளை எதிர்பாராமல் இறந்த பின் குடும்பம் பொருளாதார பாதுகாப்பு இல்லாமல் நிற்கும் என்றால் நீ சரியான பொறுப்பான தலைவன் இல்லை. எனவே அப்படி சூழல் வரும் என்றால் ஒரு குறிப்பிட்ட உதவி குடும்பத்திற்கு சேரும் வண்ணம் ஒரு பாதுகாப்பினை உருவாக்கி கொள்.


successfull life அப்டி சொல்றதுக்கு அர்த்தமே  economical balancing mechanism என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார். சின்ன சேமிப்பு அதை செய்யும் என்றால் அதை எடுத்து கொள்வதில் என்ன தவறு இருக்கு? 


எல்லாவற்றிற்கும் அரசே செய்ய முடியுமா? 


வருடம் 330 ரூபாய் - எதிர்பாராத மரணம் என்றால் வீட்டுக்கு 2லட்சம் சென்று சேரும். ஒரு படத்திற்கு ஒரு டிக்கெட் செலவு கூட கிடையாது இது.

------------------------------------------------------


4.பிரதம மந்திரி வங்கி கணக்கு (Pradhan Mantri Jan Dhan Yojana)


மேல இதுமே எனக்கு முடியாது ?


சரி அனைவரும் இந்த கணக்கை உருவாக்கி அதில் சம்பளம் வரவு வையுங்கள். பெரிய உதவி அல்ல 1 லட்சம்  வரை ஒரு உதவி கிடைக்கும் எதிர்பாராத விபத்துக்கு. மேலே எதுவும் செய்ய முடியவில்லை என்றால் இதையாது செய்யுங்கள்.


இந்த வங்கி கணக்குக்கு எந்த மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை. வெறும் கணக்கை ஒழுங்க பயன்படுத்துங்க என்று மட்டும் தான் மோடி கூறுகிறார்.


இந்த மேலே நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா   வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். 


இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - இதை ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. 


---------------------------------------------------------


நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது என்ன??? ஒழுங்கா நல்ல முதலீட்டு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.


1.Kisan Vikas Patra :


அது என்ன????? அரசு ஊழியர்கள் மற்றும் கொஞ்சம் வருமானம் சேமிக்கும் அளவுக்கு  வருமானம் உள்ளவர் முதலீடு என்ன??? நிலம் , தங்கம்.


நிலம் வாங்கி போடுவேன் - இல்லை தங்கம் வாங்கி போடுவேன் என்று இருப்பது நல்ல முதலீடு கிடையாது. தங்கம் இனியும் நல்ல முதலீடு கிடையாது அதை முதலில் தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். தங்கம் நகை வாங்கி சேர்ப்பதே ஒரு வியாதி, அதை முதலில் விட்டு ஒழியுங்கள். 


இதை கொஞ்சமாது புரிந்து கொள்ளுங்கள்:


10கிராம் தங்கம் விலை வைத்து ஒரு சின்ன கணக்கு யோசிக்கவும்:


1985ல் 10கிராம் தங்கம் விலை - 2130 ருபாய் 

1990ல் 10கிராம் தங்கம் விலை - 3200 ருபாய் 


அதாவது 1985ல் போட்ட முதலீடு 1990ல் ஏறக்குறைய 50% அதிக ரிட்டன் தருகிறது. ஆக நல்ல முதலீடு.


2000ல் தங்கம் விலை - 4400 ருபாய்  (1990-2000 பத்து வருடத்தில் 37% கூடியுள்ளது. ரிட்டன் 37% என்பது நல்ல முதலீடு தான்)

2010ல் தங்கம் விலை - 18,500 ருபாய் (2000-2010 இந்த பத்து வருடத்தில்தான் 320% கூடியுள்ளது. ரிட்டன் 320% என்பது மிக மிக நல்ல முதலீடு.) ஆனால் 


2015ல் தங்கம் விலை - 22,500 ருபாய் (அடுத்த 5  வருடத்தில்தான் 21% கூடியுள்ளது. ரிட்டன் 21% என்பது தங்கத்தை பொறுத்தவரை ரெம்ப நல்ல ரிட்டன் கிடையாது. செய்கூலி , சேதாரம் அது இது என்று பார்த்தால் ஒன்னும் பெரிய லாபமான முதலீட்டாளர்களுக்கு கிடையாது.)


