Tuesday, May 22, 2012

கரு நாகத்தின் பலவீனம்-4

இந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்
எப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்
வண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டு
கைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலை
தரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்து
பின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்
நிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி
குரல் கொடுப்பேன்

அப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்
இன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில்
மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருக்க
ஆச்சரியப்பட்டுப் போனேன்

என் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கே
 இன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்து
 போய்விட்டதென்றும்அதுதான் தைரியமாக
 வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொன்னாள்

கூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனி
என்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்
அதனால் அது மிக மிக மெதுவாக
 ஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்
வாசல் வராண்டாவில் இருந்தே அதை
மிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்

அவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு
பயம் இல்லை

எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது
முதன் முதலில் பாம்பைப் பார்த்த போது
இருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்
 நின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்
எங்கே போனது என எனக்கே
ஆச்சரியமாக இருந்தது

ஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்
முதலில் பயத்தையும் பதட்டத்தையும்
 ஏற்படுத்துமோ? எத்தனை மோசமானதாகிலும்
பழகிவிட்டால்பயமும் பதட்டமும்
பறந்து விடுமோ எனத் தோன்றியது

பின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று
பாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்
அடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாக
இல்லாமல் செய்வது குறித்த தகவலையும்
அவளிடம் ஆவலாக விவரிக்க அவள் "அப்படியா "
என்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்
எனக்கே எதற்கடா விளக்கினோம் என
எரிச்சலாக வந்தது

மறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்
வீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்
பெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்
தலைவருடனே வந்து விட்டார்.வந்தவர்
அது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்
அது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்
காண்பிக்கச் சொன்னார்.நாங்கள் காண்பித்தோம்

பின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்
 இடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்
உலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்
அருகில் லேசாக குனிந்து பார்த்தார்.
பின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்

பின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து
" இதற்குள்தான் ஐயா இருக்காக " என்றார்

"எப்படிச் சொல்கிறீர்கள் " என்றேன்

"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டு
பொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்
ஈயையும் பார்த்தீர்களா " என்றார்

அந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்
ஈக்களும் இறந்து கிடந்தன

பின் மெதுவாக " இவக மூச்சுக் காத்துப் பட்டு
எல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு
அவ்வளவு பவர் " என்றார்

பின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றி
சிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்
கொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்
நின்று கொண்டார்.பின் கையில் துணியைச்
சுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்
செங்கல்லை பொந்தில் வாயில் அடைத்து
மிக வேகமாக அடுத்து அடுத்து மூன்று
செங்கல்லையும்அந்த பொந்திலேயே திணித்தார்.
பின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிற
மண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டு
வந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்
அவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்
கண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும்
லேசாகத் தெரியத்தான் செய்தது  

பின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி
குடித்துவிட்டு " ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு
பொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " என்றார்


72 comments:

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை சார்

செய்தாலி said...

அன்பின் பகிர்தலாய் விருது ஓன்று பகிந்துள்ளேன்
நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் சார்

http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/05/blog-post_20.html

Unknown said...

உண்மையிலேயே நீங்கள் கண்ட, கொண்ட அனுபவம், அதை இதுவரை விண்ட விதம் வியந்து
பாராட்டத் தக்கதே
வாழ்த்துக்கள் இரமணி!

சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 2

சா இராமாநுசம்

கோவி.கண்ணன் said...

நன்றாக இருந்தது இந்த குறும் தொடர், ஒரு பாம்பு பற்றிய தகவலை சிறுகதைப் போல் சஸ்பென்செல்லாம் வைத்து நன்றாக எழுதி இருக்கிறீர்கள்

அருணா செல்வம் said...

அச்சச்சோ... பாம்பு செத்துப்போச்சே...
பாவம் தாங்க பாம்பு.. நீங்களும் தான்!

நாங்கள் பயந்தாலும் கதையை ஜாலியா சஸ்பென்சோட படிச்சோம்.

நன்றிங்க ரமணி ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

பதிவென்னும் மகுடியால் வலைத்தளத்திற்கு ஆவலுடன் வரச்செய்த அருமையான பகிர்வுகள் ..

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

அன்பின் பகிர்தலாய் விருது ஓன்று பகிந்துள்ளேன்
நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் சார் //

பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //
..
உண்மையிலேயே நீங்கள் கண்ட, கொண்ட அனுபவம், அதை இதுவரை விண்ட விதம் வியந்து
பாராட்டத் தக்கதே
வாழ்த்துக்கள் //

தங்கள் பாராட்டு அதிகஊக்கம் அளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி.கண்ணன் //
.
நன்றாக இருந்தது இந்த குறும் தொடர், ஒரு பாம்பு பற்றிய தகவலை சிறுகதைப் போல் சஸ்பென்செல்லாம் வைத்து நன்றாக எழுதி இருக்கிறீர்கள் //

தங்கள் பதிவுகளின் பக்கம் போய் வந்தபின்
நாமெல்லாம் எழுதத்தான் வேண்டுமா
என்கிற எண்ணம் வந்தது நிஜம்
தங்களால் பாராட்டப்படுவதை
பெரும் பேறாகக் கருதுகிறேன்
தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //.

நாங்கள் பயந்தாலும் கதையை ஜாலியா சஸ்பென்சோட படிச்சோம்.//

தங்கள் பாராட்டு அதிகஊக்கம் அளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //
.
பதிவென்னும் மகுடியால் வலைத்தளத்திற்கு ஆவலுடன் வரச்செய்த அருமையான பகிர்வுகள் ..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சென்னை பித்தன் said...

அனுபவம் கற்றுத்தரும் பாடமே தனிதான்.சுவாரஸ்யமான பகிர்வு

த.ம.3

vanathy said...

ஓ! சமாதி கட்டியாச்சா. நல்ல பதிவு. ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு பயமில்லை என்று சொன்னது தான் ஆச்சரியமாக இருக்கு. நானென்லாம் ஒரு 100 அடிகள் தள்ளியே நிற்பேன். என் அப்பா தான் பாம்போடு டீல் பண்ணுவார்.

Ahila said...

உண்மைதானா.....ஆச்சிரியம் ரமணி அவர்களே..
இதற்கு முன் இருந்த மூன்று பதிவுகளையும் படித்தேன்....நீங்க பதித்திருக்கிற விதம் மிக அருமை...

சீனு said...

//" ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு
பொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " //

இது தான் கருநாகத்தின் பலவீனமா...அருமையாக சொல்லி உள்ளீர்கள். விறுவிறுப்பாக சொன்ன உங்கள் எழுத்து சூப்பெரோ சூப்பர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு
பொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " //

அடடா! இதை அவர் தேரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்!!

நன்றாக த்ரில்லிங்காக அசைந்தோடி வந்த கருநாகக்கதையை ஒருவழியாக இப்படி முடித்துவிட்டாரே, அந்தப்பெரியவர்.

நல்ல பாம்புப் பகிர்வுக்கு நன்றி.

NAAN said...

rompa payamuruththuringa sir.....super.......

அன்புடன் மலிக்கா said...

நானென்லாம் ஒரு 100 அடிகள் தள்ளியே நிற்பேன்// அதேதான் நானும் பாஆஆஆஆஅம்பு..

மிக அருமையாக தொ[குத்து]டர்ந்திருக்கிறீர்கள் அய்யா. பாராட்டுகள்.

காட்டான் said...

வணக்கம் ஐயா!
நிஜ சம்பவத்தை ஆவலை தூண்டும்படி தந்துள்ளீர்கள்.. ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும்போது அடுத்த பாகம் எப்போது என்று ஏங்க வைத்தீர்கள் ஆனால் முடிவு??????????

r.v.saravanan said...

பாம்பை வைத்து வித்தை காட்டுவார்கள் படம் எடுக்க வைப்பார்கள் நீங்கள் பதிவே எழுதிட்டீங்க சார் நல்லா இருந்தது

நான் தற்போது இன்டர்நெட் சென்டர் சென்று தான் பதிவிடுவதால் என்னால் தாங்கள் உள்ளிட்ட அனைவரது தளங்களுக்கு சென்று படித்து கருத்திட முடியவில்லை மன்னிக்கவும் தொடர்ந்து வருகிறேன்

பால கணேஷ் said...

ஆஹா... இதுதான் கருநாகத்தின் பலவீனமா? அருமை. அனுபவத்தை சுவைபட ஒரு திகில் தொடர் போல சொல்லிச் சென்றது பிரமாதம் ஐயா.(த.ம.4)

Zero to Infinity said...

ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும்போது அடுத்த பாகம் எப்போது என்று ஏங்க வைத்தீர்கள்.....so true and that is your writing strength. I enjoyed reading this series. Looking forward for such thrilling articles.

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Murugeswari Rajavel said...

கருநாகத்தின் கதையையும் கருத்துள்ளதாய்ச் சொல்வது உங்களின் தனித்தன்மை.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே..
நலமா?
விடுமுறையில் இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை..
இன்றிலிருந்து மறுபிரவேசம்...
வந்ததும் கருநாகம் பற்றிய பதிவு கண்டேன்...
தங்களின் சொற்சுவையால் பதிவு அழகுற மிளிர்கிறது...
முந்தைய பதிவுகளையும் படித்துவிடுகிறேன்...

Anonymous said...

சுவாரஸ்யமான திகில் தொடர்... வாழ்த்துக்கள் ரமணி சார்...

ஹேமா said...

" ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு
பொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது "

ஓஓ...அப்பிடியா.பாம்பு தந்த பயமான அனுபவம் பயந்தாலும் படிப்பினையும் !

Anonymous said...

ஓ!...அடுத்தது என்ன!...நல்ல சஸ்பென்ஸ்.....ஆவலுடன்...
வேதா. இலங்காதிலகம்.

துளசி கோபால் said...

அச்சச்சோ!!!!!!!!!!11 பொந்து தோண்டத் தெரியாதா? அப்ப பாம்புப் புத்து?????????

எறும்புப்புத்தை பாம்பு அபகரிச்சுக்குதோ?

ஊரில் ஒரு வீட்டுலே வீட்டுக்கூடத்துலே பெரிய புத்து இருக்கு. பாம்பும்தான். மனைப் பாம்பாம்!

உங்க தொடர் முடிஞ்சதும் நானும் பாம்புத் தொடர் ஆரம்பிக்கணும் போல இருக்கே:-))))))))

Avargal Unmaigal said...

நல்ல படியாக முடிந்தது. அடித்து கொல்ல கூடாது என்று உங்கள் குடும்த்தார் எடுத்த முடிவும் அதன் பிறகு நீங்கள் பாம்பு பிடிப்பவரை கூப்பிட்டு பாம்பை பிடித்து எங்க ஊருக்கு அனுப்பிவிடுவீர்களோ என்றுநான் பயந்து போயிருந்தேன்



சார் இன்றும் நீங்கள் அதே வீட்டில் இருந்தால் பேசாம அந்த பாம்பு இருந்த இடத்தில் ஒரு சிறு கோவில்கட்டி நாகராஜன் கோவில் என்று பெயர் வைத்துவிடுங்கள். பின்னர் அந்த கோயிலில் நடந்த அதிசயம் என்று பல பதிவுகளை போட்டு அந்த கோயிலை புகழ் பெறச் செய்துவிடுவோம். அப்புறம் பாருங்கள் நீங்கள் தமிழகத்தில் மிக புகழ் பெற்ற ஒருவர் ஆகிவிடுவீர்கள்..



இறுதியாக நடந்த ஒரு சம்பவத்தை மிக அழகாக சொன்னவிதம் மிக அருமையாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்....நாங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

விச்சு said...

பாம்பினை ஒருவழியாக அடைத்துவிட்டீர்கள்.

Unknown said...

மிகவும் சாகசமான நிகழ்ச்சிதான்! கருநாகத்தின் காரியத்தை கச்சிதமாக முடிச்சிட்டார் அந்த பெரியவர்!

ஸாதிகா said...

அப்பா..பாம்புக்கு செங்கல் சமாதி கட்டியாச்சா..மூச்சு இரைகிறது ரமணி சார்....!

ஆத்மா said...

ஐயோ பாம்புட வீக்னஸ் இதுதானா இப்பதான் தெரிஞ்சு போச்சு...இழுத்து இழுத்து பதிவை நீட்டினாலும் நல்ல சுவாரஷ்யமா போச்சு சார் TM 10

முத்தரசு said...

விறுவிறுப்பா இருந்தது பகிர்வுக்கு தகவலுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஒரு பாம்பினால் எங்களுக்கெல்லாம் நல்ல படிப்பு அனுபவம் கிடைக்குது.

தி.தமிழ் இளங்கோ said...

படமெடுத்த நாகத்தின் பரிதாபமான முடிவு. இப்படி ஒரு பலவீனம் அவைகளுக்கு இருப்பதைச் சொன்ன கவிஞருக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //
..
அனுபவம் கற்றுத்தரும் பாடமே தனிதான்.சுவாரஸ்யமான பகிர்வு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

நானென்லாம் ஒரு 100 அடிகள் தள்ளியே நிற்பேன். என் அப்பா தான் பாம்போடு டீல் பண்ணுவார் //.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் ரசிக்கும்ப்டியானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகிலா //'

இதற்கு முன் இருந்த மூன்று பதிவுகளையும் படித்தேன்....நீங்க பதித்திருக்கிற விதம் மிக அருமை...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //


இது தான் கருநாகத்தின் பலவீனமா...அருமையாக சொல்லி உள்ளீர்கள். விறுவிறுப்பாக சொன்ன உங்கள் எழுத்து சூப்பெரோ சூப்பர் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

நன்றாக த்ரில்லிங்காக அசைந்தோடி வந்த கருநாகக்கதையை ஒருவழியாக இப்படி முடித்துவிட்டாரே, அந்தப்பெரியவர்.
நல்ல பாம்புப் பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வல்லத்தான் //

rompa payamuruththuringa sir.....super...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //

ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும்போது அடுத்த பாகம் எப்போது என்று ஏங்க வைத்தீர்கள் ஆனால் முடிவு??????????//

கற்பனையை விட நிஜம் கெஞ்சம்
சுவாரஸ்யக் குறைவாகத்தானே இருக்கு
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

பாம்பை வைத்து வித்தை காட்டுவார்கள் படம் எடுக்க வைப்பார்கள் நீங்கள் பதிவே எழுதிட்டீங்க சார் நல்லா இருந்தது //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

அருமை. அனுபவத்தை சுவைபட ஒரு திகில் தொடர் போல சொல்லிச் சென்றது பிரமாதம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Zero to Infinity //
.
ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடிக்கும்போது அடுத்த பாகம் எப்போது என்று ஏங்க வைத்தீர்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel Natarajan //

அருமை சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //
.
கருநாகத்தின் கதையையும் கருத்துள்ளதாய்ச் சொல்வது உங்களின் தனித்தன்மை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்களின் சொற்சுவையால் பதிவு அழகுற மிளிர்கிறது...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

சுவாரஸ்யமான திகில் தொடர்... வாழ்த்துக்கள் ரமணி சார்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

ஓஓ...அப்பிடியா.பாம்பு தந்த பயமான அனுபவம் பயந்தாலும் படிப்பினையும் !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //
.
ஓ!...அடுத்தது என்ன!...நல்ல சஸ்பென்ஸ்.....ஆவலுடன்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //


சார் இன்றும் நீங்கள் அதே வீட்டில் இருந்தால் பேசாம அந்த பாம்பு இருந்த இடத்தில் ஒரு சிறு கோவில்கட்டி நாகராஜன் கோவில் என்று பெயர் வைத்துவிடுங்கள். பின்னர் அந்த கோயிலில் நடந்த அதிசயம் என்று பல பதிவுகளை போட்டு அந்த கோயிலை புகழ் பெறச் செய்துவிடுவோம். அப்புறம் பாருங்கள் நீங்கள் தமிழகத்தில் மிக புகழ் பெற்ற ஒருவர் ஆகிவிடுவீர்கள்..

தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
பிழைப்பிற்கு ஒரு வழி சொன்னமைக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

பாம்பினை ஒருவழியாக அடைத்துவிட்டீர்கள்.//

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.சிட்டுக்குருவி .

இழுத்து இழுத்து பதிவை நீட்டினாலும் நல்ல சுவாரஷ்யமா போச்சு சார் //

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமர்ந்த் நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ //

விறுவிறுப்பா இருந்தது பகிர்வுக்கு தகவலுக்கு நன்றி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

ஒரு பாம்பினால் எங்களுக்கெல்லாம் நல்ல படிப்பு அனுபவம் கிடைக்குது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
..
படமெடுத்த நாகத்தின் பரிதாபமான முடிவு. இப்படி ஒரு பலவீனம் அவைகளுக்கு இருப்பதைச் சொன்ன கவிஞருக்கு நன்றி!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

இப்பிடி துடிதுடிக்க கொன்றதற்கு பதில் அடித்தே கொன்றிருக்கலாம்...
இந்த பகுதி சுவரிசியம் குறைந்ததுவிட்டது..

Yaathoramani.blogspot.com said...

Anonymous //

வித்தியாசமான கருத்து
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்தமைக்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கருநாகத்தின் வீக்னெஸ் தெரிஞ்சாலும் அதைப் பாத்தா நடுக்கம் வரத்தானே செய்யும். சுவாரஸ்யமான தொடர்.

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

சுவாரஸ்யமான தொடர். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

S.Venkatachalapathy said...

மனை வாங்கி வீடு கட்டிக்கொண்டு இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டிய முக்கியமான ஒரு தகவலை சுவாரசியமான இந்தக் கதையின் முடிவில் கூறியிருப்பது தங்களின் தனிச்சிறப்பு.

பாம்பைப் போன்று மற்றவர்கள் உருவாக்கிய இடத்தைக் கைப்பற்றிக்கொண்டு ராஜாங்கம் செலுத்தும் பாம்பை ஒத்த மனிதர்களை சமாளிக்க பொந்தை அடைப்பது போல ஏதாவது ஒரு சுலப வழி தெரிந்தால் சௌகரியமாக இருக்கும் என்று படுகிறது.

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

எப்போதுமே தங்கள் பின்னூட்டங்கள்
சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்
ஆயினும் எப்போதும் அது இறுதியானதாகவே இருப்பதால்
அது பலரின் கவனத்திற்குச் சரியாகப் போய்ச் சேர
வாய்ப்பில்லாமல் போகிற ஆதங்கம் எப்போதும் எனக்கு உண்டு
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

vimalanperali said...

தங்கலது வீக்னெஸை வெளியே தெரியாமல் வைத்திருக்கிற பலரைக்கண்டு இப்படித்தான் பயப்படுகிறோம் அனாவ்சியமாக/

Yaathoramani.blogspot.com said...

விமலன் //
.
தங்கலது வீக்னெஸை வெளியே தெரியாமல் வைத்திருக்கிற பலரைக்கண்டு இப்படித்தான் பயப்படுகிறோம் அனாவ்சியமாக/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வேலணை வலசு said...

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது நீங்கள் சம்பவத்தைத் தொகுத்துச் சொன்ன விதம்

Yaathoramani.blogspot.com said...

வேலணை வலசு //

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது நீங்கள் சம்பவத்தைத் தொகுத்துச் சொன்ன விதம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment