Sunday, June 10, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ் எஸ்.ஆர்,/ராமராஜன் )

புராணக் கதைகளின் தொடர்ச்சியாக நாடகங்களும்
அதன் நீட்சியாகவே சினிமாவும் தொடர்ந்ததாலோ
என்னவோ கதை மாந்தர்களை கதையின்
போக்கைவிட மிக உயர்த்திச் சொல்லுதல்
ஒரு தவிர்க்க இயலாஅம்சமாக மாறிப் போனது
நாளடைவில் அது மக்கள் விரும்புகிற
அம்சமாகவும் மாறிப் போனது

ஆதியில் நாடகங்களாக  நடிக்கப் பட்ட
ஹரிச்சந்த்ரா வள்ளி திருமணம் பவளக் கொடி
முதலான கதைகளில்  கதை அம்சம்
அதிகமாக இருந்தாலும் கூட அதை விட
கதாபாத்திரத்தின் அம்சம் கொஞ்சம்
கூடுதலாகவே இருந்தது

அதன் போக்கில் வந்த முந்தைய
ராஜா ராணிக் கதைகளில் சுவாரஸ்யமான
கதை இருந்த போதிலும் கதைக்கு அடங்காது
கதாபாத்திரங்கள் திமிரித் தெரியும் படியான
படங்கள்வெளிவந்தபோது அதன் போக்கில்
கதா நாயகத் தன்மையும் தவிர்க்க இயலாமல்
கதையை விட கொஞ்சம் முன்னால்
 துருத்திக் கொண்டே வந்தது

புரட்சித்தலைவர் அவர்கள் சண்டைப்பயிற்சி
முறையாகக் கற்றவர் என்பதால்
அவருக்கு இயல்பாகவே
அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமைந்தது
குறிப்பாக நடிப்பைவிட பிரமிப்பூட்டும்
(ஆக்ஸன் படங்கள் எனச் சொல்லலாமா )
சண்டைக் காட்சிகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன
பின்னாளில் அவருக்கென ஒளிவட்டம்அமைந்து
தனிப்பட்ட ரசிகர்கள்ஆதரவும் கூடக் கூட
அவராகவே அந்த பாணிக்
கதாபாத்திரங்களை அமைத்து மகத்தான்
வெற்றியும் பெற்றார்

அதே சமயத்தில் கதையும் கதா பாத்திரமும்
சம  நிலையில் இருக்கிற அல்லது
கதாபாத்திரத்தை விட கதை மிக முக்கியமாகப்
-படுகிற ,அல்லது ஆணை விட பெண் கதாபாத்திரம்
முக்கியமாகப் படுகிற திரைக் கதை அமையும் போது
அதற்கு பொருந்தி வரக் கூடியவராக
புரட்சித் தலைவர் இல்லை.
அவர் அதைமீறி இருந்தார்

.அதைப் போன்ற கதைகளுக்கு
(குறிப்பாக கதையை மீறிய நடிப்பும் தேவையிலை
அதிக உக்கிரமான சண்டையும் தேவை இல்லை)
எஸ் எஸ்.ஆர் அவர்கள் மிகப் பொருத்தமானவராக
இருந்தார்..அந்த இடத்தை அவர் மிகச் சரியாகப்
பூர்த்தி செய்தார்.புரட்சித் தலைவர் ரசிகர்களையும்
நடு நிலை ரசிகர்களையும் அது திருப்தி செய்ததால்
அவருடைய படங்களும் வெற்றிகரமாக ஓடின

மனோ தத்துவ அறிஞர்கள் நாம் வீட்டில் மின் விளக்கை
ஏற்றுகையில் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் கூட
காட்டு வாசியாய் இருந்த மனிதன் நெருப்புக்கு பயந்து
வணங்கி வந்ததன் மிச்ச சொச்சம் என்பார்கள்

நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்
ஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு
ஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்
பிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்

அந்த வகையில் புரட்சித் தலைவர் பாணியில்
பாதி அளவு வெளிப்படு த்தி வெற்றி கண்ட
எஸ்.எஸ் ஆர் அவரகளது  பாணியை மிகச்
 சரியாகப் புரிந்து(இயக்கு நர் என்பதால்)
 தன் உடல் மொழி மற்றும்அது போன்ற
கதைகளை மட்டும்  தேர்ந்தெடுத்து
நடித்ததால் இவர் சில காலம் வெற்றி பெற்றார்
என்பது எனது கருத்து

 ( அவர் நடை உடை பாவனைகளை
 ஒப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்தால்
இது விஷய்ம்தெளிவாகப் புரி யும் )

தனக்கு அதிர்ஷ்டத்தால் அல்லது
மிகச் சிறந்த கதை அமைப்பால்
கரகாட்டக் காரனுக்குக்கிடைத்த வெற்றியை
 ராம ராஜன் அவர்கள் 
கொஞ்சம் அதிகப்படியாக
கற்பனை செய்து கொண்டு அகலக் கால்
வைத்ததால்தான் என்னவோ அவர்
அடியோடு  காணாமலும் போனார்

(தொடரும் )

26 comments:

பா.கணேஷ் said...

உண்மைதான் ரமணி ஸார்... ஆரம்ப நாட்களில் ராமராஜனிடம் வெளிப்பட்ட next door boy இயல்பான நடிப்பு பின்னாட்களில் ஹீரோயிசம் சேர்ந்ததும் எடுபடவில்லை. உங்களின் அலசல் அருமை. (த.ம.2)

Seeni said...

mm... unmaithaan!
nalla alasal!

Sasi Kala said...

கரகாட்டக்காரனுக்கு பிறகு சிறப்பான படம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் . சிறப்பான அலசல் தொடருங்கள் ஐயா தொடர்கிறோம் .
Tha.ma.3

வரலாற்று சுவடுகள் said...
This comment has been removed by the author.
வரலாற்று சுவடுகள் said...

tha.ma=4

ஸ்ரீராம். said...

தொடருங்கள். தொடர்கிறேன்!
மறுபடி மறுபடி ரீலோட் செய்தும் த.ம காணோம். எனக்குத் தெரியவில்லை.

கீதமஞ்சரி said...

அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவனிக்கிறேன். சொல்லவரும் கருத்துகளை மிகவும் தெளிவாகவும் கருவை விட்டுப் பிறழாமலும் கொண்டு செல்லும் விதம் ரசிக்கவைக்கிறது. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன் ரமணி சார்.

AROUNA SELVAME said...

நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்
ஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு
ஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்
பிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்-ù

இந்தக் கருத்து சினிமாவிற்கு மட்டுமல்லாமல் நடைமுறையில் எவ்வளவு உண்மை என்று யோசிக்க வைக்கிறது ரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான அலசல்... ராமராஜன் - கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு கொஞ்சம் அதிகப்படியாக
கற்பனை செய்து கொண்டார் என்பது சரிதான்... :)

தமிழ்மணம் தெரியவில்லை... அதனால் வாக்கிடமுடியவில்லை.

மகேந்திரன் said...

தமிழ்த் திரைப்படங்களின்
உருமாற்றத்தையும்
கருமாற்றத்தையும்
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...

அப்பாதுரை said...

பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Ramani said...

அப்பாதுரை //

பாக்யராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

மெருகூட்டப்பட்ட கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ?

Ramani said...

பா.கணேஷ் //

உண்மைதான் ரமணி ஸார்... ஆரம்ப நாட்களில் ராமராஜனிடம் வெளிப்பட்ட next door boy இயல்பான நடிப்பு பின்னாட்களில் ஹீரோயிசம் சேர்ந்ததும் எடுபடவில்லை. உங்களின் அலசல் அருமை//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //
..
mm... unmaithaan!
nalla alasal!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala //

சிறப்பான அலசல் தொடருங்கள் ஐயா//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

தொடருங்கள். தொடர்கிறேன்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கீதமஞ்சரி //
.
அலசல்களை வியப்புடன் வாய்பிளந்து கவனிக்கிறேன். சொல்லவரும் கருத்துகளை மிகவும் தெளிவாகவும் கருவை விட்டுப் பிறழாமலும் கொண்டு செல்லும் விதம் ரசிக்கவைக்கிறது. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //.

...இந்தக் கருத்து சினிமாவிற்கு மட்டுமல்லாமல் நடைமுறையில் எவ்வளவு உண்மை என்று யோசிக்க வைக்கிறது//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //
.
சுவையான அலசல்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //
.
தமிழ்த் திரைப்படங்களின்
உருமாற்றத்தையும்
கருமாற்றத்தையும்
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மாலதி said...

நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப்பு தொடர்க.....

அப்பாதுரை said...

கே எஸ் கோபாலகிருஷ்ணன்? சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
நடிகர் பாக்யராஜைப் பற்றிக் கேட்டேன்.
அந்த நாளில் "எம்ஜிஆரின் வாரிசு" என்றழைக்கபட்டவர் இல்லையா? (எம்ஜிஆரே அப்படிச் சொன்னதாக நினைவு)
பாக்யராஜின் வெற்றியும் என்னைக் குழப்பியிருக்கிறது என்று சொல்லவந்தேன். அருமையான திரைக்கதையை வைத்து தன்னை முன்னுக்குத் தள்ளியவர். உழைப்பாளி. ஆனால் மற்றபடி நடிப்பு, கலையம்சம் எல்லாமே கேள்விக்குறி என்றே தோன்றியது.

Ganpat said...

@அப்பாதுரை:

எம்.ஜி.ஆர் என்ற மாயாஜால நிபுணர் ஒரு உயரமான தொப்பி அணிந்துகொண்டு ,கையில் ஒரு கோலை வீசி வீசி தந்திரங்கள் பல செய்து பார்வையாளர்கள் மனதை சுண்டி இழுத்த வண்ணம் இருந்தார்.
அதைப்பார்த்த சிலர்,இந்த தொப்பியையும்,கோலையும் தரித்தால் யார் வேண்டுமானாலும் மாயாஜால நிபுணர் ஆகிவிடலாம் என அப்பாவித்தனமாக நம்பி,முயற்சி செய்து பெருந்தோல்வி அடைந்தனர்.அவர்கள்...
மு.க.முத்து,பாக்யராஜ்,ராமராஜன்.
இவ்வுலகில்,பெரும் திறமைசாலிகளையும் ,பேரதிருஷ்டசாலிகளையும் copy அடிக்க நினைப்பது கேலிக்கூத்தாகிவிடும்.

Ramani said...

மாலதி //

நல்ல விமர்சனத்துடன் கூடிய சிறந்த கட்டமைப்பு தொடர்க.....//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அப்பாதுரை //

பாக்யராஜின் வெற்றியும் என்னைக் குழப்பியிருக்கிறது என்று சொல்லவந்தேன். அருமையான திரைக்கதையை வைத்து தன்னை முன்னுக்குத் தள்ளியவர். உழைப்பாளி. ஆனால் மற்றபடி நடிப்பு, கலையம்சம் எல்லாமே கேள்விக்குறி என்றே தோன்றியது//


தங்கள் கருத்து மிகச் சரி
பாக்கியராஜ் அவர்களை எனது கலையுலக வாரீசு என
மக்கள் திலகம் அவர்கள் சொன்னது நிஜமே
அது பெண்களை அதிகம் கவரும்படியான
கதையம்சம் கொண்ட படங்களைத் தந்ததற்காக
இருக்கலாம் மற்றபடி நடிப்பைப் பொருத்தவரை
அவ்ரை புரட்சி நடிகர் பாணி நடிகராக
ஏற்றுக் கொள்வது கடினமே
அத்னால்தான் என்னவோ அவருடைய கதை தவிர
வேறு யாருடைய படங்களிலும் துணை நடிகராக
பரிமளித்த அளவு கதா நாயகனாக ஜொலிக்கவில்லை
அதனால்தான் அவரை நடிகராக கணக்கில் கொள்ளாமல்
பெண்களைக் கவருகிறவிதமாக் அதிக படங்கள் கொடுத்த
இயக்கு நர் திலகம் கோபாலகிருஸ்னன் அவர்களுடன்ஒப்பிட்டேன்
அவர் படங்க்களில் கொஞ்சம் வசனம் கூடுதலாக இருக்கும்
பாக்கியராஜ் அவர்கள் படங்களில் அது கொஞ்சம்
ரசிக்கும்படியாக இருக்கும்
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //

தொப்பியையும்,கோலையும் தரித்தால் யார் வேண்டுமானாலும் மாயாஜால நிபுணர் ஆகிவிடலாம் என அப்பாவித்தனமாக நம்பி,முயற்சி செய்து பெருந்தோல்வி அடைந்தனர்.அவர்கள்...
மு.க.முத்து,பாக்யராஜ்,ராமராஜன்.
இவ்வுலகில்,பெரும் திறமைசாலிகளையும் ,பேரதிருஷ்டசாலிகளையும் copy அடிக்க நினைப்பது கேலிக்கூத்தாகிவிடும்.//

மிகச் சரியான கருத்து
தலைவரின் காரை நான் வைத்திருக்கிறேன் என
ஒரு நடிகர் சொல்லுகிற மாதிரி
தலைவரின் திறமைகளில் ஏதாவது ஒன்றையும்
சிறந்த குணங்களில் ஏதோ ஒன்றையும்
நடை உடை பாவனைகளில் ஏதோஒன்றையும்
காப்பியடித்து தானும் தலைவர்போலத்தான்
காட்டிக் கொள்ள முயற்சிப்பது
கான மயிலாட காத்திருந்த வான்கோழி என்கிற
பழமொழியைத்தான் ஞாபகப் படுத்திப்போகிறது
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment