அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம்
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்
"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"
ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி
தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்
"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் " மூத்த மகன்
கண் கலங்கியபடி பேரன் மட்டுமே
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்
"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது
"கொஞ்சம் சீக்கிரம்
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"
ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி
தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்
"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் " மூத்த மகன்
கண் கலங்கியபடி பேரன் மட்டுமே
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்
"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது
76 comments:
எவருமே 'அது'வானபின் இப்படித்தானோ....
யதார்த்தமான நாட்டுநடப்பை அப்படியே புட்டுப்புட்டு வைத்து விட்டிர்கள்.
//கண் கலங்கியபடி பேரன் மட்டுமே
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்//
சற்றே ஆறுதல் அளிக்கிறது.
//"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது//
அடடா! இங்கு தான் நீங்கள் நிற்கிறீர்கள், ஐயா!!
ஐயோ! அசத்தலான கவிதை சார். கடைசியில் டச்சிங்... :-)
அருமை. பேரினை நீக்கி .....நீரினில் மூழ்கி நினைப்பொழிவது நினைவுக்கு வருகிறது!
அற்புதம்....
'நச்'னு இறங்கறாப்ல இருக்கு கவிதை.
அற்புதம் என்ற ஒற்றை வார்த்தையோடு சென்று விட மனமில்லை எனக்கு...
மரணங்கள் கூட இந்த சமூகத்தில் பாடம் கற்றுக் கொடுக்கிறது நமக்கு...
நேரத்தோடு திகழாத வாழ்வும் தாழ்வும் இங்கு வேதனைகளை மட்டுமே நமக்கு மிச்சம் வைக்கிறது...
இதை கண்கூடாய் காண்கிறேன் ஒவ்வோறு திருமணத்திலும்... மற்றும் ஒவவோறு சவ ஊர்வலத்திலும்...
உயிருக்கு தருகிற மதிப்பு இங்கு வயது ஏற குறைந்துக் கொண்டே போகிறது...
அருமை.அருமை.
படித்தவுடன்,எல்லோருக்கும் இந்த கதிதான் எனத் தோன்றியது.
மீனாட்சி, இத வந்து படி,
நானும் "அவர்" ஆகிவிடத்தான் காத்திருக்கேன்.
என்ன திடிரென்னு ஒரு ஞானோதயம்?
திடீர் அப்படின்னு ஒரு நாளைக்கு நான் இல்லைன்னு வச்சுக்கோ, அப்ப அடுத்த ஒரு பத்து
மணி நேரத்திற்கு அதிக பட்சம் இருபது மணி நேரம் தான் டென்ஷன். அப்பறம் எல்லாமே சகஜ வாழ்க்கைக்கு மத்தவா திரும்பிவிடுவா.
சுப்பு ரத்தினம்.
யதார்த்தம் தோய்ந்த வழ்க்கை ஒவ்வொருநிமிடமும் ஒவ்வொன்றையும் சொல்லிச்சென்று கொண்டும் கற்று க்கொடுத்துக்கொண்டுமாய் இருக்கிறது.அதன் ஒரு பகுதிதான் இது.
//"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது//
மனதினைத் தொட்டது கவிதை....
நச் சென்று இருக்கிறது உங்கள் கவிதை....
வாழ்வியல் உண்மையை அழகாகப் பதிவிட்டுள்ளீர்கள்.
நன்று.
அருமை. அவசர உலகில் எல்லாம் அவசரம்.
உண்மைக் கவிதை.
படித்தவுடன்,எல்லோருக்கும் இந்த கதிதான் எனத் தோன்றியது.
உண்மைகள் புரியும்பொழுது
உணர்வுகள் ஒதுங்கிவிடுகிறது.
அருமையானப் பதிவு! மனத்தைத் தொட்டது.
இன்றைய 'அது'வை, கண்டும், நமக்கு 'அது' வராது என நினைக்கும், நாளைய 'அது'கள்!
எங்கோ ..இருக்கும்வரை மனப்போக்கில் இருந்து தொலையட்டும்!
நன்று!
unmaithaan
ayyaa!
intha vaazhvukkuthaan-
kolai kollai seythidavum-
thuninthu vidukiraan !
manithan!
உங்களின் 'ஆயாசம்" அட்டகாசமாக இருக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எவ்வளவு நுணுக்கமாக நீங்கள் பார்கிறீர்கள் என்பது புரிகிறது
அமைதிச்சாரல் //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //..
யதார்த்தமான நாட்டுநடப்பை அப்படியே புட்டுப்புட்டு வைத்து விட்டிர்கள//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RVS //...
ஐயோ! அசத்தலான கவிதை சார். கடைசியில் டச்சிங்... :-)//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
raji //...
'நச்'னு இறங்கறாப்ல இருக்கு கவிதை.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // //
அற்புதம் என்ற ஒற்றை வார்த்தையோடு சென்று விட மனமில்லை எனக்கு...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
அருமை.அருமை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
sury //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //...
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
மனதினைத் தொட்டது கவிதை....
நச் சென்று இருக்கிறது உங்கள் கவிதை...//.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
guna thamizh //
வாழ்வியல் உண்மையை அழகாகப் பதிவிட்டுள்ளீர்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
அருமை. அவசர உலகில் எல்லாம் அவசரம்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பழனி.கந்தசாமி //
உண்மைக் கவிதை.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
படித்தவுடன்,எல்லோருக்கும் இந்த கதிதான் எனத் தோன்றியது.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
அருமையானப் பதிவு! மனத்தைத் தொட்டது.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஒரு மரணவீட்டு மனிதர்களின் யதார்த்தங்களை சொல்லியிருக்கிற வரிகள். வாழ்க்கை என்பது நாடகம் தானே. யாருக்காகவும்..யாரும் காத்திருக்க முடியாமல் மனிதர்கள் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். காதலில் மட்டுமே..சகிப்புடன் மனிதர்கள் அனேகமாக காத்திருக்கிறார்கள். மரணவீட்டில் கூட அரசியல் பேசுவது விட்டு வைக்கப்படுவதே இல்லை. உண்மைகளை வெளிப்படையாக பேசிய ஆயாசம் அருமை.
ரமேஷ் வெங்கடபதி //
இன்றைய 'அது'வை, கண்டும், நமக்கு 'அது' வராது என நினைக்கும், நாளைய 'அது'கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
intha vaazhvukkuthaan-
kolai kollai seythidavum-
thuninthu vidukiraan !
manithan!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தீபிகா(Theepika) //
உண்மைகளை வெளிப்படையாக பேசிய ஆயாசம் அருமை.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கடைசி டச்! அருமை!
எல்லோருடைய எண்ணங்களையும் பார்க்கும் போது அவருக்கும் இப்படி எண்ணம் வருவது சரியே!
அருமை. நிஜத்தை தான் சொல்லி இருக்கிரீர்கள். வலிக்கிற மாதிரி
மிகவும் நெகிழ்வான நிதர்சனத்தை பொட்டில் அடித்தால்போல் படம்பிடிக்கும் கவிதை.. அற்புதம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
அவர் அதுவான வேளை அநித்யம் புரியவைத்து மீண்டும் அவர்களை அவர்களாகவே மாற்றும் மாயவேளை. ஜோர் ரமணியண்ணா.
இதுவாவது பரவாயில்லை.”அவர்”போனபிறகான மனநிலை. உயிர் போகக் கூடும் என்று அறிவிக்கப் பட்டு வந்து குமியும் உறவுகள், ரயில் வண்டியேற்றி ரயில் புறப்படும் நேரத்துக்காக கடிகாரம் நோக்கி அலுத்துக் கொள் வோரைப் போல் தோன்றும்.( இன்னும் பத்து நிமிடங்கள்....இன்னும் ஐந்து நிமிடங்கள்... இன்னும் ஒரு நிமிடம்....ஹப்பா புறப் பட்டு விட்டது..!)
நம்பிக்கைபாண்டியன் //
கடைசி டச்! அருமை!
எல்லோருடைய எண்ணங்களையும் பார்க்கும் போது அவருக்கும் இப்படி எண்ணம் வருவது சரியே!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது
மனிதர்களின் சுபாவத்தை என்ன அருமையா சொல்லி இருக்கீங்க .
மோகன் குமார் //
அருமை. நிஜத்தை தான் சொல்லி இருக்கிரீர்கள். வலிக்கிற மாதிரி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sankar Gurusamy //
மிகவும் நெகிழ்வான நிதர்சனத்தை பொட்டில் அடித்தால்போல் படம்பிடிக்கும் கவிதை.. அற்புதம்..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது//
நிதர்சனத்தை சொல்லியுள்ளீர்கள்..
மனதை தொட்டது சார்.
நிஜம் தான். எல்லோருக்கும் அவசரம் தான்.
காரியம் முடிந்து விட்டதே. இனிமேல் அவர்களுக்கு தெரியாதல்லவா?
கோவை2தில்லி //
நிதர்சனத்தை சொல்லியுள்ளீர்கள்..
மனதை தொட்டது சார்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel Natarajan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அன்புள்ள ரமணி சார் ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html
அவசர உலகத்தில் எல்லாருக்குமே அவரவர் காரியம் தான் முக்கியம். ஏதோ கடமைக்காக இழவு வீட்டில் தலையைக் காட்டி விட்டு ஓடுகின்ற யதார்த்த நிலையை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
கவிதையின் இறுதி வரிகள் உள்ளத்தைத் தொட்டு விட்டன. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ஒரு இறுதி நிகழ்வின் சலிப்பாயிருக்கிறது கவிதை.அற்புதம் !
கலையரசி //
கவிதையின் இறுதி வரிகள் உள்ளத்தைத் தொட்டு விட்டன. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுக்கள் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
ஒரு இறுதி நிகழ்வின் சலிப்பாயிருக்கிறது கவிதை.அற்புதம் //
!.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்! மயான அமைதியிலும் மனித மனம் படும் பாட்டினை சித்தரித்து இருக்கிறீர்கள்.
. இரண்டு மூன்று நாட்களாக என் கணினி வேலை செய்யவில்லை. யாருக்கும் பின்னூட்டமும் இடமுடியவில்லை. பதிவுகளை மட்டும் நண்பரின் கணினியில் இருந்து போட்டேன். அதனால்தானன் தாமத வருகை. சாரி. அப்புறம் இந்த பதிவைப் பற்றி.
ஆமாம் ரமணி சார். இதுதான் இன்றைய உலகத்தின் நிலை. இந்த இழிநிலை கண்டுதான் உருவானார் அன்று ஒரு பட்டினத்தார். இன்று ஒரு கண்ணதாசன். அழகான அருமையான படைப்பு. என் மனம் கவர்ந்த பதிவு. நிலையாமையைக் குறித்து இன்னும் எழுதுங்கள். அப்போதாவது இந்த மனீதர்களுக்கு உரைக்கிறதாவென்று பார்க்கலாம்.
தமஓ 15.
அசத்தலான கவிதை சார்...இறுதி வரிகள் உள்ளத்தைத் தொட்டு விட்டன...
ம்ம். சீக்கிரம் அடுத்த கவிதையைப் போடுங்க..
எல்லாம் மாயம்தானோ...!
தி.தமிழ் இளங்கோ //
.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
அழகான அருமையான படைப்பு. என் மனம் கவர்ந்த பதிவு. நிலையாமையைக் குறித்து இன்னும் எழுதுங்கள் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
அசத்தலான கவிதை சார்...இறுதி வரிகள் உள்ளத்தைத் தொட்டு விட்டன..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிலாமகள் //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
vaare vaah.. Really super kavithai.
Madhavan Srinivasagopalan //
vaare vaah.. Really super kavithai.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது
//
ஹ்ம்ம்ம்ம்..அதுதான் உலகம்.சார் அருமையான வரிகளை கோர்த்து சிரப்பாக கவிதை வடித்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்!
ஸாதிகா //
ஹ்ம்ம்ம்ம்..அதுதான் உலகம்.சார் அருமையான வரிகளை கோர்த்து சிரப்பாக கவிதை வடித்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆயாசம்.தற்கால நிகழ்வுகள் குறித்த வாழ்வின் நிதர்சனம்.அடுத்து,அடுத்து என்று சொல்லிக் கொண்டு காலில் வெந்நீர் கொட்டிய மாதிரி ஓடும் அவசரம் எல்லாம் அழகான வரிகளில்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நேர்த்தியான கவிதை படித்த சந்தோஷம்.
ரொம்ப நன்றி ! வாழ்த்துக்கள் !
கபிலன் //
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நேர்த்தியான கவிதை படித்த சந்தோஷம்.
ரொம்ப நன்றி ! வாழ்த்துக்கள் //!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
ஆயாசம்.தற்கால நிகழ்வுகள் குறித்த வாழ்வின் நிதர்சனம்.அடுத்து,அடுத்து என்று சொல்லிக் கொண்டு காலில் வெந்நீர் கொட்டிய மாதிரி ஓடும் அவசரம் எல்லாம் அழகான வரிகளில்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிஜம் நெஞ்சைத்தொட்டு நிற்கின்றது.
மாதேவி //
.
நிஜம் நெஞ்சைத்தொட்டு நிற்கின்றது.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment