Wednesday, February 15, 2012

உறவுகள்

எண்பதின் துவக்கம் அப்போது நான்
உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கும் அன்றைக்கும் காலக்கணக்கில்
முப்பத்து ஏழு  ஆண்டுகள்தான் இடைவெளி
என்றாலும் கூடஉண்மையில் இன்றைய
உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி
இருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி
வேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.

வீடுகள்  வாடகைக்கு இருக்காது
இருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது
நல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்குச்
சென்று விடுவார்கள்,

மொத்தத்தில் அரசு பணியாளகளைப்
பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை
ஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்
எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும்
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது
என்பதாலும் மாறுதல் என்பது முயன்று
பெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்
என்பதாலும் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான்
வேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்
குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக
மதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு
ஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.
அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக
அவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்
அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு
செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்
ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம்
வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும்
தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும்
என்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும்
அதற்கு அனுசரித்து இருக்கபழகிக் கொண்டார்கள்.

அதைப் போல மாலையிலும்
ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும்
என்பதாலும்எல்லோரும் மூன்று நாற்பதிற்கே
அலுவலக்ம் விட்டு
புறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்
தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி
 அலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்
ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்
கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்
தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்
செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்
உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்
கொண்டிருக்கையில்எதிர்பாராதவிதமாக
 எங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்
கண்டு கொள்ளவில்லைபல்கலைக் கழகத்தில்
கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்
கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்
பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்
அப்படி என்னதான் இருக்கிறது என நான்
முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்டப்
பெண்தான எனத் தெரிந்த போதும் வயதும்
முக  லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத
சூழலில்அப்படி ஆகி இருக்கக் கூடும்
என்கிற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு
தோன்றும்படியாகத்தான்அவள்  இருந்தாள்

எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது
ஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி
அந்தப் பார்வைப்  பார்த்தார் என்பதும் எனக்கு
 இப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து
ஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்
அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக
அமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிஸம்
செய்யத் துவங்கிவிட்டார்.
எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக
அனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றிக்
காரசாரமாக விவாதித்து வருவோம்

சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்
அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம
மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்

இவையெல்லாம் குறித்து  பேசுகையில்
அந்த எதிர் சீட் நண்பர்எ ல்லோரையும் விட
மிக தெளிவாகவும்ஆணித்தரமாகவும்
உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்க்ள்  எல்லாம் அவர்பேச்சில் உள்ள
தார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது
பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கை
என்னுள் என்னவோ செய்தது.

சந்தர்ப்பம்கிடைக்காத வரையில்தான்
நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

ஒருவிதத் தீர்மானத்துட ன்சடாரென எழுந்து
நான்அ ந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்சயம்
மிகுந்த பசியோடுதான்இருப்பாள்எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா "
என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது "
என்றாள்

"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து
 என் பையில் இருந்த மூன்று அடுக்கு டிபன் பாக்ஸ்
மற்றும் தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து
இன்னும்  "இன்னும் இருபது நிமிடத்தில்
உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள்
இறங்கிவிடுவோம்அதற்குள் சாப்பிட்டு விட்டு
டிபன் பாக்ஸைகழுவிக் கொடுத்துவிடு"
எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோ
சம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.
எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம்
நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளை
செயய முடியாமல் போகச் செய்யவும்
பசியில் இருந்த ஒரு பெண்ணுக்கு உதவிய
திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.

நண்பனும் எரிச்சலுடன் என்எதிரிலேயே
வந்து அமர்ந்து விட்டான் .
அந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு
நாங்கள்இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸை
மிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு
எங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்

நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
 செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.
நாங்கள் இறங்கி நடக்கத் துவஙக
எல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்
மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும்
நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்
அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்
உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காக
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்
ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து
 "என்னைத் தெரிகிறதா " என்றாள்
உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா
அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  நடுத்தரக் குடும்பம்  சார்ந்த
பெண் போலவே இருந்தாள்
.குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே
கேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்
அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே
பிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு
பேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து
இருப்போமான்னு கேட்டாங்க

எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது
நானும்  சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே
இந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த
சந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்
இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாக  கசிய்த் துவங்கிய
நீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு
இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது
ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர
நானேதும் அவளுக்கு செய்தததில்லை.

அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை
ஏற்படுத்தி இருக்கிறதென்றால்
அவள் அரவணை ப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள்என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில்
"பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.
விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும்
வாங்கிக் கொடு "என கையில் கிடைத்த
ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும்
சேர்த்துப் பிடித்து"சாருக்கு வணக்கம் சொல்லு "
என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை
என் காலடியில் போட்டு அவளும் தரையில்
வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

94 comments:

vanathy said...

இப்படிக் கூட ஒரு பெண்ணா? மிகவும் மனசை தொடும் பதிவு.
செய்நன்றியை உடனேயே மறக்கும் உலகத்தில் இவரின் செயல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர் நன்றாக இருக்கிறார் என்று கேட்டபோது மிகவும் சந்தோஷமாக இருக்கு.
தொடர வாழ்த்துக்கள்.

ரமேஷ் வெங்கடபதி said...

மனிதநென்பவர் தெய்வமாகலாம்-
அன்பை வழங்கும்போதெல்லாம்!
பெருமை கொண்டோம்..நண்பரே!

மோகன் குமார் said...

Is it a true incident? Very moving.

தமிழ் உதயம் said...

மனதை நெகிழ்வடைய செய்த நிகழ்வு.

ஸாதிகா said...

மனைதினை நெகிழ வைத்த பகிர்வு. நீங்கள் அளித்த ஒருவேளை உணவின் நன்றி மறவாமல் இருந்த அந்தபெண்ணின் நடவடிக்கை ஆச்சரியப்படுத்தி விட்டது.

Anonymous said...

நல்ல உறவுகள் எப்படி எப்படியோ
இந்த உலகத்தில் வேர் விடுகின்றன,
ஈரம் , இரக்கம் , நன்றி
கொண்ட அன்பு உள்ளங்களால்.

மகேந்திரன் said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை...
என்பது போல..
நம் நற்குணங்களை திரும்பத் திரும்ப மற்றவர்களிடம்
காண்பிக்கும் போது...
நம் குணங்களும் மேன்மையடையும் அதே சமயம்..
மற்றவர்கள் மனதும் தூய்மையடையும்...

இதோ நீங்கள் சந்தித்த பெண்ணைப்போல..

Anonymous said...

ayyyaaa heartai touch panni appudiyee allittu poiteenga neenga....super....

aaththaadi chaceye illai ayyaa...antha aunty ivvalavu naal aagiyum ungalai niyabham vaithu irukkanga ....avangalum great...

avanga nalla manasukkuthan nalla vaazkkai koduththu irukkar kadavul...nalla vaazkkai avangalukku kidaikkattum...

ஹேமா said...

வாழ்வுக்கு ஒரு ஆதாரம் கிடைத்த சந்தோஷம்.விரும்பாமல் செய்த தொழிலில் எத்தனை அவஸ்தையும் அவமானமும் இருந்திருக்கும்.
அவளுக்காக என் கண்களும் சற்றுக் கலங்கியது !

Seeni said...

Ayya! unmaiyil manam kanaththu
vittathu!

antha athikaariyin seyal-
"ellaa poonaiyum saiva poonaithaan-
oru eli kidaikkum varai"entru
vipachaara vazhakkil maattiya
kaithi sonna thu !ninaivukku vanthathu!

Anonymous said...

ayyaaa appudye manasai allittu poitinga..

super

மதுரை சரவணன் said...

அண்ணே நெகிழ்ந்து போனேன்… வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

இப்படித்தான் நாம் செய்யும் சில உதவிகள் நமக்கு ஞாபகமிருப்பதில்லை. அலைகடலில் ஒரு துளி மாதிரி அது மறந்து போயிருக்கும். அது எப்படிப்பட்ட உதவி என்று விஸ்வரூபமெடுத்து எதிர்பாரா நிகழ்வாய் உங்களுக்கு தெரிவிக்கும்போது, மனதிற்கு எப்பேர்ப்பட்ட நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும்!! உங்களுக்கு அந்த மாதிரி அசாதாரண மன நிறைவு கிடைப்பதற்கு உங்களின் கருணை தான் காரணம்! என்றாலும், செய்த‌ உதவியை அன்றே மறந்து போகிற உலகின் நடுவே, சுற்றியிருக்கும் நாலு பேரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் தன் பசியை போக்கிய உங்களின் கால்களில் விழுந்த அவளும்கூட மிகவும் உயர்ந்தவள்தான்!

அருமையான பதிவு!!

bandhu said...

அருமையான பதிவு.. இணையத்தின் மூலம் உங்களை அறிந்ததில் 'எனக்கு தெரிந்தவர் எவ்வளவு உயர்ந்தவர்' என்ற பெருமையாகவும் இருக்கிறது!

Asiya Omar said...

பசித்திருக்கும் வேளையில் புசிக்கக கொடுப்பவன் கடவுள் என்ற பழமொழி கூட உண்டு.நல்ல பகிர்வு.

குணசேகரன்... said...

யப்பா! உங்களின் இந்த பதிவு படித்ததும் உங்கள் மனதினுள் நிகழ்ந்த அன்பின் பரிமாற்றத்தை நானும் உணர்ந்தேன். எழுத்துக்கள் இதயத்திற்கு செல்லும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இது போன்ற கட்டுரையை தந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

Ramani said...

vanathy //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மோகன் குமார் //

நடந்த நிகழ்வுதான்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸாதிகா //

ஒருவேளை உணவின் நன்றி மறவாமல் இருந்த அந்தபெண்ணின் நடவடிக்கை ஆச்சரியப்படுத்தி விட்டது.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //

நம் நற்குணங்களை திரும்பத் திரும்ப மற்றவர்களிடம்
காண்பிக்கும் போது...
நம் குணங்களும் மேன்மையடையும் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரவாணி //

நல்ல உறவுகள் எப்படி எப்படியோ
இந்த உலகத்தில் வேர் விடுகின்றன,

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //

வாழ்வுக்கு ஒரு ஆதாரம் கிடைத்த சந்தோஷம்.விரும்பாமல் செய்த தொழிலில் எத்தனை அவஸ்தையும் அவமானமும் இருந்திருக்கும் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Ramani said...

Seeni //

antha athikaariyin seyal-
"ellaa poonaiyum saiva poonaithaan-
oru eli kidaikkum varai"

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Ramani said...

கலை //

ayyaaa appudye manasai allittu poitinga..

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Ramani said...

மதுரை சரவணன் //

அண்ணே நெகிழ்ந்து போனேன்…//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Ramani said...

மனோ சாமிநாதன் //

செய்த‌ உதவியை அன்றே மறந்து போகிற உலகின் நடுவே, சுற்றியிருக்கும் நாலு பேரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் தன் பசியை போக்கிய உங்களின் கால்களில் விழுந்த அவளும்கூட மிகவும் உயர்ந்தவள்தான்!


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

bandhu //

இணையத்தின் மூலம் உங்களை அறிந்ததில் 'எனக்கு தெரிந்தவர் எவ்வளவு உயர்ந்தவர்' என்ற பெருமையாகவும் இருக்கிறது! //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Asiya Omar //

பசித்திருக்கும் வேளையில் புசிக்கக கொடுப்பவன் கடவுள் என்ற பழமொழி கூட உண்டு.நல்ல பகிர்வு.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

குணசேகரன்...//

யப்பா! உங்களின் இந்த பதிவு படித்ததும் உங்கள் மனதினுள் நிகழ்ந்த அன்பின் பரிமாற்றத்தை நானும் உணர்ந்தேன். எழுத்துக்கள் இதயத்திற்கு செல்லும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Avargal Unmaigal said...

வலைத்தளத்தில் இன்றுதான் நான் மனித நேயம் உள்ள உண்மையான மனிதனை கண்டேன். இப்படிபட்ட மனிதர்களை காண்பது அரிது.வாழ்த்துகள் ரமணி சார்.
அருமையான பதிவு.. இணையத்தின் மூலம் பல இதயங்களை தொடமுடியும் என்பது உங்கள் பதிவின் மூலம் நிருப்பிக்கப்பட்டுள்ளது.

நான் சொல்ல நினைத்ததை எனக்கு முன்பே Bandhu என்பவர் சொல்லிவிட்டார்.
///உங்களை அறிந்ததில் 'எனக்கு தெரிந்தவர் எவ்வளவு உயர்ந்தவர்' என்ற பெருமையாகவும் இருக்கிறது! //

வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!

Ramani said...

Avargal Unmaigal //

இணையத்தின் மூலம் பல இதயங்களை தொடமுடியும் என்பது உங்கள் பதிவின் மூலம் நிருப்பிக்கப்பட்டுள்ளது.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

துளசி கோபால் said...

படிச்சுட்டு கண்ணும் மனமும் கலங்கிருச்சு ரமணி.

ஏதோ விதிவசத்தால் தவறான பாதையில் போகும் பல பெண்களுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவலவாழ்க்கையை விட்டு மாறிடுவாங்க. அவரின் துணைவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். பாவம் அந்தப் பொண்ணு. எங்கியாவது நல்லா இருக்கட்டும்.

Ramani said...

துளசி கோபால் //

ஏதோ விதிவசத்தால் தவறான பாதையில் போகும் பல பெண்களுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவலவாழ்க்கையை விட்டு மாறிடுவாங்க. //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

வெங்கட் நாகராஜ் said...

மனது கனத்துப் போனது ரமணி சார்.... எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருப்பார் அந்தப் பெண்.... துணையின்றி, விதி வசத்தால் கஷ்டப்பட்டு... எல்லோராலும் தூற்றப்பட்டு...

பசி என்பது என்னென்ன கஷ்டங்களை தருகிறது....

நல்லதோர் பகிர்வு...

கணேஷ் said...

சரியான சமயத்தில் கிடைக்கும் சிறு சிறு உதவிகள் கூட செய்பவரை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி செய்துவிடும். அவள் அவஸ்தைப் பட்ட காலத்தில் உங்களின் கருணை தென்றலாய் மனதில் வீசியிருக்க வேண்டும். அதனால்தான் அவ்வளவு நெகிழ்ந்திருக்கிறாள். நன்றாயிருக்கட்டும்! ‘அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவதுவே வாழ்க்கை’ என்ற என் கருத்தை இன்னும் ஆணித்தரமாக உறுதிப்படுத்திய கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி!

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

பசி என்பது என்னென்ன கஷ்டங்களை தருகிறது....//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Ramani said...

கணேஷ் //

அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவதுவே வாழ்க்கை’ என்ற என் கருத்தை இன்னும் ஆணித்தரமாக உறுதிப்படுத்திய கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி . //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

அப்பாதுரை said...

படித்ததும் எனக்கும் உங்களைக் கும்பிடத் தோன்றியது.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தங்கள் பதிவைப் படித்தவுடன், நான் தினமும் கல்லூரிக்கும் பின்னர் வங்கி வேலைக்கும் புகைவண்டியில் சென்று வந்த நாட்கள் ஞாபகம் வந்துவிட்டது. நீங்கள் வித்தியாசமானவர். ஆண்கள் எல்லோரையும் ஒரே மாதிரி எடை போட்டு வைத்திருந்த அந்த பெண்ணுக்கு நீங்கள் செய்த அந்த நேரத்து உதவி அந்த பெண்ணை யோசிக்க வைத்து இருக்கும். திசை மாறிச் சென்ற ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனை செய்து விட்டீர்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

//பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில் மட்டும் ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்த//

உண்மைதான் இரமணி!
இதுதான் உலகம்! சுவைபடச் சொன்னீர்!
புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் said...

மனதை தொட்ட சம்பவம்

RAMVI said...

நெகிழ வைத்துவிட்டது எவ்வளவு கஷ்டப் பட்டிருந்திருப்பார் அந்தப்பெண்.அவருக்கு ஒரு நல்லது நடந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கு.

//"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்//
உங்கள் அன்புக்கு வணங்குகிறேன் சார்.

Sankar Gurusamy said...

நெகிழ்ச்சியான நிகழ்வு.. இப்படிப்பட்ட பெண்களுக்கும் அரவாணிகளுக்கும் பெரும்பாலும் யாரும் கருணை காட்டுவதில்லை. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மிகவும் நெகிழ்ந்துவிடுகிறார்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

G.M Balasubramaniam said...

அனுபவங்கள் வாழ்வைச் சுவையாக்குகின்றன.வாழ்க்கை அனுபவங்களை அறுவடை செய்கின்றன.சில நிகழ்வுகள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். (அந்தப் பெண்ணுக்கு நேர்ந்ததுபோல )சில நிகழ்வுகள் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்.(உங்களுக்கு நேர்ந்ததுபோல.)சுவையான பகிர்வு. பாராட்டுக்கள்.

Anonymous said...

நம்புவிர்களா? கண்களிலிருந்து இரண்டு தடவை கண்ணீர் உருண்டோடியது. (இதுவே விமரிசனம்) மிக நெஞ்சைத் தொட்டது. நன்றி பகிர்விற்கு. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

அமைதிச்சாரல் said...

விரும்பி யாரும் இந்த வாழ்க்கைக்கு வர்றதில்லை. விருப்பமில்லாமலேயே இப்படிப்பட்ட நிலைகளில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் பெண்களுக்கு ஆதரவாக் குரல் கொடுக்கவோ உதவி செய்யவோ முன்வரும் சில ஆட்களில் நீங்களும் ஒருத்தரா இருப்பது குறித்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. மீண்டு வந்து வாழும் அந்தப் பெண்ணுக்கும், கணவருக்கும், அதற்கு அடித்தளமிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

Ramani said...

அப்பாதுரை //

இதுதான் நான் இதுவரை அடைந்ததில்
அதிகப் பட்ச பாராட்டாக இருக்கும் என நினைக்கிறேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ

ஆண்கள் எல்லோரையும் ஒரே மாதிரி எடை போட்டு வைத்திருந்த அந்த பெண்ணுக்கு நீங்கள் செய்த அந்த நேரத்து உதவி அந்த பெண்ணை யோசிக்க வைத்து இருக்கும்.//

மிகச் சரி இல்லையெனில் அதுவரை எல்லோரையும் கண்டு
ஒதுங்கியும் விலகியும் இருந்த பெண் தைரியமாக
அருகில் வந்து அமருமா ?
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

உண்மைதான் இரமணி!
இதுதான் உலகம்! சுவைபடச் சொன்னீர்!

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சி.பி.செந்தில்குமார் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி .

Ramani said...

Sankar Gurusamy //

நெகிழ்ச்சியான நிகழ்வு.. இப்படிப்பட்ட பெண்களுக்கும் அரவாணிகளுக்கும் பெரும்பாலும் யாரும் கருணை காட்டுவதில்லை. அப்படி யாராவது செய்தால் அவர்கள் மிகவும் நெகிழ்ந்துவிடுகிறார்கள் //.

மிகச் சரி தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

சில நிகழ்வுகள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். (அந்தப் பெண்ணுக்கு நேர்ந்ததுபோல )சில நிகழ்வுகள் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்.(உங்களுக்கு நேர்ந்ததுபோல.)சுவையான பகிர்வு.//

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ajay said...

I saw on your blog about the award that you have been given for publishing 'Quality Content'. Well this one post itself itself proves that you are worth 100s of awards like that. Congrats and Keep it Up Sir.

Ramani said...

kovaikkavi //

நம்புவிர்களா? கண்களிலிருந்து இரண்டு தடவை கண்ணீர் உருண்டோடியது. (இதுவே விமரிசனம்) மிக நெஞ்சைத் தொட்டது. நன்றி பகிர்விற்கு. வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Ramani said...

RAMVI //
//"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்//
உங்கள் அன்புக்கு வணங்குகிறேன் சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Ramani said...

Ajay //

Well this one post itself itself proves that you are worth 100s of awards like that. Congrats and Keep it Up Sir.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

தீபிகா(Theepika) said...

பயணங்கள் சில முகங்களை மனசுக்குள் விதைத்து விட்டுப் போய்விடுகின்றன. எதிர்பாராமல் அந்த முகங்களை என்றைக்கோ சந்திக்கிற போது சந்தித்த பாதைகள் ஞாபகம் வருவதில்லை. வாழ்க்கையின் விசித்திரம் மனிதர்களுக்கு புரிவதே இல்லை. உணவு கொடுத்தவர்கள் அடுத்தவர் மனதில் என்றும் தெய்வங்களே. காலமும்-விதியும் புரிந்துகொள்ளப்பட முடியாத நாணயத்தின் பக்கங்கள்.ஒருத்தியை தவறான பாதைக்கு வழிநடாத்தியதும்...பின்னர் நல்ல வாழ்க்கைக்கு வழி சமைத்ததும்...எது? யாராலும் விடை செல்ல முடியா மர்ம விடுகதை வாழ்க்கை.
உசிலம்பட்டியின் அன்றைய புகைவண்டிப் பயணத்தில் தொடங்கி...தாத்தாவின் பெயர் சுமந்த விருமாண்டி ப்
பேரன் வரை கதை நகர்த்திய விதம் நாமும் அன்று தொட்டு உங்கள் அருகில் இருந்து பயணித்த மனிதர்களில் ஒருவராக நினைக்க வைக்கிறது.

தீபிகா.

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவ பதிவு ! அருமைப் பதிவு ! நன்றி சார் !

கீதமஞ்சரி said...

ரமணி சார், கண்களும் மனமும் நிறைந்து போனது. மனிதர்களில் எத்தனை குணாதிசயங்கள்! இந்த ஒரு பதிவிலேயே பலதரப்பட்ட குணமுள்ள மனிதர்களை அறிமுகப்படுத்திவிட்டீர்கள். வெளிப்பார்வைக்கு வேடம்போடும் தார்மீகவாதி, அந்தப் பெண்ணின் கரையாத விசுவாசம், அவளை மணந்து வாழ்க்கையில் இணைத்துக்கொண்ட ஒரு நல்ல மனம்,அப்பெண் உங்கள் பாதங்களில் விழுந்தபோது விநோதப் பார்வை பார்த்த கூட்டம் எல்லாவற்றையும் விஞ்சி விஸ்வரூபமெடுத்து நிற்கிறது தங்கள் மனிதாபிமானம். மனம் நெகிழ்த்திய பதிவு ரமணி சார்.

விக்கியுலகம் said...

அண்ணே உண்மையில் ஒரு புடி சோறு அந்த பெண்ணுக்கு உயிரை திருப்பி கொடுத்தது போல் இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்...!

கோவை2தில்லி said...

மனதை நெகிழ்த்தியது சார். ஒவ்வொருவரின் பார்வையும், ஒவ்வொருவிதமாக இருந்த போதும் தாங்கள் அந்த பெண்ணுக்கு உணவு கொடுத்து உபசரித்தது. உண்மையிலேயே பெரிய விஷயம் தான்... பசி தான் அந்த பெண்ணையும் அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும்.
அந்த பெண்ணுக்கு வாழ்க்கை தந்தவரும் பாராட்டப்பட வேண்டியவர்.

கே. பி. ஜனா... said...

படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன.மனம் நெகிழ்ந்து போனது.அன்பின் சக்தி மகத்தானது. என்பதைத் தவிர என்ன வேறு சொல்ல?

துரைடேனியல் said...

வெகுநாள் கழித்து உணமையாகவே கண்கலங்கினேன் இந்தப் பதிவைப் படித்ததும். நெஞ்சம் கனக்கிறது. ஆயிரம் கதைகள் சொல்லாததை இந்த நிஜசம்பவம் செய்துவிட்டதே. பகிர்வுக்கு நன்றி. என் மனம் கவர்ந்த பதிவு. நிச்சயம் அடிக்கடி இப்படி உணர்வுபூர்வமாய் எழுதுங்கள் சார். நன்றி.

துரைடேனியல் said...

tha mz 14.

துரைடேனியல் said...

நான் எதற்குமே கலங்குவதில்லை. படித்ததும் கண்கள் கலங்கிவிட்டேன். மனம் கவர்ந்த அருமையான பதிவு சார். தொடருங்கள்.

துரைடேனியல் said...

ஆயிரம் கதைகள் சொல்லாத உணர்வூட்டல்களை இந்த ஒரு நிஜசம்பவம் ஊட்டுகிறதே? ஆஹா...அருமை...அருமையிலும் அருமை...தொடருங்கள்!

Ramani said...

தீபிகா(Theepika) //

உசிலம்பட்டியின் அன்றைய புகைவண்டிப் பயணத்தில் தொடங்கி...தாத்தாவின் பெயர் சுமந்த விருமாண்டி ப்
பேரன் வரை கதை நகர்த்திய விதம் நாமும் அன்று தொட்டு உங்கள் அருகில் இருந்து பயணித்த மனிதர்களில் ஒருவராக நினைக்க வைக்கிறது//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி . .

Ramani said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி . .

Ramani said...

கீதமஞ்சரி //

கண்களும் மனமும் நிறைந்து போனது. மனிதர்களில் எத்தனை குணாதிசயங்கள்! இந்த ஒரு பதிவிலேயே பலதரப்பட்ட குணமுள்ள மனிதர்களை அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி . .

Ramani said...

விக்கியுலகம் //

அண்ணே உண்மையில் ஒரு புடி சோறு அந்த பெண்ணுக்கு உயிரை திருப்பி கொடுத்தது போல் இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரி
அவளை ஒரு உபயோகப் பொருளாக இல்லாமல்
மனிதப் பிறவியாக நினைத்துக் கொடுத்த
முதல் உணவாகக் கூட இருக்கலாம்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி . .

Ramani said...

கோவை2தில்லி //

பசி தான் அந்த பெண்ணையும் அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும்.
அந்த பெண்ணுக்கு வாழ்க்கை தந்தவரும் பாராட்டப்பட வேண்டியவர் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Ramani said...

கே. பி. ஜனா... //

அன்பின் சக்தி மகத்தானது. என்பதைத் தவிர என்ன வேறு சொல்ல? //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Ramani said...

துரைடேனியல் //

நான் எதற்குமே கலங்குவதில்லை. படித்ததும் கண்கள் கலங்கிவிட்டேன். மனம் கவர்ந்த அருமையான பதிவு சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

மனம் கவர்ந்த... நெகிழ வைத்த பகிர்வு...வாழ்த்துக்கள் ரமணி சார்...

குணசேகரன்... said...

எனது இன்றைய பதிவில் உங்களின் வலைபதிவிற்கு ஒரு விருது அளித்திருக்கிறேன்.மறக்காமல் பார்க்கவும்

Ramani said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

குணசேகரன்... //

தங்கள் விருதும் பாராட்டும் எனக்கு
கூடுதல் நம்பிக்கையும் சக்தியும் தருகிறது
தொடர்ந்து நல்ல படைப்புகளைக் கொடுக்க
இது ஒரு நல்ல தூண்டுகோலாய் உள்ளது
மிக்க நன்றி

வேர்கள் said...

//"எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்//

இந்த இடத்தில என் கண்ணில் நீர் துளிர்த்தது
அடுத்தவரியை படித்தேன் உங்களுக்கும் அன்று அதே நிலை

//என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்//

என்ன சார் வாழ்க்கை.......

சிறு ஆறுதல் வார்த்தைதானே
அதனால் என்ன பயன் என எண்ணி
அசட்டையாய் இதுவரை இருந்ததில்லை

நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்

நீங்கள் சொன்னதுதான் 20 .12 .2011 அன்று

Ramani said...

வேர்கள் //

நிகழ்ச்சியை எழுதியதைவிட அதை மிகச் சரியாகப்
புரிந்து பின்னூட்டம் இடப்படும்போது கிடைக்கும்
திருப்தி மகிழ்ச்சி அலாதியானது அளவிடமுடியாதது
நீங்கள் குறிப்பிட்டுச் செல்லும் இடமே நிகழ்வின் ஜீவன்
நான் மகிழ்வேன் என அவள் சரியாகக் கணித்திருந்தது
ஒரு சகோதரனாக மனதில்நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு
நானே மாமா எனச் சொல் எனச் சொன்னது அதிக பாதிப்பை
ஏற்படுத்தி இருக்கக் கூடும்
நிகழ்வின் ஜீவனை மிகச் சரியாக அறிந்து பின்னூட்டமிட்டமைக்கு
எனது மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான அனுபவப் பகிர்வு...
பாராட்டுக்கள் மனிதாபிமானத்திற்கு..

raji said...

தங்களின் அனுபவப் பகிர்வு மனதை நெகிழ்வுறச் செய்தது.தங்கள் போன்று பெண்களை சகோதரிகளாக பார்க்கும் ஆண்களாக எல்லாரும் இருந்து விட்டால் பெண்களின் நிலை,அந்தப் பெண் முதலில் இருந்த நிலைக்கு தள்ளப் படாது.தாங்கள் அந்தப் பெண்ணின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தீர்கள்.அது போல் தங்களின் இந்த பதிவு,பெண்களை வெறு கோணத்தில் பார்க்கும் ஆண்களுக்கு திருப்பு முனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாமா என்ற அருமையான உறவுச்சொல் தமிழ் சினிமாவின் புண்ணியத்தில் வேறு மாதிரி திரிந்து விட்ட போதிலும் உண்மையான உறவுமுறைக்கிடையே அந்த வார்த்தை உயர்ந்தே நிற்கிறது.பகிர்விற்கு நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

raji //

பெண்களை சகோதரிகளாக பார்க்கும் ஆண்களாக எல்லாரும் இருந்து விட்டால் பெண்களின் நிலை,அந்தப் பெண் முதலில் இருந்த நிலைக்கு தள்ளப் படாது.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

தனிமரம் said...

வாழ்க்கையில் தடம் மாறும் மனிதர்களை தட்டிக்கொடுத்து உணவளித்து உறுதி கொடுத்தால் உறவாகிப்போவார்கள் .நல்ல ஒரு கதையைச் சொல்லி மனதில் வேதனையைக் கூட்டிவிட்டது அந்த விருமாண்டியை நினைத்து.

சென்னை பித்தன் said...

கடைசியில் படிக்க முடியாமல் கண்ணீர்த் திரையிட்டு விட்டது!அருமை
நல்ல உள்ளமே!

Ramani said...

தனிமரம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சென்னை பித்தன் //

கடைசியில் படிக்க முடியாமல் கண்ணீர்த் திரையிட்டு விட்டது!அருமை

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Lakshmi said...

மிகவும் நெகிழ்ச்சியான கதை. சொன்னவிதம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

Ramani said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

// சந்தர்ப்பம் கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால் அது எந்த வகையில் சேர்த்தி ? //

பலரும் இதுபோலத்தான் சார், சபலபுத்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பெண்கள் அனைவருமே மிகவும் கண்ணியமானவர்களே என்பது தான் என் எண்ணம்.

பசியின் கொடுமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவர்களை தெரிந்தோ தெரியாமலோ, தவறு செய்ய வைத்து விடுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள் பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அவர்களை இந்த சமூகம் நல்லவர்களாக இருக்க விடுவதும் இல்லை.

வாழவும் விடாது சாகவும் விடாது.

ஏழ்மையும் பசியின் கொடுமைகளும் வாட்டி எடுக்கும்.

அதுவே சில ஆண்களுக்கு அவர்களைக் கவர்ந்திழுத்து தவறான பாதைக்கு இட்டுச்செல்ல மூலதனமாக அமைந்து விடுகிறது, என்பதே உண்மை.

தங்களைப் போலவே முதலுதவியாக அவர்களின் வயிற்றுப் பசியைப் போக்க வேண்டும் என்று தான் நானும் நினைப்பேன்.

உதவிசெய்யப்போனாலும் சமயத்தில் நாம் பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

கசப்பான தொடர் அனுபவங்களைக்கூட சந்திக்க வேண்டியிருக்கும்.

ரயில் ஸ்நேகம் என்று ஓர் சீரியல் (Black & White) TV வந்த புதிதில் நான் பார்த்திருக்கிறேன்.

அதில் இது போலவே ஒரு பெண், உதவிசெய்ய நினைக்கும் ஒருவனுடன் ஒட்டிக்கொள்வாள்.

அவனுடனேயே ஒரே வீட்டில் கணவன் மனைவியாகவும் இல்லாமல், நீண்ட நாட்கள் கெள்ரவமாகவே வாழ்வாள்.

கடைசிவரை அந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மிகவும் அற்புதமான கதை அது. ஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்தது, இந்தப்பதிவைப் ப்டித்ததும்.

தங்களின் இந்தப்பகிர்வு மிகவும் அருமையாகவே எழுதப்பட்டுள்ளது. சில அனுபவங்களை நம்மால் உள்ளது உள்ளபடி எழுதிவிடவும் முடியாது.

நல்லதை நல்லவிதமாகச் சொல்லி, தாங்கள் சிறப்பாகக் கொண்டு வந்து முடித்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இதற்கு அடுத்த கதையின் பின்னூட்டத்தில் தாங்கள் சொன்னதால், இந்த விட்டுப்போன பதிவை நான் இப்போது படித்துப்பார்த்தேன்.

எவ்வளவோ நல்ல பதிவுகள் இது போன்று படிக்க விட்டுப்போய் விடுகின்றன;

என் இன்றைய நிலைமை அதுபோலத்தான் உள்ளது.

ஏதாவது இதுபோன்ற பதிவுகள் வெளியிட்டு அவசியமாக என் கருத்துக்களைத் தாங்கள் எதிர்பார்க்கும் போது, எனக்குத் தனியாக ஒரு மெயில் கொடுங்கள் ஐயா.

அன்புடன் vgk

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்களுடைய படைப்பின் கரு, சொல்லிச் செல்லும் நேர்த்தி
இவைகளின் ரசிகன் நான்
எனவே தங்கள் கருத்து எனக்கு நல்ல வழிகாட்டியாக
இருக்கும் என்பதால் தங்க்கள் கருத்தைக் கோரினேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பாவம் அந்தப் பெண், நிர்பந்தத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற ஆண்களைப்போல் அல்லாது உணவும் கொடுத்த உங்கள் நேயம் பெரிது ஐயா. உங்களுக்கு ஒருவேளை உணவுதான் எனத்தோன்றினாலும் அவருக்கு அது மிகப்பெரிய அங்கீகாரமும் அக்கறையும் சார்ந்தது. எப்படி மறப்பார்? நீங்கள் மகிழ்வீர்கள் என்று நினைத்தேன் என்பதிலேயே பெரும்புரிதல் இருக்கிறதே. அவருக்கு நல்வாழ்வு அமைந்தது அறிந்து மகிழ்கிறேன். உங்களுக்கு வணக்கங்கள் ஐயா.

Post a Comment