அலமேலுகளும் அம்புஜங்களும்
மாமியாகிப் போனார்கள்
மாமியாராகியும் போனார்கள்
வனஜாக்களும் கிரிஜாக்களும்
நாற்பதைக் கடந்து போனார்கள்
பலர் போயும் போனார்கள்
இப்போது ஜொலிப்பதெல்லாம்
த ன்ஷிகாவும் தமன்னாவும் தான்
கால மாற்றத்தில் கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது
அது சரி
ஆயினும்
பச்சேரிகள் எல்லாம் அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம் பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம் காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?
சுதந்திர வேள்வியில்
தான், தன் குடும்ப சுகம் எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?
இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்யும்
போலிச் சடங்குகளைத் தவிர்போமா?
இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?
மாமியாகிப் போனார்கள்
மாமியாராகியும் போனார்கள்
வனஜாக்களும் கிரிஜாக்களும்
நாற்பதைக் கடந்து போனார்கள்
பலர் போயும் போனார்கள்
இப்போது ஜொலிப்பதெல்லாம்
த ன்ஷிகாவும் தமன்னாவும் தான்
கால மாற்றத்தில் கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது
அது சரி
ஆயினும்
பச்சேரிகள் எல்லாம் அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம் பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம் காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?
சுதந்திர வேள்வியில்
தான், தன் குடும்ப சுகம் எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?
இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்யும்
போலிச் சடங்குகளைத் தவிர்போமா?
இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?
68 comments:
உண்மை!
உண்மை!
நீங்கள் சொன்னது-
உண்மை!
வருததிற்குரியா விஷயம்!
சரியா சொன்னீங்க-
புரியாதவர்களை-
செவுட்டுல அடிசிடீங்க!
அருமை!
கவிதை அருமை!
சரியான கேள்விதான்.நன்றாக வெளிப்பட்டிருக்கிறது
முந்தையகாலத் தலைவர்களை இகழ ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது! மகாத்மா..மகா"தூ'மா ஆகிவிட்டார்! புது கல்விமுறையில் சரித்திரப் பாடம் சலிப்புப்பாடமாகி விட்டது! இந்நிலையில் அவர்கள் வீதியிலாவது இருந்துவிட்டுப் போகட்டுமே! பெயராவது புழக்கத்தில் இருந்துகட்டும்!
It is better to live emulating them, in some ways atleast and make the county a better place to live, instead of wasting time , enregy and money is those cheap gimmicks.
Well said.
//சுதந்திர வேள்வியில்
தான், தன் குடும்ப சுகம் எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?//
ஆமாம், ஆமாம். அப்படித்தான் உள்ளது.
காலமாற்றத்தை வேண்டி நிற்கும் சாமானியனின் உணர்வை அற்புதமாக கவிதையாக வடித்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் ரமனி ஐயா!
நியாயமான கேள்விகள்.
சமுதாயச் சூழல்களுக்குள் சிக்கிச் சுழலும் சாதீயம் பற்றிய குறுகியக் கண்ணோட்டங்களைக் குமுறும் கேள்விகளால் குதறும் கவிதை. தியாகத்தின் புகழ் சாதிக்குடுவைக்குள் பூதமெனக் கட்டிக்காக்கப்படும் ரகசியம் யாவரும் அறிந்ததே. மனம் தொட்ட பதிவு ரமணி சார். பாராட்டுகள்.
நியாயமான ஆதங்கத்தை வடித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது மிகச்சரியே...
போலிச்சடங்காக செய்ததால் கூட பரவாயில்லை.தங்கள்
சாதி(தீ)ய வலிமையை நிரூபிக்க உயர்ந்துள்ள தலைவர்களின் மரியாதையையும் நீங்கள் சொல்லியுள்ளது போல ஜாதிக்குடுவைக்குள் அடைத்து வைக்கும் நிலை ரொம்பவுமே கடுப்புதான்.
Seeni //...
தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
raji //
சரியான கேள்விதான் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
பெயர்கள் மாறினாலும் சாதீ மாறவில்லை.
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அருமை. புகழ் வந்தால் எங்கள் ஜாதி என்று கூண்டில் அடைக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக Dash Board திறக்கவில்லை. எனவே நிறைய பதிவுகளை படிக்க முடியவில்லை. எப்போதாவது வரும் மின்சாரமும் பிரதான காரணம்.
நன்றி ஐயா.
Vetrimagal
.. தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவிதை.... சமுதாய பிரதிபலிப்பு
தனிமரம் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தீபிகா(Theepika) //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
மனம் தொட்ட பதிவு ரமணி சார். பாராட்டுகள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?//
நல்ல கேள்வி... எல்லாவற்றிலும் அரசியல் பார்க்கும் உலகு இது.... எதிலும் ஆதாயம் தேடத்தான் தெரிகிறது.... என் செய்வது!
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?
ஆதாரங்களையே அசைக்கும் ஆசையா அது!!???!!!
நல்ல கேள்வி
பதில் சொல்லவேண்டியவர்கள்
இன்னும் அடைப்பட்டு கிடக்குகிரார்கள்
பால் சடங்குக்குள்
அகம் தோட்ட கவிதை நல்ல சிந்தை சார்
சாட்டையடி பதிவுக்கு நன்றி ! இனிமேலாவது பிரிவினையை வளர்த்து அரசியல் செய்பவர்கள் திருந்தட்டும் ...
மாற வேண்டியது மாறாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து என்ன பயன். நல்ல கவிதை.
இங்குள்ள அனைவரும் ஏதாவது ஒரு ஜாதியில்தான் பிறந்திருக்கிறார்கள்,அந்ததஅடையாளத்தை தன்னில் தாங்கித்தான் இருக்கிறார்கள்,தனது பிள்ளைகளுக்குசகோதர,சகோதரிகளுக்கு மேற்குறிப்பிட்ட ஜாதியில்தான் திருமணம் செய்யப்போகிறார்கள்.இதுவரை ஏதும் பிரச்சனையில்லை.அதை வடிவமைத்து நிறுவனமயப்படுத்தும் போதுதான் பிரச்சனையாகிறது.
//இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?//
ஆமாம். சரியான கேள்வி தான்...
த.ம 7
//பச்சேரிகள் எல்லாம் அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம் பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம் காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?// எல்லாப் பெயர் மாற்றங்களும் இதே ரீதியில் நடக்கிறதா.? உண்மையாகவா..? இல்லை நான்தான் கவனிக்கத் தவறிவிட்டேனா.
வணக்கம்! உங்கள் குமுறல் புரிகின்றது. எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக் கொண்டால் இந்த குழப்பம் இல்லை.
நியாயமான ஆதங்கம்.எங்கேயோ மாறத்தொடங்கிவிட்டது.அந்த அடியை எங்கே தேடிப்பிடிப்பது இனி.எல்லாம் அவ்வளவுதான் !
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.
வருத்தத்துக்கு உரிய விசயம். அழகான கவிதையில் பதிவு செய்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
//சுதந்திர வேள்வியில்
தான், தன் குடும்ப சுகம் எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?//
- அசத்தல் வரிகள். என்று தீரும் இந்த ஜாதி மோகம்?. அழகான கருப்பொருள் கொண்டு படைக்கப்பட்ட செழுமையான படைப்பு. வாழ்த்துக்கள் சார்!
அருமையான வினாக்களை தொடுத்து அற்புதமாக பின்னப்பட்ட கவிதையிது,
உண்மை!
உண்மை!
நீங்கள் சொன்னது-
உண்மை!
வருததிற்குரியா விஷயம்!
தலையங்கம் அருமை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்யும்
போலிச் சடங்குகளைத் தவிர்போமா?//
சுட்டெரிக்கும் வார்த்தைகள் . திருந்த மறுக்கும் சமூகம் ..
தலைவர்களை ஜாதிகள் சொந்தம் கொண்டாடி அவர்களின் தியாகங்களையே வீணடித்து விடுகிறது.அருமையான கவிதைப் பதிவு
திருந்த வேண்டிய சமூகமும் திருத்தவேண்டிய எழுத்தாளர்களும். சமூகப் பார்வை மனிதனுக்கு தேவை . இதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள்
சந்திரகௌரி
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.
T.N.MURALIDHARAN //
..தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
..
சசிகலா \\
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.
மாதேவி //
..தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
.. தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
.
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
யானைகள் இன்று பானைக்குள் தான்
அடைக்கப் பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
யானைகளே இன்று பானைக்குள் ஒளிந்து கொள்கின்றன
என்றும் சொல்லலாம். சாதி மதம் என்று வரும்போது..
எந்தத் தலைவருக்கும் எழுத்தில் இருக்கும் துணிச்சல் சொந்த வாழ்வில் வருவதில்லை என்ற உண்மையை எழுத்தாளரான நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
Unmaiyai sonnenka
நியாயமான ஆதங்கம் சொல்லும் கவிதை,
பல சிறந்த தலைவர்களது புகழ் இப்படித்தான் சாதி குடுவைக்குள் அடங்கி கிடக்கிறது!
கால மாற்றத்தில் கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது//அருமைநன்றி
மாலதி //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நம்பிக்கைபாண்டியன் ////
நியாயமான ஆதங்கம் சொல்லும் கவிதை,//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
yathan Raj //
Unmaiyai sonnenka//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
.
எந்தத் தலைவருக்கும் எழுத்தில் இருக்கும் துணிச்சல் சொந்த வாழ்வில் வருவதில்லை \\
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
-துரைடேனியல் //
//அசத்தல் வரிகள். என்று தீரும் இந்த ஜாதி மோகம்?. அழகான கருப்பொருள் கொண்டு படைக்கப்பட்ட செழுமையான படைப்பு. வாழ்த்துக்கள் சார்! .
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sankar Gurusamy //.
வருத்தத்துக்கு உரிய விசயம். அழகான கவிதையில் பதிவு செய்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
guna thamizh ////.
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME சொல்லியிருப்பது சுருக்கென்றுத் தைக்கிறது.
பெயர் மாற்ற வரிகள் ஒரு பாதையில் கொண்டு செல்ல சாதிப்பானை வரிகள் இன்னொரு இடத்தில் கொண்டு சேர்த்தது. அதுவும் சரிதான்.
அன்பின் ரமணி சார்!
இன்றைய வலைச்சரத்தில் தங்களது பதிவைப் பற்றிப் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. முடிந்தால் வருகை தந்து கருத்துரை இடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நெற்றியில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது அம்பேத்கார் நகர் என்று சொன்னாலே அது சேரிப்பகுதி என்று தான் பொருள்படுகிறது.
அருணா சொல்வது போல் பானைக்குள் யானையை அடைத்து விட்டோம்.
அப்பாதுரை //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
நெற்றியில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது அம்பேத்கார் நகர் என்று சொன்னாலே அது சேரிப்பகுதி என்று தான் பொருள்படுகிறது.
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சாதனை நாயகர்களை சாதிச் சிறைக்குள் அடைக்கும் அவலத்தை ஆவேசமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.
Murugeswari Rajavel //
சாதனை நாயகர்களை சாதிச் சிறைக்குள் அடைக்கும் அவலத்தை ஆவேசமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
guna thamizh //
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment