பேச வேண்டியவர்கள்
பேசித்தான் ஆகவேண்டும் என்பதை
பேசாது மௌனம் காப்பதுவும்
பேசத்தெரியாதவர்கள்
பேசக்கூடாததை பொதுவெளியில்
அன்றாடம் பேசித் தொலைப்பதுவும்
வாளைத் தூக்கியவன்
வாளாலேதான் அழிவான்
என்கிற முதுமொழிக்கேற்ப
பேச்சால் வளர்ந்தவர்கள்
பேச்சாலேயே பதவி அடைந்தவர்கள்
பேச்சாலேயே ..........
என்பது இப்போது
எங்கும் பேசுபொருளாயிருக்கிறது
இனியாவது
பேசவேண்டியவர்கள் பேசுவார்களா ?
பேசத் தெரியாதவர்கள்
மௌனம் காப்பார்களா.. ?
3 comments:
நல்லவர்களின் அமைதியானது ஆபத்து விளைவிக்கும்...
இயற்கை செய்யும் சதி!
பேசத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. பேச்சு என்ன என்பது தான் முக்கியம். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பேச்சால் முன்னேறியவர்களே.
Post a Comment