Sunday, January 29, 2012

கடவுளும் கடவுள் வாழ்த்தும்......

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்கலி ன்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?
அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினை
கணக்கில் கொள்வதா?
அல்லது
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே
கவிஞனைக் கொல்வதா?
அல்லது 
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றி காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசிய சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை 
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில் 
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து 
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது 
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்
அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"எனி
கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது
என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

80 comments:

சின்னப்பயல் said...

கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்////

அருமை ரமணி சார்.....தொடருங்கள்..!!

Admin said...

கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்..

நிச்சயம் ஐயா.இதை மறுப்பதற்கில்லை..
வாசித்தேன் வாக்கிட்டேன் நன்றி..

பால கணேஷ் said...

மிக அருமையான சிந்தனையைப் பகிர்ந்திருக்கிறீர்கள். கடமை‌யைச் செய்யாமல் கடவுளை வணங்குவது எவ்விதத்திலும் பயன்தராது என்பது உண்மைதான். மிக ரசித்துப் படித்து வாக்களித்து விட்டேன். படித்த சந்தோஷத்தை வழங்கிய தங்களுக்கு என் நன்றி!

Angel said...

//கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது //

புரியாத /விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல் இருக்கிறது .அருமையான சிந்தனை .

Anonymous said...

'காரியத்தில் கண் வையடா '

என்ற அறிவுரை கடவுளை வெறுமே

வாழ்த்திப் பாடி சுமையை அவர் முதுகில்

ஏற்றி விடும் வீணர்களுக்கு கண்டிப்பாகத் தேவை .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை...

கவிதையின் கரு - அட்டகாசம் - ஒரு வித மகிழ்ச்சி - அட்லீஸ்ட் உங்கள் கனவில் கம்பன் வந்து உங்கள் சந்தேகத்தினை தீர்த்து வைத்தார் - எங்களுக்கும் ஒரு நல்ல கவிதை கிடைத்தது.....

RAMA RAVI (RAMVI) said...

//கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது //

சிறப்பான சிந்தனை,சார்.

செய்யும் காரியத்தில் கவனம் தேவை என்று அழகாய் உணர்த்தும் கவிதை.

S.Venkatachalapathy said...

அம்பிகாபதியின் முடிவுக்கு, காரியத்தில் மட்டுமல்ல சட்டதிட்டங்களையும் தெளிவாக தெரியாமல் போனது கூட ஒரு காரணம்.

தண்டனை முடிவு அரசனது என்றதால் கம்பனே ஒன்றும் செய்யமுடியாது போனது அம்பிகாபதியின் துரதிஷ்டமே.

இந்தக் காலமாக இருந்தால் அப்படியே சட்டத்தையே அமுக்கிவிடலாம்.

S.Venkatachalapathy said...

சிறப்பான பதிவு. எனக்கு முன் வந்தவர்கள் நான் எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுதிவிட்டார்கள். அதனால் இப்படியொரு பின்னூட்டம்.

ஸாதிகா said...

வித்தியாசமாக சிந்தித்து இருக்கின்றீர்கள்!

Seeni said...

uzhaippu mukkiyam!
enpathai puriya vaiththu irukkeenga!

sinthikka vaiththa kavithai!

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

கடவுளை வணங்குவது எவ்விதத்திலும் பயன்தராது என்பது உண்மைதான். மிக ரசித்துப் படித்து வாக்களித்து விட்டேன். படித்த சந்தோஷத்தை வழங்கிய தங்களுக்கு என் நன்றி!

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //

புரியாத /விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல் இருக்கிறது .அருமையான சிந்தனை

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

அப்பாதுரை said...

காரியத்தில் கவனமிருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற அருமையான, கண் திறக்கும் கருத்து. பிடித்திருக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

கவிதையின் கரு - அட்டகாசம் - ஒரு வித மகிழ்ச்சி - அட்லீஸ்ட் உங்கள் கனவில் கம்பன் வந்து உங்கள் சந்தேகத்தினை தீர்த்து வைத்தார் - எங்களுக்கும் ஒரு நல்ல கவிதை கிடைத்தது.....

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

RAMVI //


சிறப்பான சிந்தனை,சார்.

செய்யும் காரியத்தில் கவனம் தேவை என்று அழகாய் உணர்த்தும் கவிதை.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

அப்பாதுரை said...

கணேஷின் பின்னூட்டத்துக்கு ரமணியின் பதில் இன்னும் சுவை. வெட்டுப்பட்டக் கணேஷின் கருத்து தற்செயலா?

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

தண்டனை முடிவு அரசனது என்றதால் கம்பனே ஒன்றும் செய்யமுடியாது போனது அம்பிகாபதியின் துரதிஷ்டமே.

இந்தக் காலமாக இருந்தால் அப்படியே சட்டத்தையே அமுக்கிவிடலாம். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கவைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

ஸ்ரீராம். said...

"காரியத்தில் கண் வையடா...காரிகையின் மேலல்ல" என்ற செய்திதான் தெரிகிறது....சிவாஜி...சீ...அம்பிகாபதி என்ன செய்வார் பாவம், பானுமதி, அடச்சே...அமராவதி தப்பெண்ணிக்கையில் பூப்போட்டு கண்ணெதிரே தோன்றியதும் 'சற்றே சரிந்த குழலாய்' என்று உணர்ச்சி வசப் பட்டு விட்டார்...!

பாஹே said...

முதலில் கம்பன் என்று ஒருவன் இருந்தானா? இருந்தான் என்கிறான் பாரதி. சரி, அம்பிகாபதி என்று அவனுக்கு ஒரு மகன் உண்டா?
இம்மாதிரி நிகழ்வுகள் மக்களுக்கு சில நீதிகளைப் புரியவைக்க புனைக்கதைகளாக வழங்குவது தமிழ் மரபு. உதாரணம் ராமாயணம் மகாபாரதம். அம்பிகாபதி அமராவதி கதையும் இதே வகைதான்.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழ்கான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஒரு பாட்டை கட் செய்ததால் முடிவு மாறிப் போவதைப் போல
முன் ஒரு வரியை மாற்றிவிடுவது எத்தகைய
மாறுபட்ட கருத்தைத் தருகிறது எனப் பட
அதை அப்படி கட் செய்து பின்னூட்டமிட்டேன்
கணேசன் சார் கவனிப்பாராஎனப் பார்ப்போம் என எண்ணி
அப்படிச் செய்தேன் நீங்க்கள் கவனித்து விட்டீர்கள்
நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். /

"காரியத்தில் கண் வையடா...காரிகையின் மேலல்ல" என்ற செய்திதான் தெரிகிறது. //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பாஹே //

முதலில் கம்பன் என்று ஒருவன் இருந்தானா? இருந்தான் என்கிறான் பாரதி. சரி, அம்பிகாபதி என்று அவனுக்கு ஒரு மகன் உண்டா?

தங்கள் முதல் வரவுக்கும்
சிந்திக்கவைக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நனறி

Avargal Unmaigal said...

கடமையை செய்யாமல் கடவுளை மட்டும் வாழ்த்தி கூறையை பார்த்து கொண்டிருந்தால் கடவுள் கூறையை பிய்த்துகொண்டு அள்ளி தரமாட்டார். அவர் தமக்கு வேண்டியதை இயற்கையாகவே நிறைய அள்ளிதந்திருக்கிறார் அதை நாம் நன்றாக பயன்படுத்தி அதை தந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை காரியத்தில் கவனமின்மையேல் கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான் என்று அழகாக சொல்லிமுடித்து இருப்பது அருமை

G.M Balasubramaniam said...

வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் “உன் கடமையை நீ செய்; பலனை என்னிடம் விட்டு விடு “ கடவுளே சொல்லியிருக்கிறார்.கவிதை சொல்லிப் போன விதத்துக்குப் பாராட்டுக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது //

கலைஞர் கருணாநிதி “திரும்பிப்பார்” என்று ஒரு நாடகம் எழுதினார் {இது பின்னாளில் வேறு பெயரில் திரைப் படமானது) அந்த நாடகத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் “ கம்பன் மகன் அம்பிகாபதி.... சும்மா இருடா முந்திரிக் கொட்டை “. காதல் கண்ணை மறைக்க, கடமை மறந்த அம்பிகாபதியின் அவல மரணம் என்ற தங்கள் கவிதையின் கருத்துக்கு எனது பாராட்டு.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

கவிதையின் கருத்துக்கு எனது பாராட்டு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

உங்களின் கவிதை எப்பவும் போல மிக அழகான வரிகள் ரமணி சார்....தொடருங்க...

வாங்க பார்த்து செல்லுங்க said...

ரொம்ப சிறப்பாக உள்ளது

குறையொன்றுமில்லை. said...

நல்ல விளக்கம். கவிதை அழகு வாழ்த்துகள்.

Anonymous said...

அருமை அய்யா ...
ரொம்ப சுபேரா இருக்கு ...
நீங்கலாம் pray பண்ணிட்டு தான் கவிதை எழுத ஆரம்பிப்பீர்கள் போல ...சூப்பர் அய்யா ...

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வாங்க பார்த்து செல்லுங்க //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

கலை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

காரியத்திற்கு கடவுளை விட கவனமே முக்கியம்... நல்ல பதிவு ஐயா...

கூடல் பாலா said...

கடவுளையும் வாழ்த்தவேண்டும்...கடமையையும் செய்யவேண்டும்...பதிவு அருமை சார் !

துரைடேனியல் said...

//கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//

- உண்மைதான் ரமணி சார். சோம்பேறிகள் கடவுளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது பெரும் தவறு. பைபிளில் ஒரு வசனம் வரும்.

' குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும்'

குதிரையை நாம்தான் ஆயத்தப்படுத்த வேண்டும். வெற்றியைக் கடவுள் தருவார். இதைத்தான் உங்கள் கவிதை ஞாபகப்படுத்தியது. அருமையான கவிதை. அம்பிகாபதி பாவம்தான். ராஜகரம் நசுக்கிய ரோஜாப்பூ அவன். தொடருங்கள்.

துரைடேனியல் said...

தமஓ 10.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல சிந்தனை

ADHI VENKAT said...

அருமையான கவிதை....

//காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//

இது உண்மையான வரிகள்.....

Yaathoramani.blogspot.com said...

மரு.சுந்தர பாண்டியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

koodal bala //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

சி.பி.செந்தில்குமார் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

ஹேமா said...

கடவுளை வணங்குதல் அவசியம் என்றாலும் காரியத்திலும் கவனமாயிருக்கச் சொல்கிறீர்களா.நல்லது !

விச்சு said...

காரியம்தான் முக்கியம் என நாசூக்காக சொல்லியிருப்பது அழகு.

kowsy said...

உறக்கத்தில் கூட இலக்கியமா? கம்பன் வடிவம் எப்படி இருந்து? படம் வரைந்து வைத்திருப்பவர்கள் படத்தைத் தானே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதைத்தானே உங்கள் மூளையும் படமாய்க் காட்டும். கம்பன் கூறியதாக நீங்கள் எழுதியதும் அதைப் போலவேதான் . உங்கள் எண்ணமே உங்கள் கவிதை உங்கள் கனவு. வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Anonymous said...

கடமை‌யைச் செய்யாமல் கடவுளை வணங்குவது எவ்விதத்திலும் பயன்தராது என்பது உண்மைதான் ரமணி சார்...

இராஜராஜேஸ்வரி said...

கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்

ஆம்.. காரியத்திலும் கண்வைத்து கடவுளையும் வணங்கவேண்டும்ம்ம்.. அருமையான கருத்துள்ள பகிர்வுக்குப் பாராடுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி ... //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

நிலாமகள் said...

ந‌ல்ல‌தொரு ப‌டிப்பினை த‌ரும் க‌விதை! க‌ம்ப‌ரைக் க‌ண்ட‌ ப‌ர‌வ‌ச‌த்தில் 'த‌ட‌ங்க‌ல்' த‌ட‌ங்க‌ள் ஆகிவிட்ட‌தோ...

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Suresh Subramanian said...

அருமை...நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Yaathoramani.blogspot.com said...

veedu //

என்னையும் அறிமுகம் செய்தமைக்கும்
நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Rishvan //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஹ ர ணி said...

excellent thought Ramani sir.

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Marc said...

கனவும் கவிதையும் சொல்லிச் செல்லும் பாடம்.

அருமை கவிதை வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

dhanasekaran .S //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

சாகம்பரி said...

சத்தியமான வார்த்தை சார். கர்ம யோகம்!. என் மாணவர்களிடம் சொல்வதும் அதையேதான். கடவுள் இல்லையென்று சொல்பவர்கூட வெற்றி பெறுவது எப்படி என்ற கேள்விக்கு இதுதான் பதில். அருமையான பகிர்விற்கு நன்றி சார்.

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

மகேந்திரன் said...

ஆரம்ப வார்த்தைகளில் நானும் குழம்பித்தான் போனேன்..
முழுவதும் படித்த பின்னர் தான் தெளிவு பெற்றேன்..

குழம்பிய பின்னர் தானே தெளிவு பிறக்கும் என்பது
சரியாகிப் போனது...

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

சாந்தி மாரியப்பன் said...

அருமை.. அருமை.

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .

இடி முழக்கம் said...

என்ன ஒரு சிந்தனை..............அழகான கருத்து.. அருமை தோழரே தொடருங்கள்........

Yaathoramani.blogspot.com said...

இடி முழக்கம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .

Post a Comment