Thursday, May 17, 2012

கரு நாகத்தின் பலவீனம் -2

நானும் வெலவெலத்துப் போனேன்
சினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்
அருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறு
.அல்லதுஅவசர கதியில் எங்காவது
போய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.

ஆனாலஇப்படி வீட்டு வாசலில்
முழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரி
படமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை

வாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையை
நகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்
அரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்
அமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்
 இருப்பதானதோரணையில்
 அலட்சியமாக அமர்ந்திருந்தது

 எங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு
என்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்
 வந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது
அதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பி
எங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்
வந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்
நல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்
சர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்
பொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.என்னால் இரவு
முழுவதும் தூங்க் முடியவில்லை

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்
பாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாது
ஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்
வர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்
 நோக்கில்நிச்சயம் தீண்டிவிடும் என்பதில்
 எனக்கு எவ்வித சந்தேகமும்    இல்லை.
மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறபகுதியில்
 எப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாது
என்பதால் நிச்சயம் இதற்கு ஒரு முடிவு
 செய்யவேண்டும்என முடிவெடுத்து இரவு
எப்போதோ என்னை அறியாதுஉறங்கிபோனேன்

மறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்
வீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்து
என்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள
ஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் என
முடிவு செய்தோம்

ஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது

என் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்
 இருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வது
பாவம் என்றும்அதற்கு உறுதியாய்
 சம்மதிக்கமாட்டோம் என்றும் யாராவது
பாம்பாட்டியை அழைத்துவந்துபிடித்துப் போகத்தான்
செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்

இரண்டாவது அதனுடைய ஆகிருதியை
 நேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை  அடிக்கத் 
தயங்கத்தான் செய்வார்கள்.மேலும் அ துமிகச்
 சுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே
மிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாக
 ஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழிய
அதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்
 சாத்தியமில்லை.ஒருவேளை அடிக்க முயன்று
தவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்
 கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

என்வே முடிவாக எங்கள் நகருக்குஅருகில் உள்ள
கிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்து
வந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என
ஏக மனதாக முடிவெடுத்தோம்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை

(தொடரும் )


64 comments:

விச்சு said...

நல்ல ஐடியா. பாம்பு அடிக்கவும் ஒரு தைரியம் வேணுமில்ல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒருவேளை அடிக்க முயன்று
தவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்
கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.//

இந்த இடம் நல்ல நகைச்சுவை.

கதை நல்ல விறுவிறுப்பாக அந்த கருநாகம் போலவே ஊர்ந்து செல்ல்கிறது.

தொடருங்கள்.

angelin said...

வேணாம் அடிக்க வேணாம் ,அதுவும் இறைவன் படைப்பில் ஒரு உயிர்தானே .அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

AROUNA SELVAME said...

அச்சம் அறியாமையிலிருந்து தான் வருகிறது... தொடருங்கள் ரமணி ஐயா.

வரலாற்று சுவடுகள் said...

பயங்கர திரில்லிங்கா இருக்கு தல .., அடுத்த பாகத்த்துக்கு வெய்ட்டிங் ..!

Avargal Unmaigal said...

ஒரு போன்போட்டு எனக்கு சொல்லி இருந்தா நான் வந்து அடிச்சிட்டு போயிருப்பேன்ல சார்

Anonymous said...

ஓ!....அப்புறம் என்ன நடந்தது எனும் ஆவலில்.....
வேதா. இலங்காதிலகம்.

துளசி கோபால் said...

ஐயோ........ அப்புறம்???????

நாகத்தைக் கொன்னால் நாகதோஷம் என்று ஒரு நம்பிக்கை. எங்கூட்டுலே இதுக்கு ஒரு 'கதை' இருக்கு.

Ramani said...

விச்சு //..

தங்கள் முதல்வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

இந்த இடம் நல்ல நகைச்சுவை.
கதை நல்ல விறுவிறுப்பாக அந்த கருநாகம் போலவே ஊர்ந்து செல்ல்கிறது.
தொடருங்கள். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

angelin //

.அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME s //

அச்சம் அறியாமையிலிருந்து தான் வருகிறது... தொடருங்கள் ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //..

பயங்கர திரில்லிங்கா இருக்கு தல .., அடுத்த பாகத்த்துக்கு வெய்ட்டிங் ..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் ஆறுதல் வார்த்தைக்கும்
அருமையான வித்தியாசமான ரசிக்கும்படியான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

kovaikkavi //

ஓ!....அப்புறம் என்ன நடந்தது எனும் ஆவலில்.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

]துளசி கோபால் //
.
நாகத்தைக் கொன்னால் நாகதோஷம் என்று ஒரு நம்பிக்கை. எங்கூட்டுலே இதுக்கு ஒரு 'கதை' இருக்கு//

இது தொடர்பான தங்கள் பதிவை
ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன்
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

கீதமஞ்சரி said...

மிகவும் சிக்கலான, ஆபத்தான ஒரு பிரச்சனையை மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், சமயோசிதமாகவும் தீர்த்திட முடிவெடுத்துள்ளீர்கள். என்ன நடந்தது என்பதை அறியும் ஆவல் உந்துகிறது.

என்றோ நடந்த ஒரு சம்பவத்தை அதன் விறுவிறுப்புக் குறையாமல் எழுதும் பாங்கைக் கண்டு வியக்கிறேன். வை.கோ. சார் குறிப்பிட்டப் பகுதியை நானும் சிலாகித்தேன். பாராட்டுகள் ரமணி சார்.

கணேஷ் said...

மெல்லிய நகைச்சுவையுடன் நிறைய திகில் கலந்து கொண்டு செல்கிறீர்கள். கொல்லாமல் பாம்பு பிடிப்பவனை அழைத்து வந்து பிடிக்கலாம் என்று முடிவெடுத்தது நல்ல விஷயம். பிறகு நடந்ததை தெரிந்து கொள்ள ஆவலுடன் வெயிட்டிங்!

Ramani said...

கீதமஞ்சரி //

என்றோ நடந்த ஒரு சம்பவத்தை அதன் விறுவிறுப்புக் குறையாமல் எழுதும் பாங்கைக் கண்டு வியக்கிறேன். வை.கோ. சார் குறிப்பிட்டப் பகுதியை நானும் சிலாகித்தேன். பாராட்டுகள் ரமணி சார்.//

நான் தங்கள் எழுத்தின் ரசிகன்
உங்களால் பாராட்டப் படுவதை உண்மையில்
நான் பெரும்பேறாகக் கருதுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கணேஷ் said...

T.M. : 2

Ramani said...

கணேஷ் //
.
மெல்லிய நகைச்சுவையுடன் நிறைய திகில் கலந்து கொண்டு செல்கிறீர்கள்.//

உங்கள் பாராட்டு எனக்கு கூடுதல்
உற்சாகம் அளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சிட்டுக்குருவி said...

நாங்கெல்லாம் செத்த பாம்ப கண்டால 4 கிலோமீட்டர் திரும்பி பார்க்காம எஸ்கேப் ஆகிடுவோம்....//நீங்க வீட்டுக்குள்ளே பாம்ப வளர்க்கிரீங்கள சார்..ரெம்ப தைரியம் தான் உங்களுக்கு

சிட்டுக்குருவி said...

அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்...

சிட்டுக்குருவி said...

tm 3

இராஜராஜேஸ்வரி said...

அடிக்க முயன்று
தவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்
கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

பாம்பென்றால் படையும் நடுங்குமே !

புலவர் சா இராமாநுசம் said...

உணமையாகவே நீங்கள் பாம்பாட்டி போலவே ஆகி
எங்களைப் பார்வையாளர்களாக ஆக்கிவிட்டீர்கள்!

த ம ஓ 4

சா இராமாநுசம்

ரமேஷ் வெங்கடபதி said...

சிலிர்க்க வைக்கும் அனுபவம்! மேலும் தொடருங்கள்! சஸ்பென்ஸ் தாளவில்லை!

ஸாதிகா said...

சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள் சார்.

ஹேமா said...

பாம்புக்கதை....பாம்புக்கதை.பயந்து பயந்தே வாசிக்கிறேன்.கண்ணுக்கு முன்னால பாம்பு வாறதுமாதிரியே இருக்கு !

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! நல்ல பாம்பு என்றால் உள்ள நம்பிக்கை சமூகத்தின் பலவீனம். கருநாகத்தின் பலவீனம் எது என்ற சஸ்பென்சை சீக்கிரம் தெரிந்து கொள்ள அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

vasan said...

ஊராரிட‌ம் அலோச‌னை கேட்ப‌து,
சிறுவ‌ன்,க‌ழுதை, தாத்தா க‌தை தான்.
இதுன்ன‌, அதும்மாங்க‌, அதா என்றால்
அப்ப‌டி இல்லை என்பார்க‌ள்.
ந‌ம்வ‌ழி தான் ந‌ம‌க்கான‌ சிறப்பு வ‌ழி.

மாதேவி said...

அனகொண்டா படம் பார்த்தபோது இருந்த திகில் படிக்கும்போது.

முன்பு கிராமத்தில் சாரைப்பாம்பு சர்வ சாதாரணமாக வந்து போகும் பயப்பட மாட்டோம்.

மிகுதிக்கு வெயிட்டிங்....

G.M Balasubramaniam said...

பெங்களூர் ஹொரமாவு பகுதியில் என் உறவினர் ஒருவர் வீட்டின் முன் படிக்கட்டருகே ஒரு கருநாகம் வந்து படமெடுத்து ஆடுவதைப் படமெடுத்து வைத்திருக்கிறார்கள். பின் ஒரு பாம்பு பிடி ஸ்பெஷலிஸ்ட் -கு தகவல் அனுப்பி அதை பிடித்துச் செல்ல ரூ.500-/ கொடுத்தார்கள் கருநாகத்தின் பலவீனம்.???

Lakshmi said...

கமேரியா என்னும் இடத்தில் இருந்தப்போ எங்க வீட்டு தோட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் இருந்தது முதல் தவை ரெண்டாம் தடவை பார்க்கும்போது ரொம்பவே பயம் இருந்தது பழக பழக பய்மே போச்சு.

Madhavan Srinivasagopalan said...

// பாம்பு பிடிக்கிறவரை அழைத்து
வந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என
ஏக மனதாக முடிவெடுத்தோம் //

Good decision.

//அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை //

OMGod.. .!! what's the issue..?

சசிகலா said...

பாம்பு பிடிக்கிறவரை அழைத்து
வந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என
ஏக மனதாக முடிவெடுத்தோம் //முடிவ சொல்லாம விட்டுட்டிங்க ஐயா கனவுல வருமோ ? கொஞ்சம் பயமாத்தான் இருக்கு .

காட்டான் said...

வணக்கம் ஐயா!
பாம்புக்கதையில் ஏதோ விஷயம் வைச்சுத்தான் சொல்கிறீர்கள்... தொடர்ந்திருக்கிறேன்.

Ramani said...

சிட்டுக்குருவி //

அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்..//

.தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //.

.தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

உணமையாகவே நீங்கள் பாம்பாட்டி போலவே ஆகி
எங்களைப் பார்வையாளர்களாக ஆக்கிவிட்டீர்கள்!//

உங்கள் பாராட்டு எனக்கு கூடுதல்
உற்சாகம் அளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

சிலிர்க்க வைக்கும் அனுபவம்! மேலும் தொடருங்கள்! சஸ்பென்ஸ் தாளவில்லை!/
/
நிச்ச்யம் அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //
.
பாம்புக்கதை....பாம்புக்கதை.பயந்து பயந்தே வாசிக்கிறேன்.கண்ணுக்கு முன்னால பாம்பு வாறதுமாதிரியே இருக்கு //

.தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி!

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //
..
. கருநாகத்தின் பலவீனம் எது என்ற சஸ்பென்சை சீக்கிரம் தெரிந்து கொள்ள அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் //

நிச்ச்யம் அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Ramani said...

vasan s//

ந‌ம்வ‌ழி தான் ந‌ம‌க்கான‌ சிறப்பு வ‌ழி//

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சிவகுமாரன் said...

நல்லா பயமுறுத்துறீங்க .
விறுவிறுப்பா இருக்கு தொடர்.

Ramani said...

மாதேவி //

மிகுதிக்கு வெயிட்டிங்...//

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

கருநாகத்தின் பலவீனம்.???//

நிச்ச்யம் அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan //

OMGod.. .!! what's the issue..?//

நிச்ச்யம் அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகலா //

//முடிவ சொல்லாம விட்டுட்டிங்க ஐயா கனவுல வருமோ ? கொஞ்சம் பயமாத்தான் இருக்கு //

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

காட்டான் //

வணக்கம் ஐயா!
பாம்புக்கதையில் ஏதோ விஷயம் வைச்சுத்தான் சொல்கிறீர்கள் //

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சிவகுமாரன் //

நல்லா பயமுறுத்துறீங்க .
விறுவிறுப்பா இருக்கு தொடர்.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மனசாட்சி™ said...

ஒரு விறுவிறுப்பு தொடர்.....ஐய்யா என்னதான் ஆச்சி....படபடப்பாக இருக்குங்க

Ramani said...

மனசாட்சி //

ஒரு விறுவிறுப்பு தொடர்.....ஐய்யா என்னதான் ஆச்சி....படபடப்பாக இருக்குங்க //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வல்லத்தான் said...

வாவ் ரொம்ப த்ரில்லிங்கான தொடர்........

ராஜி said...

பாம்பென்றால் பஃடையும் நடுங்கும் ஆனா, நாங்க நடுங்காம அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் ஐயா

செய்தாலி said...

ம்ம்ம்....
நல்லா விருவிருப்ப போகது
தொடருங்கள் சார்

Ramani said...

வல்லத்தான்//
.
வாவ் ரொம்ப த்ரில்லிங்கான தொடர்.......//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Ramani said...

ராஜி //
.
பாம்பென்றால் பஃடையும் நடுங்கும் ஆனா, நாங்க நடுங்காம அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Ramani said...

செய்தாலி. //

ம்ம்ம்....
நல்லா விருவிருப்ப போகது
தொடருங்கள் சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

தீபிகா(Theepika) said...

படிக்கப் படிக்க படபடக்க வைக்கிற கதைசொல்லியாக தெரிகிறீர்கள் நீங்கள்.

மாத்தியோசி - மணி said...

முதல் பகுதியையும் சேர்த்து இப்போதுதான் வாசிக்கிறேன்! ஒரே பயமாவும் படபடப்பாவும் இருக்கு்! அதைப் பிடித்தீர்களா? அடித்தீர்களா என்று அறிய மிக ஆவலாக இருக்கிறேன்!

நல்ல விறுவிறுப்பாகச் செல்கிறது கதை!

Ramani said...

தீபிகா(Theepika) //

படிக்கப் படிக்க படபடக்க வைக்கிற கதைசொல்லியாக தெரிகிறீர்கள் நீங்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாத்தியோசி - மணி //

நல்ல விறுவிறுப்பாகச் செல்கிறது கதை!//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Post a Comment