என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை
போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை
தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை
உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை
வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை
வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை
6 comments:
Delete Comment From: தீதும் நன்றும் பிறர் தர வாரா...
Blogger Jayakumar Chandrasekaran said...
இதைத்தான் நேர்மறை விளக்கம் என்று கூறுவதோ.
அருமையான பாடல். அங்கலாய்ப்பு கோபம் போன்றவை இல்லை. மனதில் தோன்றியது வெளிப்பட்டது.
ஏடொன்று எடுத்து எழுதினேன்
பாட்டாகியது அதுவும் தானே
பொருள் ஒன்றும் இல்லை என்ற குறை தீர்க்க
அருள் தந்தான் அவனும் தானே.இதைத்தான் நேர்மறை விளக்கம் என்று கூறுவதோ.
அருமையான பாடல். அங்கலாய்ப்பு கோபம் போன்றவை இல்லை. மனதில் தோன்றியது வெளிப்பட்டது.
ஏடொன்று எடுத்து எழுதினேன்
பாட்டாகியது அதுவும் தானே
பொருள் ஒன்றும் இல்லை என்ற குறை தீர்க்க
அருள் தந்தான் அவனும் தானே.
இதுவே இப்பதிவின் சுருக்கம் என்பது சரிதானெ?
வாழ்த்துரைக்கு மிக்க நன்றி...வாழ்த்துகளுடன்...(நீங்கள் எடிட் செய்வது எளிதானதாக இருக்கும்)
கவிதை நன்று. தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
தொடர வாழ்த்துகள் ஐயா...
நல்ல பொருளோடுகூடிய கவிதை.
கீதா
Post a Comment