Sunday, May 15, 2022

படித்ததும்...

 🌳🌨️🌳🌨️🌳🌨️🌳🌨️


*இனிய மாலை வணக்கம்*🙏🙏🙏🙏


*பணம் மட்டுமே* *தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி*.....


*லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி.* *பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை  பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில்* *விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.*


*அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசிவரை அவரது உடல் கிடைக்கவே இல்லை.*


*பிரிட்டனைச் சார்ந்த பெரும்* *பணக்கார யூதர் ரூட் சைல்ட்* . *அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால்  சிலசமயம் பிரிட்டன் அரசுக்கே* *கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க* *பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.*


*ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை* *அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை.* *சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை.* *காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து*....... *பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார்*. *அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.*


*பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார்.* *மரணிக்கு முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி:* *உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும், தாகத்தாலும்  இறக்கிறார்..... என்று*


*சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.*


*உலகில் பிறந்தவர்கள் என்றேனும் ஒரு நாள்  உலகைப் பிரிந்தே ஆகவேண்டும்.* *ஆயினும் எங்கே? எப்போது? எப்படி? என்பது மட்டும் யாருக்கும் தெரியாது*.... 


*எனவே மத, இன, *ஜாதி வேறுபாடுகளால்*

*யாரையும் வெறுக்காமல்,* *யாரையும் ஒடுக்காமல்,* *யாரையும் மனதால் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல்,* *நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கருதாமல் வாழ்பவர்களுக்கு வாழ்த்துக்கள்*!💐💐

*நல்லவன செய்வோம்.எங்கும் எதிலும் எந்நேரத்திலும் நம்மால் இயன்ற உதவியை செய்வோம்.*👍👍


படித்ததும் பகிரப்பிடித்தது..

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

படித்ததில் பிடித்தது - சிறப்பாக இருக்கிறது.

இராய செல்லப்பா said...

நாங்கள் மட்டுமே நல்லவர்கள் - என்ற எண்ணம் இல்லாமல் வாழவேண்டும் என்னும் அறிவுரை சிறப்பானது. என்னுடைய எதிரிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்!

(இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?)

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் அறிய வேண்டிய செய்தி...

Yaathoramani.blogspot.com said...

தற்சமயம் யு.எஸ்ஸில் Fair lawn ல்

Post a Comment