Friday, May 25, 2012

சாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்

ஓவியக் கோடுகளின்
நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும் 
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம் 
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
 எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக  இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு  இருத்தலுக்கான
 உன்னத அடையாளமாய  இருக்கிறது


81 comments:

Anonymous said...

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது//

படைப்பின் சாரம் அனைத்தும் இந்த வரிகளில் ..அழகாய் எழுதியுள்ளீர்கள் ரமணி சார்...

K said...

போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணமாக இருப்பினும் கூட
அதுதான் இருத்தலுக்கான
உன்னத அடையாளமாக இருக்கிறது ://////

அருமையான கவிதை அண்ணா! நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் போராளிகளே! ஆனால் ஒவ்வொரு நொடியும் போராடும் போராளியே வாழ்வில் வெற்றி பெறுகிறான்!\

நாமோ சமயத்தில் தூங்கியே விடுகிறோம்!

நல்ல கவி்தை அண்ணா !!

V Mawley said...

மிக்க நன்று...J K கூறுவது போல ,மாயையின் பிடியில்
சிக்குண்டிருப்பவனுக்கு, தான்
மாயையில் சிக்குண்டிருக்கிறோம் என்று தெரியாது!
கரையோரத்தில் நின்று வேடிக்கை மனோபாவத்துடன் வாழ்வது தான் ,
(LIKE A BY -STANDER "உபத்ருஷ்டா" ) சிறந்த யோகம் என்பதே நமது கலாசார
தத்துவங்களின் ஆதியும் , முதலுமான உபதேசம் ...
மாலி .

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..


வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

என்னும் சிந்தனையை மிகவும் இரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

/வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது/

உண்மை. அசாதாரணமாயிருந்தல் பற்றிய வரிகளும் மிக அருமை.

Unknown said...

முத்திரைக் கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!

விச்சு said...

really superp..

பால கணேஷ் said...

போராளியாக இருத்தலே சிறப்பு எனி்னும் பெரும்பான்மை சாதாரணமாகத்தான் இருக்கிறது. சாதாரணமாயிருத்தலும் அசாதாரணமாயிருத்தலும் ஆன விஷயத்தை அழகாக விளக்கியது கவிதை. அருமை.

Unknown said...

//படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும்
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது//

மேலே கூறிய வரிகள் முற்றிலும் அனுபவ உண்மைகள்! அதில் ஐயமில்லை!

சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 8

சா இராமாநுசம்

வேர்கள் said...

எப்படித்தான் ..... இப்படியெல்லாம் ....
சிந்திக்கிறீர்களோ.....:)))
ரெவரியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்...

MARI The Great said...

அருமை ..!

வருண் said...

***ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம்
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது***

Ignorance is bliss என்பதை அழகா சொல்லியிருக்கீங்க. உலகறிந்து, பிறர் மனதறிந்து, எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, யார் மனமும் கோணாமல், கவனமாக வாழ முயல்பவர்கள் கடைசியில் மனநோயாளியாகாமல் இருப்பது அரிது.

ஆத்மா said...

yes....உண்மையானது...கவிதை...and நல்ல சிந்தனையும் கூட...TM 10

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்

அருமையான தலைப்பு அதற்கேற்ற ப்டைப்பு

ஸாதிகா said...

தலைப்பை போல் கவிதையும் அற்புதம்.

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

படைப்பின் சாரம் அனைத்தும் இந்த வரிகளில் ..அழகாய் எழுதியுள்ளீர்கள் ரமணி சார்...//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //

Yaathoramani.blogspot.com said...

வலைஞன் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வரவேற்புக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாத்தியோசி - மணி //

அருமையான கவிதை அண்ணா! நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் போராளிகளே! ஆனால் ஒவ்வொரு நொடியும் போராடும் போராளியே வாழ்வில் வெற்றி பெறுகிறான்!
நல்ல கவி்தை அண்ணா !!

\தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //

Yaathoramani.blogspot.com said...

V Mawley //

\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //
.
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..//


தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி

உண்மை. அசாதாரணமாயிருந்தல் பற்றிய வரிகளும் மிக அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

முத்திரைக் கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

really superp..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

கீதமஞ்சரி said...

மனம் நெகிழ்த்திய வரிகள். சொல்ல வந்த கருத்தினை மிகவும் அழகாய் எளிமையாய் சொல்லியிருப்பது சிறப்பு. சாதாரணமாயிருப்பதா? அசாதாரணமாயிருப்பதா? என்னும் கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் தொக்க தத்தம் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கவைக்கும் அநாயாசப் பதிவு. மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

சசிகலா said...

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது///
முத்தாய்பாய் அமைந்த வரிகள் அருமை ஐயா .

S.Venkatachalapathy said...

அசாதாரண பின்னூட்டம் உறுவாக்கும் பொழுது கொஞ்சம் ரணகளமாகத்தான் இருக்கின்றது.

இருந்தாலும் அதுதான் இருத்தலுக்கு அடையாளமாகவும் இருக்கிறது.

இப்படிக்கு,
'என் வழி தனி வழி' சங்க அங்கத்தினர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//ஓவியக் கோடுகளின்
நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன//
யதார்த்த வாழ்க்கையில் அதிகமான அறிவும் புத்திசாலித்தனமும் வழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க முடியாமல் தடுத்து விடுகிறது.
என்பதை உணர்த்தும் அற்புதமான கவிதை.பிரமாதம்.
த.ம 12

மகேந்திரன் said...

எந்த வரிகளை சொல்வது என்றே தெரியவில்லை
வாழ்வியலின் சாரத்தை பழச்சாறு போல்
பிழிந்து தரும் உங்கள் கவிதைகள்
மனம் மயங்கச் செய்பவை..
அந்த வகையில் இதுவும்...

இயல்பு நிலையில் இருந்துகொண்டு
வாழ்வு நிலையின் மாற்றத்திற்காக
எந்த முறையை தேர்ந்தெடுப்பது
என்ற சிக்கல் வருகையில்
எவ்வாறு நாம் நம்மை சித்தரித்துக் கொள்ளவேண்டும்
என்று இயல்பாக விளக்கும் கவிதை...

MARI The Great said...

Tha.Ma 13

ஹேமா said...

//போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணமாக இருப்பினும் கூட
அதுதான் இருத்தலுக்கான
உன்னத அடையாளமாக இருக்கிறது ://

ஒருதடை தடவிப்பாக்க வைக்கிறீர்கள்.எதுவும் சரியான விளக்கம் இல்லாதவரை அது உன்னதமாகவே தெரிகிறது !

தனிமரம் said...

கவிதை அருமை தெளிவு இல்லாமல் இருக்கும் போது வாழ்க்கை ரனகளம் இல்லை என்பது நிஜம் தான்!ம்ம்ம்

Yaathoramani.blogspot.com said...

.கணேஷ் //

சாதாரணமாயிருத்தலும் அசாதாரணமாயிருத்தலும் ஆன விஷயத்தை அழகாக விளக்கியது கவிதை. அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //..

மேலே கூறிய வரிகள் முற்றிலும் அனுபவ உண்மைகள்! அதில் ஐயமில்லை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

வேர்கள் //

எப்படித்தான் ..... இப்படியெல்லாம் ....
சிந்திக்கிறீர்களோ.....:)))//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

அருமை ..//!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

வருண் //

Ignorance is bliss என்பதை அழகா சொல்லியிருக்கீங்க. உலகறிந்து, பிறர் மனதறிந்து, எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, யார் மனமும் கோணாமல், கவனமாக வாழ முயல்பவர்கள் கடைசியில் மனநோயாளியாகாமல் இருப்பது அரிது//

\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //
.
yes....உண்மையானது...கவிதை...and நல்ல சிந்தனையும் கூட.//

\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அருமையான தலைப்பு அதற்கேற்ற ப்டைப்பு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தலைப்பை போல் கவிதையும் அற்புதம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

G.M Balasubramaniam said...

வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது எது.?சாதாரணமாயிருத்தலா அசாதாரணமாய் இருத்தலா.?

Athisaya said...

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம்
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன..
100 வீதம் உண்மை தான் ஐயா.!

Athisaya said...

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது////
இருத்தலுக்கான அடையாளம் தான் ஒருவரின் வெற்றியே அது சாதாரணமாயினும் அசாதாரணமானும்...

Ganpat said...

எஞ்சினுக்குள் கட்டுப்பாடுடன் எரியும் பெட்ரோல் வாகனங்களை இயக்கி பயனளிக்கிறது.

அதுவே எஞ்சினுக்கு வெளியே எரிந்தால் வாகனமே எரிந்து சாம்பலாகிவிடுகிறது.

>>வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது<<
இது பெட்ரோல் இல்லாத வாகனம்

>>வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது<<
இது பெட்ரோல் என்ஜினுக்கு வெளியே எரியும் வாகனம்

இரண்டிற்கும் இடையே இருப்பதுதான் வாழ்தலின் வெற்றி.

சிந்திக்கவைத்த உங்கள் அருமையான பதிவிற்கு மனமார்ந்த நன்றி ரமணி ஸார்!

Thooral said...

//இலக்கணம் குறித்த தெளிவும்
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது//
unmai....


அருமை சார்

Anonymous said...

''...திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது...''
இப்படி,...தோற்றமும் - கணிப்பும் கூட சாதாரணம் அசாதாரணமாகவே உலக வாழ்வு உள்ளது. மிக நல்ல கருத்துகள் முழுவதும். பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை! எல்லாமே அற்புதம்!
தலைப்போ தனியானதொரு கவிதை!
வலியின் வீரியம் புரியாத வரை,
வாழ்க்கையின் அன்பு உற‌வுகள் அனைத்துமே இனிமை தான் என்பதை எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

நிலாமகள் said...

த‌லைப்பும் க‌விதையும் ரொம்ப‌ ஸ்ட்ராங்! இழையும் த‌த்துவ‌த்தில் தோய்கிற‌து ம‌ன‌சு. பாராட்டுக்க‌ள்!

Seeni said...

ayya!
aarampamum mudivum-
azhaku arumai!

Unknown said...

ஓவியக் கோடுகளின்
நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன
////////////////
ஐயா! இப்படி புட்டுபுட்டு வெச்சிட்டீங்களே! இருந்தாலும் இரசித்தேன்........!

மாலதி said...

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும்
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது// மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அதாவது கவிதை ந்த கட்டுப் பாடுகளுக்கும் உள்ளாகாமல் மடைதிறந்த வெல்லம் போல வெளிப்பட வேண்டும் சிறந்த படைப்பு வணக்கம்.....

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

அப்பாதுரை said...

கனமான சிந்தனையாளர்களில் உங்களுக்கு மேல்தட்டு இடம் ரமணி.
அருமையான கவிதை.

Prem S said...

//ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை//உண்மை தான் அன்பரே புரிந்து விட்டால் குழப்பம் தான்

அப்பாதுரை said...

சாதாவும் ரணம், அசாதாவும் ரணம். இதில் சுகம் எங்கே வந்தது?

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

வாழ்விற்கு அவரவர்கள் வைத்திருக்கும் அர்த்தம் பொருத்து
எனச் சொல்லலாமா? //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

Athisaya s //

100 வீதம் உண்மை தான் ஐயா.!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

Athisaya //

இருத்தலுக்கான அடையாளம் தான் ஒருவரின் வெற்றியே அது சாதாரணமாயினும் அசாதாரணமானும்...//

\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //
]
சிந்திக்கவைத்த உங்கள் அருமையான பதிவிற்கு மனமார்ந்த நன்றி ரமணி ஸார்!//

\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian //

அருமை சார் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

அசாதாரணமாகவே உலக வாழ்வு உள்ளது. மிக நல்ல கருத்துகள் முழுவதும். பாராட்டுகள். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //
..
எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை! எல்லாமே அற்புதம்!
தலைப்போ தனியானதொரு கவிதை!
வலியின் வீரியம் புரியாத வரை,
வாழ்க்கையின் அன்பு உற‌வுகள் அனைத்துமே இனிமை தான் என்பதை எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!//


\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

த‌லைப்பும் க‌விதையும் ரொம்ப‌ ஸ்ட்ராங்! இழையும் த‌த்துவ‌த்தில் தோய்கிற‌து ம‌ன‌சு. பாராட்டுக்க‌ள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

ரிஷபன் said...

அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது

சொல்லிக் கொண்டே போய் இறுதியில் அசாதாரணமாய் முடித்த விதம் சிலிர்க்க வைத்தது.

Yaathoramani.blogspot.com said...

Seeni //

ayya!
aarampamum mudivum-
azhaku arumai!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

வீடு சுரேஸ்குமார் //
////////////////
ஐயா! இப்படி புட்டுபுட்டு வெச்சிட்டீங்களே! இருந்தாலும் இரசித்தேன்.......//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

மாலதி //.

// மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அதாவது கவிதை ந்த கட்டுப் பாடுகளுக்கும் உள்ளாகாமல் மடைதிறந்த வெல்லம் போல வெளிப்பட வேண்டும் சிறந்த படைப்பு வணக்கம்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

சிறந்த முறையில் என்னை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //
..
கனமான சிந்தனையாளர்களில் உங்களுக்கு மேல்தட்டு இடம் ரமணி.
அருமையான கவிதை//

.\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

PREM.S //

/உண்மை தான் அன்பரே புரிந்து விட்டால் குழப்பம் தான்//

உண்மைதான் புரிந்துவிட்டாலும் குழப்பம்தான்தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //

சொல்லிக் கொண்டே போய் இறுதியில் அசாதாரணமாய் முடித்த விதம் சிலிர்க்க வைத்தது.//

.\தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

அருமை. அப்பாதுரை சொல்வது சரி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

அருமை. அப்பாதுரை சொல்வது சரி //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

தி.தமிழ் இளங்கோ said...

போராளிக்கு எளிதான ஒன்று மற்றவர்களுக்கு கடினமே! ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று எளிது!

(உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழுவதற்குள், உங்கள் சிந்தனைகள் தெறித்து வந்து விழுவதால், சிலசமயம் உங்கள் பதிவில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொள்ள இரண்டு அல்லது மூன்று முறை படிக்க வேண்டியுள்ளது. அதுதான் கருத்துச் சொல்ல தாமதம்.)

அருணா செல்வம் said...

விழுப்புண் வலி தருவது தான் என்றாலும்
அதில் தானே வீரத்தின் வடு தெரிகிறது.

“ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது“


சாதாரணம் சுகமென்றாலும்
அசாதாரணம் ரணம் தந்தாலும்
அதுதான் உன்னத அடையாளம் என்று அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமைங்க ரமணி ஐயா.

கோவி said...

அருமையான கவிதை அய்யா..

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

சாதாரணம் சுகமென்றாலும்
அசாதாரணம் ரணம் தந்தாலும்
அதுதான் உன்னத அடையாளம் என்று அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமைங்க ரமணி ஐயா.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Yaathoramani.blogspot.com said...

கோவி //.

அருமையான கவிதை அய்யா..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

யுவராணி தமிழரசன் said...

///வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு இருத்தலுக்கான
உன்னத அடையாளமாய இருக்கிறது///

எத்தகைய கருத்தினை கொண்ட வரிகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி Sir!

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //.

எத்தகைய கருத்தினை கொண்ட வரிகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி Sir!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்ட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி /

Post a Comment