நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்
எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளை
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்
வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்
நாலு முறை அலைய சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்
நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்
அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்
இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே கட்டிவருகிறோம்
விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்
நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்
இப்பொது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்
எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
இது நாள் வரை காத்திருந்து
இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்
இதையும் நாங்களாக எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்
உங்களுக்கு ஒரு பெருமையெனில் முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே விட்டுக் கொடுப்பதுவும்
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே
பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?
79 comments:
மகளிர் தினமான இன்று மகளிர் சார்பில் ஒரு கவிதை. கவிதை சொன்ன ஒவ்வொன்றும் உண்மை...
கடைசியில் கேட்ட கேள்வி டச்சிங்....
மகளிர் தினம் அன்று ஒரு நிதர்சனமான கவிதை மிக சிறப்பாக இருக்கு பாஸ்
மகளிர் தினத்தைப் போற்றும் வகையில் மகளிருக்காய் ஓங்கி ஒலித்திருக்கிறது உங்கள் குரல். மகளிரைப் போற்றுவோம்!
வணக்கம்! உரிமைகளுக்காக யாரும் இப்போது கெஞ்சி கேட்டுக் கொண்டு இருப்பதில்லை. அவரவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். கால மாற்றத்தை கருத்தில் கொணர்ந்த கவிதை.
மகளிர் தினத்தைப் போற்றும் வகையில் மகளிருக்காய் ஓங்கி ஒலித்திருக்கிறது உங்கள் குரல். மகளிரைப் போற்றுவோம்!
மகளிர் தின சிறப்புக் கவிதை பெண்மைக்காய் பேசியிருக்கிறது..பிடித்தது வாக்கிட்டேன்.
அண்ணே மனசாட்சி குத்துகிறது...கவிதை ஆண்களுக்கு நெருடல்!
மகளிர் தின ஸ்பெசலா? நல்லாருக்கு சார். பெண்களுக்கு நாம் இன்னும் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. பெண்கள் ஓட்டு இன்னிக்கு உங்களுக்குத்தான் போங்க. நம்முடைய பதிவுலக மகளிர் அனைவருக்கும் நமது மகளிர்தின வாழ்த்துக்கள்! அருமையான படைப்பு. நன்றி!
tha ma 7.
பரிணாமம் அல்லது யதார்த்தம் ,////
எப்படி சொன்னாலும் பொருந்தும். அருமையானகவிதை. தேவை என்கிற போது - அது எப்படி சொல்லப்பட்டால் என்ன.
பெண் உறவுகளுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தீங்கு விளைவிக்கா ஆண்மகன் இல்லவே இல்லை!
அனைத்து பெண் வடிவங்களுக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்!
இன்றைய நாளுக்கு பொருத்தமான கவிதை அபாரம்.
மிகவும் சிறப்பான கவிதை ரமணி அண்ணா! யதார்த்தம் நெருடவே செய்கிறது!
ஆண்களைக் குறை கூறி பெண்களை முன் நிறுத்தி எழுதிய பதிவு , முன்னவரைக் கீழிறக்காமல், பின்னவரைப் போற்றி இருந்தால் நன்றாயிருந்திருக்காதோ.? இன்றைக்கான பதிவு என்பதாலா.?
வெங்கட் நாகராஜ் //
கடைசியில் கேட்ட கேள்வி டச்சிங்...//.
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விாவான அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh
மகளிர் தினம் அன்று ஒரு நிதர்சனமான கவிதை மிக சிறப்பாக இருக்கு பாஸ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
மகளிருக்காய் ஓங்கி ஒலித்திருக்கிறது உங்கள் குரல். மகளிரைப் போற்றுவோம்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.தி.தமிழ் இளங்கோ //
கால மாற்றத்தை கருத்தில் கொணர்ந்த கவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
மகளிர் தினத்தைப் போற்றும் வகையில் மகளிருக்காய் ஓங்கி ஒலித்திருக்கிறது உங்கள் குரல். மகளிரைப் போற்றுவோம்!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
மகளிர் தின சிறப்புக் கவிதை பெண்மைக்காய் பேசியிருக்கிறது.//.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
அண்ணே மனசாட்சி குத்துகிறது...கவிதை ஆண்களுக்கு நெருடல்!//
உண்மையை மட்டும்தான் எழுதியிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ungal kopam rasikkumpadiyaa
irukkuthu!
kavithai!
இடித்து உரைத்து இருப்பது அருமை.
நுண்ணறிவும் , பொருளாதாரமும் தான்
பெண்கள் வாழ்க்கைப் போரின் கேடயங்கள் , வாட்கள்.
எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளை
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்
இது என்னவோ உண்மைதான்!பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு விவரம் போதாது!
\\\விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்
நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்\\\\
சரியாக சொன்னீர்கள்!
\\உங்களுக்கு ஒரு பெருமையெனில் முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே விட்டுக் கொடுப்பதுவும்
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே///
பரம்பரை குணங்களெல்லாம் இப்போ காணாப்போச்சு, இன்னும் வைத்துக்கொண்டிருப்பவர்கள் கதி அதோகதிதான்!
தமிழ் உதயம் //
எப்படி சொன்னாலும் பொருந்தும். அருமையானகவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
பெண் உறவுகளுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தீங்கு விளைவிக்கா ஆண்மகன் இல்லவே இல்லை!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
இன்றைய நாளுக்கு பொருத்தமான கவிதை அபாரம்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW//
மிகவும் சிறப்பான கவிதை ரமணி அண்ணா! யதார்த்தம் நெருடவே செய்கிறது!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
..
ஆண்களைக் குறை கூறி பெண்களை முன் நிறுத்தி எழுதிய பதிவு , முன்னவரைக் கீழிறக்காமல், பின்னவரைப் போற்றி இருந்தால் நன்றாயிருந்திருக்காதோ//
உண்மையை மட்டும்தான் எழுதியிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
ungal kopam rasikkumpadiyaa
irukkuthu!
kavithai!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
இடித்து உரைத்து இருப்பது அருமை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கைபாண்டியன் //
இது என்னவோ உண்மைதான்!பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு விவரம் போதாது!//
பரம்பரை குணங்களெல்லாம் இப்போ காணாப்போச்சு, இன்னும் வைத்துக்கொண்டிருப்பவர்கள் கதி அதோகதிதான்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகளிர்தின சிறப்பு பதிவு அருமை.
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
சிந்திக்கும்விதமான பதிவு அன்பரே நன்று
கவியில் யதார்த்தம் பளிச்சிடுகிறது..
அருமையான மகளிர் தினக் கவிதை நண்பரே..
மகளிர் தினத்தில்
ஒரு உண்மையை அழகான கவிதை வடிவில் சொன்னதற்கு
நன்றி :}
உண்மை சார்
இந்த உலகம் இன்றும் அழகாகவும், ஒரு கட்டுக்குள் இயங்க தாங்கி பிடிப்பதுவும் பெண்மை தான்
இது மனித இனத்திற்கு மட்டும் அல்ல எல்லா உயிரினத்திற்கும் பொருந்தும்
மகளிர்தின கவிதை மிக யதார்த்தம்...
“நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்“
வரிக்கு வரி வாழ்த்து சொல்கிறேன்.
DhanaSekaran .S //
மகளிர்தின சிறப்பு பதிவு அருமை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
guna thamizh //.
சிந்திக்கும்விதமான பதிவு அன்பரே நன்று //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன்
கவியில் யதார்த்தம் பளிச்சிடுகிறதுஅருமையான மகளிர் தினக் கவிதை நண்பரே..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேர்கள் //
மகளிர் தினத்தில்
ஒரு உண்மையை அழகான கவிதை வடிவில் சொன்னதற்க நன்றி :}//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
மகளிர்தின கவிதை மிக யதார்த்தம்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இதையும் நாங்களாக எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்
உறுதி தந்த அருமையான மகளிர்தினப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
அருமையான பதிவு சார்!
மிக்க நன்றி!!!!!!
AROUNA SELVAME //
வரிக்கு வரி வாழ்த்து சொல்கிறேன்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
உறுதி தந்த அருமையான மகளிர்தினப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
அருமையான பதிவு சார்!
மிக்க நன்றி!!!!!!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகளிர் தினத்தில் இப்படி ஒரு குரல்
அந்தப்பக்கத்திலிருந்து...!மகிழ்ச்சி!
காலகாலமாய் மறந்தவற்றை,இழந்தவற்றை
நினைவூட்டி எழுப்பியதும் சில ஆண்கள்தானே..!
யாரங்கே!ரமணிசாருக்கு அந்த வரிசையில்
ஒரு சீட் போடுங்க.
முதல்3 வரிகளும், இறுதி 4 வரிகளும் மிகப் பிடித்தது. இல்லை எல்லாமே பிடித்தது.
''..இப்பொது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்..''
இதுவும் மிகப்பிடித்தது. ஆக உண்மையைக் கூறியுள்ளீர்கள் நன்று நன்று..சிறப்பு .நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அசத்தலாயிருக்கு கவிதை..
//பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?////
இப்படிபட்ட ஆண்கள் இன்னும் இருக்கிறார்களா என்பது எனக்கு வியப்பை தருகிறது
கரவொலி கேட்கிறதா ரமணி சார்.?
கை தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்து என் மனைவி கேட்கிறாள் , யாருக்காக என்று, உனக்கும் உனக்காகவும் சேர்த்துத் தான் என்கிறேன்.
சக்தி /
.
மகளிர் தினத்தில் இப்படி ஒரு குரல்
அந்தப்பக்கத்திலிருந்து...!மகிழ்ச்சி!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ஆக உண்மையைக் கூறியுள்ளீர்கள் நன்று நன்று..சிறப்பு .நல் வாழ்த்துகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
அசத்தலாயிருக்கு கவிதை..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
இப்படிபட்ட ஆண்கள் இன்னும் இருக்கிறார்களா என்பது எனக்கு வியப்பை தருகிறது//
உண்மையை மட்டும்தான் எழுதியிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
கரவொலி கேட்கிறதா ரமணி சார்.?
கை தட்டிக் கொண்டேயிருப்பதைப் பார்த்து என் மனைவி கேட்கிறாள் , யாருக்காக என்று, உனக்கும் உனக்காகவும் சேர்த்துத் தான் என்கிறேன்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகளிர் தின ஸ்பெசல் கவிதை அற்புதம்.. யதார்த்தத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே போய் வருகிறோம் //
எங்கோ இடிக்கிறது தோழரே
அருமையான கவிதை சார். சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
த.ம. 14
Sankar Gurusamy //
மகளிர் தின ஸ்பெசல் கவிதை அற்புதம்.. யதார்த்தத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்//
.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
அருமையான கவிதை சார். சொன்ன ஒவ்வொரு கருத்துக்களும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
suryajeeva //
எங்கோ இடிக்கிறது தோழரே //
உண்மையை மட்டும்தான் எழுதியிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல கவிதை , குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவும் ஆண்கள் முன்வருவதில்லை !
அருட்கவிக்கும் அன்புடன் அழைக்கிறேன்.
ஆன்மீகத்திற்காக இல்லாவிடினும் அருந்தமிழ் சுவைக்க வேண்டியேனும்.
யதார்த்த உண்மைகளை ஒத்துக்கொண்ட கவிதை.அற்புதம் !
ananthu
//
..
நல்ல கவிதை , குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவும் ஆண்கள் முன்வருவதில்லை !/
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
யதார்த்த உண்மைகளை ஒத்துக்கொண்ட கவிதை.அற்புதம் //!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனதை தொடும் வரிகள். தொடர வாழ்த்துக்கள்.
vanathy //
மனதை தொடும் வரிகள். தொடர வாழ்த்துக்கள்./
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா//
கண்டேன் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி
//எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை//
அபார்ஷணுக்கும் கருக்கலைப்புக்கும்
அவன் தான் ( கணவன் தான்) பொறுப்பு எனின்
அவன் கண்டிப்பாக முன்னே இருப்பான்.
கரு இனித் தங்காது என
கண்டிப்பாக மருத்துவர் சொல்லியபின்
கலங்கிய கண்களுடன்
இல்லாளின் இதய வேதனையை
பங்கு கொள்ளும் கணவன்மார்கள்
பல இருக்கின்றனர்.
நீங்கள் சொல்வது கணவர்களை
கண்ணியமானவர்களை
இல்லை எனவே நினைக்கிறேன்.
ஆண்களைத் திட்டித்தான் ஆகவேண்டும் என்றால்
ஆயிரம் வழிகள் உண்டு.
ஆனாலும்
இந்த அசிங்கம் - நல்
இல்லறத்தில் என்றும் இல்லை.
பெண்களைப் போற்ற வேண்டும் என்றால்
ஆண்களைத் திட்டினால் தான் முடியுமா என்ன !!
பெண் ஒரு காவியம். ஆண் அக்காவியத்தின் முதல் ரசிகன்.
பெண் ஒரு பொற்களஞ்சியம். ஆண் அக்களஞ்சியத்தின் காவலன்.
பெண் ஒரு இமயம். ஆண் இமயவான். ஈசன்.
அவனும் அவளும் மகிழ்வின் அது இல்லறம்.
அவன் அவளுக்குத் தன் பாதியைத் தந்தான்.
அர்த்த நாரி எனப் பெயர் கொண்டான்.
சுப்பு ரத்தினம்.
// ஆண்களைக் குறை கூறி பெண்களை முன் நிறுத்தி எழுதிய பதிவு , முன்னவரைக் கீழிறக்காமல், பின்னவரைப் போற்றி இருந்தால் நன்றாயிருந்திருக்காதோ.? .? //
கருத்திட்டவருக்கு எனது நன்றி.
ஒன்றே சொல்லிடினும் நன்றே சொன்னீர்கள்.
சுப்பு ரத்தினம்.
sury //
அவனும் அவளும் மகிழ்வின் அது இல்லறம்.
அவன் அவளுக்குத் தன் பாதியைத் தந்தான்.
அர்த்த நாரி எனப் பெயர் கொண்டான்.//
தங்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது
தாங்கள் குறிப்பிட்டுளது போல உரிமை கொடுப்பது
என்கிற நிலையில் தான் ஆண்களும் பெறுகிற நிலையில்தான்
பெண்களும் இருப்பதாக இருப்பதே எனக்கு உடன்பாடில்லை
இது கொடுத்துப் பெறுகிற விஷயமில்லை
அந்த மனோபாவம் அதிகமாக ஆண்கள் மத்தியில்
இருப்பதால்தான் இன்னமும் இட ஒதுக்கீட்டைப் பெறமுடியவில்லை
தாங்கள் முன் சொன்ன மூன்று விஷயங்கள் குறித்து
இன்றும் கூட மின்கட்டணம் செலுத்தும் இடங்களிலும்
ரேசன் கடைகளிலும் கண்கூடாகக் காணலாம்
அதைப் பார்த்த பாதிப்பில்தான் இதையே எழுதினேன்
கருவுக்கு அவர்கள் காரணமாக இருந்தால் என்கிற வார்த்தையைப்
பயன்படுத்தி இருக்கவேண்டாமோ எனத் தோன்றியது
நீங்கள் சொல்கிற மாதிரியான கணவர்கள் இருக்கிறார்கள்
சதவீதம் மிகவும் குறைவு
மனம் திறந்த பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
(பெண் பதிவர்களின் கருத்தைப் படித்தீர்களா
யாருக்கும் எதிமறையான கருத்தில்லை)
புழுங்கிக்கிடக்கும் சில மனங்களுக்கு வாகாய் விசிறியிருக்கிறீர்கள். கண்கள் பனிக்க நன்றி சொல்லிக்கொள்கிறேன் ரமணி சார்.
கீதமஞ்சரி //
புழுங்கிக்கிடக்கும் சில மனங்களுக்கு வாகாய் விசிறியிருக்கிறீர்கள். கண்கள் பனிக்க நன்றி சொல்லிக்கொள்கிறேன் ரமணி சார்./
மனதை தொடும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
பெண்மையின் சிதைவுகளை கண்டு மரத்துப்போன மனதுக்கு
மருந்தை உங்கள் கவிதை இனி துளிர்விடும் நம்பிக்கை நன்றி உங்களுக்கு ...........
கோவை மு.சரளா //
மனதை தொடும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
Post a Comment