Monday, January 16, 2012

பதிலறியாக் கேள்வி

வித்யா கர்வம் தந்த மிடுக்கில்
அவர் கண்களில் தெரியும்
மேதமைத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதற்காகவே நானும் கவிஞனாகத் துடித்தேன்

ஆயினும் "எப்படி" எனத்தான் தெரியவில்லை

அவர் அறிந்தோ அறியாமலோ
அவரது காலகள் தரையில் இருந்தபோது
"கவிஞனாவது எப்படி " என்றேன்

"படி நிறையப் படி
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் "என்றார்

நான் படிக்கத் துவங்கினேன்

எழுத்து புரிந்தது
எழுதுவோனின் எண்ணம் புரிந்தது
சில போது ஆடையிடும் அவசியமும்
சிலபோது அம்மணமாய் விடும் ரகசியமும்

ஆனாலும் கூட எப்படி எனப் புரிந்த எனக்கு
"எதனை" என்கிற புதுக் குழப்பம் வந்தது

இப்போது அவர் தளர்ந்திருந்தார்
நான் வாலிபனாய் வளர்ந்திருந்தேன்

"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் " என்றார்

நான் பார்க்கத் துவங்கினேன்

பார்க்கத் தெரிந்தது
பார்வையைச் சார்ந்தே பொருளிருப்பதும்
பார்வைபடாத பகுதிகளே அதிகம் இருப்பதும்
உள் இமையை திறக்கும்  உன்னத ரகசியமும்

ஆனாலும் கூட எதனைஎனப் புரிந்த எனக்கு
"ஏன் " என்கிற பெரிய குழ்ப்பம் வந்தது

இப்போது அவர் பழுத்தவராய் இருந்தார்
நான் தளரத் துவங்கியிருந்தேன்

முன்னிரண்டு கேள்விகளுக்கு
சட்டெனப் பதில் சொன்னவர்
இப்போது ஏனோ மௌனம் சாதித்தார்
பின் மெல்லிய குரலில்
"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் " என்றார்

இப்போது பதிலறியா கேள்வி என்னிடத்தில்
நான் அலைந்து கொண்டிருக்கிறேன்

76 comments:

Anonymous said...

எல்லாக் காரியங்களுக்கான காரணத்தை

அறிந்து கொண்டால் நாம் ஞானி ஆகி

விடுவோமோ என்னவோ ?

நல்ல பதிவு .

Rathnavel said...

அருமை ஐயா.
வாழ்த்துகள்.

கணேஷ் said...

உங்களுக்கு ஒரு கேள்வி. எனக்கு எந்தக் கேள்விக்குமே பதில் தெரியாமல் விடைதெரியாப் பறவையாக பறந்து கொண்டிருக்கிறேன். தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா...

Madhavan Srinivasagopalan said...

பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா !!

சின்னப்பயல் said...

"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் "

VENKAT said...

ஒரு கவிஞனை படைக்க விடாமல் திசை திருப்ப வித்யா கர்வம் எப்படியெல்லாம் வழிகாட்டியிருக்கிறது என்ற படி நான் பொருள் கொள்கிறேன்.
கவிஞனாவதற்கு "எழுது நிறையக் கவிதை எழுது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் "என்றிருந்தால் இன்னுமொரு பாரதி கிடைத்திருப்பான்.

மேதாவியின் சொல் கேட்டு கடைசிவரை செயல் படாமல் போனவனின் நிலை பரிதாபம்.

படைக்கும் ஆசை தோன்றிய உடனே படைக்க வேண்டும். குழந்தை முதலாவதாக எழுந்து நடப்பது போல.

படைப்பாளிகள் மேதாவிகளிடம் பாடம் பயின்றதாக வரலாறு இல்லை.

சரி தானே ரமணி சார் ?

சசிகுமார் said...

மிக அருமை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

ரமேஷ் வெங்கடபதி said...

படித்த பாடங்களை திரும்பப் படிப்பதில் அர்த்தமில்லை!
புதுப் பாடங்கள் வருவது நிற்கப் போவதுமில்லை!
பாடங்கள் தொடரோட்டம் போல்..
படித்தவன் பிறகு படைக்கிறான்..புதுப்படிப்பாளிக்கு!
புதுப்படிப்பாளி வந்து கொண்டிருக்கும்வரை
அவனுக்கு படைப்புகள் காத்துக் கொண்டிருக்கும்!

Anonymous said...

அருமை ரமணி சார்...எனக்குத் தெரியவில்லை...வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

இப்போது பதிலறியா கேள்வி என்னிடத்தில்
நான் அலைந்து கொண்டிருக்கிறேன்/

எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் பதிலறியா கேள்வி!

இராஜராஜேஸ்வரி said...

வித்யா கர்வம் தந்த மிடுக்கில்
அவர் கண்களில் தெரியும்
மேதமைத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதற்காகவே நானும் கவிஞனாகத் துடித்தேன்..//

மேதைகள் இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டிராமல் படைக்கஆரம்பித்திருப்பார்கள்..

தண்ணீரில் இறங்கும் வரை நீச்சல் பிடிபடாதே!

அமைதிச்சாரல் said...

அருமை.. அருமை.

A.R.ராஜகோபாலன் said...

’’’"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் "

உங்கள் எழுத்தை போலவே யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் உங்களின் வைர வரிகள்

பிரமாதம் ரமணி சார்

kavithai (kovaikkavi) said...

''..எழுத்து புரிந்தது
எழுதுவோனின் எண்ணம் புரிந்தது
சில போது ஆடையிடும் அவசியமும்
சிலபோது அம்மணமாய் விடும் ரகசியமும்..''
''..பார்க்கத் தெரிந்தது
பார்வையைச் சார்ந்தே பொருளிருப்பதும்
பார்வைபடாத பகுதிகளே அதிகம் இருப்பதும்
உள் இமையை திறக்கும் உன்னத ரகசியமும்..''
இந்த வரிகள் பிடித்தது. எப்படி? எதனை? ஏன்? இவைகளிற்கு விடை தெரிந்தாலே அனைத்தும் தெரிந்தவனாகிறான். மிக நன்று.. வாழ்த்துகள்.(சட்டேன்று முதல் வாசித்ததும் இது முன்பு இட்ட பதிவோ என்ற ஒரு எண்ணமும் தோன்றியது.)
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
பாடல்: கண்ணதாசன் ( படம் – அபூர்வ ராகங்கள் )

என்ற கவிஞரின் வரிகள்தான் உங்கள் பதிலறியா கேள்விக்கு விடை.

விமலன் said...

"படிப்பும், சமூகப் பார்வையும் அவசிமாகிறது படைப்பிற்கு"எனபதை உணர்த்தும் படைப்பு.நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

ஒற்றைச் சொல்லில் சொன்னால்...


உன்னதம். மேன்மை.

அப்பாதுரை said...

இன்னொரு இளைய கவி வரும் வரையில்..

எறும்பு ஊறும் கரும்பு உங்கள் கவி.

தமிழ் உதயம் said...

கேள்விக்குரியது - கவிதையா? வாழ்க்கையா? சம்பந்தப்பட்டவர்களை போல எனக்கும் புரியவில்லை.

G.M Balasubramaniam said...

என் கேள்விக்கு என்ன பதில் ? தேடுதல் தொடரட்டும். பதில்கள் கிடைக்கும்வரை. கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன். வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

ஏன் என்பதற்கு விடை கிடைத்தால்,நாம் ஞானியாகலாம்!
அருமை ரமணி.

RAMVI said...

//"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் " //

அருமையான அறிவுரை.

ஏன் என்ற கேள்வியில்தான் முதலும் முடிவும் போலிருக்கு.

Anonymous said...

எல்லாருக்கும் இருக்கும் போல ....

சுபெர்பா இருக்கு ...

தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

அருமையான வரிகள்.

வலிபோக்கன் said...

ஏன்? என்ற கேள்வி எழாமல் வாழ்க்கையில்லை.முதல் தெரிந்தளவுக்கு முடிவுகள் தெரிவதில்

கே. பி. ஜனா... said...

சென் கதை மாதிரி ஆழமாக அருமையாக இருக்கிறது! பிரமாதம்!

கோவிந்தராஜ்,மதுரை. said...

////ஆனாலும் கூட எதனைஎனப் புரிந்த எனக்கு
"ஏன் " என்கிற பெரிய குழ்ப்பம் வந்தது///
எனக்கு புரியவில்லை

நிலாமதி said...

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை

..உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்

புலவர் சா இராமாநுசம் said...

தலைப்புக்கேற்ற தன்நிலை விளக்கம் போல
படிக்கும் ஒவ்வொருவரும்எண்ணிப் பார்க்கத் தூண்டும்
நல்ல சிந்தனை!
இராமாநுசம்

மகேந்திரன் said...

இப்படி விடையற்ற வினாக்கள் ஆயிரம் ஆயிரமாம் நெஞ்சில்
கூடு கட்டி இருக்கிறது நண்பரே.
விடையற்ற வினாக்கள் இருந்தால் தான் தேடுதல் இருக்கும்
தேடுதல் இருந்தால் தான் படைப்புகள் பெருகும்...

அருமையான படைப்பு நண்பரே...

கீதா said...

முதல் கேள்விக்கு படி என்றார். அது கல்வி. இரண்டாம் கேள்விக்கு கவனி என்றார். அது அனுபவம். இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஞானம்தான் மூன்றாவதோ? அகப்படாத அந்தப் புள்ளியைத் தேடித்தான் அலைகிறதோ படைப்பாளியின் மனம்?

அருமையான கரு. வித்தியாசமான சிந்தனை. அழகான பகிர்வு. பாராட்டுகள் ரமணி சார்.

vanathy said...

நிறையக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நானும் அலைந்து கொண்டிருக்கிறேன்.
நல்ல வரிகள்.

ananthu said...

சாக்ரட்டீஸின் தத்துவத்தை கவிதையில் தந்த விதம் அருமை !

ஹேமா said...

எப்படி முடிகிறது இப்படியெல்லாம் யோசிக்க உங்களுக்கு !

தமிழ் விரும்பி said...

உண்மை தான் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எல்லோருக்கும் தெரியும் பொது பிரபஞ்சம் சுருங்கத் தொடங்கிவிடும் போலும்....
கேள்விகள் மிஞ்சி இருப்பதால் தானோ? பிரபஞ்சம் இயங்குகிறது!!!

நல்லக் கரு சுமந்த கவிதை...
ஏன்? என்ற கேள்வியோடே பிறந்துள்ளது!

ஸ்ரீராம். said...

விடை தெரியாத கேள்விகள்...

இந்திரா said...

விடைகள் சுலபம்..
வினாக்கள் தான் கஷ்டம்..

இந்திரா said...

ஆனாலும் விடைகளே வினாக்களாய் சில சமயங்களில்..

radhakrishnan said...

''முன்னிரண்டு கேள்விகளுக்கு
சட்டெனப் பதில் சொன்னவர்
இப்போது ஏனோ மௌனம் சாதித்தார்
பின் மெல்லிய குரலில்
"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் " என்றார்''
தேடுதலுக்கு முடிவே இல்லை என்கிறாரா??
அவரளவு நீங்களும் வளர்ந்துவிட்டீர்கள் என்கிறாரா?
கவிதை எங்கள் மனதைக் குடைய ஆரம்பித்துவிட்டது. தத்துவக் கவிதைக்கு நன்றிசார்

angelin said...

சில வினாக்களுக்கு விடை கிடையாது .
சில வினாக்கள் ஞானிகளுக்கு மட்டுமே உதிக்கும்
விடை கிடைக்காத வினாக்கள் எழுப்புபவர் ஞானிதானே

Ramani said...

angelin //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இந்திரா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ananthu //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நிலாமதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரவாணி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவை2தில்லி //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விமலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கணேஷ் //

கனம் துறந்து காற்றில் பறவையாய் பறக்கக் கூடுமாயின்
அவர்கள்தானே பாக்கியவான ஞானவான்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

VENKAT //

தங்கள் வரவுக்கும் அதிக்ம் சிந்திக்கச் செய்துபோகும்
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

மிகச் சரி
தங்கள் வரவுக்கும் சிந்திக்கச் செய்துபோகும்
அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி

மிகச் சரி
தங்கள் வரவுக்கும் சிந்திக்கச் செய்துபோகும்
அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன்


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கே. பி. ஜனா... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

kavithai (kovaikkavi) //.

இதே கருத்தில் சில பதிவுகள் எழுதி உள்ளேன்
என்வே படித்தது போன்ற நினைவு தோன்றல் சரியே
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கலை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் விரும்பி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வலிபோக்கன் //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கச் செய்துபோகும்
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சென்னை பித்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

dhanasekaran .S said...

அவர்யார் கண்ணதாசனா.அவர் இது மாரி சொல்லியதாக கேள்விப் பட்டதுண்டு.

வெங்கட் நாகராஜ் said...

ஏன் என்று தெரிந்துவிட்டால் நல்லது தானே.... செய்யும் பலகாரியங்கள் ஏன் என்றே தெரியாமல் இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்....

நல்ல கவிதை நண்பரே....

Ramani said...

dhanasekaran .S //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment