Thursday, January 19, 2012

இங்கு எல்லாம் இப்படித்தான் ...

வார்த்தைகளை வரிசைக்   கிரமமாய்
மிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான்
கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை

மனிதர்களை  எப்படியேனும் எது கொடுத்தேனும்
மிக அதிகமாகச் சேர்க்கத் தெரிந்தவன்
தலைவன் ஆகிப் போகிறான்
நோக்கம் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை

எதைச் சொல்லியேனும் வெறியேற்றி மனிதர்களை
பல கூறாய் பிரிக்கத் தெரிந்தவன்
மதத் தலைவன் ஆகிப் போகிறான்
மதத்தின்  நோக்கம்  குறித்து எவருக்கும் அக்கறையில்லை

எது நடந்த  போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்
சமூ க நலன் குறித்த கவலைகள் அவனுக்கில்லை

 எது எப்படி நடந்தபோதும்
தர்ம நியாயங்களைவிட 
"தன் ஒழுங்கு முறையை  "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும்  ?


71 comments:

தமிழ் உதயம் said...

பாதை தவறாக இருந்தாலும் பயணம் வெற்றி பெற்றுவிடுகிறதே. நல்லகவிதை சார்.

ஸாதிகா said...

மிகச்சரியாக கவிதை பாடி இருக்கீங்க ரமணி சார்.அபாரம்.தொடருங்கள்.

Kousalya Raj said...

இயற்கை தன் ஒழுங்கை காப்பதில் கொள்ளும் அக்கறையில் சிறிதேனும் மனிதர்கள் தங்களை ஒழுங்கு படுத்துவதில் காட்டினால் கூட போதும் வாழ்க்கை மேன்மையுறும்.

ஆதங்கத்துடன் கூடிய அழகிய வரிகள்.

மிக நன்று.

A.R.ராஜகோபாலன் said...

ஆரம்பமே அதகளமான அமர்க்கள தொடக்கம், மனிதனின் வாழ்க்கை நெறியையும், வழுக்கிய முறையையும் முழுதாக சொன்ன கவிதை ரமணி சார்.
அருமை. நன்றி பகிர்ந்தமைக்கு

Anonymous said...

ஆதங்க கவிதை ரமணி சார்...மிக நன்று...வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Kousalya //

வாழ்க்கையை விதி நிர்ணயிப்பதில்லை
அதற்கு அது வேலையில்லை என்பதை
வேறு மாதிரி சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

A.R.ராஜகோபாலன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

இயற்கையும் ஒரு நாள்-
பழி தீர்த்து கொள்கிறது!
இந்த" பாவ " பட்ட மனிதனை!
சுமப்பதால்!
வலியான வரிகள்!
நன்று!

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல் நினைவுக்கு வருகிறது. அருமையான கவிதை சார். என்னைப் பற்றி யோசிக்க வைத்தது.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
//தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்//
ஒவ்வொரு சமயம் ஒரு நியாயம் மக்களுக்கு பெரிதாகத் தெரியும். ஏதோ ஒன்றின் தாக்கம் தங்கள் கவிதையில் தெரிக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பால கணேஷ் said...

இயற்கையை மனிதன் நன்கு பராமரித்தாலே அது தன் கடமையைச் சரிவரச் செய்யும். மனிதனும் சரிவர வாழலாம். அருமையான கவிதை! (நான்கூட கவிதைன்னு ஒண்ணு எழுதிப் பார்த்தேன். நீங்க முதல்ல சொன்ன கேட்டகரிப்படி அமைஞ்சிடுச்சோன்னு டவுட் வந்ததால ஓரமா வெச்சுட்டேன்).

G.M Balasubramaniam said...

இதுதான் வாழ்வின் ஒழுங்கு முறை என்று ஏக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா.?

Unknown said...

ஆழ்ந்து யோசிக்கத் தூண்டும் வரிகள்! இயற்கைக்கு இருக்கும்சுயநலம் மனிதருள்ளும் இயங்குகிறது போலும்! இல்லை சுயநலம் தான் இயற்கையா?.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியான வார்த்தைகளில் கவிதை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

பதிவுலகம் நம் சொந்த வீடுமாதிரி
பதிவர்கள் எல்லாம் சகோதரர்கள் மாதிரி
பதிவுக்ள் கூட நம் டைரிக் குறிப்பு மாதிரிதான்
அப்படி நினைத்துதான் நான் பதிவிட்டு வருகிறேன்
நிச்சயமாக தங்கள் கவிதை சிறப்பானதாகத்தான் இருக்கும்
பதிவுடுமாறு தாழ்மையுடனும் ஆவலுடனும் வேண்டுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

ஆம் அப்படித்தான் தோன்றுகிறது
சிறிய வரிகள் ஆயினும் பின்னூட்டம்
ரொம்ப சிந்திக்கச் செய்து போகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

நீங்கள் சொல்வதும் மிகச் சரி
இயற்கை தனக்கு தீங்கு செய்தால்
பதிலுக்கு தீங்கு செய்வதும்
ஒத்துப் போனால் உதவுவதுமாக
தன்னிலையில் அது சரியாக இருக்கிறது
மனிதர்களைஅவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை
என நினைக்கிறேன்
சிந்திக்கச் செய்து போகும் அருமையான பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கோகுல் said...

இது இயற்கை மனிதனுக்கு கற்றுக்கொடுப்பதா?இல்லை மனிதனால் இயற்கைக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதா?

Yaathoramani.blogspot.com said...

கோகுல் //

அருமையான கேள்வி
வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
சிந்திக்கத் தூண்டிப்போகும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

எப்ப தான் சார் பதிவு போடுறீங்க நான் வரும்போதெல்லாம் தமிழ்மணம் 10 க்கு மேல இருக்கு....

Unknown said...

யாரு யாருக்கு கற்று கொடுக்க அண்ணே...இயற்கையே அப்படி இருக்க நாம்....

சின்னப்பயல் said...

கவிதைக்கட்டமைப்பு அருமை.
ஒவ்வொன்றாக விளக்கிகொண்டே வந்து
சட்டெனப்போட்டுடைப்பது கடைசியில்..

ராஜி said...

கவிதை அருமைங்க ஐயா, இன்றைய கவிதை புதுக்கவிதை போல இருக்கே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சாட்டையடி...

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் // //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

நின்று கொல்லாமல் செத்தபிறகு எமனுலகில்
இரும்புச் சட்டியில் வறுக்க உத்திரவாதம் தராமல்
இப்போதே இங்கேயே
தண்டனை வழங்கினால் சரியாக இருக்குமோ ?
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

K.s.s.Rajh said...

////எது நடந்த போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்////

உண்மையான வரிகள்

கவிதை அருமை பாஸ்

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

பதிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிற நேரத்தில்
பதிவுகள் போடுவதால்
அப்படி நேருகிறதோ ?
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

இந்திரா said...

//எது நடந்த போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்//


யதார்த்த வரிகள்..

கடம்பவன குயில் said...

எப்படியும் வாழலாம் என்ற கொள்கை அநேகருக்கு. இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கை சிலருக்கு. அவரவர்கள் அவரவர் வாழ்க்கையில் எப்படியோ ஜெயித்தே தொலைக்கிறார்கள்,தன்னையும் தொலைத்து.

Anonymous said...

அதுதான் இந்த மாதிரி கவலைக் கொள்ளா மனிதர்களுக்கு
இயற்கை அவ்வப்போது தரும்
தண்டனைக் கொடைகளை அப்பாவிகளும் சேர்த்து தம் தலையில்
ஏற்கின்றனரே .......
மக்கள் செய்யும் தவறு மகேசனை சேரும் என்பது போல்.
நன்று. ரசித்தேன்.

சசிகலா said...

எது எப்படி நடந்தபோதும்
நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது அருமையான வரிகள் நன்றி

துரைடேனியல் said...

Asaththal Kavithai Sir.

TM 18.

துரைடேனியல் said...

Kavithaigal kuriththa ungal karuththu 100% unmai Sir. Arumai. Thodarungal!

ADHI VENKAT said...

வரிகள் அருமையாய் இருந்தது சார்.

Marc said...

உண்மையான வரிகள். அருமையான கவிதை வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

முடிச்சு போட்டது அவிழ்த்ததும் புரிந்தது. நன்று.

(கணேஷ்.. கவிதையை ஒரு வழி பண்ணாம விடாதீங்க.. :)

vanathy said...

அசத்தலான கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

உங்கள் வரிகள் அனைத்தும் சிந்திக்க தூண்டுபவை வழக்கம் போல மிக நன்றாக உள்ளது.

இதற்கு மேலும் மெருகுட்டுவது போல சகோதரி கெளசல்யா அவர்களின் பின்னுட்டம் அமைந்துள்ளது.

/இயற்கை தன் ஒழுங்கை காப்பதில் கொள்ளும் அக்கறையில் சிறிதேனும் மனிதர்கள் தங்களை ஒழுங்கு படுத்துவதில் காட்டினால் கூட போதும் வாழ்க்கை மேன்மையுறும்///

மிக மிக அருமை.

ரமணிசார் உங்கள் பதிவை நீங்கள் போட்ட உடனே படித்து கமெண்ட் போட முடியவில்லையே என்று நினைப்பேன்.ஆனால் லேட்டாக வருவதினால் உங்கள் பதிவை மட்டுமல்ல அதற்கு வரும் நல்ல பின்னுட்டங்களையும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

இந்திரா . //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கடம்பவன குயில் //

அருமையான மனம் கவர்ந்த பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

என்னுடைய பதிவு சிறப்பு பெறுவது
பதிவினைவிட தங்களைப் போன்றவர்களின்
அருமையான பின்னூட்டத்தினால்தான்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

sasikala //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

dhanasekaran .S //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Avainayagan said...

"கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை"


இவ்வுண்மையை உரியவர்கள் புரிந்து கொண்டால் பரவா
யில்லையே

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

எல்லோரும் ஓவியத்தின் அழகில் லயித்திருக்க
சிறந்த ஓவியர் கோடுகளைக் கவனித்துக்
கொண்டிருப்பதைப் போல....
மனம் கவர்ந்த அழகான பின்னூட்டம்
அளித்தமைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்களைப் போலவே என் பதிவுக்கு வருபவர்கள் அனைவரும் மனம் திறந்து விரிவான
பதிவினை விட சிறப்பானபின்னூட்டம் இடுவதால்தான்
பதிவும் ஒரு வகையில் சிறப்பு பெறுகிறது

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வியபதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிகச் சரியான கருத்தைவலியுறுத்திப் போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஹேமா said...

கவிதை முழுதும் ஆதங்கம்.அவரவர் செய்வது அவரக்குச் சரியென்றே படும்.தப்பில்லை என்பார்கள் !

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்வதும் மிகச் சரி
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Madhavan Srinivasagopalan said...

// வார்த்தைகளை வரிசைக் கிரமமாய்
மிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான் //

Oh! I see.. It's so easy..?

Radhakrishnan said...

//மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும்//

மனிதர்கள்தானே அதையும் செய்கிறார்கள்.

Yaathoramani.blogspot.com said...

பெரும்பாலானவர்கள் வார்த்தைகளை எடுத்து வைத்துக்கொண்டு
கவிதை செய்யவே முயல்கிறார்கள்
கவிதை படைக்க முயல்வதில்லை
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

V.Radhakrishnan //

வாழ்க்கையை விதி நிர்ணயிப்பதில்லை
அதற்கு அது வேலையில்லை என்பதை
வேறு மாதிரி சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//எது எப்படி நடந்தபோதும்
தர்ம நியாயங்களைவிட
"தன் ஒழுங்கு முறையை "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும் ?//

நல்ல வார்த்தைகள்....

பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ShankarG said...

ரமணி,



'இங்கு எல்லாம் இப்படிதான்' மிக அற்புதமான கவிதை. உண்மையை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment