Thursday, June 21, 2012

தேடல்

என் முன்னே என் பின்னே 
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்"
 என்றேன்என்னை ஒத்தவரிடம்
"நம் முன்னால் செல்பவர்கள்
எல்லாம் தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான்
 நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட
 நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால்
அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில்
 என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்
"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட
சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க
 ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர்
எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான்
 யாரேனும் உண்டா" என்றேன்
நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்"
என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி
அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்
"நம் கால்கள் ஓடத்தான்
 படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான்
 பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான்
 படைக்கப்பட்டது எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை
 நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட
 கேட்கலாம்தானே" என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப்
 பார்த்துக் கேட்டேன்
"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன்
 ஓய்வாக இருக்கிறீர்கள்" என்றேன்

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்"
என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
 எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம்
விடைதெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட
விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல்
 நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

80 comments:

Seeni said...

ayya!

enakku ennavo-
onnu illa pala visayam pulapattathu!

nantri!

விச்சு said...

மனிதன் மனம் எதற்காக ஓடுகிறது என்பது எளிதில் விளங்குவதில்லை.

ஸ்ரீராம். said...

மிகப் பிரமாதம். அழகான பதிவு. நானெல்லாம் இன்னும் ஓடவே தொடங்கவில்லை!!

ரமேஷ் வெங்கடபதி said...

இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்து விட்டால் ஓடுவதும் தேடுவதும் விடைகளும் எதற்கு..கொடுத்து வைத்தவர் நமது கவிதை நாயகர்!

முத்திரைக் கவிதை..வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

விடை தெரிந்தவர் எவருமில்லை.

/எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே..../

அருமை. நல்ல கவிதை.

சின்னப்பயல் said...

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது..ஹ்ம்..ஆழமாக சிந்திக்க வைக்கிறது

சுந்தர்ஜி said...

சபாஷ் ரமணியண்ணா.

அநேக நேரங்கள் படித்துமுடித்த பின்னும் எழுத்தின் வீச்சை அசை போடவைக்கிறது.

சுழித்து ஓடும் நதியின் மேற்புறமும் அடிப்புறமும் போல எளிமை. அதே சமயம் முதிர்வின் ஆழம்.

வலைப்பூவின் அவதூதர் என்று சொல்லிவிடலாம்.

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்க்கையில் தேடுதலை விட ஓடுதல்தான் மிக முக்கியமாக இருக்கிறது. இல்லையேல் நமக்கு பின்னால் வருபவர்கள், நம்மை தள்ளிவிட்டு நம்மீதே ஓடிக் கொண்டு இருப்பார்கள்.

Ganpat said...

அருமையான சிந்தனை..வாழ்த்துக்கள்..
கவிதையின் முழு வீச்சையும் உணர விரும்பும் நண்பர்கள்,பிரதி சனி,ஞாயிற்று கிழமைகளில் தி.நகர்,ரங்கநாதன் தெருவில் மதியம் மூன்றுமணி முதல்,மாலை ஒன்பது மணி வரை நிகழ்பெரும் Live Demo வில் பங்கேற்று பயன் பெறலாம்.
நன்றி.

ஸாதிகா said...

மனித மனம் புரிந்து கொள்ளவியலாத ஒன்றுதான்.

மதுமதி said...

"எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து"

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓட முடிந்தவர் ஓடட்டும்.

ஓய்ந்து இருப்பவ்ர் இருக்கட்டும்.

காலம் யாருக்காகவும் நிற்காமல் அதன் போக்கில் எப்போதும் ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

/"எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து"/

இருக்கட்டும். இருந்து விட்டுப்போகட்டும்.

புரிந்துதான் என்ன இலாபம்?

புரியாவிட்டாலும் என்ன பெரிய நஷ்டம்?

நல்லாவே சிந்திக்க வைக்கும் படைப்பு. பாராட்டுக்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....//

உங்கள் நிலையே என் நிலையும் சகோ! த ம ஓ 8
சா இராமாநுசம்

ரிஷபன் said...

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

புரிந்தது !

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்தி இல்லாத மனம் இப்படித் தான் அலைந்து திரிந்து ஓடிக் கொண்டிருக்கும் சார் ! நன்றி !

Sasi Kala said...

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....// ஆமாம் ஐயா சில நேரங்களில் விளங்காமலே விழித்து நிற்கிறேன் .

angelin said...

படித்து முடித்ததும் ,நானும் யோசித்தேன் எதை தேடி நாம் செல்கிறோம்???/
சில தேடல்களுக்கு இலக்கில்லை,எல்லையுமில்லை
..என்னை அதிகம் யோசிக்கவைத்தது உங்கள் கவிதை

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுகிறோம் முடிவு என்ன என்றே விளங்கவில்லை....!

AROUNA SELVAME said...

ரமணி ஐயா...

அருமையான பதிவுங்க.
ஆழ்ந்து சிந்திக்க
அதிர்வுடன் சேர்ந்து
அமைதி வருகிறது.

G.M Balasubramaniam said...

வந்தது தெரியும் போவது எங்கே வாழ்க்கை நமக்கே புரியாது , வந்தவரெல்லாம் தங்கி நின்றால் மண்ணில் நமக்கே இடமேது --- கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. தேடலின் முடிவைக் கூற யாரும் இல்லை.சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள். உங்கள் பதிவின் தாக்கம் என்னையும் எழுத வைத்தது. ஆனால் கோணம் வேறு.

யுவராணி தமிழரசன் said...
This comment has been removed by the author.
யுவராணி தமிழரசன் said...

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....
//////////
சிந்திக்கவைக்கும் வரிகள் Sir!!ஒரு விடுகதையை போட்டுட்டீங்க இதுக்கு விடை அறிய இந்த ஆயுள் போதாதே Sir!

Lakshmi said...

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
எல்லாம் தெரியும்" என்றார்


அருமையான விளக்கம்

முனைவர்.இரா.குணசீலன் said...

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது


இந்தப்புள்ளியில் தான் மனிதர்களின் தேடல் தொடங்குகிறது.

ஆழமான தேடல்.. நன்று அன்பரே..

சென்னை பித்தன் said...

//தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை//
ஓடவும் முடியவில்லை;ஓய்ந்து அமரவும் மனமில்லை!
சிறப்பான கவிதை

சென்னை பித்தன் said...

த.ம.11

வெங்கட் நாகராஜ் said...

//"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
எல்லாம் தெரியும்" என்றார்//

சிறப்பான கவிதை....

உள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னை நானே...

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து

பயணங்களும் கேள்விகளும் முடிவதில்லையே !

சிட்டுக்குருவி said...

ஐயா நல்லதொரு படைப்பு.....மேலே எல்லோரும் சொல்லிவிட்டார்கள் எனக்கு வாழ்த்த வார்த்தைகளை அவர்கள் மீதம் வைக்கவில்லை.....தொடருங்கள் த.ம.ஓ.13

கடம்பவன குயில் said...

//"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும்
கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் -
எல்லாம் தெரியும்" என்றார்//

நம் நாட்டின் சித்தர்கள், மகான்கள் அனைவரும் சொல்வது இதுவே....அகத்தை உற்றுநோக்கின் அனைத்தும் பிடிபடும்.

சீனு said...

// பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல்
நடிப்பவர்கள்"//

சீரிய சிந்தனை அய்யா ... உள்ளம் கவர்ந்த வரிகள் இவை...


படித்துப் பாருங்கள்

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

Avargal Unmaigal said...

சிந்திக்க வைக்கும் மிக நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி said...

GANPATன் பின்னூட்டம் ரசிக்கவைத்தது.

மனசாட்சி™ said...

செமையா சொன்னீங்க

Ganpat said...

நன்றி சுந்தர்ஜி!

Murugeswari Rajavel said...

தேடல் சிந்தனையைத் தூண்டும் படைப்பு.

பா.கணேஷ் said...

நான் என்னுள்ளும் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். எதற்காக ஓடுகிறோம் என்பது எனக்கும் இன்னும விளங்கத் தானில்லை. அருமையான சிந்தனையில் விளைந்த முத்தான கவிதை. (14)

Ramani said...

Seeni //

enakku ennavo-
onnu illa pala visayam pulapattathu!//

நிச்சயமாக அடுத்த அருமையான கவிதையை
எதிர்பார்க்கலாம எனத்தெரிகிறது
முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு //

மனிதன் மனம் எதற்காக ஓடுகிறது என்பது எளிதில் விளங்குவதில்லை.//

தேடுதல் தானே வாழ்க்கை
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

மிகப் பிரமாதம். அழகான பதிவு. நானெல்லாம் இன்னும் ஓடவே தொடங்கவில்லை!!//

ஓடாதிருப்பவர்களில் கூட விடை தெரிந்தவர்கள்
இருக்கக் கூடும்
தங்க்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி ..//

முத்திரைக் கவிதை..வாழ்த்துக்கள்!/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ராமலக்ஷ்மி

விடை தெரிந்தவர் எவருமில்லை.//
அருமை. நல்ல கவிதை //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

.
சின்னப்பயல் //
.
.ஆழமாக சிந்திக்க வைக்கிறது //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சுந்தர்ஜி //
..
சபாஷ் ரமணியண்ணா.
சுழித்து ஓடும் நதியின் மேற்புறமும் அடிப்புறமும் போல எளிமை. அதே சமயம் முதிர்வின் ஆழம்.
வலைப்பூவின் அவதூதர் என்று சொல்லிவிடலாம்//

.தங்கள் பாராட்டு பலம் கொடுத்துப்போனாலும்
பொறுப்பைக் கூட்டியும் பயமுறுத்தியும் போகிறது
தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

வாழ்க்கையில் தேடுதலை விட ஓடுதல்தான் மிக முக்கியமாக இருக்கிறது.//

மிகச் சரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat//

அருமையான சிந்தனை..வாழ்த்துக்கள்..
கவிதையின் முழு வீச்சையும் உணர விரும்பும் நண்பர்கள்,பிரதி சனி,ஞாயிற்று கிழமைகளில் தி.நகர்,ரங்கநாதன் தெருவில் மதியம் மூன்றுமணி முதல்,மாலை ஒன்பது மணி வரை நிகழ்பெரும் Live Demo வில் பங்கேற்று பயன் பெறலாம்.//

பல சமயங்களில் என்னுடைய பதிவை விட
தங்களுடைய பின்னூட்டமே அதிகம்
ரசிக்கத் தக்கதாயும் அதிகம் சொல்லிப்
போவதாக்வும் உள்ளது
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நன்றி.

Ramani said...

ஸாதிகா //

மனித மனம் புரிந்து கொள்ளவியலாத ஒன்றுதான்.

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நன்றி.

Ramani said...

மதுமதி //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நன்றி.

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

நல்லாவே சிந்திக்க வைக்கும் படைப்பு. பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

உங்கள் நிலையே என் நிலையும் சகோ //

சுருக்கமான பின்னூட்டமாயினும்
மனதிற்கு மிக நெருங்கிய பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரிஷபன் //

புரிந்தது //


சுருக்கமான பின்னூட்டமாயினும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

திண்டுக்கல் தனபாலன் //


தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala //

ஆமாம் ஐயா சில நேரங்களில் விளங்காமலே விழித்து நிற்கிறேன் .//

சுருக்கமான பின்னூட்டமாயினும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

angelin //

சில தேடல்களுக்கு இலக்கில்லை,எல்லையுமில்லை
..என்னை அதிகம் யோசிக்கவைத்தது உங்கள் கவிதை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

MANO நாஞ்சில் மனோ //
..
எல்லாரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுகிறோம் முடிவு என்ன என்றே விளங்கவில்லை....!//

சுருக்கமான பின்னூட்டமாயினும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //

அருமையான பதிவுங்க.
ஆழ்ந்து சிந்திக்க
அதிர்வுடன் சேர்ந்து
அமைதி வருகிறது.//


மனதிற்கு மிக நெருங்கிய பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

உங்கள் பதிவின் தாக்கம் என்னையும் எழுத வைத்தது. ஆனால் கோணம் வேறு.//

படித்துப் பார்த்தேன் அருமையான
வித்தியாசமான சிந்தனையாக இருந்தது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

யுவராணி தமிழரசன் //

சிந்திக்கவைக்கும் வரிகள் Sir!!ஒரு விடுகதையை போட்டுட்டீங்க இதுக்கு விடை அறிய இந்த ஆயுள் போதாதே Sir!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

அருமையான விளக்கம்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

முனைவர்.இரா.குணசீலன் //

ஆழமான தேடல்.. நன்று அன்பரே..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சென்னை பித்தன் //

சிறப்பான கவிதை //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

சிறப்பான கவிதை....
உள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னை நானே...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

பயணங்களும் கேள்விகளும் முடிவதில்லையே !//

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சிட்டுக்குருவி/
.
ஐயா நல்லதொரு படைப்பு...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கடம்பவன குயில் //
.
நம் நாட்டின் சித்தர்கள், மகான்கள் அனைவரும் சொல்வது இதுவே....அகத்தை உற்றுநோக்கின் அனைத்தும் பிடிபடும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சீனு //


சீரிய சிந்தனை அய்யா ... உள்ளம் கவர்ந்த வரிகள் இவை...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

சிந்திக்க வைக்கும் மிக நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ganpat said...
This comment has been removed by the author.
Ganpat said...

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்று அதை பலர் பாராட்டினாலும்,அவனுடைய வகுப்பு ஆசிரியர் அதை புகழும்போது விளையும் மகிழ்ச்சியே அலாதியானது;முதன்மையானது.
அதை எனக்கு புரியவைத்த ஆசிரியர் ரமணிசாருக்கு,இந்த மாணவனின் பணிவான வணக்கம்.

Ramani said...

சுந்தர்ஜி //

GANPATன் பின்னூட்டம் ரசிக்கவைத்தது.//

எனக்கும் நான சொன்னதைவிட அவர் மிகத் தெளிவாகவும்
சுருக்கமாகவும் அழகாகவும் சொன்னது போல் பட்டது
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மனசாட்சி™ //

செமையா சொன்னீங்க //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Murugeswari Rajavel //

தேடல் சிந்தனையைத் தூண்டும் படைப்பு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பா.கணேஷ் //

எதற்காக ஓடுகிறோம் என்பது எனக்கும் இன்னும விளங்கத் தானில்லை. அருமையான சிந்தனையில் விளைந்த முத்தான கவிதை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்று அதை பலர் பாராட்டினாலும்,அவனுடைய வகுப்பு ஆசிரியர் அதை புகழும்போது விளையும் மகிழ்ச்சியே அலாதியானது//

அதிக மதிபெண் பெற்ற மாணவனைமனம் திறந்து
பாராட்டுதல்தானே ஆசிரியருக்கும் பெருமை
அவருடைய உழைப்பு அவன் மூலம் தானே
உலகுக்கும் புரிகிறது
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

நிறைவான வரிகள்.
எதிர்திசையில் ஓடிப் பழகியிருக்கிறீர்களா?

Ramani said...

அப்பாதுரை //

நிறைவான வரிகள்.
எதிர்திசையில் ஓடிப் பழகியிருக்கிறீர்களா? //

எது குறித்தும் சிந்தித்தல் கூட
எதிர் திசையில் ஓடிப் பழகுதல் போல்தான் இல்லையா
சிந்திக்கச் செய்துபோகும் அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

//எது குறித்தும் சிந்தித்தல் கூட
எதிர் திசையில் ஓடிப் பழகுதல் போல்

உண்மை.

Ramani said...

அப்பாதுரை//

தங்கள்
உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

வணக்கம்
கவிஞர் ஐயா.

இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ramani S said...

தகவலுக்கு மிக்க நன்றி ரூபன்
வாழ்த்துக்களுடன்...

Post a Comment