Tuesday, February 28, 2012

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்


85 comments:

அருணா செல்வம் said...

ஆழ்ந்த சிந்தனை! உங்கள் கவிதை
அறிவிற்கு விருந்து! வணங்குகிறேன்!

தமிழ் உதயம் said...

வாழ்க்கை - ஏன் சிலருக்கு சந்தோஷத்தையும், ஏன் சிலருக்கு சங்கடத்தையும் தருகிறது என்பதை ஆண்டி வழியே அழகாக சொல்லி விட்டீர்கள்.

vanathy said...

மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி//ஆஹா சூப்பர்.
சிரிப்பை வரவழைக்கும் வரிகள். தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான சிந்தனை....

இருப்பதை விட்டு இல்லாததை பிடிக்க யோசித்துக் கொண்டே இருக்கிறோம்.....

அழகிய கவிதையாகப் படைத்து விட்டீர்கள்....

Unknown said...

முத்திரைக் கவிதை!

உளவியல் ரீதியாக சிந்திக்கப்பட்டு
நேர்த்தியாக செதுக்கப்பட்டு
விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது!

வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

ஆழ்ந்த சிந்தனை! உங்கள் கவிதை
அறிவிற்கு விருந்து! வணங்குகிறேன் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

இருப்பதை விட்டு இல்லாததை பிடிக்க யோசித்துக் கொண்டே இருக்கிறோம்.....
அழகிய கவிதையாகப் படைத்து விட்டீர்கள்.//

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

அருமையான சிந்தனை...அழகிய கவிதை... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி.//

முத்திரைக் கவிதை!
உளவியல் ரீதியாக சிந்திக்கப்பட்டு
நேர்த்தியாக செதுக்கப்பட்டு
விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது //!

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

அருமையான சிந்தனை...அழகிய கவிதை... வாழ்த்துக்கள்...//

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்கக் கவிதை.
ஓட்டப்பந்தயத்திற்கு லூயீசையும் வாழ்வுப்
பந்தயத்திற்கு மயூரி சுதா போன்றோரையும்
நினைவில் கொள்ள வேண்டும். அற்புதம் .
பாவம் ஆண்டியை நினைத்தால் சிரிப்பதா
அல்லது பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை.
அதிலும் இரண்டாம் முறை செத்துப் போனதாக
சொல்லி இருப்பது டாப் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

.... அற்புதம் .
பாவம் ஆண்டியை நினைத்தால் சிரிப்பதா
அல்லது பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை.
அதிலும் இரண்டாம் முறை செத்துப் போனதாக
சொல்லி இருப்பது டாப் ரமணி சார்.//

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

தனக்கு கீழ் உள்ளவர்களை
பார்த்தால் தான்-
தனக்கு இறைவன வழங்கிய -
அருட்கொடைகள் நமக்கு-
தெரியும்!

ஆண்டி தலைப்பு-
பேராசை கொண்டவர்களுக்கு-செம
அடி!

bandhu said...

பிரமாதம்!

Yaathoramani.blogspot.com said...

Seeni //

ஆண்டி தலைப்பு-
பேராசை கொண்டவர்களுக்கு-செம
அடி!

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

bandhu //

பிரமாதம்!//

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

செத்தும் நிம்மதி இழ்ந்த ஆண்டி அனைவருக்கும் உணர்த்தி நிற்கிறான் வாழ்வியல் தத்துவத்தை..

அமர பாரதி said...

நல்ல கருத்து. ஆனா ஆண்டியை AUNTY என்று படித்தேன், பல இடங்களில் பொருந்தவும் செய்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும்//

ரொம்ப கரெக்ட்.. தவறான ஒப்பிடல்களாலதான் வாழ்க்கையின் நிம்மதியை தொலைக்கிறோம்

ஸாதிகா said...

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை///
பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படவெண்டிய வரிகளது.

Angel said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
ஒருசிறு படிப்பினையை அறியாததால்//


மனதை தொட்ட வரிகள் அருமையான தத்துவம் ..

vetha (kovaikkavi) said...

திருப்தியற்ற மனம், தன்னிலே நம்பிக்கையின்மை இவையே அதிருப்தி வாழ்வைத் தருகிறது. என்னாலும் முடியும் என்னது நல்லது என்று நம்பி நடந்தால் தலை முடியைப் பிடுங்கத் தேவையற்ற வாழ்வு அமையும்.
போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து என்றும் முன்னோர் கூறியும் வைத்தார்கள்.
உங்கள் இடுகை பலருக்குப் படிப்பினையாக அமையும். படிப்பினையான இடுகை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

ஹேமா said...

எனக்கு இவ்வளவும்தான் என்று மனம் திருப்திப்பட்டால் வாழ்விலும் சாவிலும் நின்மதி கிடைக்கும்தானே !

Avargal Unmaigal said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே நிமிர்ந்து பார்க்க வேண்டும் நிறைவுக்கும் மகிழ்விக்கும் குனிந்து பார்க்கவேண்டும்//

மிக அருமையான வரிகள்


உங்களுடைய அனுபவங்களும் சிந்தனைகளும் என்னை உண்மையில் வியக்க வைக்கின்றன. இதை ஏதோ பின்னுட்டம் இட வேண்டும் என்பதற்காகவோ அல்லது உங்களை புகழ வேண்டும் என்பதற்காகவோ சொல்லவில்லை. என் மனதில் பட்டதை இங்கே சொல்லி இருக்கிறேன் வாழ்த்துகள் ரமணி சார்.

கீதமஞ்சரி said...

இருந்தும் அனுபவிக்க இயலாமல் ஏக்கத்துடனேயே வாழ்ந்து முடித்து, இறந்தும் நிம்மதி தொலைத்திருக்கும் ஆண்டியின் வாழ்க்கை, வாழும் நாளில் நிறைவாயும் நிம்மதியுடனும் வாழநினைக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே நிமிர்ந்து பார்க்க வேண்டும் நிறைவுக்கும் மகிழ்விக்கும் குனிந்து பார்க்கவேண்டும்//

நிறைவான வரிகளால் நிறைகிறது மனம். பாராட்டுகள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

செத்தும் நிம்மதி இழ்ந்த ஆண்டி அனைவருக்கும் உணர்த்தி நிற்கிறான் வாழ்வியல் தத்துவத்தை.. //

.தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமர பாரதி

நல்ல கருத்து. ஆனா ஆண்டியை AUNTY என்று படித்தேன், பல இடங்களில் பொருந்தவும் செய்கிறது. //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

ரொம்ப கரெக்ட்.. தவறான ஒப்பிடல்களாலதான் வாழ்க்கையின் நிம்மதியை தொலைக்கிறோம் //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படவெண்டிய வரிகளது.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //
மனதை தொட்ட வரிகள் அருமையான தத்துவம் ..//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kavithai (kovaikkavi) //

உங்கள் இடுகை பலருக்குப் படிப்பினையாக அமையும். படிப்பினையான இடுகை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

எனக்கு இவ்வளவும்தான் என்று மனம் திருப்திப்பட்டால் வாழ்விலும் சாவிலும் நின்மதி கிடைக்கும்தானே //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal//

மிக அருமையான வரிகள்
உங்களுடைய அனுபவங்களும் சிந்தனைகளும் என்னை உண்மையில் வியக்க வைக்கின்றன.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

..
கீதமஞ்சரி //
.
வாழும் நாளில் நிறைவாயும் நிம்மதியுடனும் வாழநினைக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.
நிறைவான வரிகளால் நிறைகிறது மனம். பாராட்டுகள் ரமணி சார். //


தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பால கணேஷ் said...

இரண்டாம் முறை செத்துப் போனான் ஆண்டி என்று சொல்லியிருப்பது ரமணி டச்! அருமையான வரிகளில் ஒரு ஆழ்ந்த சிந்தனையைப் படித்ததில் மிக்க சந்தோஷம்! தொடரட்டும் இதுபோன்ற படைப்புகள்!

தீபிகா(Theepika) said...

ஒப்பீடுகள் எப்போதும்..நிம்மதியை இழக்கவே செய்கிறது. அளவுகடந்த ஆசைகள்..இருக்கிற சந்தேசங்களையும் இழக்கவே செய்து விடுகின்றன.
ஆனாலும்..மனித மனம் ஆசைப்பட்டு கொண்டேயிருக்கிறது.
" உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!"-
என்கிற கண்ணதாசனின் வரியை புரிந்து கொள்ள வேண்டும் மனித மனங்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் //

நீங்கள் சொன்ன வரிகள் ஆண்டிக்கு மட்டும அல்ல அரசனுக்கும் பொருந்தும். புதிய ஆத்திச்சூடி.

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

வரிகளில் ஒரு ஆழ்ந்த சிந்தனையைப் படித்ததில் மிக்க சந்தோஷம்! தொடரட்டும் இதுபோன்ற படைப்புகள்! //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தீபிகா(Theepika) //...

ஒப்பீடுகள் எப்போதும்..நிம்மதியை இழக்கவே செய்கிறது. அளவுகடந்த ஆசைகள்..இருக்கிற சந்தேசங்களையும் இழக்கவே செய்து விடுகின்றன.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

நீங்கள் சொன்ன வரிகள் ஆண்டிக்கு மட்டும அல்ல அரசனுக்கும் பொருந்தும். புதிய ஆத்திச்சூடி.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

முத்தரசு said...

நிதர்சமான உண்மை.. வாழும் போதும் உணர மறுத்து.....

ம்.

கவிதை உண்மை உணர்த்துது

நிலாமகள் said...

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் //

ந‌ல்ல‌தையே நினைவூட்டுகிறீர்க‌ள்!

Sankar Gurusamy said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் //

அற்புதமான கருத்து... இதை எல்லோரும் கடைபிடித்தால் பொறாமை இல்லாத உலகம் அமையும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

RAMA RAVI (RAMVI) said...

//அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை//

எப்பொதுமே நமக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து நமக்கு இறைவன் கொடுத்திருப்பது அதிகம் என்று திருப்தி கொள்ள வேண்டும்.ஓப்பீடு செய்வது மிகவும் வேதனை. நிம்மதியான வாழ்க்கை இருக்காது.

மிகவும் அருமையான கருத்து பதிவு சார்.நன்றி பகிர்வுக்கு.

துரைடேனியல் said...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவூட்டும் அருமையான கவிதை. எவ்வளவோ பெரிய தத்துவத்தை இந்த கவிதைக்குள் சொல்லிவிட்டீர்கள். அற்புதம்.அற்புதம். வேறென்ன சொல்ல. பாராட்ட வார்த்தைகளில்லை ரமணி சார்.

துரைடேனியல் said...

tha ma 9.

தக்குடு said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் //

அழகான வரிகள் ரமணி சார்!

Unknown said...

தெளிவான சிந்தனை! தெளிவான வார்த்தைகள்!
வலுவான தத்துவம் வழங்கிய கவித்துவம்
வாழ்க!மேலும் தருக!

சா இராமாநுசம்

RVS said...

unsatisfied ஆண்டிகள்! :-)

ADHI VENKAT said...

//முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும்//

மிகச்சரியான வார்த்தைகள்.....
ஒப்பிடுதலை விட்டால் தான் நல்லது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை//

அருமையான வாழ்வியல் உண்மையைக் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும்


ஒவ்வொருவரும் உணரவேண்டிய வாழ்வியல் உண்மையை நயம்பட உரைத்தீர்கள் நன்று அன்பரே

ஸ்ரீராம். said...

ஆம் ஆத்மிகள்....!

துளசி கோபால் said...

ரமணி...இது தலைப்புக்கு!!!!!!

இந்த ஆ*டி என்ற சொல்லை( ஒரு பழைய பழமொழியில் வரும் பாருங்க 'அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ***' இதை ஒரு பதிவில் எழுதுனதாலே ஒரு வாசகரிடம் பாடாய்ப்பட்டேன். எப்படி ஜாதியைச் சொல்லப்போச்சுன்னு கண்ணீர்க் காவியமா பின்னூட்டத்துக்குமேலே பின்னூட்டமாப் போட்டு என்னை ஒரு வழி செஞ்சுட்டார்!

இப்ப அவர் வலைப்பதிவுகள் வாசிக்கறதை விட்டுட்டார் போல இருக்கு!!!!

G.M Balasubramaniam said...

22-2-2012 ஆனந்த விகடனில் வந்த “ ஹாய் மதன் “ பதிலிலிருந்து “அதுதான் சைகாலஜி.அம்பானி 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கினால் நமக்குப் பொறாமை வராது. நாம் ஸ்கூட்டர் வைத்திருக்கும்போது பக்கத்து வீட்டுக் காரர் ஒர்ய் நானோ வாங்கினாலும் நமக்கு ஒரு மாதிரியாகி விடும். நாம் எல்லோரும் சரிசமமாக இருக்கும்போது அவர் மட்டும் சட்டத்தை மீறுகிறார். அது தப்பு. அதாவது ஈக்குவல் ஆக இருப்பவரிடையேதான் பொறாமை வரும் “நீங்கள் சொல்ல வந்ததை அழகாகச் சொல்லிப் போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

VANJOOR said...

மிக சிறப்பான பதிவு.

வாழ்த்துகிறேன்.


தொடருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

VANJOOR //

மிக சிறப்பான பதிவு.
வாழ்த்துகிறேன்.
தொடருங்கள்.

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam
//

“நீங்கள் சொல்ல வந்ததை அழகாகச் சொல்லிப் போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

ந‌ல்ல‌தையே நினைவூட்டுகிறீர்க‌ள்!//

தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி //

ம்.கவிதை உண்மை உணர்த்துது //

தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //


.. இதை எல்லோரும் கடைபிடித்தால் பொறாமை இல்லாத உலகம் அமையும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..//


தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

எப்பொதுமே நமக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து நமக்கு இறைவன் கொடுத்திருப்பது அதிகம் என்று திருப்தி கொள்ள வேண்டும்.ஓப்பீடு செய்வது மிகவும் வேதனை. நிம்மதியான வாழ்க்கை இருக்காத
மிகவும் அருமையான கருத்து பதிவு சார்.நன்றி பகிர்வுக்க

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //...

எவ்வளவோ பெரிய தத்துவத்தை இந்த கவிதைக்குள் சொல்லிவிட்டீர்கள். அற்புதம்.அற்புதம். வேறென்ன சொல்ல. பாராட்ட வார்த்தைகளில்லை //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தெளிவான சிந்தனை! தெளிவான வார்த்தைகள்!
வலுவான தத்துவம் வழங்கிய கவித்துவம்
வாழ்க!மேலும் தருக!//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தக்குடு //

அழகான வரிகள் ரமணி சார்! //

தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RVS //

unsatisfied ஆண்டிகள்! :-)//


தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //

ஒவ்வொருவரும் உணரவேண்டிய வாழ்வியல் உண்மையை நயம்பட உரைத்தீர்கள் நன்று அன்பரே //
தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

ஆம் ஆத்மிகள்....//!

தங்களுடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

DhanaSekaran .S //

தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதை ஏற்றிக்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
தங்கப்பேனா விருதுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

வாழ்வியல் தத்துவத்தை
ஆண்டி மூலம்
நெஞ்சில் பச்சை குத்திக்கொள்ள
வைத்துவிட்டீர்கள் நண்பரே..

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

நெஞ்சில் பச்சை குத்திக்கொள்ள
. விட்டீர்கள் நண்பரே.. //


தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

மிக்கச்சிறந்த படைப்பு,
மனதின் மகிழ்ச்சியும் , சோகமும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது! எனதை தரமான வார்த்தைகளால் கவிதையாக்கி இருக்கிறீர்கள்!

Yaathoramani.blogspot.com said...

நம்பிக்கைபாண்டியன் //

மிக்கச்சிறந்த படைப்பு,
மனதின் மகிழ்ச்சியும் , சோகமும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது! //

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகலா said...

வாழ்வியலை படம் பிடித்து காட்டிய பதிவு அருமை ஐயா.

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //
.
வாழ்வியலை படம் பிடித்து காட்டிய பதிவு அருமை //.


தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

தன்னையொத்தவர்கள் தன்னருகில் இருக்கக் கூட அதிர்ஷ்டம் வேணுமோ ?//

இதை மட்டுமே தனிக்கவிதையாக எழுதியிருக்கலாமோ? நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். என்னென்னவோ தோன்றுகிறது.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

இதை மட்டுமே தனிக்கவிதையாக எழுதியிருக்கலாமோ? நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். என்னென்னவோ தோன்றுகிறது.//

தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Murugeswari Rajavel said...

ரமணி சார்,
இவ்வாறெல்லாம் அருமையான சிந்தனை,உங்களுக்கான தனித்தன்மை.இல்லாததை நினைத்து ஏங்கும் பாவப்பட்ட ஆண்டிகள்.

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //
தங்களுடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment