இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி
இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி
உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்
வெந்துச் சாகிறோமோ ?
மனம் நொந்து வீழ்கிறோமோ ?
"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி
"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்
"சும்மா கேட்டேன் " என்றாள்
நானும் விட்டுவிட்டேன்
"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்
அப்படியெல்லாம் கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்
பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்
துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது
பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்
நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்
அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை
முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி
இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி
உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்
வெந்துச் சாகிறோமோ ?
மனம் நொந்து வீழ்கிறோமோ ?
"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி
"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்
"சும்மா கேட்டேன் " என்றாள்
நானும் விட்டுவிட்டேன்
"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்
அப்படியெல்லாம் கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்
பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்
துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது
பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்
நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்
அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை
முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை
75 comments:
அது தொலைக்காட்சியல்ல... தொல்லைக்காட்சிதான்.
ஐயா... கொலைக் காட்சியில், ஸாரி... தொலைக்காட்சியில் எந்தத் தொடரையும் நான் பார்ப்பதில்லை. விஷ வித்துக்கள் அதிலிருந்தும், டான்ஸ் புரோகிராம்களிலிருந்து்ம்தான் அதிகம் விதைக்கப்படுகின்றன. தங்களின் முடிவு மிகமிகச் சரியே. அவற்றை எங்களுக்காய் பகிர்ந்ததுவும் நன்றே!
>>கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா "
ஹி ஹி ஹி
ஊரில் உள்ள குப்பைகளையே பார்த்தோம். வீட்டிலிருக்கிற அழுக்கை பாராது. நல்ல கவிதை ரமணி சார்.
சித்தி தொடருக்குப்பின் எங்கள் வீட்டில் அனைவரும் செய்து கொண்ட ஒப்பந்தம்- நெடுந்தொடர்களைத் தவிர்ப்பது என்று! அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தி வருகிறோம்!
தாய்குலங்களின் ஆதரவு இருந்தால் தொடர்கள் நோக்கலை தடுத்துவிடலாம்!
குடிகரர்களையாவது திருத்திவிடலாம்..ஆனால் தொடர்நாடகங்களை ஆழ்ந்து பார்ப்பவரை? தானே பட்டால் தான்..!
விஷப்பொட்டியைப் பத்திச் சொன்னது ரொம்பச்சரி. ஓசைப்படாம எவ்வளவு விஷ வித்துக்களைத் தூவுது இது!!!!!!. எங்க வீட்லயும் தொடர்கள் பார்க்கறதில்லை என்று ரொம்ப வருஷம் முன்னாடியே முடிவெடுத்து இன்னிக்கு வரைக்கும் அதை வெற்றிகரமா செயல்படுத்திக்கிட்டும் வரோம்.
இப்போது எல்லாம் நிறைய பேர்கள் இதை எல்லாம்
பார்ப்பது இல்லை. நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
நல்ல நல்ல கேள்விகள் கேட்டு நம்மை maaற்றும்
அந்தப் பிஞ்சுகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
///நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும்//
மிக நல்ல கேள்வி
மாயப் பெட்டி அல்ல மனத்தை மாசுப்படுத்தும் பெட்டி அது
எங்க வீட்டிலும் அது இடியட்பாக்ஸ் என்றுதான் பெயர் வச்சிருக்கோம்.
சிறப்பான கருத்துக்கள். இந்த தொல்லை ஒழிய நம் வீட்டுப் பெண்கள் மனசு வைக்கணுமே... அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அதுதான் என ஒரு சப்பைக் கட்டுக்காக குழந்தைகளையும் கெடுப்பதுதான் நிதர்சனம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
//முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை//
சிறப்பான செயல்.குழந்தைகள் புரிந்து கொள்ளும் வரை பார்க்காமல் இருப்பது நல்லதுதான் சார்.அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.
இந்த கால சூழலுக்கு ஏற்ற அருமையான பதிவு .
