Monday, March 19, 2012

காலங்காலமாய் கல்யாணியின் வாரீசுகள் ..

அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்

" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
 இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா

கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்

"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா

குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா

ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா

புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை

"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி

ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை

" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்

தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி

தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை

இப்படியாக ஒருவரை ஒருவர்
 மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
 மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது

மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது

அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா

இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி

 அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
 ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து  தானும்  இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது

70 comments:

பால கணேஷ் said...

நிஜம்தான். பல பெற்றோர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படத்தான் செய்கிறது. அழகான சிறுகதையாகத் தந்தது அருமை. அப்பப்ப சிறுகதைகளும் தரும்படி கேட்டுக்கறேன். சூப்பர்ப் ஸார்! (த.ம.2)

தீபிகா(Theepika) said...

கல்யாணியின் வாரீசுகள். நல்ல தலைப்பு.

ஒரு திருமணப்பேச்சின் திணறல்களை
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அன்றும் - இன்றும் பெண்களின்
சமூக நிலை மாற்றங்கள் அப்படியே தான்
இருக்கின்றன என்பதை தாயையும் மகளையும்
கொண்டு அழகாக சொல்லி முடித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

பிரமாதம் என்று சொல்லி அடங்கமுடியவில்லை ரமணி.
நீங்கள் கட்டியிருக்கும் வட்டக்கிணறு எத்தனை ஆழமென்று கணக்கிடக் கூட முடியாமல் திணறுகிறேன். மிகவும் நிறைவைக் கொடுத்த வரிகள்.

கீதமஞ்சரி said...

கல்யாணிகளின் கவிதை உணர்த்துகிறது
கல்யாணச்சந்தையின் களேபரத்தில்
காலங்காலமாய்க் களவாடப்படும் சுயம்.

கல்யாணியின் வாரிசுகளையேனும்
கட்டுப்படுத்தாமலிருப்பதே
களவுகொடுத்த சுயம் மீட்கும் தந்திரம்.

காலம் மாறவேண்டும், அல்லது
கல்யாணிகள் மாறுவதற்கு
மனம் வைக்கவேண்டும்.

மனம் தொட்ட கவிதைக்கரு. பாராட்டுகள் ரமணி சார்.

ஸாதிகா said...

அருமையான தலைப்பில் மிக அருமையான வசனக்கவிதை.

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

நிஜம்தான். பல பெற்றோர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படத்தான் செய்கிறது. அழகான சிறுகதையாகத் தந்தது அருமை

தங்கள் முதல் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தீபிகா(Theepika)

அன்றும் - இன்றும் பெண்களின்
சமூக நிலை மாற்றங்கள் அப்படியே தான்
இருக்கின்றன என்பதை தாயையும் மகளையும்
கொண்டு அழகாக சொல்லி முடித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.//

தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

நீங்கள் கட்டியிருக்கும் வட்டக்கிணறு எத்தனை ஆழமென்று கணக்கிடக் கூட முடியாமல் திணறுகிறேன். மிகவும் நிறைவைக் கொடுத்த வரிகள் //

.தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

காலம் மாறவேண்டும், அல்லது
கல்யாணிகள் மாறுவதற்கு
மனம் வைக்கவேண்டும்.
மனம் தொட்ட கவிதைக்கரு.
பாராட்டுகள் ரமணி சார்.//

.தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

அருமையான தலைப்பில் மிக அருமையான வசனக்கவிதை.//

.தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

//இருபது வருடங்கள் கழித்து தானும் இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது //

முத்தான வரிகள் மட்டுமல்ல சத்தான
வரிகளும் ஆகும்
வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம்
என்பதை உணர்த்தி விட்டீர்

சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

முத்தான வரிகள் மட்டுமல்ல சத்தான
வரிகளும் ஆகும்
வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம்
என்பதை உணர்த்தி விட்டீர்//


.தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

முத்தரசு said...

இன்று நாட்டில் பல கல்யானிகளின் நிலை இது தானுங்க

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி //

இன்று நாட்டில் பல கல்யானிகளின் நிலை இது தானுங்க //

.தங்கள் வர்வுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

அநேகமாக நடுத்தரக் குடும்பத்தில் பிற‌ந்த பெண்களின் நிலை அன்றும் இன்றும் இது தான்!! கனவுகள் சிதைந்த வலி ஒவ்வொரு தாயின் மனதிலும் இன்னும் இருக்கிறது. ஆனால் பெண்களின் நிலை இன்று சற்று மாறியிருக்கிறது. பெண்கள் வாதிடுகிறார்கள். வாதாடி ஜெயிக்கிறார்கள். பின் முதிர்கன்னிகளாய் திருமணச்சந்தையில் விலை போகாமல் தவிக்கவும் செய்கிறார்கள். வற்புறுத்தலிலும் அர்த்தமிருக்கிறது. புத்திசாலித்தனத்திலும் ஆபத்திருக்கிறது!

கவிதை நடையில் ஒரு அருமையான யதார்த்தமான சிறுகதையைப் படைத்திருக்கிறீர்கள்!!

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

கவிதை நடையில் ஒரு அருமையான யதார்த்தமான சிறுகதையைப் படைத்திருக்கிறீர்கள்/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

வாவ் என்று சொல்ல வைத்தது இந்த பதிவு.

Anonymous said...

Arumayana kavithai

Unknown said...

நாற்பது வயதிலேயே பாட்டி ஆகிவிடும், பெண்கள் நம் பாரதநாட்டில்! ஆனால் முதிர் கன்னிகளும் சமமாக இருக்கிறார்கள் என்பதும் வேதனயான விடயம்! நன்று!

Sankar Gurusamy said...

வாழ்வியல் நிதர்சனத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறீர்கள்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

ராஜி said...

அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து தானும் இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது
>>>>
பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு போலும். என்னதான் பொண்ணை படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பின்னு முற்போக்காய் சிந்தித்தாலும் கல்யாணம்ன்னு வரும்போது இன்னும் 1900களில்தான் இருக்கோம்.

arasan said...

பலரின் உள்ளத்து வேதனைகளை அழகிய பதிவாய் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் சார்

மகேந்திரன் said...

உங்கள் நடையில் இன்னுமொரு
முத்தான காவியம் நண்பரே..
நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் நிலையை
அப்படியே சொல்லி
மனதை அள்ளிக் கொண்டுவிட்டீர்கள்...

துரைடேனியல் said...

அருமையான படைப்பு. நம் பெற்றோர் நமக்குச் செய்ததையே நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம். இதுதான் இன்றைய சமுதாயத்தின் நிலை. அவல நிலை சுட்டிக் காட்டும் சிறந்த படைப்பு. தொடருங்கள்.

(கடுமையான பணிப்பளு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேல் வலைப்பக்கம் வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்க!)

துரைடேனியல் said...

tha ma 9.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

வாவ் என்று சொல்ல வைத்தது இந்த பதிவு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தமிழ் உதயம் said...

காலம் மாறுகிறது. கல்யாணிகளின் வாரிசுகளின் நிலை மாறி கொண்டு தானுள்ளது.

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி /
/
நாற்பது வயதிலேயே பாட்டி ஆகிவிடும், பெண்கள் நம் பாரதநாட்டில்! ஆனால் முதிர் கன்னிகளும் சமமாக இருக்கிறார்கள் என்பதும் வேதனயான விடயம்! நன்று//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //
.
வாழ்வியல் நிதர்சனத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறீர்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு போலும். என்னதான் பொண்ணை படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பின்னு முற்போக்காய் சிந்தித்தாலும் கல்யாணம்ன்னு வரும்போது இன்னும் 1900களில்தான் இருக்கோம்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அரசன் சே //

பலரின் உள்ளத்து வேதனைகளை அழகிய பதிவாய் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள் சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

உங்கள் நடையில் இன்னுமொரு
முத்தான காவியம் நண்பரே..
நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் நிலையை
அப்படியே சொல்லி
மனதை அள்ளிக் கொண்டுவிட்டீர்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

அருமையான படைப்பு. நம் பெற்றோர் நமக்குச் செய்ததையே நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம். இதுதான் இன்றைய சமுதாயத்தின் நிலை. அவல நிலை சுட்டிக் காட்டும் சிறந்த படைப்பு. தொடருங்கள்//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

படிப்பும் சம்பாத்தியமும் கல்யாணிகளின் நிலையை
மாற்றிக்கொண்டுதான் உள்ளது ஆயினும்
மாறுதலின் சதவீதம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
இல்லாத் ஆதங்கத்தில் எழுதியதே இது
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எனக்குள் இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது...

ரிஷபன் said...

மனதைத் தொட்ட கதைக் கவிதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு சார். புரிதல் இல்லாமலேயே இந்த இயந்திர வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கு,.

நல்லா அதை தெளிவாகவே சொல்லிட்டீங்க!
பாராட்டுக்கள் ;)

Marc said...

வாழ்க்கை வட்டத்தை எடுத்துச்சொல்லும் அழகான பதிவு வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! காரணம் கல்யாணியின் கணவன் மட்டுமா? பராசக்தியின் கல்யாணி தொடங்கி இன்று வரை நம் முன் நிற்பது, பெண்ணை வாழவிடுங்கள் என்பதுதான். நிழலான உண்மையை காட்சியாக்கி தந்துள்ளீர்கள்.

Seeni said...

athu sari!

azhakaa nakarnthideenga ayya!
nalla vithamaana ootta ezhuthukkal!
vaazhthukkal!

G.M Balasubramaniam said...

காலங்காலமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் குடித்தனம் நடத்தி வாழ்க்கையை முடிக்கும் ஜனங்கள் இருக்கிறார்கள்தான்.எல்லோருமேவா கல்யாணிகள்?
முற்போக்காக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசி புரிந்து கொள்வதை எழுதிய விதம் அருமை. பாராட்டுக்கள்.

அருணா செல்வம் said...

காலம் தான் வெற்றி பெறுகிறது.
கல்யாணிகளுக்கும் கனவுகளுக்கும் என்றுமே
தோல்விதான் வாழ்க்கையில்....
ம்ம்ம்... என்று தான் இன்னிலை மாறுமோ?

ADHI VENKAT said...

அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார். காலங்காலமாக இப்படித் தானே நடந்து கொண்டு வருகிறது.

த.ம 12

சசிகலா said...

வாழ்க்கைச் சக்கரத்தை சுற்றி வர சொல்லித் தந்த கவி வரிகள் அருமை ஐயா.

ஹேமா said...

எத்தனை கல்யாணிகள் இப்படி.அதுவும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் குடும்பங்களின் நிலைமை இதுவேதான்.என்றாலும் ஓரளவு சாதாரண அப்பா,அம்மாக்கள் குழந்தைகளைப் புரிந்தும்கொள்கிறார்கள் இப்போதெல்லாம் !

Yaathoramani.blogspot.com said...

எஸ்.எஸ்.பூங்கதிர் //
.
எனக்குள் இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது..//

.தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //

மனதைத் தொட்ட கதைக் கவிதை //

.தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //
.
நல்லாயிருக்கு சார். புரிதல் இல்லாமலேயே இந்த இயந்திர வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கு,.
நல்லா அதை தெளிவாகவே சொல்லிட்டீங்க!
பாராட்டுக்கள் ;)//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Dhana Sekaran //

வாழ்க்கை வட்டத்தை எடுத்துச்சொல்லும் அழகான பதிவு வாழ்த்துகள்./

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

வணக்கம்! காரணம் கல்யாணியின் கணவன் மட்டுமா? பராசக்தியின் கல்யாணி தொடங்கி இன்று வரை நம் முன் நிற்பது, பெண்ணை வாழவிடுங்கள் என்பதுதான். நிழலான உண்மையை காட்சியாக்கி தந்துள்ளீர்கள்./

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Seeni //

nalla vithamaana ootta ezhuthukkal!
vaazhthukkal!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

முற்போக்காக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசி புரிந்து கொள்வதை எழுதிய விதம் அருமை. பாராட்டுக்கள்//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //
...
காலம் தான் வெற்றி பெறுகிறது.
கல்யாணிகளுக்கும் கனவுகளுக்கும் என்றுமே
தோல்விதான் வாழ்க்கையில்....//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி.

சென்னை பித்தன் said...

த.ம.15.
காலம் மாறினாலும் இக்கதை மாறுவதில்லை/

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //
.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார். காலங்காலமாக இப்படித் தானே நடந்து கொண்டு வருகிறது.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //
.
வாழ்க்கைச் சக்கரத்தை சுற்றி வர சொல்லித் தந்த கவி வரிகள் அருமை ஐயா//
.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //.
.
எத்தனை கல்யாணிகள் இப்படி.அதுவும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் குடும்பங்களின் நிலைமை இதுவேதான்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

காலம் மாறினாலும் இக்கதை மாறுவதில்லை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

காலங்கள் மாறினாலும் மாறாத மாற்றத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் அன்பரே..

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை நாட்கள் ஓடினாலும், காலச்சக்கரம் வேகவேகமாக சுழன்றாலும், மீண்டும் ஒரு கல்யாணி வந்து விடுகிறாளே..... யதார்த்தமான ஒரு சிறுகதை/கவிதை.... மனதைத் தொட்டது...

பாராட்டுகள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதைப் பற்றியும் ஆழமாக யோசிக்க நேரமில்லை முற்படுவதில்லை என்பதை விளக்கியது பதிவு நன்றி

செய்தாலி said...

கல்யாணியின் வாரிசுகள்

சொல்லப்பட்ட
கதையில் சொல்லிச் செல்கிறது
காலம் பழகியும்
பாழ் சிறையில் விலங்கிடப்பட்ட
புரிதலின் கதையை

தலைவன் தலைவிகளுக்கு
மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும்
புரிதல் நிச்சயம் வேண்டும் இல்லையெனில்
கல்யாணியின் வாரிசுகளின் கதை தொடர்ந்துகொண்டே போகும் என்பதில் ஐயமில்லை

நல்ல கதை சார்
கோர்க்கபட்ட வரிகளும்
சொல்லப்பட்ட விஷயமும் அருமை

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

எத்தனை நாட்கள் ஓடினாலும், காலச்சக்கரம் வேகவேகமாக சுழன்றாலும், மீண்டும் ஒரு கல்யாணி வந்து விடுகிறாளே..... யதார்த்தமான ஒரு சிறுகதை/கவிதை.... மனதைத் தொட்டது..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

எதைப் பற்றியும் ஆழமாக யோசிக்க நேரமில்லை முற்படுவதில்லை என்பதை விளக்கியது பதிவு நன்றி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

நல்ல கதை சார்
கோர்க்கபட்ட வரிகளும்
சொல்லப்பட்ட விஷயமும் அருமை /

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Matangi Mawley said...

ரொம்பவே அழகான thought ... அப்பா படித்து/ரசித்து என்னை படிக்க சொன்னார்...
really enjoyed reading this...

Yaathoramani.blogspot.com said...

Matangi Mawley //

really enjoyed reading this...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Madhavan Srinivasagopalan said...

உணர்ச்சிமயமான கருத்துள்ள நல்ல கதை..
பகிர்விற்கு நன்றி..

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Post a Comment