Monday, February 13, 2012

எனது புத்தாண்டுத் தீர்மானம் ஐந்தாண்டுத் திட்டமான அறுவைக் கதை

புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்த தொடர் பதிவுக்கு
என்னிடமும்  இது தொடர்பாக ஏதோ விஷயம்
 இருக்கும் என நம்பி என்னை அழைத்த
 திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன்

நான் புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் செய்வதில்லை
பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு தீர்மானமாகப் போட்டு அதற்கென
தனியாக புதிதாக ஒரு டைரி போட்டு எழுதி,
ஒரு வாரம் மட்டும் தொடர்ந்து
பின்பு வழக்கம்போல அதை மறந்து போய்விடும்
நிலை வேண்டாம் என விட்டுவிட்டேன்.
ஆனாலும் இப்படி எழுதியதில் புதிதாக ஒரு சிந்தனை
எனக்கு தோன்றியது

அதன்படி இனி வருடாவருடம் தீர்மானம்
போடாமல்சில குறிப்பிட்ட விஷயங்களை
தேர்ந்தெடுத்து அதனை ஒரு குறிப்பிட்ட
ஆண்டுகளில் அடைய முயல்வது என்றும்
ஒவ்வொரு ஆண்டும் அது விஷயமாக
நம்முடைய நிலை அல்லது வளர்ச்சி
எந்த நிலையில் உள்ளது என
பரிசீலனை செய்வது எனவும் முடிவெடுத்தேன்

அதன்படி கீழ் குறித்த விஷயங்களில் என்னுடைய
அப்போதைய நிலை குறித்தும் இன்னும்
ஐந்து ஆண்டுகளில் நான் அடைய நினைக்கும்
நிலை குறித்தும் விரிவாக
ஒரு நோட்டு வாங்கி குறித்து வைத்தேன்

1)உடல் நிலை

2)மன நிலை

3) ஆன்மீக நிலை (மதம் இல்லை )

4) குடும்ப நிலை

5)உறவு நிலை

6)சமூகத் தொடர்பு

7) பொருளாதார நிலை

எந்த விதத்திலும் பாசாங்கு இல்லாமல் மிகச் சரியாக
மேற்குறித்த ஏழு நிலைகளில்  நான் அன்று
இருந்த நிலையினைமிகத் தெளிவாக எழுதி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இதில்
அடையவேண்டிய இலக்கு குறித்து முடிவுசெய்து
அதனை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு ஆண்டும்
எட்ட வேண்டியநிலை குறித்து  மிகத் தெளிவாகக்
குறித்துவைத்தேன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்
பிறந்த உடனேயே அதனைஆய்வு செய்யத் துவங்கி
அதில்  எதில் குறைவான முன்னேற்றம்
உள்ளதோ அது விஷயத்தில் அதிக
கவனம் செலுத்தவும்கூடுதலாகிப் போன
விஷயத்தில் கொஞ்சம் கவனத்தைக்
குறைத்துக்கொள்வதுமாகச் செய்துகொள்வேன்

அது நல்ல பயனளிக்கத்தான் செய்தது
இப்போது இரண்டாம் ஐந்தாம் ஆண்டை
முடிக்க இருக்கிறேன் ஏறக்குறைய
பத்தாண்டுகளுக்கு முன்னால் குறித்துவைத்த
விஷயங்களில் எல்லாம கொஞ்சம் கூடுதலாகவே
அடைந்துவிட்டேன்..இதனை துவங்குகிற
ஆரம்ப வருடத்தில் மட்டும் மாதாந்திர ஆய்வினை
மூன்று மாதம் செய்து அதனை
மனதிற்குள் ஏற்றிவிட்டால் பின் நாம் செய்யும்  
அன்றாடச் செயல்களில் எது எது
தேவையயற்றவை என்பது
நமக்கு தெளிவாகவே புரிந்து போகிறது

இது தொடர்பாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில்
28 தலைப்புகளில்  ஒரு புத்தகம் எழுதலாம் என்கிற
ஒரு கருத்தும் வருகிற ஐந்தாண்டுத் திட்டத்தில் இருக்கிறது
(பதிவர்கள் பய்ப்பட வேண்டாம் )

இந்தத் தொடர் பதிவினைத் தொடர் நினைப்பவர்கள்
தொடரலாம்.
ஒரு பதிவுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு மீண்டும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

74 comments:

Anonymous said...

தங்கள் 'வாழ்வியல் வழிகாட்டி' புத்தகத்தைப்
பயப்படாமல் எதிர்பார்த்துக் காத்து இருக்கிறேன் சார்.

Anonymous said...

aaha super yosanai ayyaa,,,

naanum try pannuren....

pagirvukku nanri

புலவர் சா இராமாநுசம் said...

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைத்தீர்
வாழ்த்துக்கள்!

சா இராமாநுசம்

தனிமரம் said...

அனுபவத்தை புத்தகமா எழுதுங்கள் ஐயா படிக்கக் காத்திருக்கின்றேன்.

ஸாதிகா said...

உங்கள் புத்தகத்திற்காக காத்திருக்கின்றோம்!

sasikala said...

தொடர் பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம் ஐயா.

Avargal Unmaigal said...

//அனைவருக்கும் பயன்படும் விதத்தில் 28 தலைப்புகளில் ஒரு புத்தகம் எழுதலாம் //

இதற்கு நாங்கள் ஐந்தாண்டு காலம் எல்லாம் பொறுத்திருக்க முடியாது. ஐந்து வார காலம் வேண்டுமானால் தருகிறோம். உங்களிடம் இருந்து வருபவை மிக நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை.நல்லதை படிக்கவும் அதை பின்பற்றவும் நான் தாமதிக்க விரும்பவில்லை காரணம் Life is Short என்பதால் முடிந்தால் எவ்வளவு சீக்கிரம் எழுத முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்

Ramani said...

ஸ்ரவாணி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கலை //

aaha super yosanai ayyaa,,,

naanum try pannuren....
//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கொஞ்சம் முயன்று பாருங்களேன்
நிச்சயம் பயன்படும்
அதற்காக ஜனவரி வரை காக்கவேண்டாம்
துவக்கம் சிவராத்திரியாகக் கூட இருக்கலாம்

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தனிமரம் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸாதிகா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

sasikala //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் கருத்தையும் உள்ளத்தில் இருத்திக் கொண்டேன்
ஒரு நல்ல பயனுள்ள புத்தகமாக இருக்க வேண்டும்
என்பதற்ககத்தான் இந்தக்காலக் கெடு
பதிவுகள் எழுதுவது கூட அதற்கான பயிற்சிதான்
தொடர்ந்து எனக்கு உற்சாகமூட்டிவரும் தங்களுக்கு
எனது உள்ளம் கனிந்த நன்றி

Madhavan Srinivasagopalan said...

good thouts..

congrats on achieving very early..

:-)

Ramani said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் கருத்தையும் உள்ளத்தில் இருத்திக் கொண்டேன்
ஒரு நல்ல பயனுள்ள புத்தகமாக இருக்க வேண்டும்
என்பதற்ககத்தான் இந்தக்காலக் கெடு
பதிவுகள் எழுதுவது கூட அதற்கான பயிற்சிதான்
தொடர்ந்து எனக்கு உற்சாகமூட்டிவரும் தங்களுக்கு
எனது உள்ளம் கனிந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

-தோழன் மபா, தமிழன் வீதி said...

பிறருக்கும் பயனுள்ள நல்லதொரு பகிர்வு. வாழ்த்துகள்.

RAMVI said...

இந்த ஐந்தாண்டு திட்டம் சிறப்பாக இருக்கே.

புத்தகத்தை விரைவில் ஏதிர்பார்கிறோம் சார்.

KANA VARO said...

போட்ட ப்ளானின் படி எல்லாத்தையும் சிறப்பா செய்யுங்க சார்.

விச்சு said...

நல்ல பிளான்.

Ramani said...

தோழன் மபா, தமிழன் வீதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

RAMVI //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

KANA VARO //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Seeni said...

ayyaa !
eppadi neenga anupavangalaiyum!
suvaiyaa solreenga?

vaazhthukkal!

வெங்கட் நாகராஜ் said...

அட உங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதப் போகிறீர்களா? என்னுடைய காப்பிக்கு இப்பவே முன்பதிவு செய்துவிடுகிறேன்....

நல்ல பகிர்வு.. - நானும் புத்தாண்டிற்கு தீர்மானங்கள் எல்லாம் செய்வதில்லை :)

யுவராணி தமிழரசன் said...

அருமையான பதிவு ஐயா!
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்!

bandhu said...

வாழ்க்கையை நன்கு திட்டமிட வேண்டிய அவசியத்தை உணர்த்திய பதிவு. எங்கே.. ஏழாவதை தேடுவதிலேயே முதல் ஆறை கோட்டை விட்டு விடுகிறோம்! இப்படிப்பட்ட திட்டமிடல் இருந்தால் எதை இழக்கிறோம் எதை பெற என்று நன்குணர முடியும்.

Ramani said...

Seeni //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

bandhu //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! புத்தகம் போடுவது என்று எழுத்தாளர்களுக்கே உரிய லட்சியம் வந்து விட்டது. கையைச் சுட்டுக்காமல் குடும்பத்தினர் குட்டாமல் பார்த்துக் கொள்ளவும். வலைப் பதிவுலகில் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதவும். இடையே கவிதைகளை மறக்க வேண்டாம். வாழ்த்துக்கள்!

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

புத்தகம் போடுவது என்று எழுத்தாளர்களுக்கே உரிய லட்சியம் வந்து விட்டது. கையைச் சுட்டுக்காமல் குடும்பத்தினர் குட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பயனுள்ள பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

யுவராணி தமிழரசன் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

யுவராணி தமிழரசன் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Sankar Gurusamy said...

தங்கள் ஐடியா நன்றாக இருக்கிறதே... செயல்படுத்த முயற்சி செய்யலாம்..

http://anubhudhi.blogspot.in/

தமிழ்தோட்டம் said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பயன் மிக்க ஐந்தாண்டுத்திட்டப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகல்

Ramani said...

Sankar Gurusamy //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ்தோட்டம் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. தங்களின் அனுபவங்களும், அறிவுரைகளும் எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
புத்தகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.....

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் ரமணி சார் சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்க....

Lakshmi said...

உங்கள் புத்தகத்திற்காக காத்திருக்கின்றோம்!

Ramani said...

கோவை2தில்லி //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகுமார் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்

Ramani said...

Lakshmi //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

இருபத்தெட்டுத் தலை புத்தகாசுரனை எதிர்பார்க்கிறோம்.

அப்பாதுரை said...

தேர்ந்த அரசியல்வாதியின் பேச்சு போல இருக்கு ரமணி. ரசித்தேன்.

koodal bala said...

தங்களைப்போல் வாழ்க்கையை திட்டமிட்டு நடத்துவதென்பது மிகவும் கடினமானதுதான் !

Ramani said...

koodal bala //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அப்பாதுரை //

வரவுக்கும் சிந்திக்கச் செய்து போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

ஐந்தாண்டு திட்டம் ...28 தலைப்புகளில் புத்தகம் ...படிக்க காத்திருக்கிறேன்...

துரைடேனியல் said...

தங்களது திட்டமிட்ட வாழ்க்கை மற்றவருக்க ஒரு பாடம். நேர நிர்வாகம் என்பார்களே. அது இதுதான். அற்புதமாக வேலை செய்திருக்கிறது; செய்யும்.

உங்களது புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கு ஒரு காப்பி கட்டாயம். அட்வான்ஸ் புக் செய்துகொள்கிறேன்.

துரைடேனியல் said...

tha ma 11.

Anonymous said...

தீர்மானங்களும், நிர்மாணங்களும் அறிந்து கொண்டேன்.
பிரமாணங்கள் சரிவர அமையட்டும்.
பயணம் தொடர வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Ramani said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரெவெரி //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

உங்கள் எழுத்து உங்களைப் படம்போலக் காட்டி இன்னும் உங்களிலுள்ள மரியாதையைக் கூட்டுகிறது !

angelin said...

அழகான ஐந்தாண்டு திட்டம் .
28 தலைப்பு புத்தகம் விரைவில் வெளியிடவும் .படிக்க ஆவலாக இருக்கு

Ramani said...

ஹேமா //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

angelin //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

புத்தாண்டுத் தீர்மானங்களை விட இதைப் பின்பற்றுவது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது! இதைச் செய்து வரும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

Ramani said...

ஸ்ரீராம். //

நீங்கள் சொல்வது சரி
ஆயினும் பயன்படுத்திப் பாருங்கள்
அன்றாடக் கடமைகள் போல பழக்கமாகிப் போகையில்
மிக எளிதாக இருக்கும்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ராஜி said...

28 தலைப்பு புத்தகமத்தை சீக்கிரம் வெளியிட வழ்த்துக்கள் ஐயா

Ramani said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

விக்கியுலகம் said...

அண்ணே திட்டங்கள் அருமை...அந்த புத்தகத்த சீக்கிரம் எழுதுங்க காத்து இருக்கேன்...

Ramani said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

தீர்மானங்களும் திட்டமிடலும் உடன்பாடே. காலவரையரைதான் உதைக்கிறது. காலம் நம் கட்டுப்பாட்டில் இல்லையே. பின்னூட்டமிட மிகவும் மெனக் கெட வேண்டி இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Ramani said...

G.M Balasubramaniam //

தாய்மார்கள் தன் பெண் குழந்தைக்கு திருமணத்திற்கு
நகை சேர்ப்பதை பெண் குழந்தை பிறந்த உடனேயே
துவங்கிவிடுவதால்தான் திருமணம் இன்னமும்
மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
என்பது என் அபிப்பிராயம்

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சந்திரகௌரி said...

அழைப்புக்கு மதிப்பளித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. இந்த வாரம் முழுவதும் அசைய முடியாமை போய்விட்டது . அதையும் மீறி வலை உலகில் புகுந்திருந்தால் நீங்கள் எழுதிய முதலாவதில் பிரச்சினை வந்திருக்கும். அது இருந்தால் தானே சித்திரம் வரையலாம் . உங்கள் திட்டங்கள் நிறைவேற வேண்டும் என வாழ்த்துகிறேன்

Ramani said...

சந்திரகௌரி //

நன்றி. இந்த வாரம் முழுவதும் அசைய முடியாமை போய்விட்டது . அதையும் மீறி வலை உலகில் புகுந்திருந்தால் நீங்கள் எழுதிய முதலாவதில் பிரச்சினை வந்திருக்கும். அது இருந்தால் தானே சித்திரம் வரையலாம்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தங்கள் உடல் நிலையில் கவனம் கொள்ளவும்
நான் பதிவிட்டது கவனத்திற்கு வரவேண்டுமே என்கிற
நோக்கில்தான் மின் அஞ்சல் அனுப்பினேன்
தாங்கள் நலம் பெறவும் பணிச் சுமை சீராகவும்
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

Post a Comment