அன்று
பசிக்கு உணவின்றி
ஒவ்வொரு பொழுதும்
ஏங்கி ஏங்கித் தவித்தவர்களே
சபிக்கப்பட்டவனாய்த் தெரிந்தார்கள்
இன்று
உண்ண உணவிருந்தும்
உண்ணமுடியாது
பார்த்துப் பார்த்துத் தவிப்பவர்களே
பாவியாய்த் தெரிகிறார்கள்
அன்று
அதீதத் திறனிருந்தும்
பதவி அடைய முடியாது
பரிதவித்துப் புலம்பியவர்களே
பரிதாபமாய்த் தெரிந்தார்கள்
இன்று
போதியத் திறனுமின்றி
எதனாலோ பதவியடைந்தவர்கள்
அன்றாடம் படும்பாடே
பரிதாபமாய்ப் படுகிறது
அன்று
அன்றாட வாழ்வுக்காக
ஒவ்வொரு நாளும்
செத்துத் செத்துப் பிழைத்தவர்களே
பாவியாய்த் தெரிந்தார்கள்
இன்று
மரணப் படுக்கையில்
ஒவ்வொரு நொடியும்
சாகமுடியாது பிழைத்திருப்வர்களே..
பாவியாய்ப் படுகிறான்.
1 comment:
காலக் கொடுமை...
Post a Comment