அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்
அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்
அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்
நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்
அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
எனவே....
96 comments:
//நம்முடையை கவனம்
நம்முடைய கருணைப் பார்வை
நம்முடைய ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்//
உண்மையான கருத்துக்கள் சார்....
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே
மிக நன்று.
ஆறுதலால் சிலர் தேறி விடுவர் என்றது உண்மை.
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
சசிகுமார் //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
guna thamizh //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மனம் நெகிழ்த்தும் உண்மைகள். சிறு அசட்டையும் மனம் முறிக்கும் பிரளயம் உண்டாக்கலாம். எத்தனை அநாயாசமாக வாழ்வியல் ரகசியத்தைச் சொல்லிச் செல்கிறீர்கள்! நம்மை அண்டி வருவோரை அலட்சியப்படுத்தும் மனங்களுக்கு சுரீர் என்றொரு சாட்டையடி. உதவாவிட்டாலும் உதாசீனப்படுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் ஒவ்வொருவரும்,
இக்கவிதை படித்தப் பின்பேனும். அரிய சிந்தனைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.
"உங்களிடம் அடைக்கலமென வருவோருக்கு
சிறு அலட்சியம் சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்" இதைப் புரிந்து கொண்டு நடந்தால் நன்றாக இருக்குமே
40ஐக் கடந்தும் ஞானிகள் ஆகாதவர் அனைவருக்கும்,உகந்த கருத்து!
ஆழ்மன வன்மம் சில சமயம் நம்மை மீறி,உடற்மொழியாக வெளிபட்டு விடுகிறது!
நமக்கு தேவைப்படும்வரை, நாம் பிறருக்கு தேவைப்படுவோம்!
அழகா சொன்னீங்க!
ஆறுதாலாக பேசுவதை பற்றி!
கீதமஞ்சரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Seeni //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
புறக்கணிப்பு மிகவும் கொடுமையானது. ஆதரவு அற்று அனாதை இல்லங்களில் இருக்கும் சிலரை கவனித்திருக்கிறேன். சிலருக்கு ஆதரவு தருவதே அவர்கள் சொல் காது கொடுத்துக் கேட்கப் படுவதும் ,கனிவான சில வார்த்தைகளும் தான். நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பரே,
இன்று என் பதிவில் 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய
விருதை தங்களுக்கு வழங்குவதில் எனக்கு பெருமகிழ்ச்சி. நேரம் கிடைக்கையில் பதிவுக்கு வந்து பாருங்கள்.
நன்றிகள் பல.
http://ilavenirkaalam.blogspot.com/2012/02/blog-post_05.html
சிறு புன்னகை கூட கிடைக்காதவர்களுக்கான சிபாரிசு அருமை.
நம்மை நாடி வருபர்களை உதாசீனப்படுத்தாமல் அன்புடன் நடந்துக்கொள்வதுதான் நல்லது.
சிறப்பாக சொல்லியிருக்கிங்க சார். நன்றி பகிர்வுக்கு.
தங்கள் அறிவுரையைப் பின் பற்ற முயற்சிக்கிறேன் ...
குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை..அனைத்து இடங்களும் அருமை..வேறு என்ன சொல்வது..
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
என்னையும் ஒரு பொருட்டாக
விருதுக்கு தேர்ந்தெடுத்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மதுமதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வியபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருமையான கருத்து! அவசியம் பின்பற்ற வேண்டியதும் கூட. நன்றி!
கணேஷ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
உங்கள் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று இது ...!
ananthu //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அற்புதமான கவிதை! தாங்கள் என் வலைபதிவிற்கும் வருகை தந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
துரோகத்தால் துவண்ட மனிதர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள்.
T.N.MURALIDHARAN //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸார்... உங்கள் பதிவை பப்ளிஷ் செய்ததும், நியூ டேப் ஓப்பன் செய்து கீழே உள்ளதில் உங்கள் தளத்தின் பெயரை டைப் செய்து, பேஸ்ட் செய்து என்டர் கொடுங்கள்.
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://minnalvarigal.blogspot.com
இப்போது தானியங்கியாக உங்கள் பதிவை தமிழ்மணம் (வழக்கம் போல்) சேர்த்துக் கொண்டு விடும். அந்த டேபை க்ளோஸ் பண்ணி விட்டு நியூ டேபில் உங்கள் தளத்தை ஓபன் செய்யுங்கள் (டாஷ் போர்ட் வழியாகப் போகாமல்). சமீபத்திய போஸ்டின் தலைப்பை க்ளிக் செய்தால் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை 0 என்று தெரியும். அதை க்ளிக் செய்தால் ஓட்டுப்போடுவதற்கான இமெயில், பாஸ்வேர்ட் கேட்கும். அவற்றைத் தருவதற்கு முன், மேலே டைட்டில் பாரில் உள்ள அட்ரஸை காப்பி செய்து நோட்பேடில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் வாக்களித்து விட்டு வெளியேறவும்.
இப்போது மீண்டும் எடிட் போஸ்ட் சென்று, ‘தமிழ் மணத்தில் வாக்களிக்க’ என்று டைப் செய்து, மேலே உள்ள லிங்க் பட்டனை க்ளிக் செய்து, நோட்பேடில் நீங்கள் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து ஓகே கொடுத்து விட்டு மீண்டும் பப்ளிஷ் செய்தால் போதும். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க இயலும். சரிதானே...
முதலில் நான் கொடுத்திருக்கும் தமிழ் மணம் கோடின் இறுதியில் உங்கள் ப்ளாக் பெயரை yaathoramani.blogspot.in என்று டைப் செய்யாமல் yaathoramani.blogspot.com என்று (நான் மின்னல்வரிகள்.காம் என்று செய்திருப்பது போல) செய்வது முக்கியம்.
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
கணேஷ் //
விரிவான விளக்கத்திற்கு
மனப்பூர்வமான நன்றி
தமிழ்த்தோட்டம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்....உண்மை!
சக்தி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அதுவாப வெளியில் தவிக்கிற ஒருவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு சின்ன தக்கை கிடைத்த நிம்மதி.
விமலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்//
-உண்மை ரமணி சார். அற்புதமான கவிதை. ஏதோ நம்மால் செய்யக்கூடிய இந்த உதவிகளையாவது செய்யவேண்டும். இல்லையேல் மனிதனாக பிறந்து அர்த்தமில்லை.
பரந்த மனமும் அந்த மனம் முழுக்க கருணையும் ஒவ்வொருத்தரிடமும் வேன்டும் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
மிகச் சிறந்த பதிவு
அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு இறுதியாக நம்மிடம் அடைக்கலமென வருவோருக்கு நாம் கொடுக்கும் சிறு ஆதரவு அன்பு புன்னகை வாழ்க்கையில் ஒரு பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது உண்மை.
நல்ல கருத்துகளையும் எண்ணங்களையும் அள்ளி தரும் உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
நல்ல கருத்துகளையும் எண்ணங்களையும் அள்ளி தரும் உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்//
நன்றாக சொன்னீர்கள்.மனதை தொட்டன வரிகள்.
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க அண்ணே!
வார்தையின் பார்பட்ட கருத்துச் செறிவு வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா நலமா?
உண்மைதான் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு நிக்கும் ஜீவன்களுக்கு எங்கள் அன்பான ஒரு வார்த்தை கட்டாயம் சிறந்த ஆறுதலாய் இருக்கும். சிறப்பான சொல்லாடல் கொண்ட கவிதை.!!
நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்
யாவர்குமாம் ஒரு இன்சொல்...
அருமையான இனிமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
அருமையாக சொல்லி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
கொஞ்சமாவது கருணைமனங்கள் இருப்பதால்தான் இன்னும் அன்பும் ஆறுதலும் வாழ்கிறது.நிறைவான சிந்தனை எப்போதும் உங்களுக்கேயுடையது !
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
யாவர்குமாம் ஒரு இன்சொல்...
அருமையான இனிமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
காட்டான் //
எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு நிக்கும் ஜீவன்களுக்கு எங்கள் அன்பான ஒரு வார்த்தை கட்டாயம் சிறந்த ஆறுதலாய் இருக்கும். சிறப்பான சொல்லாடல் கொண்ட கவிதை.!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
Asiya Omar //
நன்றாக சொன்னீர்கள்.மனதை தொட்டன வரிகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
dhanasekaran .S //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
விக்கியுலகம் //
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க அண்ணே! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்!
மிக மிக அர்த்தமுள்ள அவசியமான வரிகள்!
நம்பிக்கைபாண்டியன் //
மிக மிக அர்த்தமுள்ள அவசியமான வரிகள்! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
எனவே....
>>
ஆறுதலாய் இருக்க முயற்சிக்குறேன் ஐயா
அச்சு இறுத்துப் போவதற்கு முன் ஆறுதலான மொழிகளும்,கதவுகள் நிச்சயம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையை ஊட்டுதல் மிக அவசியமுங்க.தோள் சாய்ப்பவருக்கு துணையாய் இருத்தல்,நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் ஊட்டும் செயலாய் அமையும்.நம்பிக்கை என்ற பொறி பெரும் கனலை உருவாக்கும் அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன் ..
ரொம்ப ரொம்ப ரசிச்ச, மனதைத் தொட்ட கவிதை. அருமை.
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க ரமணி சார்... வாழ்த்துகள்...
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
அமைதிச்சாரல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி !
ராஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Kalidoss Murugaiya //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தங்களுக்கு நேரமிருக்கும்போது என்னுடைய பதிவுக்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன். நன்றி ரமணி சார்.
http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_08.html
பதிவிட்ட பின்புதான் கணேஷ் சாரும் இதே காரணத்துக்காக தங்களை அழைத்திருப்பது புரிந்தது. தங்களைத் தேர்ந்தெடுத்ததில் இருவருக்குமான ஒற்றுமை புரிந்து மகிழ்ந்தேன்.
அன்றன்று செய்யவேண்டிய கடமைகளையும் தருமத்தையும் கவனிக்க வைத்துவிட்டீர்கள். பள்ளி நாள் குறளுக்கு இந்நாளில் இன்னோரு அர்த்தமும் கொடுத்து நெகிழ வைக்கிறது உங்கள் கவிதைவரிகள்.அருமை ரமணி சார்.
அட....................................................................................!!!!!!!!!!!!!
//நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்//
மனதை தொட்ட மிக அருமையான வரிகள்! எத்தகைய அர்த்தங்களை உங்கள் விரல் நுனியில் பதித்து வார்த்தைகளாய் செதுக்கி இருக்கிறீர்கள்!!!
வழக்கம் போலவே அருமையோ அருமை. தொடர வாழ்த்துக்கள்.
''...நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்...''
நேசமாகச் செய்வோம் சேவை. நல்ல போதனை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வல்லிசிம்ஹன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ்
தங்கள் எழுத்தின் மேல் நான் வைத்துள்ள மதிப்பின் சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.
இந்திராதி தேவர்கள் சொன்னாலும்
வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி எனச்
சொல்லப்பட்டபோதுதான் கௌசிகன்
பெருமிதம் கொண்டான்
கணேஷ் //
விருதினைவிட தங்களால் நான்
அங்கீகரிக்கப் பட்டதை
பெரிய அங்கீகாரமாகக் கருதுதுகிறேன்
மக்ிக நன்றி
கொஞ்சம் அதிக வேலைப் பளு காரணமாக
உடன் பதில்ளிக்க இயலவில்லை
மன்னிக்கவும்
கீதமஞ்சரி //
விருதினைவிட தங்களால் நான்
அங்கீகரிக்கப் பட்டதை
பெரிய அங்கீகாரமாகக் கருதுதுகிறேன்
மிக்க நன்றி
விருது பெற்ற தங்களுக்கு ,
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா..
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனதை நெகிழ வைத்த கவிதை வரிகள் .
அனுபவபூர்வமாக சமீபத்தில் உணர்ந்தது .காசா பணமா ஒரு சிறு புன்முறுவல் அல்லது ஒரு சிறு அன்பான வார்த்தை எவ்வளவு அருமருந்தாகும் .
.angelin //
காசா பணமா ஒரு சிறு புன்முறுவல் அல்லது ஒரு சிறு அன்பான வார்த்தை எவ்வளவு அருமருந்தாகும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .
Post a Comment