சரி கடந்த கடைசி 5வருடத்தில்????? கொஞ்சம் நீங்களே யோசிக்கவும் அந்த முதலீடு நஷ்டம் தான். 


2011ல் தங்கம் விலை - 28,667 ருபாய் ; இன்று 2017ல் 29408ரூபாய் - ஆக மொத்தம் இந்த 7 வருடத்தில் வெறும் 2.58%தான் ரிட்டன்???? ஆனால் அதில் செய்கூலி சேதாரம் இதுலாம் கொஞ்சம் யோசிக்கவும்... இதுவா நல்ல முதலீடு? நஷ்டம் என்று கண்கூட தெரியவில்லையா ???? இனியும் தங்கம் விலை எப்படியே தான் நீடிக்கும்.


அதற்கு பதிலாக வருடம் 8.7% உத்திரவாதம் தர அரசின் Kisan Vikas Patra முதலீடு செய்யலாமே ????? நல்ல முதலீடு பாதுகாப்பானது தானே. அரசு உத்திரவாதமும் கொடுக்க இதில் ஏன் முதலீடு செய்வது இல்லை மக்கள் அதிகம்? மீச்சுவல் பண்ட ,அரசு பத்திரங்கள் பல நல்ல முதலீடுகள் உண்டு- நல்ல ரிட்டன் கிடைக்கும் முதலீடு செய்யும் பக்குவத்திற்கு வாருங்கள். இன்னும் பழைய காலம் போல தங்கம் , நிலம் என்று இருக்க வேண்டாம்.


நீண்டகால முதலீடாக தொழில் துறைகளில் ஏதாவது கம்பெனி சேர் வாங்கி போடுங்க. அது 15% வரை ரிட்டன் கொடுத்தால் கூட போதும். ரிஸ்க் ????


ரிஸ்க் என்று பார்த்தால் அனைத்திலுமே உண்டு. எனவே உங்களுக்கு தகுந்த முதலீட்டை தேர்வு செய்யும் பொது கொஞ்சமாது நிலம் , தங்கம் தாண்டி வேறு நல்ல முதலீடுகளை தேடவும். முதலீடு அரசுக்கும் , தொழில் துறைக்கும் உதவியாக இருக்க வேண்டும் தவிர முடங்க கூடாது. அது முதலீட்டாளர்கள் உங்களுக்கும் நல்லது- நாட்டுக்கும் நல்லது.

------------------------------------------------


இறுதியாக : 


10வயது கீழ் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வருடம் 1000 ரூபாய் முதல் 1லட்சம் வரை Sukanya Samriddhi Scheme திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் என்கிறார் மோடி- அது அந்த பெண் குழந்தைக்கு  9.20% வருடம் ரிட்டன் கிடைக்க அரசு வழி செய்துள்ளது, உறுதியும் அளிக்கிறது. அவள் கல்வி , வேலைவாய்ப்பு , எதிர்காலம் உறுதிபடுத்தபடும். ஒருநாளும் யாருக்கும் அவள் பாரமாக ஆவது இல்லை இந்த விதம் சரியான திட்டமிடல் இருந்தால்.


அரசு ஒரு system கொண்டு வருவது உங்கள் நல்லதுக்கு தான். எப்போ நாம ஒரு குடிமகனாக குறை சொல்ல தகுதி வரும் என்றால் - நாம் அரசின் சரியான முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் போது தான். 


எந்நேரமும் எதையாது அரசு இலவசமா கொடுக்கும் நாம வாங்கிகணும் என்ற ஒருவித மன நோய் எப்படியோ நாம் பழகி கொண்டோம் அதை திருத்தவும். இந்தியாவில் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு என்றால் அரசு ஏதாவது கொடுக்கும் - மக்கள் வாங்கிக்கணும். ஏன் என்றால் வோட்டு போடுகிறார்கள்!!!!


இன்னொரு முக்கியமான விஷயம்:


தயவு கூர்ந்து புதிய போராளிகளை நம்பாதீர் - எல்லாமே நாசம் என்று தான் அவனுக பேசி திரிவானுக. நல்லதே அவனுகளுக்கு கண்ணில் படாது. அவனுக நோக்கம் மக்களுக்கும் அரசுக்கு பகையை தூண்டிவிடுவது மட்டுமே. 


உங்களுக்கு ஒன்று தெரியுமோ ?????


12ருபாய் எடுத்ததுக்கு- வங்கி மீது வழக்கு போட்டு 8000ரூபாய் வாங்கியது பெருமையாக சொல்லி திரியும் இந்த போராளிகள் - அந்த 12ரூபாய் மூலம் அவனுக்கு 2லட்சம் காப்பீடு அரசு தரும் என்ற நல்ல விஷயத்தை ஏன் மறைக்கிறான் ????? சொல்லாமல் எடுப்பது தவறு தான் அதுக்காக அவன் காரணம் சொல்லியும் காசு செலவு பண்ணி இவன் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்????? அது தான் நவீன போராளிகள்.


இதுலாம் நல்ல மனிதன் எவனாது செய்வானா???? 


போராளி என்று திரிபவன் 90% பிரிவினைவாதிகள் ; இவனுகளை தூண்டிவிட்டு வருடம் முழுவதும் அரசியல் ஆதாயம் பார்ப்பது நம்ம திமுக. அதுக்கு பக்க துணையாக நிற்பது திக. அது இல்லாமலா 60வருடம் மேல் பல ஆயிரல் கோடி எல்லாம் ஊழல் செய்யும் திமுக இன்னும் ஆட்சியை பிடிக்க முடிகிறது? 


இன்றைய திமுக எண்ணம்  எளியது : அதிமுக ஜெயாவுக்கு பின் வீழ்ச்சி உறுதி - மாற்று என்று பார்த்தால் வேறு 64,000பூத் கமிட்டி போட்டு தேர்தலை சந்திக்க திராணி பிஜேபி உண்டு. அதை இப்போவே முழுசா அழிச்சுட்டா கனிமொழி பேரன் வரை திமுக ஆட்சி நீடிக்கும் என்பது தான் இவர்கள் திட்டம். அதுக்கு வசதியா இந்த போராளிகள். போராளிக்கு பின்னல் நிற்கும் கூட்டம் எல்லாமே நம்ம திக , திமுக அனுப்பி வைக்கும் கூட்டம். இதனால் வேறு கட்சி வளராது என்பது அவன் திட்டம்.


நான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம் ; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள். எப்போ பாரு கார்ப்பரேட் எதிர்ப்பு அரசு எதிர்ப்பு நேரு இருந்ததால் தான் கேரளாவில் எவனும் தொழில் தொடங்க மாட்டான். இப்போ தமிழகமும் அந்த நிலைக்கு செல்கிறது. 


நல்லதை பேசு ; நல்லதை பின்தொடரு ; நாலு நல்ல விஷயம் தினமும் தெரிந்து கொள்; நல்ல விஷயத்தை பரப்பு. அப்போதான் நல்லது நடக்கும். 

எப்போ பாரு நாடு நாசம் , ஊர் நாசம் என்று எதையாது பரப்பிகிட்டே இருப்பது "நானும் போராளி" என்ற ஒரு வியாதி.


மோடி அடிகடி வருத்தம் தெரிவிப்பது "மக்கள் முதலீட்டு முறை - காப்பீட்டு முறை இவைகளில் நல்ல வழிகாட்டப்பட்ட வேண்டும்" என்று. அதன் நியாயமானா நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள். அதுக்கு மேல உங்க உங்க இஷ்டம்.

2 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க மோடி ஜி!..

Unknown said...

நல்ல செய்தி வாழ்க நமது பிரதமர்

Post a Comment