Tuesday, May 15, 2012

கரு நாகத்தின் பலவீனம்

அப்போது நாங்கள் ஒரு வாய்க்காலை
ஒட்டிய வீட்டில் குடியிருந்தோம்
வாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்
என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோ
அத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது

மழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடி
விதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் கடி
நீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்
சுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்
இவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரி
பழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்

 ஒரு நாள்....

நாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒரு
வித்தியாசமான குரலில் குரைக்க   ஆரம்பித்தது
நாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க
இருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லை
ஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்
அதனால்தான் இப்படி வித்தியாசமாகக்
 குரைக்கிறது  என எங்களை நாங்களே
சமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்

மறு நாள் பகல் பொழுதில் நாய் மீண்டும்
அதே மாதிரிக் குரைக்க  அவசரம் அவசரமாய்
வாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.
ஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலென
ஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்
அலட்சியமாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது

அதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்
எங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போக
என்ன செய்வது என அறியாமல்
திகைத்துப் போய் நின்றோம்
அது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்
கருதாதுஅதன் போக்கில் மெதுவாகக்
காம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த
புதருக்குள் மறைந்து போனது

அடுத்து உடனடி நடவடிக்கையாக
காம்பௌண்டுச்சுவருக்கு அருகில் இருந்த
 செடி கொடிகளையெல்லாம்
சுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன
ஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்து
அருகில் இருந்தகோவிலுக்குப் போய்
 நாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்
செய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது என
நாங்கள் எங்களை  தைரியப் படுத்துக் கொள்ள
 முயற்சித்துக் கொண்டிருந்தோம்

ஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்
அந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்
ஏற்படுத்தவில்லை
மாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்தது
இரண்டுமுறை போய் வர ஆரம்பித்தது.

எங்கள் வீட்டு நாய் கூட முதலில்
பயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது
இப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போல
வித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது
அதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை

நாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்
அருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்து
 இத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்
கொள்வதைப் போல நாங்களும் நாயின்
 குரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து
கொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டு
 பயமோ பதட்டமோ இல்லாமல்
எங்களுடைய வேலைகளை நாங்கள்
கவனிக்கப பழகிவிட்டோம்

இந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாக
இருள்பரவத் துவங்கிய சமயத்தில்
 வாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேன
கத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்து
சப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்
உட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்ட
 உடல் நடுங்கிக் கொண்டிருந்தது

நானும் பயந்து போய் அவளை கீழே
 படுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க
 வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்
 கிடத்திப படமெடு த்தபடி அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது            
                                                                     

 (தொடரும் )

78 comments:

கணேஷ் said...

நாகங்கள் பொதுவாக அவற்றை தொந்தரவு செய்யாத வரை யாரையும் தீண்டாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் இப்போது அனுபவமாகப் படிக்கையில் பக் பக்தான். சரியான ‌இடத்தில் தொடரும் போட்டீர்கள் போங்கள்...! (த.ம.2)

AROUNA SELVAME said...

என்னங்க ரமணி ஐயா... சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்...
மீதியையும் அறிய வேண்டும் என்ற ஆவலைத் துர்ண்டுகிறது உங்கள் பதிவு.
காத்திருக்கிறேன்.

மனசாட்சி™ said...

ஐயா இது பத்தி எங்களின் சுய அனுபவத்தை ஒரு பதிவா போட வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள்.

உங்க நிலை தெரியாது நிச்சியமா விரைவில் எங்கள் அனுபவம் வரும்.

கோவை நேரம் said...

போங்க...நீங்க...இப்படியா த்டுக்குனு சஸ்பென்ஸ் வைக்கிறது...

Lali said...

when is the next issue? More thrilling!!!

மனோ சாமிநாதன் said...

இனிமையிலும் ரசனையிலும் தோய்ந்தெடுத்த வரிகளையே எப்போதும் படித்தப்பழக்கமாகி, உங்கள் வலைத்தளம் வந்தால் கருநாகம் அப்படியே பயமுறுத்தி விட்டது!

வரலாற்று சுவடுகள் said...

அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ..!

Anonymous said...

ரமணி சார் அடுத்த பதிவு எப்பங்கிற தேதியையாவது போடலாமல்ல என்ன இப்படி பண்ணிட்டிங்க போங்க சார்

Avargal Unmaigal said...

இளம்கன்று பயம் அறியாது என்று சொல்வதற்கிணங்க மதுரையில் வசிக்கும் போது சிறுவயதில் என்ன பாம்பாக இருந்தாலும் சாதாரண விறகு கட்டையால் துரத்தி துரத்தி அடித்த அனுபவம் நிறைய உண்டு ஆனால் சென்னையில் வசிக்கும் போது பாம்பை கண்டு கதவை சாத்தி வீட்டின் உள்ளே இருந்த அனுபவம் உண்டு காரணம் அப்போது சிறிதளவு பயமும் பாம்பை அடிக்க விறகு கட்டையோ அல்லது வேறு ஏதும் இல்லாததால்.


நீங்கள் பாம்பை அடித்தீர்களா அல்லது பாம்பு எடுத்த HD படம் என்று நாளை எதாவது போடப் போகிறிர்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

அட ராமா!!!!! குழந்தை ரொம்ப பயந்தது நியாயம்தான்.

நம்ம வீட்டுலே அந்த பா** என்ற சொல்லைக் கேட்டாலே கோபாலுக்கு நடுக்கம். படத்திலோ டிவியிலோ காமிச்சால் கண்ணை மூடிக்குவார்:-)

அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க. எதிர்பார்ப்புடன்...... இருக்கோம்.

பின்குறிப்பு: நான் ஒரு பாம்பை அடிச்சுருக்கேன்:(

Seeni said...

ennangaiyaa!?

neengalumaa
suspence vaippeenga!

bakkunu irukku!

விச்சு said...

யார் என்ன சொன்னாலும் பாம்பை பார்த்தால் நிச்சயம் நம்மையும் அறியாமல் ஒரு பயம் வந்துவிடுகிறது.நீங்க வேற சஸ்பென்சா விட்டுட்டீங்க.

ரமேஷ் வெங்கடபதி said...

வீட்டில் அப்பொது யாருக்காவது ராகு திசை/ராகு புத்தி நடந்து கொண்டிருந்ததா? என்பதை பின்னோக்கிப் பார்க்கவும்!

நல்ல விறுவிறுப்பு..எழுத்திலும்..விஷ'யத்திலும்!

T.N.MURALIDHARAN said...

இந்த பாம்பு அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு. நல்ல சஸ்பென்ஸ்.அடுத்ததுக்கு காத்திருக்கிறோம்.
பாம்புக்கு ஒட்டு போட்டாச்சு.

Usman said...

பாம்பைக்கண்டால் படையே நடுங்கும் காலம் அந்தக்காலம்.உங்களைப் பார்த்தல் வீரலட்சணம் முகத்தில் தெரியுது. நீங்கள் எப்படியும் போட்ருவீங்க!!!!!!!சந்தேகம் இல்லை.. .

Lakshmi said...

பாம்புக்குனு ஒரு பதிவு போட்டு மத்தவங்களின் பாம்பு அனுபவத்தையும் நினைக்கவச்சுட்டீங்க. எனக்கும் அந்த அனுபவம் எல்லாம் உண்டு. நாங்களும் சின்ன வயசில் வீட்டின் பின் புரம் வாய்க்கால் ஓடும் வீட்டில்தான் இருந்தோம்.வாய்க்கால்ல டெய்லி தண்ணிபாம்பு பார்த்துருக்கோம். ஆனா அது ஒன்னும் பண்ணாதுன்னு சொல்வாங்க.

Ramani said...

கணேஷ் //

தங்கள் முதல் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //

மீதியையும் அறிய வேண்டும் என்ற ஆவலைத் துர்ண்டுகிறது உங்கள் பதிவு.
காத்திருக்கிறேன்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மனசாட்சி™ //

உங்க நிலை தெரியாது நிச்சியமா விரைவில் எங்கள் அனுபவம் வரும்.////

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து

Ramani said...

கோவை நேரம் /


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Lali //

when is the next issue? More thrilling!!!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

இனிமையிலும் ரசனையிலும் தோய்ந்தெடுத்த வரிகளையே எப்போதும் படித்தப்பழக்கமாகி ...,

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //

அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ..!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்

Ramani said...

துளசி கோபால் //

அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க. எதிர்பார்ப்புடன்...... இருக்கோம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சீனு said...

//இத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்
கொள்வதைப் போல //

அழகான உவமை

பாம்பு என்றாலே அதில் சுவரசியதிர்க்கு ம பஞ்சம் இருக்காது தொடர்கிறேன்.

Ramani said...

Seeni //


ennangaiyaa!?
neengalumaa
suspence vaippeenga //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

நல்ல விறுவிறுப்பு..எழுத்திலும்..விஷ'யத்திலும்!/


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

T.N.MURALIDHARAN //.
.
இந்த பாம்பு அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு.//

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Usman //

உங்களைப் பார்த்தல் வீரலட்சணம் முகத்தில் தெரியுது. நீங்கள் எப்படியும் போட்ருவீங்க!!!!!!!சந்தேகம் இல்லை..//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கோவி.கண்ணன் said...

பாம்பு பற்றிய பயம் மனிதனுக்கு அடைப்படை பயம், என்ன தான் வீரனாக இருந்தாலும் பாம்பைக் கண்டால் பயம் தான் வரும்

விக்கியுலகம் said...

யம்மாடி...!

செய்தாலி said...

பாம்பும்
பயமும்
நல்ல தொடக்கம்
இறுதியில் சஸ்பென்ஸ்
சீக்கிரம் போடுங்க சார் அடுத்த பதிவை (:

எஸ்தர் சபி said...

நாகங்கள் பொதுவாக அவற்றை தொந்தரவு செய்யாத வரை யாரையும் தீண்டாது
இந்த பாம்பு அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு.
அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க supper uncle

சிசு said...

ரொம்பநாளைக்கு அப்புறம் பதிவுலகம் பக்கம் இந்தவாரம்தான் வருகிறேன்... இப்படி பயமுறுத்திட்டீங்களே....

தீபிகா(Theepika) said...

காத்திருக்க வைத்திருக்கிற கருநாகம் பற்றிய எழுத்தோட்டம் படபடக்க வைத்திருக்கிறது.

Madhavan Srinivasagopalan said...

// துளசி கோபால் said..

பின்குறிப்பு: நான் ஒரு பாம்பை அடிச்சுருக்கேன்:( //

பாம்பையா.. அதோட(செத்த) பாடியையா

கீதமஞ்சரி said...

பாம்பின் வரவை வைத்து ஏதோ வாழ்வியல் சிந்தனை தரப்போகிறீர்கள் என்று நினைக்க, பதட்டமான பொழுதில் தொடரும் போட்டுவிட்டீர்க்களே... பதைப்புடன் காத்திருக்கிறேன்.

என் அம்மாவின் வீட்டில் வளர்த்த நாய் ஒன்று இப்படி வித்தியாசமாய் குரல் கொடுத்தால், உடனே அப்பா கம்பை எடுப்பார். என்னவென்றால் தோட்டத்தில் பாம்பு என்பார். அவர் வீட்டில் இல்லாத ஒருநாளில் பாம்பு வர, இது அதை வழிமறித்து போகவிடாமல் தடுக்க, அது சீற, பெரும் போராட்டமே நடந்திருக்கிறது. ஆறுமணிநேரமாக போராடி, முடிவில் அப்பா வந்தபின் பொறுப்பை ஒப்படைத்து உயிர்விட்டது. உங்கள் பதிவு பார்த்ததும் அந்த நன்றியுள்ள நாயின் நினைவு வந்துவிட்டது.

சிட்டுக்குருவி said...

ஆவலா இருக்கன் சார் அடுத்த பதிவுக்கு....

Anonymous said...

ஊ!..... எமக்கும் நிறைய பாம்பு அனுபவம். சிறு பாம்பு, நாக பாம்பு உட்பட. திகு..திகு என்று உள்ளது அடுத்தது என்ன என்று..
வேதா. இலங்காதிலகம்.

angelin said...

//வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்
கிடத்திப படமெடு த்தபடி அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது//


அண்ணா !!! படிக்கும்போதே மனசுல ஹிஸ் ஹிஸ் ஹிஸ்னு(பகு பக்கு பக்குன்னு ) இருக்கு பாவம் உங்க மகள் எப்படி பயந்திருப்பாங்க
பாம்பு வருகை தருமிடத்தில் உளுந்து வறுபடும் வாசம் வருமாம் ..நாங்க வசித்தது கரும்பு /சோளக்காடு அருகே அங்கே நிறைய சுற்றும்
ஒரு முறை ஊரில் இருந்தப்போபின்னிரவு நேரம் இதுபோல நடந்தது காலையில் விழித்து பார்த்தா இரண்டு பெரிய சண்டை சேவல்கள் நீலம்பாரித்து இறந்துகிடந்தன .


அடுத்தது என்ன ஆச்சோ ???? சீக்கிரம் தொடருங்க படபடங்குது

G.M Balasubramaniam said...

நானும் பாம்பென்றால் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இன்னொரு பதிவில் ( ஓ, பாம்பு )பாம்பென்று நினைத்து அரணையைக் கொன்ற ஒரு திகில் அனுபவம் பற்றியும் எழுதி இருக்கிறேன்.கருநாகத்தின் பலவீனம் தெரிய ஆவல். வாழ்த்துக்கள்.

vanathy said...

கடவுளே! பாம்போ???? என்ன இப்படி தொடரும் போட்டு இருக்கிறீங்க? வெகு விரைவில் அடுத்த பாகம் போட்டால் நல்லது. எனக்கு இப்பவே குலை நடுங்குது.

Ramani said...

சீனு //..
//இத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்
கொள்வதைப் போல //
அழகான உவமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவி.கண்ணன் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விக்கியுலகம் //.

தங்கள் வரவுக்கும் //
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

செய்தாலி //

நல்ல தொடக்கம்
இறுதியில் சஸ்பென்ஸ்
சீக்கிரம் போடுங்க சார் அடுத்த பதிவை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

எஸ்தர் சபி //

அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க supper uncle //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சிசு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தீபிகா(Theepika) //
...
காத்திருக்க வைத்திருக்கிற கருநாகம் பற்றிய எழுத்தோட்டம் படபடக்க வைத்திருக்கிறது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan //

// துளசி கோபால் said..

பின்குறிப்பு: நான் ஒரு பாம்பை அடிச்சுருக்கேன்:( //

பாம்பையா.. அதோட(செத்த) பாடியையா //

தங்கள் வரவுக்கும் ரசிக்கும்படியான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி,

Ramani said...

கீதமஞ்சரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சிட்டுக்குருவி //

ஆவலா இருக்கன் சார் அடுத்த பதிவுக்கு..//

தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி,

Ramani said...

kovaikkavi //

ஊ!..... எமக்கும் நிறைய பாம்பு அனுபவம். சிறு பாம்பு, நாக பாம்பு உட்பட. திகு..திகு என்று உள்ளது அடுத்தது என்ன என்று.//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

angelin //

அடுத்தது என்ன ஆச்சோ ???? சீக்கிரம் தொடருங்க படபடங்குது

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //.

.கருநாகத்தின் பலவீனம் தெரிய ஆவல்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

vanathy //

கடவுளே! பாம்போ???? என்ன இப்படி தொடரும் போட்டு இருக்கிறீங்க? வெகு விரைவில் அடுத்த பாகம் போட்டால் நல்லது //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Asiya Omar said...

வெகு சுவாரசியமான பகிர்வு,அந்தக் கருநாகத்தை நாங்களும் நேரில் பார்த்தது போல் இருக்கு.கனவில் ஒரு சமயம் எங்க வீட்டுப் பக்கம் வந்தாலும் வரும்.சில பகிர்வுகள் மனதை தொடும் பொழுது கனவாக வருவதுண்டு.

ராஜி said...

பாம்பென்றால் படையும் நடுங்குமே. ஆனா, நாங்க நடுங்காம அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

vasan said...

வீட்டைச் சுற்றி க‌ல் உப்பை சித‌றிவிடுத‌ல் +
பூண்டு அரைத்து ஊற்றிவிடுத‌ல் போன்ற‌ ப‌ரிகார‌ங்க‌ளும் இருக்கிற‌தாம்.
நாய் ஒரு நல்ல‌ காவ‌ல‌ன் தான், வீட்டுக்குள் அர‌வ‌த்தை அனும‌திக்காதாம்.

ஹேமா said...

வாசிக்கும்போது ஒரு சுவாரஸ்யமும் பதட்டமும்.ஆனாலும் அடுத்த பதிவுக்காக ஒரு எதிர்பார்ப்பு !

பின்னூட்டங்களும் ரசிக்கவைக்கிறது.அதோடு பல பாம்பு விஷயங்களும் சொல்கிறது !

சத்ரியன் said...

ரமணி சார்,

பாம்புகளுடன் வாழ்வது எங்களுக்கு புதிதல்ல என்றாலும், கருநாகத்தின் பலவீனம் எதுவாக இருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவல் மேலோங்குகிறது.

வயல் நடுவே எங்கள் வீடு என்பதால் பாம்பு,பல்லி,நண்டு,நத்தை,பூச்சிகள்... என ஒரு உயிரிக்கோளத்தில் வாழும் முழுஅனுபவம் எங்களுக்கு.

புலவர் சா இராமாநுசம் said...

படிக்கவே பயமாய் இருக்கு இரமணி! நீங்க பதிவே
எழுதுறீங்க! ஏதோ வீட்டுக்கு விருந்தினர் வந்து
போவது போல பாம்பு வந்துபோனதை.

ஆனாலும் மிகுந்த துணிச்சல்தான்!

த ம ஓ 9 சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்
கிடத்திப படமெடு த்தபடி அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது

நடு நடுங்க வைக்கும் பயங்கர அனுபவம் 1

Anonymous said...

(தொடரும்)?

இதுக்கு நீங்க பாம்பை வைத்தே கொன்றிருக்கலாம் ரமணி சார்...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...

Ramani said...

Asiya Omar //

வெகு சுவாரசியமான பகிர்வு,அந்தக் கருநாகத்தை நாங்களும் நேரில் பார்த்தது போல் இருக்கு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ராஜி //
.
பாம்பென்றால் படையும் நடுங்குமே. ஆனா, நாங்க நடுங்காம அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

vasan //

வீட்டைச் சுற்றி க‌ல் உப்பை சித‌றிவிடுத‌ல் +
பூண்டு அரைத்து ஊற்றிவிடுத‌ல் போன்ற‌ ப‌ரிகார‌ங்க‌ளும் இருக்கிற‌தாம்//
.
பயனுள்ள தகவல்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //
.
வாசிக்கும்போது ஒரு சுவாரஸ்யமும் பதட்டமும்.ஆனாலும் அடுத்த பதிவுக்காக ஒரு எதிர்பார்ப்பு !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சத்ரியன் //

பாம்புகளுடன் வாழ்வது எங்களுக்கு புதிதல்ல என்றாலும், கருநாகத்தின் பலவீனம் எதுவாக இருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவல் மேலோங்குகிறது//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

படிக்கவே பயமாய் இருக்கு இரமணி! நீங்க பதிவே
எழுதுறீங்க! ஏதோ வீட்டுக்கு விருந்தினர் வந்து
போவது போல பாம்பு வந்துபோனதை.
ஆனாலும் மிகுந்த துணிச்சல்தான்!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //


.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரெவெரி ..
(தொடரும்)?

இதுக்கு நீங்க பாம்பை வைத்தே கொன்றிருக்கலாம் ரமணி சார்...
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்..//.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மாதேவி said...

சீனா காரர்களைக் கூட்டி வந்தால் உங்கள் பாம்பை பிடித்திருக்கலாமே.:)) சூப்பும் தயாராகிவிடும். :(

Ramani said...

.
மாதேவி //

தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சிவகுமாரன் said...

பாம்பைக் கண்டால் படியும் நடுங்கும் என்பார்கள். படித்தாலே நடுக்கம் வருகிறது சாரே.

Ramani said...

சிவகுமாரன் //.
பாம்பைக் கண்டால் படியும் நடுங்கும் என்பார்கள். படித்தாலே நடுக்கம் வருகிறது சாரே.//

தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment