Friday, June 15, 2012

"அது"


பேசுகையில் மிகத் தெளிவாகவும்
எழுதுகையில் மட்டும்
குட்டையைக் குழப்பும் நண்பன்
மீண்டும்
ஒரு படைப்பைக் கொடுத்துச் சோதித்தான்
அதன் தலைப்பு "அது"வாக இருந்தது

"அதை இதற்கு முன்பு
பார்த்த ஞாபகம் இல்லை
புதியதாக இருந்தது
புரியாமலும் இருந்தது
அதனால்
புதிராகவும் இருந்தது

எட்ட நின்று
அதனைப்பார்த்தேன்
அதன் சூழல் புரிந்தது

மிக அருகில் நின்று
அதனைப் பார்க்க
சூழலுக்குள்
அதன் நிலை புரிந்தது

அணு சரனையாக
அதனைப் பார்க்க
அதன் சிறப்பு புரிந்தது

வெறுப்புடன்
அதனைப் பார்க்க
அதன் "கருமை"புரிந்தது

முற்றாக அதனைவிடுத்து
வெளியேறிப் பார்க்க
அது இல்லாமலே போனது

அத்னுள் இருந்து
அதன் பார்வையில் பார்க்க
அதுவே எல்லாமாக இருந்தது

இப்போது அது
புதிதாக்வும் இல்லை 
புதிராகவும் இல்லை
புரிந்ததாக மாறி இருந்தது "

எனக்கேதும் புரியவில்லை
சிறுபிள்ளைத்தனமாக அது என்றால்
எது என்றேன்

அவன் சிரித்தபடி
எல்லாமும்தான் என்றான்

58 comments:

vanathy said...

வித்யாசமான & ரசிக்கும்படியான எழுத்துக்கள். தொடர வாழ்த்துக்கள்.

Lali said...

காலை வணக்கம்! :)
அர்த்தங்கள் பொதிந்த சிந்தனை.
இருமுறை படித்தேன்.. // அவன் சிரித்தபடி
எல்லாமும்தான் என்றான்//
உண்மை தான், அனைத்திற்கும் 'அது' பொருந்தும்

பா.கணேஷ் said...

‘அது’ எதுவென்பதை மிக ஆழ்ந்து யோசிக்க வைத்து விட்டீர்கள். கண்ணதாசனின் அனுபவம் பற்றிய கவிதைதான் நினைவுக்கு வந்தது. அருமையான சிந்தனை. பகிர்விற்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அது என்றால்.... எல்லாமும் தான்... :) நல்ல சிந்தனை....

த.ம. 3

புலவர் சா இராமாநுசம் said...

அது, எது எனத்தேடி இது வென மயங்கி முடிவில் எல்லாமே அதுவென முடித்துவட்டீர். வர வர தங்கள் பதிவு ஒரு வித்தியாசமான,சிந்தனையைக் கிளரும் ஓன்றாக எனக்குத் தோன்றுகிறது!நன்று!

த ம ஓ 4 சா இராமாநுசம்

மனசாட்சி™ said...

வணக்கம்

அது' சொன்ன விதம் அது......

Sasi Kala said...

அது எது என்றால் எல்லாமும் நல்ல பதில் . அருமை ஐயா.
Tha.ma.5

வரலாற்று சுவடுகள் said...

வித்தியாசமாய் ரசிக்க வைத்தது.!

Tha.Ma 6

சிட்டுக்குருவி said...

கடைசியில் என்ன ரெட் படத்தை பற்றி சொல்லிவிடுவீர்களோ என ஒரு சின்ன பயமும் வந்தது..:)

வித்தியாசமான வரிகள் TM 7

செய்தாலி said...

அது கவிதை கொஞ்சம் தூக்கலா இருக்கு சார்
ரசிக்கும்படியாகவும் இருந்தது சார்

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் அது இது என்பதால் ஆழ்வார்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு விவாதம் ஞாபகம் வந்தது. அது இதுதான்.....

"செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" இது சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்ட கேள்வி. சடகோபர் சொன்ன பதில் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"

Ganpat said...

அது=Eye of the beholder =நோக்குபவனின் மனப்பாங்கு
என்ன சரியா?

சீனு said...

//எனக்கேதும் புரியவில்லை
சிறுபிள்ளைத்தனமாக அது என்றால்
எது என்றேன்//

அதுவாக இருக்குமோ என்று எண்ணிப் பார்த்தேன் அது இல்லை, ஏன் அதுவாக இல்லை என்று எண்ணிப் பார்த்தேன் அதன் எல்லாமுமே அது தான் என்று சொல்லி விடீர்கலே அப்புறம் அது எதுவாக இருந்தால் நமக்கென்ன.


ஹா ஹா ஹா எப்புடி


படித்துப் பாருங்கள்

ஹாய் கங்ராட்ஸ்

மோகன் குமார் said...

அது என்றால் எது ???

மகேந்திரன் said...

உங்கள் கவிதையிலும் அது இருக்கிறது நண்பரே..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓஹோ! அது தானா அது!!

OK OK அது எதுவாக இருப்பினும் OK OK !!!

விச்சு said...

கடைசிவரை அது எதுன்னே சொல்லலை. ஆனாலும் நிறைய யோசிக்க வைத்தது.

ஸ்ரீராம். said...

"அது!"

Anonymous said...

அது எது? பொதுவாக உள்ளது.
புதிதாக ஏதுமில்லை வார்த்தை விளையாட்டாக உள்ளதோ?..
Vetha. Elangathilakam.

angelin said...

ஒன்று தெளிவாக புரிகிறது
அது // யாதுமாகி நிற்கிறது .

விமலன் said...

புரிந்தும் புரியாததுமாக உள்ள எழுத்துக்கள் நிறையவேவும்,அதை தூக்கிப்பிடிப்பவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Seeni said...

rasanaiyaana ezhuthu!

முனைவர்.இரா.குணசீலன் said...

“அது“ நன்றாகவுள்ளது அன்பரே.

G.M Balasubramaniam said...

குட்டையைக் குழப்பும் நண்பன், கடைசியில் ஒரு கூக்லி போட்டு அது எதுவுமாகலாம் எனக் கூறி அவரவர் இஷ்டப்படி தெளிந்து கொள்ளுங்கள் என்று போய்விட்டாரே. கவிதை வேறொரு தளத்தில் ரசிக்க வைக்கிற்து. வாழ்த்துக்கள்.

VENKAT said...

மாடர்ன் ஆர்ட் பக்கத்தில் போய் நிற்கும் அனுபவம் தருகிறது 'அது'.

யுவராணி தமிழரசன் said...

Sir! அது என்று எதை நினைத்தாலும் "அது எல்லாமும் தான்" என்றது போல அனைத்திற்கும் ஒத்து வருகிறது! ஒவ்வொன்றையும் நாம் பார்க்கும் போது நமது வெவ்வேறு கண்ணோட்டங்களை கூர்ந்து கவனிப்பதாய் இருந்தது Sir!

ananthu said...

அது மனது ?! அவரவர் சிந்தைக்கே விட்டிவிட்ட பாங்கு அருமை ...

AROUNA SELVAME said...

அடடா... அது இதுதானா....

நல்ல சிந்தனை ரமணி ஐயா.

Ramani said...

vanathy


தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Lali
.. // அவன் சிரித்தபடி
எல்லாமும்தான் என்றான்//
உண்மை தான், அனைத்திற்கும் 'அது' பொருந்தும்

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

பா.கணேஷ் //

‘அது’ எதுவென்பதை மிக ஆழ்ந்து யோசிக்க வைத்து விட்டீர்கள். கண்ணதாசனின் அனுபவம் பற்றிய கவிதைதான் நினைவுக்கு வந்தது. அருமையான சிந்தனை. பகிர்விற்கு நன்றி.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
விரிவான உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

அது என்றால்.... எல்லாமும் தான்... :) நல்ல சிந்தனை..//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //.

வித்தியாசமான,சிந்தனையைக் கிளரும் ஓன்றாக எனக்குத் தோன்றுகிறது!நன்று!//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
விரிவான உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மனசாட்சி™ //

அது' சொன்ன விதம் அது......

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala //

அது எது என்றால் எல்லாமும் நல்ல பதில் . அருமை ஐயா.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //

வித்தியாசமாய் ரசிக்க வைத்தது.!//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சிட்டுக்குருவி //


வித்தியாசமான வரிகள்//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

செய்தாலி //

அது கவிதை கொஞ்சம் தூக்கலா இருக்கு சார்
ரசிக்கும்படியாகவும் இருந்தது சார்//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
விரிவான உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //

அது=Eye of the beholder =நோக்குபவனின் மனப்பாங்கு
என்ன சரியா?


மிகச் சரி
தங்கள் வரவுக்கும் சுருக்கமான
ஆயினும் மிகத்தெளிவான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

சீனு //


அதுவாக இருக்குமோ என்று எண்ணிப் பார்த்தேன் அது இல்லை, ஏன் அதுவாக இல்லை என்று எண்ணிப் பார்த்தேன் அதன் எல்லாமுமே அது தான் என்று சொல்லி விடீர்கலே அப்புறம் அது எதுவாக இருந்தால் நமக்கென்ன.

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஹா ஹா ஹா எப்புடி //

Ramani said...

மோகன் குமார் //

அது என்றால் எது ???//

விளக்கமாகத் தனியாக ஒரு பதிவிட்டுள்ளேன்
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன்//
.
உங்கள் கவிதையிலும் அது இருக்கிறது நண்பரே..//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

ஓஹோ! அது தானா அது!!
OK OK அது எதுவாக இருப்பினும் OK OK !!!//

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு //
.
கடைசிவரை அது எதுன்னே சொல்லலை. ஆனாலும் நிறைய யோசிக்க வைத்தது.//

விளக்கமாகத் தனியாக ஒரு பதிவிட்டுள்ளேன்
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

"அது!"//

தங்கள் வரவுக்கும் சுருக்கமான
ஆயினும் மிகத்தெளிவான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

kovaikkavi //

அது எது? பொதுவாக உள்ளது.
புதிதாக ஏதுமில்லை வார்த்தை விளையாட்டாக உள்ளதோ?..//

நிச்சயமாக இல்லை என்பதற்காக
தனியாக ஒரு பதிவு எழுதியுள்ளேன்
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

angelin //

ஒன்று தெளிவாக புரிகிறது
அது // யாதுமாகி நிற்கிறது //

தங்கள் வரவுக்கும் சரியான புரிதலுடன் இடப்பட்ட
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

விமலன் //

புரிந்தும் புரியாததுமாக உள்ள எழுத்துக்கள் நிறையவேவும்,அதை தூக்கிப்பிடிப்பவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

அப்படி இல்லை புரிந்துதான் பின்னூட்டமிடுகிறார்கள்
என்பது எனது தாழ்மையான கருத்து
காற்றடித்தெல்லாம் பிணத்திற்கு உயிரூட்ட முடியாது
இதற்கு விளக்கப் பதிவாக தனியாக பதிவும் கொடுத்துள்ளேன்
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

rasanaiyaana ezhuthu!//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

முனைவர்.இரா.குணசீலன் //

“அது“ நன்றாகவுள்ளது அன்பரே.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

குட்டையைக் குழப்பும் நண்பன், கடைசியில் ஒரு கூக்லி போட்டு அது எதுவுமாகலாம் எனக் கூறி அவரவர் இஷ்டப்படி தெளிந்து கொள்ளுங்கள் என்று போய்விட்டாரே. கவிதை வேறொரு தளத்தில் ரசிக்க வைக்கிற்து. வாழ்த்துக்கள்./

என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

VENKAT //
...
மாடர்ன் ஆர்ட் பக்கத்தில் போய் நிற்கும் அனுபவம் தருகிறது 'அது'//

வழக்கம்போல வித்தியாசமாக
அருமையான மிகச் சரியாகப் புரிந்து
பின்னூட்டமிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

Ramani said...

யுவராணி தமிழரசன் //

Sir! அது என்று எதை நினைத்தாலும் "அது எல்லாமும் தான்" என்றது போல அனைத்திற்கும் ஒத்து வருகிறது! ஒவ்வொன்றையும் நாம் பார்க்கும் போது நமது வெவ்வேறு கண்ணோட்டங்களை கூர்ந்து கவனிப்பதாய் இருந்தது Sir!/

தங்கள் வரவுக்கும் சரியான புரிதலுடன் இடப்பட்ட
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ananthu //

அது மனது ?! அவரவர் சிந்தைக்கே விட்டிவிட்ட பாங்கு அருமை ..//

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //

அடடா... அது இதுதானா....
நல்ல சிந்தனை ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும்
பின்னுட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சென்னை பித்தன் said...

அதுதான் எல்லாமுமே!அது,இது,எது?

Ramani said...

சென்னை பித்தன் //


வழக்கம்போல வித்தியாசமாக
அருமையான மிகச் சரியாகப் புரிந்து
பின்னூட்டமிட்டமைக்கு மனமார்ந்த நன்றி//

Post a Comment