இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும்
அப்போது நான மதுரையின் தென்பகுதியில்
அரசுப் பணியில் இருந்தேன்அதிகாரம் அதிகம் உள்ள
அரசுப் பணி என்பதாலும் அதிகமாகமக்கள் தொடர்பு
உள்ள துறை என்பதாலும் கொஞ்சம் அதிக
பணி நெருக்கடி இருக்கும்.குறிப்பாக
அரசியல்வாதிகளின் கெடுபிடியும்
மக்கள் பிரதி நிதிகளின் கெடுபிடியும் அதிகம் இருக்கும்
மதுரையில் சீதோஷ்ணம் மட்டும் இல்லை அரசியலும்
எப்போதும் கொஞ்சம் அதிக சூடாகவே இருக்கும்
அதனால் சட்டத்திற்கு புறம்பாக மக்கள்
நலத் திட்டங்களில்கொஞ்சம்அப்படி இப்படி
இருக்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கிறஊழியருக்கு கொஞ்சம் கூடுதலாக
அதிகாரமும் இருக்கும்கொஞ்சம் லாபமும் இருக்கும்
நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில்
இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்று
பழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாக
எதுவும் செய்யமாட்டேன்.
அதே சமயம் அதிகாரமிக்க அரசியல்வாதிகள்
சில தவறான சிபாரிசுக்கு வந்தால் அதை எப்படி
சட்டத்திற்கு உட்படுத்துவதுஎன அவர்களுக்கு விளக்கி
அதை சட்டப்படியே செய்து கொடுக்க முயல்வேன்
இது கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்றாலும்
எனக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லை
என்பது ஒரு வசதிஎன் மூலம் வருகிற சிபாரிசுகளில்
தவறு இருக்காது என்பதால்மாவட்ட அளவில்
காரியம் சட்டென முடிந்துவிடும்.என்பது
இன்னொரு வசதிஇதுவும் ஒரு வகையில் லாபம்
என்பதால் அரசியல்வாதிகள்என்னையும் மாற்ற
முயலாமல் சகித்து வைத்துக் கொள்வார்கள்
எனவே என்னை அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்
அதிகாரிகளுக்கும் பிடிக்கும்
இது மக்கள் நலத் திட்ட தொடர்புடைய அதிக
பணப் புழக்கமுள்ளஊழல் செய்வதற்கு அதிக
வாய்ப்புள்ள துறை என்பதால் பிற துறைகளைவிட
அதிக உயர் அதிகாரிகளின் ஆய்வும்அதிகம் இருக்கும்.
அதில் கூட "சர்ப்ரைஸ் செக் "எனச்சொல்லக்கூடிய திடீர்
ஆய்வுகள் அதிக இருக்கும்
எப்போது எந்த உயர் அதிகாரி சென்னையில் இருந்து
வருவார்எந்தப் பகுதியைப் பகுதியைப் பார்வையிடுவார்
என்கிற பயம்கீழ்மட்டத்தில் பணியாற்றுகிற
எல்லா அதிகாரிகளுக்கும்எப்போதும் இருக்கும்
அவர்கள் அனைவரும் அப்படி
திடீரென ஒரு அதிகாரி வந்தால்எப்படிச் சமாளிப்பது என
ஒரு திட்டமும் வைத்திருந்தனர்
விமான நிலையத்திற்கு அருகில் நான் பணிசெய்யும்
பகுதி இருப்பதாலும்ஊழல் பிரச்சனை ஏதும் இருக்காது
என்பதாலும் உடன்என் பகுதியைக் காட்டிவிடுவது
என ஏகமனதாக தீர்மானம் செய்து செயல் படுத்தி
வந்தனர்.எனக்கும் அது உடன்பாடுதான்
ஆனால் அதில் ஒரு சிரமம்இருந்தது.
இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது
சென்னையில் இருந்து கள ஆய்வுக்கு வருகிற
அதிகாரிகள் மக்களிடம்நேரடியாக பேசித்
தெரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்
அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்கள்நான் அதற்கு ஏற்றார்ப்போல
எப்போதும் எனது வண்டியில்
கேமராவும்நாலைந்து சால்வைகளும் எப்போதும்
வைத்திருப்பேன்.அதைமக்கள் பிரதி நிதிகளிடம் கொடுத்து போடவைப்பதோடு அதைமறு நாள் பத்திரிக்கையில்
வரவைப்பதற்கான ஏற்பாடுகளையும்
மிகஅழகாக செய்துவிடுவேன்
சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக
உயர் மட்ட அதிகாரிகள்கூடுதலாக வந்து விடுவார்கள்.
அப்போது சால்வை கூடுதலாக வேண்டி இருக்கும்
அவசரத்தில் மதுரையில் போய்
வாங்கிவரவும் முடியாதுஅதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்துவைத்திருந்தேன்
எனது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு
கருப்பண்ணசாமிகோவில் இருந்தது
ரொம்ப துடியான சாமி.மதுரையில் இருந்து
தூத்துக்குடி வழியாகச் செல்லுகிறஅனைத்து
வாகன ஓட்டிகளும்அங்கு வண்டியை நிறுத்தி
கருப்பணசாமிக்கு மாலைஅணிவித்து கும்பிட்டுவிட்டு
சிறிது இளைப்பாறிவிட்டுத்தான் போவார்கள்.
வண்டி வாகனம் கிடாவெட்டு என
அந்த கோவில் எப்போதும்ஜே.ஜே என இருக்கும்
.நானும்செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலைசாத்தி
கும்பிட்டுவிட்டுச் செல்வதால் அந்தக் கோவில் பூசாரி
எனக்கு ரொம்பப் பழக்கம்
அவரிடம் ஒரு நாள் இதுபோல கூடுதலாக அதிகாரிகள்
வந்த சமயம்அவசரத்திற்கு நான்கு மாலைகள்
வேண்டும் எனச் சொல்லஅவரும் என்னுடைய
சூழல் கருதி மாலைகள் கொடுத்ததோடு
"இனி எப்போது அவசரத்திற்கு மாலை வேண்டுமென்றாலும்
இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால்
கருப்பணசாமிக்குமாலைக்கான பணத்தை உண்டியலில்
போட்டுவிட்டுஎடுத்துச் செல்லுங்கள் "என
எ னக்கு அனுமதி கொடுத்திருந்தார்.
நானும் அடிக்கடி தேவையானபோதுமாலைகளை
எடுத்துக் கொள்வதும் அதற்குண்டான
காணிக்கையினைஉண்டியலில் செலுத்துவதுமாக
காலத்தைஓட்டிகொண்டிருந்தேன்
இதனால் நானும் கோவில் பூசாரியும் மிகவும்
நெருங்கிய பழக்கம்உள்ளவர்கள் ஆகிப் போனோம்
வழக்கம்போல அரசுப் பணியாளர்களுக்கு
எல்லோருக்கும் நேரும்பிரச்சனை எனக்கும் நேர்ந்தது
.மூன்றாண்டுகளுக்கு மேலாக
தொடர்ந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது என்கிற
உத்திரவினைபுதிதாக வந்த அரசு மிக் கண்டிப்பாக
அமல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டது
நான் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாக
ஒரே இடத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தவன்
என்பதால்எனக்கும் மாறுதல் தவிர்க்க
முடியாததாகிவிட்டது.நானும் குடும்ப சூழல்
காரணமாகசில காலம் வெளியூரில்
பணியாற்றலாமே எனமதுரையின் மேற்குப்
பகுதிக்குமாறுதல் பெற்றுக் கொண்டு
சென்றுவிட்டேன்எனக்கும் கோவிலுக்கும்
பழைய பகுதிநண்ப்ர்களுக்குமான தொடர்பு
முற்றிலுமாகஒரு மூன்று வருடம்
துண்டிக்கப் பட்டுப் போய்விட்டது
கடைசியாக ஓய்வு பெற ஓராண்டு மட்டும்
இருக்கிற நிலையில்வீட்டை ஒட்டிய பகுதில்
வேலை பார்த்தால் கொஞ்சம்அலைச்சல் குறையும்
எனவும்ஓய்வுகாலச் சலுகைகள் பெற வசதியாக
இருக்கும் என எல்லோரும் சொல்ல
எனக்கும் அதுவே சரியெனப் பட்டதால் உயர்
அதிகரிகளிடம் பேசிமீண்டும் நான பணியாற்றிய
பழைய பகுதிக்கே மாறுதல்பெற்றுக் கொண்டு
வந்துவிட்டேன். ஆனால் பழையவேகம் எல்லாம்
குறைந்து போனதுமுன்பு போல அதிகம் அலைய
முடியவில்லை என்பதால் அதிகமாகவண்டியை
பயன்படுத்தாமல் பஸ்ஸிலேயே போவதும
வருவதுமாகஎனது பணி சுமையையும் குறைத்துக்
கொண்டேன்.அவசிய மானால்அரசு வாகனத்தைப்
பயன்படுத்துவதை இல்லையேல்இரண்டு
சக்கர வாகனத்தையே பயன்படுத்தி வந்தேன்.
ஒரு குறிப்பிட்ட நாளில் பஸ் அதிகம் போகாத
ஒரு உள்ளடங்கியகிராமத்திற்கு போகவேண்டி வந்தது.
இரு சக்கர வாகனத்தில் போனால்தான்
போய்வருவது எளிதாய் இருக்கும் என வண்டியை
எடுத்துக் கொண்டுபோய்வேலைகளை முடித்துவிட்டு
வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தேன்
அப்போது சாலையின் மேல் அந்தக் கோவில்
பூசாரி நின்று கொண்டு கையை காட்டினார்.
அவர் வீடு அந்தப் பகுதியில்தான் இருந்தது
அங்கிருந்து கோவில் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும்
எப்போதும் அங்கிருந்து வருகிற தெரிந்த வண்டியில் ஏறி
கோவிலில் இறங்கிக் கொள்வது எப்போதும்
அவர் பழக்கம் நானும் பலமுறை அவ்வாறு
கோவிலில் இறக்கி இருக்கிறேன்
அவர் முன்பு போல இல்லை வய்தின். காரணமாக
உடல்தளர்ந்து போயிருந்தார்எனவே வண்டியில்
ஏற்றுவதுசரியாக வருமா என குழப்பமாக இருந்தது
வயதானகாலத்தில்சரியாக பிடித்துக்கொள்ளாமல்
விழுந்துவிட்டால்அது வேறு பிரச்சனை ஆகுமே
என பயமாக இருந்தது .அவர் என்னுடைய
ஒப்புதலைக் கூட பெரிய விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லைஎனது வண்டியின்
பின்னிருக்கையில் ஒரு பக்கமாககால்களைப்
போட்டுக்கொண்டு போகும் படி சைகை காட்டினார்
எனக்கும் வேறு வழியில்லை,அவரே தைரியமாக
அமரும்போதுநமக்கென்ன என வண்டியை
ஸ்டார்ட் செய்து ஓட்டத் துவங்கினேன்
வயதானவர் அமர்ந்திருக்கிறார் என்கிற ஜாக்கிரதை
உணர்வில்மிக மிக மெதுவாகத்தான் வண்டியை
ஓட்டிவந்தேன்மிகச் சரியாக கோவில் அருகில்
வந்ததும் வண்டியை நிறுத்திஅவரை இறங்கச் சொல்லித் திரும்பினேன்.வண்டியில் அவர் இல்லை
எனக்கு திடுக்கிட்டுப் போனது .இவ்வளவு
ஜாக்கிரதையாகஓட்டிவந்தும்தவற விட்டு விட்டோமே
என்கிற பயத்தில்மீண்டும் அவரைவண்டியில்
ஏற்றிய இடம் சென்று பார்த்தேன்.
எங்கும் இல்லைஒருவேளை மிகச் சரியாக
ஏறுவதற்கு முன்பே நான் வண்டியைஎடுத்திருக்கலாம்
என என்னை நானே சமாதானம்
செய்து கொண்டுஅலுவலகம் சென்று விட்டேன்
மறுதினம் அந்தப் பகுதி கவின்சிலர் ஒரு வேளையாக
என்னிடம்வந்திருந்தார்.அவரிடம் பல்
விஷயங்களைப் பேசிவிட்டுஎன் மீது தவறு இருக்கிற
பயத்தில் மிக மேதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்
" நேற்று கருப்பணசாமி கோவில் பூசாரி
ஆஸ்பத்திரி மேட்டில்லிப்ட் கேட்டார். அவசரத்தில்
நிறுத்தாமல் வந்துவிட்டேன்எதுவும் சொனாரா "
என சம்பந்தமில்லாமல் சுற்றி வளைத்துக் கேட்டேன்
அந்த கவுன்சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"சரி நேற்று விழவைத்து விட்டு வந்தது நாந்தான் என
நானே உளறித்தொலைத்துவிட்டேனோ " எனத் தொன்றியது
அவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்
" யார் அந்த பெருசா ?" என்றார்
"ஆமாம் " என்றேன்
" நேற்றா " என்றார்
" ஆமாம் " என்றேன்
அவர்மிக நிதானமாக
"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது "என்றார்
அப்போது நான மதுரையின் தென்பகுதியில்
அரசுப் பணியில் இருந்தேன்அதிகாரம் அதிகம் உள்ள
அரசுப் பணி என்பதாலும் அதிகமாகமக்கள் தொடர்பு
உள்ள துறை என்பதாலும் கொஞ்சம் அதிக
பணி நெருக்கடி இருக்கும்.குறிப்பாக
அரசியல்வாதிகளின் கெடுபிடியும்
மக்கள் பிரதி நிதிகளின் கெடுபிடியும் அதிகம் இருக்கும்
மதுரையில் சீதோஷ்ணம் மட்டும் இல்லை அரசியலும்
எப்போதும் கொஞ்சம் அதிக சூடாகவே இருக்கும்
அதனால் சட்டத்திற்கு புறம்பாக மக்கள்
நலத் திட்டங்களில்கொஞ்சம்அப்படி இப்படி
இருக்கவேண்டியிருக்கும்.
அப்படி இருக்கிறஊழியருக்கு கொஞ்சம் கூடுதலாக
அதிகாரமும் இருக்கும்கொஞ்சம் லாபமும் இருக்கும்
நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில்
இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்று
பழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாக
எதுவும் செய்யமாட்டேன்.
அதே சமயம் அதிகாரமிக்க அரசியல்வாதிகள்
சில தவறான சிபாரிசுக்கு வந்தால் அதை எப்படி
சட்டத்திற்கு உட்படுத்துவதுஎன அவர்களுக்கு விளக்கி
அதை சட்டப்படியே செய்து கொடுக்க முயல்வேன்
இது கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்றாலும்
எனக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லை
என்பது ஒரு வசதிஎன் மூலம் வருகிற சிபாரிசுகளில்
தவறு இருக்காது என்பதால்மாவட்ட அளவில்
காரியம் சட்டென முடிந்துவிடும்.என்பது
இன்னொரு வசதிஇதுவும் ஒரு வகையில் லாபம்
என்பதால் அரசியல்வாதிகள்என்னையும் மாற்ற
முயலாமல் சகித்து வைத்துக் கொள்வார்கள்
எனவே என்னை அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்
அதிகாரிகளுக்கும் பிடிக்கும்
இது மக்கள் நலத் திட்ட தொடர்புடைய அதிக
பணப் புழக்கமுள்ளஊழல் செய்வதற்கு அதிக
வாய்ப்புள்ள துறை என்பதால் பிற துறைகளைவிட
அதிக உயர் அதிகாரிகளின் ஆய்வும்அதிகம் இருக்கும்.
அதில் கூட "சர்ப்ரைஸ் செக் "எனச்சொல்லக்கூடிய திடீர்
ஆய்வுகள் அதிக இருக்கும்
எப்போது எந்த உயர் அதிகாரி சென்னையில் இருந்து
வருவார்எந்தப் பகுதியைப் பகுதியைப் பார்வையிடுவார்
என்கிற பயம்கீழ்மட்டத்தில் பணியாற்றுகிற
எல்லா அதிகாரிகளுக்கும்எப்போதும் இருக்கும்
அவர்கள் அனைவரும் அப்படி
திடீரென ஒரு அதிகாரி வந்தால்எப்படிச் சமாளிப்பது என
ஒரு திட்டமும் வைத்திருந்தனர்
விமான நிலையத்திற்கு அருகில் நான் பணிசெய்யும்
பகுதி இருப்பதாலும்ஊழல் பிரச்சனை ஏதும் இருக்காது
என்பதாலும் உடன்என் பகுதியைக் காட்டிவிடுவது
என ஏகமனதாக தீர்மானம் செய்து செயல் படுத்தி
வந்தனர்.எனக்கும் அது உடன்பாடுதான்
ஆனால் அதில் ஒரு சிரமம்இருந்தது.
இங்குதான் கதையே ஆரம்பிக்கிறது
சென்னையில் இருந்து கள ஆய்வுக்கு வருகிற
அதிகாரிகள் மக்களிடம்நேரடியாக பேசித்
தெரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்
அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்கள்நான் அதற்கு ஏற்றார்ப்போல
எப்போதும் எனது வண்டியில்
கேமராவும்நாலைந்து சால்வைகளும் எப்போதும்
வைத்திருப்பேன்.அதைமக்கள் பிரதி நிதிகளிடம் கொடுத்து போடவைப்பதோடு அதைமறு நாள் பத்திரிக்கையில்
வரவைப்பதற்கான ஏற்பாடுகளையும்
மிகஅழகாக செய்துவிடுவேன்
சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக
உயர் மட்ட அதிகாரிகள்கூடுதலாக வந்து விடுவார்கள்.
அப்போது சால்வை கூடுதலாக வேண்டி இருக்கும்
அவசரத்தில் மதுரையில் போய்
வாங்கிவரவும் முடியாதுஅதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்துவைத்திருந்தேன்
எனது பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு
கருப்பண்ணசாமிகோவில் இருந்தது
ரொம்ப துடியான சாமி.மதுரையில் இருந்து
தூத்துக்குடி வழியாகச் செல்லுகிறஅனைத்து
வாகன ஓட்டிகளும்அங்கு வண்டியை நிறுத்தி
கருப்பணசாமிக்கு மாலைஅணிவித்து கும்பிட்டுவிட்டு
சிறிது இளைப்பாறிவிட்டுத்தான் போவார்கள்.
வண்டி வாகனம் கிடாவெட்டு என
அந்த கோவில் எப்போதும்ஜே.ஜே என இருக்கும்
.நானும்செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மாலைசாத்தி
கும்பிட்டுவிட்டுச் செல்வதால் அந்தக் கோவில் பூசாரி
எனக்கு ரொம்பப் பழக்கம்
அவரிடம் ஒரு நாள் இதுபோல கூடுதலாக அதிகாரிகள்
வந்த சமயம்அவசரத்திற்கு நான்கு மாலைகள்
வேண்டும் எனச் சொல்லஅவரும் என்னுடைய
சூழல் கருதி மாலைகள் கொடுத்ததோடு
"இனி எப்போது அவசரத்திற்கு மாலை வேண்டுமென்றாலும்
இங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால்
கருப்பணசாமிக்குமாலைக்கான பணத்தை உண்டியலில்
போட்டுவிட்டுஎடுத்துச் செல்லுங்கள் "என
எ னக்கு அனுமதி கொடுத்திருந்தார்.
நானும் அடிக்கடி தேவையானபோதுமாலைகளை
எடுத்துக் கொள்வதும் அதற்குண்டான
காணிக்கையினைஉண்டியலில் செலுத்துவதுமாக
காலத்தைஓட்டிகொண்டிருந்தேன்
இதனால் நானும் கோவில் பூசாரியும் மிகவும்
நெருங்கிய பழக்கம்உள்ளவர்கள் ஆகிப் போனோம்
வழக்கம்போல அரசுப் பணியாளர்களுக்கு
எல்லோருக்கும் நேரும்பிரச்சனை எனக்கும் நேர்ந்தது
.மூன்றாண்டுகளுக்கு மேலாக
தொடர்ந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது என்கிற
உத்திரவினைபுதிதாக வந்த அரசு மிக் கண்டிப்பாக
அமல்படுத்தவேண்டும் என உத்தரவிட்டது
நான் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாக
ஒரே இடத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தவன்
என்பதால்எனக்கும் மாறுதல் தவிர்க்க
முடியாததாகிவிட்டது.நானும் குடும்ப சூழல்
காரணமாகசில காலம் வெளியூரில்
பணியாற்றலாமே எனமதுரையின் மேற்குப்
பகுதிக்குமாறுதல் பெற்றுக் கொண்டு
சென்றுவிட்டேன்எனக்கும் கோவிலுக்கும்
பழைய பகுதிநண்ப்ர்களுக்குமான தொடர்பு
முற்றிலுமாகஒரு மூன்று வருடம்
துண்டிக்கப் பட்டுப் போய்விட்டது
கடைசியாக ஓய்வு பெற ஓராண்டு மட்டும்
இருக்கிற நிலையில்வீட்டை ஒட்டிய பகுதில்
வேலை பார்த்தால் கொஞ்சம்அலைச்சல் குறையும்
எனவும்ஓய்வுகாலச் சலுகைகள் பெற வசதியாக
இருக்கும் என எல்லோரும் சொல்ல
எனக்கும் அதுவே சரியெனப் பட்டதால் உயர்
அதிகரிகளிடம் பேசிமீண்டும் நான பணியாற்றிய
பழைய பகுதிக்கே மாறுதல்பெற்றுக் கொண்டு
வந்துவிட்டேன். ஆனால் பழையவேகம் எல்லாம்
குறைந்து போனதுமுன்பு போல அதிகம் அலைய
முடியவில்லை என்பதால் அதிகமாகவண்டியை
பயன்படுத்தாமல் பஸ்ஸிலேயே போவதும
வருவதுமாகஎனது பணி சுமையையும் குறைத்துக்
கொண்டேன்.அவசிய மானால்அரசு வாகனத்தைப்
பயன்படுத்துவதை இல்லையேல்இரண்டு
சக்கர வாகனத்தையே பயன்படுத்தி வந்தேன்.
ஒரு குறிப்பிட்ட நாளில் பஸ் அதிகம் போகாத
ஒரு உள்ளடங்கியகிராமத்திற்கு போகவேண்டி வந்தது.
இரு சக்கர வாகனத்தில் போனால்தான்
போய்வருவது எளிதாய் இருக்கும் என வண்டியை
எடுத்துக் கொண்டுபோய்வேலைகளை முடித்துவிட்டு
வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தேன்
அப்போது சாலையின் மேல் அந்தக் கோவில்
பூசாரி நின்று கொண்டு கையை காட்டினார்.
அவர் வீடு அந்தப் பகுதியில்தான் இருந்தது
அங்கிருந்து கோவில் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும்
எப்போதும் அங்கிருந்து வருகிற தெரிந்த வண்டியில் ஏறி
கோவிலில் இறங்கிக் கொள்வது எப்போதும்
அவர் பழக்கம் நானும் பலமுறை அவ்வாறு
கோவிலில் இறக்கி இருக்கிறேன்
அவர் முன்பு போல இல்லை வய்தின். காரணமாக
உடல்தளர்ந்து போயிருந்தார்எனவே வண்டியில்
ஏற்றுவதுசரியாக வருமா என குழப்பமாக இருந்தது
வயதானகாலத்தில்சரியாக பிடித்துக்கொள்ளாமல்
விழுந்துவிட்டால்அது வேறு பிரச்சனை ஆகுமே
என பயமாக இருந்தது .அவர் என்னுடைய
ஒப்புதலைக் கூட பெரிய விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லைஎனது வண்டியின்
பின்னிருக்கையில் ஒரு பக்கமாககால்களைப்
போட்டுக்கொண்டு போகும் படி சைகை காட்டினார்
எனக்கும் வேறு வழியில்லை,அவரே தைரியமாக
அமரும்போதுநமக்கென்ன என வண்டியை
ஸ்டார்ட் செய்து ஓட்டத் துவங்கினேன்
வயதானவர் அமர்ந்திருக்கிறார் என்கிற ஜாக்கிரதை
உணர்வில்மிக மிக மெதுவாகத்தான் வண்டியை
ஓட்டிவந்தேன்மிகச் சரியாக கோவில் அருகில்
வந்ததும் வண்டியை நிறுத்திஅவரை இறங்கச் சொல்லித் திரும்பினேன்.வண்டியில் அவர் இல்லை
எனக்கு திடுக்கிட்டுப் போனது .இவ்வளவு
ஜாக்கிரதையாகஓட்டிவந்தும்தவற விட்டு விட்டோமே
என்கிற பயத்தில்மீண்டும் அவரைவண்டியில்
ஏற்றிய இடம் சென்று பார்த்தேன்.
எங்கும் இல்லைஒருவேளை மிகச் சரியாக
ஏறுவதற்கு முன்பே நான் வண்டியைஎடுத்திருக்கலாம்
என என்னை நானே சமாதானம்
செய்து கொண்டுஅலுவலகம் சென்று விட்டேன்
மறுதினம் அந்தப் பகுதி கவின்சிலர் ஒரு வேளையாக
என்னிடம்வந்திருந்தார்.அவரிடம் பல்
விஷயங்களைப் பேசிவிட்டுஎன் மீது தவறு இருக்கிற
பயத்தில் மிக மேதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்
" நேற்று கருப்பணசாமி கோவில் பூசாரி
ஆஸ்பத்திரி மேட்டில்லிப்ட் கேட்டார். அவசரத்தில்
நிறுத்தாமல் வந்துவிட்டேன்எதுவும் சொனாரா "
என சம்பந்தமில்லாமல் சுற்றி வளைத்துக் கேட்டேன்
அந்த கவுன்சிலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"சரி நேற்று விழவைத்து விட்டு வந்தது நாந்தான் என
நானே உளறித்தொலைத்துவிட்டேனோ " எனத் தொன்றியது
அவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்
" யார் அந்த பெருசா ?" என்றார்
"ஆமாம் " என்றேன்
" நேற்றா " என்றார்
" ஆமாம் " என்றேன்
அவர்மிக நிதானமாக
"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது "என்றார்
103 comments:
அண்ணே நிகழ்வின் நடுவில் முடிவை எதிர் பார்த்தேன்...உங்களுக்கு அவர் நினைவு போலும்!
//"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது "என்றார்//
அவர் அப்படி சொன்ன போது உங்களுக்கு எப்படி இருந்தது?
படிக்கும்போதே எனக்கு பயமாக இருக்கு.
பாஸ் உங்களுக்கு மீண்டும் அந்த பகுதியில் போகும் போது உங்களுக்கு எப்படி இருக்கு?
நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில்
இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்று
பழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாக
எதுவும் செய்யமாட்டேன்.//ரமணி சாருக்கு ஒரு ராயல் சல்யூட்.
ஊரில் சிறிது நாட்கள் இல்லாதததால் என்னால் இணையம் பக்கம் வர இயலவில்லை சார்.அவ்வப்பொழுது தொடர்ந்து கொண்டிருக்கும் அலுவல் காரணமாக இனியும் சிறிது நாட்களுக்கு மட்டும் நேரம் கிட்டும் பொழுது பதிவுகளை படித்து பின்னூட்டம் மட்டிலுமே வரும்.வெகு விரைவில் பதிவிடுகின்றேன்.அன்புக்கு மிக்க நன்றி ரமணி சார்.
///வந்ததும் வண்டியை நிறுத்திஅவரை இறங்கச் சொல்லித் திரும்பினேன்.வண்டியில் அவர் இல்லை///
நடிகவேள் நாகேஷ் கதை சொன்னது போலவே இருக்குது நண்பரே.
நானும் பாலையா போலவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.
ஆனாலும் கதை சுவாரஸ்யம் நண்பரே.
இதை என்னவென்று சொல்வது என்று எனக்கு விளங்கவில்லை.
ஆழ்மனதில் ஏற்படும் இந்த சம்பவ உணர்சிகளுக்கு
பெயரில்லை போலும்....
அவர் செத்துப்போய் ஆறுமாசமாச்சுன்னு சொன்னவுடன் உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை என்ன சார்?
குப்பென்று வியர்த்ததா?
இதுமாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதும் நாம் கேள்விப் படுவதும், அமானுஷ்யத்தின் மீதான நம்பிக்கையை அசைக்காமல் பாதுகாக்கிறது.
நல்ல பகிர்வு ரமணி சார்
தலைப்பு - வண்டியில் அவர் இல்லை எனும் போதே முடிவை யூகிக்க வைத்து விட்டது.
இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று விளங்கவில்லை சார்....
உண்மையிலேயே அமானுஷ்யமான அனுபவம்தான். படித்து முடித்தவுடன் சற்று பயமாக இருந்தது.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ரமணி சார்...புதிதாக பதிவிட்டுள்ளேன்.வந்து பார்த்து தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அமானுஷ்யம்... சிறுகதையாகவும் கருதலாம்.// எப்படி எடுத்துக் கொள்வது ? அமானுஷ்யம் என்று எடுத்துக் கொண்டால், அது உங்கள் அனுபவமாகும். கருத்துக் கூற இயலாது. சிறுகதை என்றால் தன்னிலையில் கூறும் கதை உண்மைபோல் தோற்றுவிக்கச் செய்வது உங்கள் திறமைக்கு எடுத்துக் காட்டு. வாழ்த்துக்கள்.
தலைப்பை வைத்து அமானுஷ்யத்தை எதிர்பார்த்தாலும் அந்த நிமிடம் உங்கள் மனநிலையை நினைத்தால்... பாவமாகத்தான் இருக்கிறது. குலைநடுங்க வைக்கும் அனுபவம்தான் இல்லையா...
நல்ல வேளை , அந்த அமானுஷ்யப் பூசாரி
உங்கள் வண்டியில் இடம் பிடித்ததோடு சரி.
உங்களைப் 'பிடிக்கவில்லையே ' ? தப்பித்தீர்கள்.
அப்புறம் என்ன , அதே கருப்பண்ண சாமி கோயிலில்
சென்று மந்திரித்துக் கொண்டீர்களாக்கும் ?
ம்ம்ம்... பேய்க்கும் உங்களை அவ்வளவு பிடித்திருக்கிறது ?!
த்ரில்லிங்கான பதிவு. உங்களுக்கு பயமாக இல்லையா சார் ?
உண்டென்றால் 'அது' உண்டு; இல்லையென்றால் 'அது' இல்லை!
ஒரு நேர்மையாளரை அமானுஷ்யம் கூட மதிக்கிறது! "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எத்துணை சத்தியமான வார்த்தைகள்!
ஒரு வித்தியாசமான பதிவு....முடிவு எனக்கே அதிர்ச்சி..அதைக்கேட்டதும் உங்கள் முகம் சிவந்திருக்கும் என்று நினைக்கிறேன்.வாசித்தேன்..வாக்கிட்டேன்
திராவிட தீபம் தோன்றியது
//நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.சிறுவயதில்
இருந்தேசமூக நல இயக்கங்களில் பங்கேற்று
பழகியவன் என்பதால்ஊழலுக்கும் எனக்கும்
ஏழாம் பொருத்தம்.எனவே சட்டத்திற்கு புறம்பாக
எதுவும் செய்யமாட்டேன்//
ஸாதிகா சொல்வது போல, உங்களின் நேர்மைக்கு ஒரு சல்யூட்!
சில சமயம் கதைகளை விட வாழ்வில் ஏற்படும் நிஜமான சம்பவங்கள் அதிக திகிலை ஏற்படுத்தும். இது அது மாதிரி தான்!!
முடிவு மட்டுமே அமானுஷ்யம் பற்றியது இது உங்கள் அனுபவ தொகுப்பு "ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!"
பழைய அனுபவங்கள் எப்போதும் இனிக்கும்
மிக அருமை. [ஒருவேளை கருப்பண்ணசாமியே வந்தாரோ என்று நினைத்தேன்.
அத்ற்கும் வாய்ப்பு இருக்கிறது. நேர்மையாக இருப்பவரிடம் பரிவு காட்டியிருக்கிறார் அந்தப் பூசாரி.
தங்கள் அனுபவத்தை சுவாரசியமாக பகிர்கீன்றீர்கள் என்றவாறே வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், முடிவு ஒரு திகில் கதையைப் போன்றதாய் அமைந்துவிட்டது. இது பிரமையா அல்லது நிஜக்கதையா...?
வணக்கம்!
ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம் போன்று நமக்கு சில அனுபவங்கள் சில சமயம் நேருகின்றன. பகுத்தறிவு அப்படி இல்லையென்று சொன்னாலும், விடை தெரியாத சில கேள்விகள் நம்மை நிழலா நிஜமா என்று ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துகின்றன. அந்த கோயில், அந்த பூசாரி, நீங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு போல் நினைவுகள் ஓடும். தத்துவங்கள் பிறக்கின்றன. மறுபடியும் அந்த பக்கம் சென்று வந்தீர்களா? திகில் அனுபவக் கட்டுரை.
சில சமயங்களில் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள் நம்மாலேயே நம்பமுடியாததாகிவிடுகிறது. திகிலான நிகழ்வுதான். அந்த சமயம் தங்கள் மனநிலை என்ன சார்?? அதையும் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அப்றம் என்னாச்சு... த்ரில்லிங்கா இருந்துருக்கும் இல்லையா!
படிக்கும்போதே பயமாக இருக்கு...அதிர்ச்சி முடிவு ரமணி சார்...வாழ்த்துக்கள்...
அப்பப்பா... கடைசியில் பயம் வந்துவிட்டது... நல்ல பகிர்வு....
Unmaithan Sir. Enakkum ithe pol anupavam undu. Nam Kannukku theriyaatha ULAGAM onru iruppathu 100% uruthi. Romba Thrillingana Matter Sir!
TM 14.
விக்கியுலகம் //
அப்படி நிச்சய்ம் இல்லை
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
கொஞ்சம் திரில்லிங்காகதான் இருந்தது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
இப்போது பயம் இல்லை
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் said... //
எனக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RVS //
கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
A.R.ராஜகோபாலன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
பதிவுலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான
உங்களால் எப்படி ஊகிக்கமுடியாமல் போதும் ?
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அநுபவக் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாமா?
ஒவ்வொன்றாக கூறுங்கள்.நிறைய இருக்குமே அரசுப்
பணியில்.நீல.பத்மநாபன்என்ற பிரபல நாவலாசிரியர்(மின்துறையில் உயர் பதவியில் இருந்தவர்) தன் துறை ஊழல்கள் பற்றி யெல்லாம்
விவரங்கள் வரும் அருமையான நாவல்களை எழுதியுள்ளார்(மின்உலகம், ஃபைல்கள், இன்னும் பல)
ஆவி த்ரில் இல்லாவிட்டாலும் அவை உங்ஃகள்
நடையில் சூப்பராக இருக்கும். நன்றி சார்
ரஹீம் கஸாலி //
எனக்கும்தான்
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sankar Gurusamy //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
மிக்க நன்றி உடன் பார்த்தும் விட்டேன்
அருமையான படைப்பைக் கொடுத்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
என்ன ரமணி சார் நான் தூங்க போகும் போது இப்படி ஒரு பதிவு இட்டு என்னை பயமுறுத்தி தூங்க முடியாமல் பண்ணிவிட்டீர்களே எதை பகிர்ந்தாலும் அதை வித்தியாசமாக அழகாக பதிகிறிர்கள் வாழ்த்துக்கள். அடுத்த முறை இதைப்போல பதிவு இடும்போது இரவு நேரத்தில் தூங்க போவோர்கள் இதை படிக்க வேண்டாம் என்று வார்னிங்க் கொடுத்து விடுங்கள்
G.M Balasubramaniam //
இரண்டுமாக இல்லாமல் வித்தியாசமாக
ஒரு பதிவைக் கொடுக்க முயன்றிருக்கிறேன்
தங்கள் பின்னூட்டத்தின்படி சரியாகச் செய்திருக்கிறேன் என
நினைக்கிறேன்.வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.கணேஷ் //
உண்மைதான்.தங்கள்வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இதுமாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதும் நாம் கேள்விப் படுவதும், அமானுஷ்யத்தின் மீதான நம்பிக்கையை அசைக்காமல் பாதுகாக்கிறது.
நல்லா சொல்லி இருக்கீங்க.
ஸ்ரவாணி //
உண்மையில் அதை பேயாக நினைக்காததால்
பயம் இல்லை ஆனாலும் சில நாட்கள் தூக்கம் இல்லாமல்இருந்தது நிஜம்.தங்கள் வரவுக்கும் வித்தியாசமானவிரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நிலாமகள் //
ஆஹா பதிவின் தலைப்பையும் இணைத்து
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டம் இட்டமைக்கு
மனமார்ந்த நன்றி
Lakshmi //
உண்மைதான்.தங்கள்வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
radhakrishnan //
மலையுடன் கூழாங்கல்லை ஒப்பிட்டு
எனக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
எனக்கு மட்டும் இல்லை
இதைச் கேட்ட கவுன்சிலருக்கும்தான்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
நல்ல பதிவு.
மிக்க நன்றி.
கடம்பவன குயில் //
இரண்டு நாள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது
ரசித்துப் படித்து அழகான பின்னூட்டமிட்டமைக்கு வாழ்த்துக்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
சில நேரங்களில் இப்படி அனுபவம் ஏற்படுகிறது. ஆனால் சொன்னால் நம்ப மாட்டார்கள்.
தி.தமிழ் இளங்கோ //
சொல்லிப் போகையிலேயே அவருக்கும் எனக்குமான
நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது எப்படி எனச் சொல்லிப்போகவே
நிறைய விஷயங்களை எழுத வேண்டி இருந்தது இல்லையெனில்
அவர் வேறு யாராவது இருக்கக் கூடும் எனச் எளிதாக
சொல்லி விடுவார்கள்.இதுபோல் இன்னும் சில அனுபவங்கள் உண்டு
தொடர்ந்து எழுதலாம் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel //
நம்புபவர்களுக்கு இது அனுபவம்
இல்லையெனில் ஒரு திரில்லிங் கதை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வல்லிசிம்ஹன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நெல்லி. மூர்த்தி //
நம்புபவர்களுக்கு இது அனுபவம்
இல்லையெனில் ஒரு திரில்லிங் கதை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
உடனே உங்களுக்கு ஜூரம் வரவில்லையா?இத்தகைய நிகழ்வுகளுக்கு விளக்கமே கிடையாது.
மனோ சாமிநாதன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
நம்புபவர்களுக்கு இது அனுபவம்
இல்லையெனில் ஒரு திரில்லிங் கதை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Sankar Gurusamy //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RVS //
கொஞ்சம் திரில்லிங்காகதான் இருந்தது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவிந்தராஜ்,மதுரை. //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆஹா, நல்லாயிருக்கு சார் இந்த அனுபவப்பதிவு.
கடைசியில் திகிலுடன் முடித்துள்ளது வெகு அருமை.
சில நேரங்களில் இதுபோன்ற த்ரில்லிங் அனுபவங்கள் சிலருக்கு ஏற்படுவதுண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன்.
உண்மையா, மனப்பிராந்தியா என்றே தெரியாது.
அனுபவித்தவர்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.
கேட்க இப்போ சுவாரஸ்யமா இருந்தா கூட அனுபவித்த போது உங்களுக்கு பயமாக இருந்திருக்கும். மேலும், உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யுட்..
அவர் சாவதற்குள் உங்களை பார்க்க நினைத்திருப்பார் போல, ஒரு வேளை அவரது ஆத்மாவிற்கு நீங்கள் விடுதலை தந்துவிட்டீர்கள் போலும்.
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
bandhu //
கொஞ்சம் திரில்லிங்காகதான் இருந்தது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன் //
உண்மைதான்.தங்கள்வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
எழுத்துக்குள் தென்பட்ட உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் ரமணி சார். அனுபவமோ கதையோ சொல்லப்பட்ட நடை வெகுவாய் ஈர்க்கிறது.. வாசகர் மனத்தில் நெடிய பாதிப்பு உண்டாக்குகிறது. அதுவே எழுத்தின் வெற்றி. பிரமாதம். பாராட்டுகள் ரமணி சார்.
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வாயடைத்து விரல்முடங்கிப் போனேன்.. அமானுஷ்யங்களை சில மனிதர்களால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று படித்திருக்கிறேன்..
என்ன சார் இவ்ளோ அமைதியா சொல்றீங்க... அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பக்கம் போகவே பயமா இருந்திருக்குமே....
மிக மிக அருமை நண்பரே வாழ்த்துகள்.
//அந்த மக்கள் மூலம் மாலை மரியாதை பெறுவதையும்
அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வருவதையும்
மிகவும் விரும்புவார்க//
யதார்த்தமான வரிகள்.
"அவர் செத்துப் போய் ஆறு மாதங்களுக்கு
மேலாகிவிட்டது " என்று சொன்னதும் பகில் என்று ஆகியிருக்குமே..!
அப்பாதுரை //
தங்கள் கருத்து மிகச் சரி
கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
கொஞ்சம் திரில்லிங்காகதான் இருந்தது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
dhanasekaran .S //
தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Advocate P.R.Jayarajan //
இரண்டு நாள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
அமானுஷ்யமான
அதிர்ச்சி நிறைந்த மலரும் நினைவுகள்..
இராஜராஜேஸ்வரி //
தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Rational ஆ யோசிச்சா இப்படி நடப்பதும் சாத்தியமா-ன்னு புரிஞ்சுக்க முடியல. அதனால- நான் இத "கதை"ன்னே எடுத்துக்கறேன்!
இத போல thrilling suspense பேய் பிசாசு- மந்த்ரம் தந்த்ரம் mystique கதைகள் னா எனக்கு ரொம்ப இஷ்டம்! பாட்டி தான் சொல்லுவா நிறையா கதை இத மாதிரி... பாட்டி ஞாபகம் வந்தாச்சு இப்போ!
சுவாரஸ்ய அமானுஷ்யம்.
Matangi Mawley //
தங்கள் வரவுக்கும் தெளிவான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
ஸ்ரீராம். //
தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
என்ன மாதிரி அனுபவம்! படிக்கவே திகிலாக
இருக்கிறது!
உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்
தொடங்கிய விதமும் முடித்த பாங்கும் மிகவும்
அருமை!
உறங்கனிந்த வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
மிகவும் வித்தியாசமான அனுபவம்தான்! சிலிர்த்து விட்டது! த.ம 5!
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நான் தாமதமாக வந்துள்ளேன் இருந்தும் நல்லப் பதிவை உங்களின் ஆழ்மனப் பதிவை வாழ்வில் சில நேரம் இறைவன் சில திருவிளையாடல்களை செய்வான் எனும் பெரியோரின் கூற்றை நிரூபிக்கும் பதிவை கண்டு உண்மையில் அதிசயித்தேன்... மற்றவர்களின் பின்னூட்டம் எதையும் படிக்காமல் எழுதுகிறேன்... இவைகள் எப்போதும் சாத்தியம் என்றாலும்... உணர்ந்தவர் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்... சிலவிசயங்கள் விளக்க முடியாது அல்லவா!
பதிவிற்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!
தமிழ் விரும்பி //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
மிகவும் களைப்பாய் இருக்கும் பொழுது மனம் இது போன்ற உருவகங்களைச் செய்து கொள்ளும் போலும். விபத்தில் கைகளை இழந்த நபர்கள்,புண் குணமாகிவிட்ட பிறகு, பல நாட்கள் கழித்து இழந்த கை வலிப்பதாகவே உணர்வார்கலாம். Phantom limbs என்று இதற்குப் பெயராம். இதே அடிப்படையில் பூசாரி உங்கள் மனத்தின் உணர்வாக இருக்கலாம்.
மனுஷ்யமோ, அமானுஷ்யமோ மனத்தைப் பற்றியது தானே.
பதிவில் எழுத்தோட்டம் மிக அருமை நண்பரே.
VENKAT //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
திரு மதுமதி அவர்கள் 'வலைச்சரத்தில்' தங்களது பதிவைப் பற்றி குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்து தங்கள் பதிவைப் படித்தேன். தங்கள் அனுபவம் ஒரு திகில் கதைபோல் இருந்தது என்பது உண்மை. நல்ல நடை. வாழ்த்துக்கள்!
அட! கடவுளே! பேயைத் தானா ஏற்றிக் கொண்டு வந்தீர்கள்! உங்க மேலே நல்ல பாசம் அது தான் வந்துள்ளார். வாசித்துப் புரிந்ததும் கடகடவெனச் சிரித்து விட்டேன். எனக்குத் தெரியவில்லை அது பயச் சிரிப்பா என்று பல .தடவை சிரித்தேன் தனியே தானிருந்து வாசித்தேன். ஏதோ! மிக நன்று பாராட்டுகள்!.
வேதா. இலங்காதிலகம்.
இப்போ வேட் பிரஸ் மக்கர் பண்ணுகிறது. கோவைக்கவியால் வரமுடியவில்லை.லிங்கை பேஸ்ட் பண்ணுங்க மூலையில் உள்ள கூகிளில்.
hhttp://kovaikkavi.wordpress.com
மதுமதி //
வலைச்சரத்தில் குறிப்பிட்டு கௌரவித்தமைக்கு நன்றி
வே.நடனசபாபதி //
தங்கள் பதிவைப் படித்தேன். தங்கள் அனுபவம் ஒரு திகில் கதைபோல் இருந்தது என்பது உண்மை. நல்ல நடை. வாழ்த்துக்கள்!//
தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi //
.தங்கள்வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi //
.தங்கள்வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment