Tuesday, March 13, 2012

மீ ண்டும் ஜான் அப்துல் நாராயணன்

தெய்வமே
(தப்பு தப்பு மன்னியுங்கள் )
தெய்வங்களே
(ஐய்யையோ இதுவும் தப்பாய்த் தெரிகிறதே )
இங்கே உங்கள் ஏஜெண்டுகள்
எல்லோரையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்
நீங்கள் ஒருவரா ?
இல்லை மூவரா ?
மூவரும் நண்பர்களா ?
இல்லை எங்களுக்குள் இருக்கும்
ஜென்ம விரோதங்கள் போல்
நீங்களும் பகை கொண்டிருக்கிறீர்களா ?
பொதுப்பெயரில் அழைத்தால்
யாரேனும் செவிசாய்ப்பீர்களா ?
இல்லை குறிப்பாக எனக்கில்லை என
மூவரும் கைவிட்டுவிடுவீர்களா ?

ஐய்யோ ஆரம்பமே குழப்பமாய் இருக்கிறதே

பரிசுத்த ஆவியே !அல்லாவே ! ஆதிமூலமே !
இப்படி அழைத்தால் சரியா ?
உங்களை பிரார்த்தித்து
உங்களைத் தொழுது
உங்கள் திருப்பாதம் பணிந்து
ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்வோ
தயவு செய்து இன்னொரு முறை
இங்கு அவதரிக்கச் சாத்தியமா ?

பண்டை ஆயுதங்கள்
பலனற்றுப் போனதைப் போலவே
தங்களது மார்க்கங்களும்
போதனைகளும் நல்லுரைகளும்
மார்க்குக்கான பள்ளிக் கூட
மனப் பாடப் பகுதி போல்
மாறிப்போய் வெகு நாட்களாகிவிட்டன

இல்லையென்பவர்களுக்கும்
இருக்கிறதென்பவர்களுக்குமான
வாதப் பிரதிவாதங்களைவிட
இருக்கிறதென்பவர்களுக்குள் வரும் பிணக்கு
உக்கிரமாகி ஒரு யுத்தமாகும் முன்
மூவரில் யாரேனும் ஒருவர்
மீண்டும் ஒருமுறை
அவதரித்து வரவோ அல்லது
தூதுவர்களை அனுப்பிவைக்கவோ சாத்தியமா ?

கடவுள் ஒருவரே எனபதில்
எங்களுக்குள் பிரச்சனையில்லை
அது எங்களவர் மட்டுமே என
அவரவர்கள் சாதிக்கத் துவங்குகிற பிரச்சனை
எங்களிடையில்  ஒரு மதில் சுவரையே
எழுப்பிக் கொண்டிருக்கிறது

மூவரும் ஒன்றுதான் எனச்
ஸ்தாபித்துச் செல்ல
ஒரே ஒருமுறை அவதரித்து வரச்  சாத்தியமா  ?
இந்த பாழாய்ப் போகும் உலகை
காத்து மீண்டும் ரட்சிக்கச் சாத்தியமா ?

அடுத்தவர்கள் மதத்  தலங்களை
வெறும் கட்டிடங்களாயப் பார்க்கும்
மனோபாவங்களை மாற்றிவிடச் சாத்தியமா ?

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
 இங்கு உருவாக்கித் தரச  சாத்தியமா ?


72 comments:

மனசாட்சி said...

வணக்கம்


//தங்களது மார்க்கங்களும்
போதனைகளும் நல்லுரைகளும்
மார்க்குக்கான பள்ளிக் கூட
மனப் பாடப் பகுதி போல்
மாறிப்போய் வெகு நாட்களாகிவிட்டன//

நெத்தியடி வரிகள்

செய்தாலி said...

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?


கதைகளிலும்
திரை சித்திரங்களிலும்
சாத்தியமாகிறது


அன்பு அற்று
மனிதம் இறந்தவர்கள்தான்
இங்கு மதத்தை ஊன்றுகோலாக தேடுகிறார்கள் கவிஞரே

Sankar Gurusamy said...

அன்பே சிவம்... உருவத்தில் கடவுளைத் தேடுவதைவிட உள்ளத்தில் தேடுவது நலம்.

அற்புதமான ஆதங்கக் கவிதை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

மனசாட்சி said...

ஆதங்கத்தை கவிதை வடிவில் நெருப்பாய் செதுக்கி உள்ளீர்கள்.

மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மானிடருக்கு மண்டையில் ஏறுமா?

Madhavan Srinivasagopalan said...

// வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?//

நல்ல கருத்து

suryajeeva said...

சரி தான்...

நாத்திகன் said...

நாராயணனை - ஜான் ஆகவோ, அப்துல் ஆகவோ மாற்ற முயற்சிக்கும் உலகில் - ஒரு போதும் ஜான் அப்துல் நாராயணன் உருவாக வாய்ப்பே இல்லை. அதுவே உலக வரலாற்று படிப்பினை.

Sekar said...

The best of you.

அருமைகவிதை வாழ்த்துகள்.

Lakshmi said...

அன்பே சிவம்... உருவத்தில் கடவுளைத் தேடுவதைவிட உள்ளத்தில் தேடுவது நலம்.

அற்புதமான ஆதங்கக் கவிதை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ரமேஷ் வெங்கடபதி said...

இன்னும் சில நூறாண்டுகள் செல்ல வேண்டும்! காலனிகள்,கோட்டைகள்,அக்ரஹாரங்களை விட்டு வெளியே வந்து வசிக்க வேண்டும்! அனைத்து வேலைகளையும் அனைத்து மதத்தினரும்.பாலினரும்,.குறிப்பாக உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்!
தங்கள் பெரிய ஆசை விரைவில் நிறைவேறட்டும்!

மகேந்திரன் said...

அவதரித்து வர சாத்தியமில்லாத ஒன்றை..
எத்தனை கேள்விகள் கேட்டு
திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள் ...

சுயத்தின் சுவடுகளை பதித்து விட
துடிக்கும் நெஞ்சில் வஞ்சம் கொண்ட
மத துரோகிகளின் பிடியில் மதம்
சிக்கி மதம் பிடித்து அலைவதை
எவ்வளவு அழகாய் சொல்லி விட்டீர்கள்...

ஸாதிகா said...

அருமையான வரிகள்.

சசிகுமார் said...

Thanks.........

Seeni said...

seythali avarkal!
sonnathai vida enakku enna sollanumnu
theriyala!
vaazhthukkal!

ராஜி said...

கடவுள் ஒருவரே எனபதில்
எங்களுக்குள் பிரச்சனையில்லை
அது எங்களவர் மட்டுமே என
அவரவர்கள் சாதிக்கத் துவங்குகிற பிரச்சனை
எங்களிடையில் ஒரு மதில் சுவரையே
எழுப்பிக் கொண்டிருக்கிறது
>>>
நீங்கள் சொல்வது நிஜம்தான் ஐயா. மதங்களின் பேரால் புல்லுருவிகள் சிலர் ஆடும் ஆட்டங்களால் அம்மதத்திற்கே கேவலமாய் உள்ளது.

G.M Balasubramaniam said...

எத்தனை முறை யார் சொன்னாலும் அறிந்தும், தெரிந்துகொள்ள விரும்பாத , முடியாத அறிவு ஜீவிகள் உலாவரும் இவ்வுலகில் ஆண்டவன் அவதரித்தாலும் அவனையே அவதிக்குள்ளாக்குவோமே.!

கோவை2தில்லி said...

அருமையான கவிதை.

நமக்கு மீறிய ஏதோ ஒரு சக்தியைத் தான் நாம் ஓவ்வொரு பெயரிட்டு அழைக்கிறோம். கடவுள் என்பது ஒருவர் தான் என்று நினைக்கிறேன்.

மோகன் குமார் said...

Nice.

Why not added in Tamil Manam?

சசிகலா said...

மனித நேயம் வெற்றி பெற்றால் இதுவும் சாத்தியமே .
அருமை ஐயா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான புதுமையான சிந்தனை தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

மாதேவி said...

அன்பே கடவுள் என்றநிலை எல்லோர் மனங்களிலும் மலர்ந்தால் மட்டுமே.

jayaram thinagarapandian said...

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?
உலகில்
விடை கிடைக்காத
பல கேள்விகளில்
இதுவும் ஒன்று..
மதம் கொண்டு கடவுள் காணாமல்
மனம் கொண்டு கடவுள் கண்டாள்
விடை கிடைக்கும்

Anonymous said...

மதம்...மதம் தான்..

ஆதங்கக்கவிதை அருமை...நல்லாயிருந்தது...நன்றி ரமணி சார்...

மனோ சாமிநாதன் said...

அற்புதமான கருத்து! அன்பும் அருளும் மட்டுமே நிறைந்த உலகில்தான் இதெல்லாம் சாத்தியம்!

தமிழ் உதயம் said...

உலகில் விடை தெரியாத பல விஷ(ம்)யங்களுள் இதுவும் ஒன்று. நல்ல கவிதை ரமணி சார்.

அரசன் சே said...

மனிதங்கள் மனிதமாய் மாறினால் இதுவும் சாத்தியமே .. நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! /

// வீபூதி தரித்து பைபிளைத் தாங்கி மசூதிக்குச் செல்லும் ஜான் அப்துல் நாராயணன்களை இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ? //

என்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான். வேற்றுமையில் ஒற்றுமை கண்டால் சாத்தியமே. ஆனால், ” மனிதன் மாறி விட்டான். மதத்தில் ஏறி விட்டான்.” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் எவ்வளவு உண்மை என்று உணரும்போது நெருடல்தான்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை....

கணேஷ் said...

மனிதர்களின் மனங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டால்தான் நீங்கள் விரும்பும் யுகப்புரட்சி சாத்தியம்! அதற்காகவேனும் ஏதாவது அவதாரம் நீங்கள் நிகழாதா என்ற உங்கள் ஏக்கம் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது. அருமை!

Anonymous said...

நானும் நெடுகக் கூறுவதும் இதுவே! ஒரு அவதாரம் வந்தால் தான் எல்லாவற்றையும் புரட்டிப் போட முடியும். நல்ல நியாயமான சிந்தனை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Avargal Unmaigal said...

//வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?////

சாத்தியமே சாத்தியமே இறைவன் அப்படி பட்ட இருவரை உருவாக்கியுள்ளான். அவர்களை காண வேண்டுமென்றால் ஒரு நடை எங்கள் வீட்டிற்கு வந்து செல்லுங்கள் அதன் பிறகு அது சாத்தியமே என்பதை உணர்வீர்கள். இந்த இருவர் யாருமல்ல நானும் எனது மனைவியும்தான்

இதை நான் ஏதோ பின்னுட்டம் போடுவதற்காக எழுதவில்லை. உண்மையைதான் கூறியுள்ளேன்

சத்ரியன் said...

ஒன்றாய் இருந்திடக்கூடாதா என எல்லோருக்கும் ஆசை இருக்கு, அவரவர் மார்க்கத்தை உச்சியில் ஏற்றி வைத்துக் கொண்டு.

’அர்த்தமுள்ள ஆதங்கம்’ ரமணி ஐயா.

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

V.Radhakrishnan said...

அடடா, குட்டி குட்டி மதங்களை எல்லாம் விட்டு விட்டீர்களே அவர்களும் சண்டைக்கு வரப்போகிறார்கள். நல்லதொரு ஆதங்க கவிதை.

அப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது. :) பிரிந்தே இருப்போம். பிரிந்தும் இணைந்தே இருப்போம். இதற்கெல்லாம் அவதாரம் எல்லாம் வேண்டாம்.

சார்வாகன் said...

அருமை

T.N.MURALIDHARAN said...

மதங்களின் பிடியில் மனிதனா? மனிதனின் பிடியில் மதமா?ஒண்ணும் புரியல

புலவர் சா இராமாநுசம் said...

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?

தரமிகு சிந்தனை இரமணி!

த ம ஓ 3
சா இராமாநுசம்

அப்பாதுரை said...

முதல் படி.

Ramani said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

T.N.MURALIDHARAN //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சார்வாகன் //.


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

V.Radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அருள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
இங்கு உருவாக்கித் தரச சாத்தியமா ?

முத்தாய்ப்பான முத்தான வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

ரமணி,

ஒரு நல்ல இந்தியக் குடிமகனின் கனவினை நயமாக கவிதை உருவில் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்று. வாழ்க.

Ramani said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மனசாட்சி //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

மனிதம் நிறைந்த மனிதர் எவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம் உங்கள் கவிதையில் !

விமலன் said...

நல்லது எதையும்,நல்லவர்கள் யாரையும் இங்கு உருவாக்குவது சாத்தியமே/
அதை கெடுப்பதும்,தட்டி விடுவதும் நம் கலாசாரமே,அது இப்படி உருமாற்றம் தரித்துக்கொண்டிருப்பது பலருக்கு செளகரியாய்.மும் முகங்களும் இருந்தால் நல்லதே/

Ramani said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சார்வாகன் //...


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அருள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சத்ரியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

kovaikkavi //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கணேஷ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அரசன் சே //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரெவெரி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகலா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மோகன் குமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவை2தில்லி //...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment