பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்
நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே
உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே
பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும் நிகராமோ
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்
நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே
உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே
பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும் நிகராமோ
67 comments:
பொதுவாகக் கேட்க நினைத்தது :
அனைத்துத் திறனும் படைத்த ஓர் ஆண்மகன் இப்படி
ஓர் மங்கையின் மடியில் அடைக்கலம் ஆவானோ ?
இல்லை இப்படிச் சொல்லி சொல்லியே பெண்களை
மூளைச் சலவை செய்கிறீர்களோ ?
கவிதை கண்டவுடன் நினைத்தது :
"மகாராஜன் உலகை ஆளலாம் ......
இந்த மகாராணி அவனை ஆளுவாள்"
என்ற பாடல் ....
'உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ'/ ........ மிகவும் பிடித்தது .
அனைத்து வரிகளுமே பொன்னான வரிகள் .
-உன் ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன் ஆகிறேன்///
கண்ணின் கடைப்பார்வை காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்"
இந்த துளிப்பா எனக்கு சட்டென ஞாபகம் வந்தது நண்பரே.
ஒரு ஆண்மகன் எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும்
மனதிற்கு பிடித்த மனதில் குடியேறிய ஒரு பெண்ணின்
அழகிய சிறு சொல் ஒன்று சொல் அவனை மேலும்
பட்டை தீட்டும்..
அருமையான கவிதை நண்பரே..
ரசித்து படித்தேன்.
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே//
கவிதை பிறந்த விதத்தை போட்டு உடைத்துவிட்டீர்களே....அருமை ரமணி அவர்களே..
முத்திரைக் கவிதை! மிக்க நன்று!
எழுதப்பட்ட காலம் என்னவோ?சமீபத்திலா..பின் தொலைவிலா?
நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே
/////
அருமையான வரிகள்.
///உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ///
இந்த சுகத்துக்கு ஈடாக உலகில் ஏதும் இல்லை என்பது யாரும் மறுக்க முடியாது.
உங்கள் கவிதையை படித்து நான் இப்போது பாடிக் களிக்கிறேன்- தாவிக் குதிக்கிறேன். மிகவும் அருமையான வரிகள்
நல்லாருக்கு..
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும் நிகராமோ.
நிகரற்றதாய் நிரந்தரமாய் அருமையான வரிகள்..பாராட்டுக்கள்...
மீண்டும் ஒரு பாராட்டு உங்களுக்கு
இதுவரை காதலிக்காதவர்களையும் காதலிக்கவைத்துவிடும் அற்புத வரிகள். உண்மைக்காதல் உள்ளத்துள் இருந்தால் உலகமே எதிர்த்தாலும் இறுதிவரை உடன்வருமே. அப்படியொரு இனிய காதலுணர்வை அனுபவிக்காத எவராலும் இப்படியொரு ஆத்மார்த்தமான கவிதையைப் படைக்க இயலாது. மனம் நிறைந்த பாராட்டுகள் ரமணி சார்.
மீண்டும் ஒரு காதல் கவிதை வாசித்தேன்..அருமை..சந்தத்தில் வார்த்தைகள் அழகாய் வந்து விழுந்திருக்கின்றன.பிடித்தது வாக்கிட்டேன்.நன்றி..
அருமையான காதல் கவிதை. காதலில் உளறலும் கவிதையாகும் என்ற விசயத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.in/
உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே-
இப்படி நினைவு மட்டும் போதும் காதலி வேண்டாம் என்ற எண்ணமோ..?
அருமையான வரிகள் ஐயா.
கவிதை நல்லா இருக்கு வார்த்தைகள் வெகு அழகு. வாழ்த்துகள்.
கவிழ்த்து விட்டது-
என்னை!
நீங்கள் வடித்த-
கவிதை!
ஸ்ரவாணி //
'உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ'/ ........ மிகவும் பிடித்தது .
அனைத்து வரிகளுமே பொன்னான வரிகள் //.
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
-உன் ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன் ஆகிறேன்///
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
அருமையான கவிதை நண்பரே..
ரசித்து படித்தேன்.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அகிலா //
கவிதை பிறந்த விதத்தை போட்டு உடைத்துவிட்டீர்களே....
அருமை ரமணி அவர்களே..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
முத்திரைக் கவிதை! மிக்க நன்று!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
அருமையான வரிகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
உங்கள் கவிதையை படித்து நான் இப்போது பாடிக் களிக்கிறேன்- தாவிக் குதிக்கிறேன். மிகவும் அருமையான வரிகள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //.
நல்லாருக்கு..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும் நிகராமோ.
நிகரற்றதாய் நிரந்தரமாய் அருமையான வரிகள்..பாராட்டுக்கள்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
மீண்டும் ஒரு பாராட்டு உங்களுக்கு//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நல்லதொரு கவிதை. அழகான வரிகள்.
கோவை2தில்லி //
நல்லதொரு கவிதை. அழகான வரிகள்.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
கவிழ்த்து விட்டது-
என்னை!
நீங்கள் வடித்த-
கவிதை!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
கவிதை நல்லா இருக்கு வார்த்தைகள் வெகு அழகு. வாழ்த்துகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Sankar Gurusamy //
அருமையான காதல் கவிதை. காதலில் உளறலும் கவிதையாகும் என்ற விசயத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி //
மீண்டும் ஒரு காதல் கவிதை வாசித்தேன்..அருமை..சந்தத்தில் வார்த்தைகள் அழகாய் வந்து விழுந்திருக்கின்றன.பிடித்தது வாக்கிட்டேன்.நன்றி..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
உண்மைக்காதல் உள்ளத்துள் இருந்தால் உலகமே எதிர்த்தாலும் இறுதிவரை உடன்வருமே. அப்படியொரு இனிய காதலுணர்வை அனுபவிக்காத எவராலும் இப்படியொரு ஆத்மார்த்தமான கவிதையைப் படைக்க இயலாது. மனம் நிறைந்த பாராட்டுகள் ரமணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மடியில் துயிலும் ஒரு நொடி. ஆஹா. ! அந்தக் காலத்தில் கவிதை எழுத எனக்கு ஒரு கடைக்கண் பார்வையே போதுமானதாக இருந்தது. அந்த மடியில் துயிலும் நொடி மட்டும் கிடைத்திருந்தால் நான் என்ன ப்ளாகா எழுதிக் கொண்டிருப்பேன்.!இதைத்தான் ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தான் என்கிறார்களோ.?கவிதை ரசித்தேன். பாராட்டுக்கள்.
G.M Balasubramaniam .//.
மடியில் துயிலும் ஒரு நொடி. ஆஹா. ! அந்தக் காலத்தில் கவிதை எழுத எனக்கு ஒரு கடைக்கண் பார்வையே போதுமானதாக இருந்தது. அந்த மடியில் துயிலும் நொடி மட்டும் கிடைத்திருந்தால் நான் என்ன ப்ளாகா எழுதிக் கொண்டிருப்பேன்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காதல் வானில் மிக உயரத்தில் பறக்கிறீர்கள் போல
இளமை துள்ளும் அருமைக்கவிதை வாழ்த்துகள்.
நல்லதொரு கவிதை.
DhanaSekaran .S //..
இளமை துள்ளும் அருமைக்கவிதை வாழ்த்துகள். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Kanchana Radhakrishnan //
நல்லதொரு கவி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சசிகலா //
இப்படி நினைவு மட்டும் போதும் காதலி வேண்டாம் என்ற எண்ணமோ..?
அருமையான வரிகள் ஐயா.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
//பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ// அதானே.... அந்த சுகத்திற்கு ஈடேது....
நல்ல கவிதை வரிகள் சார்..... தொடர்ந்து அசத்தறீங்க உங்கள் கவிதைகளால்...,.
மீண்டும் ஒரு காதல் கவிதை...நல்லாயிருந்தது...
ரசித்தேன் ரமணி சார்...
அழகிய, அருமையான கவிதை!
'காணி நிலமும் பத்துப் பனிரென்டு தென்னை மரங்களும் பாட்டுக்கலந்திடவே ஒரு பத்தினிப்பெண்ணும்' கேட்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன!!
வெங்கட் நாகராஜ் //
நல்ல கவிதை வரிகள் சார்..... தொடர்ந்து அசத்தறீங்க உங்கள் கவிதைகளால்...,.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
மீண்டும் ஒரு காதல் கவிதை...நல்லாயிருந்தது...
ரசித்தேன் ரமணி சார்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
அழகிய, அருமையான கவிதை!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்! மதுரைக் கவிஞரின் புதிய கண்ணம்மா பாட்டு! இளமையின் நினைவோடை! ( மின்வெட்டு காரணமாக உடனுக்குடன் கருத்துரை செய்ய முடியவில்லை.)
தி.தமிழ் இளங்கோ //
வணக்கம்! மதுரைக் கவிஞரின் புதிய கண்ணம்மா பாட்டு! இளமையின் நினைவோடை!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
படிக்க படிக்க
பரவசம்
வாழ்த்துகள்
திகழ் //
படிக்க படிக்க
பரவசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அழகழகான வார்த்தைப் பூக்கள் கொண்டு தொடுக்கப்பட்ட காதல் சரம்தான் இக்கவிதை. அருமை சார். மனம் வருடிச் செல்கிறது. நான் பள்ளிக் காலங்களில் நோட்டு நோட்டாய் இப்படி காதல் கவிதைகளாக எழுதிக் குவித்தது உண்டு. இப்போ காதல் கவிதை எழுதுவது இல்லை. நாங்கள்ளால் அவ்ளோவ் நல்லவங்களாக்கும். ஹி...ஹி...!
tha ma 9.
துரைடேனியல்
//அழகழகான வார்த்தைப் பூக்கள் கொண்டு தொடுக்கப்பட்ட காதல் சரம்தான் இக்கவிதை. அருமை சார். மனம் வருடிச் செல்கிறது.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரசித்தேன் என்பதை விட கவிதையை ருசித்தேன் நண்பரே..அருமை !!!
padaipali //
ரசித்தேன் என்பதை விட கவிதையை ருசித்தேன் நண்பரே..அருமை !!!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காதலின் வலிமை என்னே!
சென்னை பித்தன் .//
காதலின் வலிமை என்னே!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காதல் கவிதையா இது ? இல்லை
கரும்பின் சுவையா ?
பார்த்த உடன்
பாடிவிட்டேன்.
சுப்பு தாத்தா.
இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு
அனுப்புகிறேன். லிங்க்.
உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே
>>>
காதல் வந்தால் பசி தூக்கம் கிடையாதுன்னு சொல்றது உண்மைதான் போல. ஆமா, இந்த காதல் வந்த விசயம் உங்க வீட்டம்மாக்கு தெரியுமா ஐயா?
// ஆமா, இந்த காதல் வந்த விசயம் உங்க வீட்டம்மாக்கு தெரியுமா ஐயா? //
தெரியுமா வா ? அவங்க சொல்லித்தானே இத எழுதறேன் !!
இத்தனை கவித எழுதறீக...
இந்த அம்பது வருசத்திலே என்னைப் பத்தி ஒண்ணு எழுதினீகளா
அப்படின்னு கேட்டுப்பிட்டாகளே !!
சுப்பு தாத்தா.
sury ////
காதல் கவிதையா இது ? இல்லை
கரும்பின் சுவையா ?
பார்த்த உடன்
பாடிவிட்டேன். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
ஆமா, இந்த காதல் வந்த விசயம் உங்க வீட்டம்மாக்கு தெரியுமா ஐயா?//
உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா
பாரதியின் கண்ணம்மா செல்லம்மாதான்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
sury //
தெரியுமா வா ? அவங்க சொல்லித்தானே இத எழுதறேன் !!
இத்தனை கவித எழுதறீக...
இந்த அம்பது வருசத்திலே என்னைப் பத்தி ஒண்ணு எழுதினீகளா
அப்படின்னு கேட்டுப்பிட்டாகளே !!
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வித்தியாசமான ரசிக்கும்படியான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனதை நெருக்கமாக வைத்திருக்கும் காதல் கவிதை.காதலைச் சரியாக உணர்ந்த நேரம் எழுதியிருக்கிறீர்கள் !
ஹேமா //
மனதை நெருக்கமாக வைத்திருக்கும் காதல் கவிதை.காதலைச் சரியாக உணர்ந்த நேரம் எழுதியிருக்கிறீர்கள் !//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காதலால் அழகிய கவியும் பிறந்தது.
மாதேவி //
காதலால் அழகிய கவியும் பிறந்தது.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment