Saturday, January 8, 2022

இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்..

 முன்பெல்லாம்

எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது

முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களை அதிகம் சாராதிருுந்தோம்

முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்

முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்

எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..

இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக

இப்போதெல்லாம் நாங்கள்
மனதால் அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி  

 உடலால் இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே  இருக்கிறோம்

5 comments:

Jayakumar Chandrasekaran said...

முன்பெல்லாம் என்ற நினைப்பு முதியோர்களுக்கு மட்டுமே.
இன்று என்ன புதிய வசதி என்பதே இளைய தலைமுறை எதிர்பார்ப்பு.

பாசம் என்ற பிணைப்பு நீங்கி கடமை என்ற உணர்வே இரு துருவங்களையும் இணைக்கிறது. 

காலம் மாறும் காட்சிகளும் மாறும். இன்றைய இளையோரும் முதியோர் ஆவர். 

Jayakumar

வல்லிசிம்ஹன் said...

மிக மிக உண்மை.
கைகளின் நுனியில் சாதனங்கள் இருக்க
எல்லோரையும் விட்டு விலகிவிடும்
உணர்வும் வருகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

இப்போது உலகம் கைக்குள் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் தூரத்தில்!

கீதா

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விஷயத்தை பேசும் கவிதை. பாராட்டுக்கள்.

Post a Comment