Monday, October 31, 2022

மீண்டும்...

 சமதளமாய்

காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

10 comments:

Anonymous said...

தடைகளையும் எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு முன்னேரும் போது வெற்றிகள் மலராகவும் ,மாலையாகவும்,மகுடமாகவும் வந்து சேரும்.

நண்பா!

எந்த அளவுக்கு உயரம் செல்ல விரும்புகிறாயோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.

உன் வெற்றிய நோக்கி உன் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

csm

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை. வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

எட்டி விடும் தூரம்தான் ...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. சிகரத்தை எட்டி விடும் உறுதியுடன் மனதில் எழுந்த கவிதை அற்புதம்.

/தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை /

சிறந்த தன்னம்பிக்கை வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Anonymous said...

அருமை அருமை அருமை

Anonymous said...

அருமை வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

அருமை

Anonymous said...

மிகவும் அருமை அண்ணா..

Post a Comment