பெண்கள் உணர வேண்டும் .
பல வீடுகளில் பிரச்சனையாயிருக்கிற பிரச்சனை இது. பொழுது போக்கு என்ற பெயரில் நாம் எம்மை தொலைத்துக் கொண்டிருக்கிற கசப்பான உண்மை இது. இன்றைய குழந்தைகளுக்கு எல்லாம்..
தொட்டாற் சுருங்கி இலைகளை சுருங்காமல் பிடுங்கிப் பார்க்கிற மகிழ்ச்சி...ஊர்ந்து போகிற எறும்புகளை தொடர்ந்து போய் எங்கு முடிகிறது என பார்க்கிற ஆனந்தம்..தும்பியின் வாலில் நூல் கட்டி பார்க்கிற குறும்புத்தனம்...பட்டம் பறக்க விட்டு மகிழ்கிற சந்தோசம்..தென்னோலை இடைவெளிகளுக்குள்ளால் நிலா தெரியும் அழகை காணும் ஆவல்..இன்னும்..இன்னும் எராளம் வெளியுலக சந்தோசங்கள் தெரிவதே இல்லை. றிமோட்டும் கையுமாக தான் காணமுடிகிறது குழந்தைகளை. ஆனால்..முதலில் பெரியவர்கள் நாம் திருந்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாலை நேரங்களில் யார் வீட்டுக்கு போனாலும் திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறார்கள். விளம்பர இடைவேளைகளில் மட்டும் முகத்தை திருப்பிக் கொண்டு அவசர அவசரமாக அடுத்த இடைவெளியை எதிர்பார்த்து பேசி முடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இலவசங்களில் ஒன்றான தொலைக்காட்சிகள்...மனிதனின் சிந்தனைகளை தன்னிடம் மட்டுமெ வைத்துக்கொள்ள நினைக்கிற அதன் நோக்கங்களில் வெற்றி காண்கிறது.
ஆபத்தான அபத்தத்தை முதலில் பெரியவர்கள் புரிந்து கொண்டு சிறுவர்களுக்கு வழிகாட்டியே ஆகவேண்டும். மிக வேகமாக.
தீபிகா.
உண்மை அய்யா!
நடுவீட்ல இருக்கிற மூதேவி!
டி.வி!
நல்ல சொன்னீங்க அய்யா!
நல்லதொரு செய்தி சொல்லும் பதிவு. நாங்கள் எப்போதுமே சீரியல்கள் பார்ப்பதில்லை என்றாலும் நாங்கள் பார்ப்பதில் செய்திச் சேனல் கொஞ்சம் அதிகம்தான். நல்ல செய்திகளும்தான் எங்கே வருகின்றன?!
தொ(ல்)லைக்காட்ச்சிப் பெட்டி = வீட்டுக்குள் எதிரி!
நல்லதோர் செய்தி தரும் பகிர்வு... தொலைக்காட்சி என்று தமிழ்படுத்தியதற்கு பதிலாய் தொல்லைக்காட்சி என்றே செய்திருக்கலாம்.... அதுவும் இந்த தொடர்கள் படுத்தும் பாடு.... எந்த ஒரு தொடரையும் நான் பார்ப்பதே இல்லை....
துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது
//அடடா..என்ன வாரத்தை சொல்லாடல்...!
இறுதிவரிள் நிஜம் நிஜம் நிஜம்..
வணக்கம்!
// துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது //
மாயப் பெட்டியின் வழியாக பொய், களவு, கொள்ளை, கொலை அனைத்தையும் செயல் முறையாகச் சொல்லித் தருகிறார்கள். ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்கள்.
அருமையான பதிவு...
S.R.Seshan
அதுக்குதான் நான் அந்த முட்டாள்பெட்டியை என் பிள்ளைகளிடமிருந்து தள்ளி வைத்திருக்கிறேன் ஐயா.
நயமாக
மனதில் பதியும்விதமாகச் சொன்னீர்கள் அன்பரே..
ரமணி சார், உங்கள் எண்ணங்கள் மிகச் சரியெ. ஆனாலும் உலகத்தையே நம் வீட்டு ஹாலில் கொண்டு வரும் தொலைக் காட்சியில் பெரியவர்கள் பகுத்துப் பார்த்து உபயோகிப்பதுதான் சிறப்பாயிருக்கும். நம் மத்தியில் உலாவும் பல கதைகளும் கடைசியில் they lived happily at the end என்றுதானே இருக்கிறது. சொல்லித் தெரிவிப்பதைவிட வாழ்ந்து காட்டி பயிற்றுவித்தலே சிறந்தது. தொலைக் காட்சியே பார்க்காமல் இருப்பது சரியா. என் பேரனைப் பற்றிய பதிவொன்றுக்கு பின்னூட்டமாக, அவர்களை கார்டூன் போகோ சானல்கள் பார்க்கவும் விட வேண்டும் என்று எழுதி இருந்ததாக நினைவு. வாழ்த்துக்கள்.
முட்டாள் பெட்டியின் மோசமான செயல் விளைவு பற்ரிக் கவிதையில் அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.
//பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்//
மிகப் பொருத்தமான உவமை!
அருமையான பதிவு வாழ்த்துகள்
விச்சு //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கணேஷ் //
தங்களின் முடிவு மிகமிகச் சரியே. அவற்றை எங்களுக்காய் பகிர்ந்ததுவும் நன்றே!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அழகான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சி.பி.செந்தில்குமார் //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
ஊரில் உள்ள குப்பைகளையே பார்த்தோம். வீட்டிலிருக்கிற அழுக்கை பாராது. நல்ல கவிதை ரமணி சார்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
குடிகரர்களையாவது திருத்திவிடலாம்..ஆனால் தொடர்நாடகங்களை ஆழ்ந்து பார்ப்பவரை? தானே பட்டால் தான்..!//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
ரொம்பச்சரி. ஓசைப்படாம எவ்வளவு விஷ வித்துக்களைத் தூவுது இது!!!!!!. எங்க வீட்லயும் தொடர்கள் பார்க்கறதில்லை என்று ரொம்ப வருஷம் முன்னாடியே முடிவெடுத்து இன்னிக்கு வரைக்கும் அதை வெற்றிகரமா செயல்படுத்திக்கிட்டும் வரோம்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அழகான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
நல்ல நல்ல கேள்விகள் கேட்டு நம்மை maaற்றும்
அந்தப் பிஞ்சுகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
மிக நல்ல கேள்வி
மாயப் பெட்டி அல்ல மனத்தை மாசுப்படுத்தும் பெட்டி அது //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
எங்க வீட்டிலும் அது இடியட்பாக்ஸ் என்றுதான் பெயர் வச்சிருக்கோம்.//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sankar Gurusamy //
நம் வீட்டுப் பெண்கள்
அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அதுதான் என ஒரு சப்பைக் கட்டுக்காக குழந்தைகளையும் கெடுப்பதுதான் நிதர்சனம்.//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
RAMVI //
குழந்தைகள் புரிந்து கொள்ளும் வரை பார்க்காமல் இருப்பது நல்லதுதான் சார்.அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
சசிகலா //
இந்த கால சூழலுக்கு ஏற்ற அருமையான பதிவு .
பெண்கள் உணர வேண்டும் //.
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
தீபிகா.//
ஆபத்தான அபத்தத்தை முதலில் பெரியவர்கள் புரிந்து கொண்டு சிறுவர்களுக்கு வழிகாட்டியே ஆகவேண்டும். மிக வேகமாக.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
நடுவீட்ல இருக்கிற மூதேவி!
டி.வி!நல்ல சொன்னீங்க அய்யா!
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
ஸ்ரீராம். //
தொ(ல்)லைக்காட்ச்சிப் பெட்டி = வீட்டுக்குள் எதிரி!//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
//முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை//
Super..
இளங்கோ //
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
DhanaSekaran .S //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
முட்டாள் பெட்டியின் மோசமான செயல் விளைவு பற்ரிக் கவிதையில் அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
G.M Balasubramaniam //
ரமணி சார், உங்கள் எண்ணங்கள் மிகச் சரியெ. ஆனாலும் உலகத்தையே நம் வீட்டு ஹாலில் கொண்டு வரும் தொலைக் காட்சியில் பெரியவர்கள் பகுத்துப் பார்த்து உபயோகிப்பதுதான் சிறப்பாயிருக்கும்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
guna thamizh //
நயமாக
மனதில் பதியும்விதமாகச் சொன்னீர்கள் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ராஜி //
அதுக்குதான் நான் அந்த முட்டாள்பெட்டியை என் பிள்ளைகளிடமிருந்து தள்ளி வைத்திருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
S.R.Seshan //
அருமையான பதிவு...//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
மாயப் பெட்டியின் வழியாக பொய், களவு, கொள்ளை, கொலை அனைத்தையும் செயல் முறையாகச் சொல்லித் தருகிறார்கள். ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்கள்
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
வெங்கட் நாகராஜ் //
நல்லதோர் செய்தி தரும் பகிர்வு... தொலைக்காட்சி என்று தமிழ்படுத்தியதற்கு பதிலாய் தொல்லைக்காட்சி என்றே செய்திருக்கலாம்...//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
//ஸாதிகா //
அடடா..என்ன வாரத்தை சொல்லாடல்...!
இறுதிவரிள் நிஜம் நிஜம் நிஜம்..
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
மாயப் பெட்டி எல்லார் வீட்டுக்கும் எமனாகிப்போய்விட்டது போல....
நீயா நானா...பெரிதினும் பெரிது கேள்...சூப்பர் சிங்கர்...இத்தோடு எங்கள் மாயப்பெட்டி மூடப்படும்...
// முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை//
அருமை நண்ப! அருமை!
இதைவிட தெளிவாக யாரும் சொல்ல இயலாது
ஒவ்வொரு வீடும் உணர வேண்டிய உயர்ந்த பதிவு
சா இராமாநுசம்
ரெவெரி //
மாயப் பெட்டி எல்லார் வீட்டுக்கும் எமனாகிப்போய்விட்டது போல..//
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
சா இராமாநுசம்
அருமை நண்ப! அருமை!
இதைவிட தெளிவாக யாரும் சொல்ல இயலாது
ஒவ்வொரு வீடும் உணர வேண்டிய உயர்ந்த பதிவு//
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
இன்றைய நிலையில் மிக முக்கியமான விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள் அதற்காக நன்றி
70 % அரைச்ச மாவையே அரைக்கும் தமிழ் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள்
30 % எந்தவிதமான நேர்மறை சிந்தனையையும் குடும்பத்தில் வளர்க்காத தொலைக்காட்சி தொடர்கள்,செய்தி என்ற பெயரில் உண்மை செய்தியை தவிர்த்து தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலை திணிப்பது,மக்கள் விவாதம் என்ற பெயரில் விளம்பரத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு எதற்கும் உதவாத தலைப்பை வைத்து விவாதிப்பது
இதைத்தான் வேதனையோடு சொல்லி இருக்கிறீர்கள்
//இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி
இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி//
இந்த சூழலில் நம் குழந்தைகளை வளர்க்கும் கொடூரத்தை
//பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை//
உண்மை உண்மை உண்மை
தீபிகா அவர்களின் கருத்தோடும் உடன்படுகிறேன்
Unmai unmai
முட்டாள் பெட்டிக்குள் ஆயிரம் குட்டிச்சாத்தான்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. யாரும் விதிவிலக்கல்ல. நல்ல விஷயங்களோ மிக மிக கம்மிதான். அருமையாய் சொன்னீர்கள். நம்முடைய ஜனங்கள் திருந்தவேண்டும். தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு நாம் முன்னுதாரணமாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அருமையான மனம் கவர்ந்த பதிவு சார். தொடருங்கள்.
tha ma 13.
விஜய் தொலைக்காட்சியின் சில ஒளிபரப்புகள்
தவிர மற்ற ஏனைய தொலைக்காட்சிகள் அனைத்தும் வேருப்புகலையே
உண்டாக்குகின்றன..
புதிய தலைமுறை என்ற செய்தி தொலைக்காட்சி..
சில செய்திகளை அலசும் முறை நன்று.
மற்றபடி நீங்கள் கூறும் அனைத்தும்
உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை..
வேர்கள் //
இன்றைய நிலையில் மிக முக்கியமான விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள் அதற்காக நன்றி//
விவாதம் என்ற பெயரில் விளம்பரத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு எதற்கும் உதவாத தலைப்பை வைத்து விவாதிப்பது
இதைத்தான் வேதனையோடு சொல்லி இருக்கிறீர்கள்//
இந்த சூழலில் நம் குழந்தைகளை வளர்க்கும் கொடூரத்தை
//பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை//
உண்மை உண்மை உண்மை
தீபிகா அவர்களின் கருத்தோடும் உடன்படுகிறேன்
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
கவி அழகன் //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
முட்டாள் பெட்டிக்குள் ஆயிரம் குட்டிச்சாத்தான்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. யாரும் விதிவிலக்கல்ல. நல்ல விஷயங்களோ மிக மிக கம்மிதான். அருமையாய் சொன்னீர்கள். நம்முடைய ஜனங்கள் திருந்தவேண்டும். //
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
மகேந்திரன் //
புதிய தலைமுறை என்ற செய்தி தொலைக்காட்சி..
சில செய்திகளை அலசும் முறை நன்று.
மற்றபடி நீங்கள் கூறும் அனைத்தும்
உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை.. //
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .
ரொம்ப அருமையான தெளிவான கவிதை வடிவில் கருத்து - எல்லோரும் சிந்திக்கணும் அத்துடன் செயல்படுத்தனும்
மனசாட்சி //
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
வலைச்சரத்தில் கவிதை சரம்
\\இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி
இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி\\
வளரும் குழந்தைகளின் மனத்தைக் கெடுத்து எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் அந்த முட்டாள் பெட்டியின் வேலையை மேற்கண்ட உவமைகளை விடவும் பொருத்தமான உவமைகளால் விளக்கிவிட முடியாது. தங்கள் பிள்ளைகள் வாழ்வைத் தாங்களே நாசமாக்கும் பல பெற்றோரையும் இந்தக்கவிதை சென்றடைய வேண்டும். பலத்தப் பாராட்டுகள் ரமணி சார்.
நல்ல பதிவர்களோடு என்னையும் சேர்த்து
அறிமுகம் செய்தமைக்கும் தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
கீதமஞ்சரி //
முட்டாள் பெட்டியின் வேலையை மேற்கண்ட உவமைகளை விடவும் பொருத்தமான உவமைகளால் விளக்கிவிட முடியாது. தங்கள் பிள்ளைகள் வாழ்வைத் தாங்களே நாசமாக்கும் பல பெற்றோரையும் இந்தக்கவிதை சென்றடைய வேண்டும். பலத்தப் பாராட்டுகள் ரமணி சார் //
தங்கள் உடன் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
தாங்கள் சொல்லியுள்ள கருத்துகள் யாவும் சரியே....
கோவை2தில்லி //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .
இன்றைய குழந்தைகளின் சூழலை அப்படியே கவி வடிவத்தில் அமைத்து அருமை....
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
சேகர் //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கூகிள்சிறி .கொம் /.
தங்கள் அழைப்பிற்கு மனமார்ந்த நன்றி
Post a Comment