Tuesday, June 26, 2012

வட்டத்தை நேராக்குவோம்

உடல் சுகமே சதமென
விலங்கொடு விலங்காய்
காட்டிடை வாழ்ந்தவன் காலம்
கற்காலமே

மனமும் அறிவும்  விரிய
அகம் புறமென
வாழ்வியல் நெறி கண்டு
வாழ்வாங்கு வாழந்தவன் காலம்
நிச்சயம நற்காலமே

இகம்  பரமென
இரு நிலை வகுத்து
மனமடக்கும் வழிதனை
உலகுக்கு உணர்த்தி
வாழ்ந்தவன் காலமும்
உன்னதப் பொற்காலமே

சுகமே சதமென
அதற்கென எதையும்
பலிபீடமேற்றத்
தயாரானவனின்
இன்றைய காலம்
எக்காலம் ?

யோசித்துப் பார்க்கையில்
ஒருசிறு படி கடந்தால்
முதல் நிலை சர்வ நிச்சயமெனும்
சாத்தியம் மனத்துள்
சங்கடமேற்படுத்திப் போகிறது

எப்போதும்
அவ நம்பிக்கையூட்டிப் போகும்
விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற
பகுத்தறிவு நண்பனும்
"இயற்கையின் சுழற்சி எப்போதும்
இயல்வட்டமோ
நீள் வட்டமோதான்
புறப்பட்ட இடம் சேருதற்கே
அதிக சாத்தியம்  "என
பயமுறுத்திப் போகிறான்

குழம்பிக் கிடைக்கியில்
ஆதாரங்களைத் தேடாது
எதையும் நம்பித் தொலைக்கும்
பகுத் தறிவற்ற நண்பனோ
"வட்டங்களைச் சிதைப்பது மிக எளிது
அவ நம்பிக்கை மையப் புள்ளியினை
சிதைத்தால் போதும்
வட்டம் சிதைந்து
நேர்கோடாகிப் போகும்" என்கிறான்

"எப்படிச் சாத்தியம் " என்கிறேன்

" பூமிக்கு வெளியில்
உறுதியாய் நிற்க ஒரு இடமும்
நெம்புகோலும் இருப்பின்
பூமியை நகர்துதல் சாத்தியம்
எனச் சொன்னவனின் தொடர்ச்சி நாம்
வட்டத்தை உடைத்து நேராக்குதல்
அதை விடப் பெரிய விஷமில்லை "என்கிறான்

எனக்கும் இப்போது
நம்பிக்கையுடன்  கொஞ்சம் முயன்றால்
வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை எனத்தான் படுகிறது

உங்களுக்கு ?

51 comments:

ஸ்ரீராம். said...

பொற்காலத்திலிருந்து மறுபடியும் கற்காலத்துக்கு? உருண்டை பூமியில் எல்லாமே சுழற்சிதானே!

பா.கணேஷ் said...

வட்டம் நேராகிறதோ இல்லையோ... நம்பிக்கை இருந்தாலே பெரிது, அதுவே போதுமென்றுதான் தோன்றுகிறது எனக்கு. (3)

Avargal Unmaigal said...

ரமணி சார் நம்பிக்கைமேல் நமக்கு நம்பிக்கை இருந்தாலே போதும்! அது நம்மை விரும்பிய இடத்திற்கு அழைத்து செல்லும்! அதனால் நம்பிக்கை வைத்துதான் பார்ப்போமே

Ganpat said...

செய்யவேண்டியவற்றை குறைவின்றி செய்துவிட்டு,நம்பிக்கையுடன் இருப்பதே வெற்றி தரும்.
இன்று நம்பிக்கையே ஒரு செயல் எனும் தவறான புரிதலுடன் நாம் செய்வதறியாது மயங்கி இருக்கிறோம்.இது நமக்கு எந்த வகையிலும் உதவாது.

புலவர் சா இராமாநுசம் said...

தத்துவப் பாதையில் தங்கள் பதிவு சென்றுகொண்டிருப்பது சிந்தைக்கு விருந்தே!

த ம ஓ 4

சா இராமாநுசம்

சத்ரியன் said...

முயன்று பார்க்கலாமோ?!

வரலாற்று சுவடுகள் said...

hard work never fails (7)

சின்னப்பயல் said...

வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை

vanathy said...

வழக்கம் போலவே உங்கள் பாணியில் கவிதை அசத்தல். தொடர வாழ்த்துக்கள்.

Athisaya said...

யோசித்துப் பார்க்கையில்
ஒருசிறு படி கடந்தால்
முதல் நிலை சர்வ நிச்சயமெனும்
சாத்தியம் மனத்துள்
சங்கடமேற்படுத்திப் போகிறது....
எங்கிருந்து இத்தனை புலமை???வியந்து போகிறேன்.வாழ்ததுக்கள்

Seeni said...

sarithaanu thonuthu!

தி.தமிழ் இளங்கோ said...

சூரியனின் வட்டத்திலிருக்கும் பூமியின் வட்டத்தினையும், வட்டத்திற்குள் வட்டம் போட்டு வாழும் கரைவேட்டி வட்டங்களையும் , நேரம் இருப்பின் நேராக்குவோம்.

சீனு said...

வட்டத்திற்குள் போராடாமல் வட்டத்தை நேர்கொடக்கி வெளியில் வந்து போராடச் சொல்லும் சிறந்த கவிதை

Lakshmi said...

எனக்கும் இப்போது
நம்பிக்கையுடன் கொஞ்சம் முயன்றால்
வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை எனத்தான் படுகிறது

ஆமா அப்படித்தான் படுது.

R.Punitha said...

Hi Ramani Sir ,

I'm Punitha of www.southindiafoodrecipes.blogspot.in

New to your fabulous space!!!

Inspired me a lot:))

Keep on Sir...

radhakrishnan said...

""யோசித்துப் பார்க்கையில்
ஒருசிறு படி கடந்தால்
முதல் நிலை சர்வ நிச்சயமெனும்
சாத்தியம் மனத்துள்
சங்கடமேற்படுத்திப் போகிறது""
முற்றிலும் உண்மை.ஆனல் நம்பிக்கையே வாழ்க்கை.
கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்

கவிதை நாடன் said...

இயற்கையின் சுழற்சி எப்போதும்
இயல்வட்டமோ
நீள் வட்டமோதான்
புறப்பட்ட இடம் சேருதற்கே
அதிக சாத்தியம்///absolutely true..

திகழ் said...

அழகான வரிகள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

Ramani said...

ஸ்ரீராம். //

பொற்காலத்திலிருந்து மறுபடியும் கற்காலத்துக்கு? உருண்டை பூமியில் எல்லாமே சுழற்சிதானே!//

தங்கள் முதல் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

பா.கணேஷ் //
.
வட்டம் நேராகிறதோ இல்லையோ... நம்பிக்கை இருந்தாலே பெரிது,//

தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

ரமணி சார் நம்பிக்கைமேல் நமக்கு நம்பிக்கை இருந்தாலே போதும்! அது நம்மை விரும்பிய இடத்திற்கு அழைத்து செல்லும்!//

தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //

இன்று நம்பிக்கையே ஒரு செயல் எனும் தவறான புரிதலுடன் நாம் செய்வதறியாது மயங்கி இருக்கிறோம்.இது நமக்கு எந்த வகையிலும் உதவாது//

மிகச் சரி
அதனால்தான் மையப் புள்ளியை மாற்றுவது குறித்தான்
செயலை பூடகமாகச் சொல்லி இருக்கிறேன்
தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி.

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தத்துவப் பாதையில் தங்கள் பதிவு சென்றுகொண்டிருப்பது சிந்தைக்கு விருந்தே! //

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

சத்ரியன் //
.
முயன்று பார்க்கலாமோ?!/

நிச்ச்யமாக
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //

hard work never fails (7)//

நிச்ச்யமாக
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

சின்னப்பயல் //

வட்டத்தை நேர்கோடாக்குதல்
அவ்வளவு கடினமில்லை//

தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

vanathy //

வழக்கம் போலவே உங்கள் பாணியில் கவிதை அசத்தல். தொடர வாழ்த்துக்கள்.//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

Athisaya //


எங்கிருந்து இத்தனை புலமை???வியந்து போகிறேன்.வாழ்ததுக்கள்//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

sarithaanu thonuthu!//

தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //
.
சூரியனின் வட்டத்திலிருக்கும் பூமியின் வட்டத்தினையும், வட்டத்திற்குள் வட்டம் போட்டு வாழும் கரைவேட்டி வட்டங்களையும் , நேரம் இருப்பின் நேராக்குவோம்.//

நான் மறைமுகமாகச் சொல்லமுயன்றதை
நேரடியாகச் சொல்லிவிட்டீர்கள்
தங்க்கள் வரவுக்கும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சீனு//
..
வட்டத்திற்குள் போராடாமல் வட்டத்தை நேர்கொடக்கி வெளியில் வந்து போராடச் சொல்லும் சிறந்த கவிதை//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

ஆமா அப்படித்தான் படுது.//

தங்கள் வ்ரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

R.Punitha //

New to your fabulous space!!!
Inspired me a lot:))
Keep on Sir...//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

radhakrishnan //.

முற்றிலும் உண்மை.ஆனல் நம்பிக்கையே வாழ்க்கை.
கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

கவிதை நாடன் //

absolutely true..//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

திகழ் //

அழகான வரிகள்
வாழ்த்துகள் //

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

சென்னை பித்தன் said...

நம்மால் முடியும் என்று நம்பவேண்டும் அல்லவா?!அருமை ரமணி!

சென்னை பித்தன் said...

த.ம.10

சிட்டுக்குருவி said...

சார் எனக்கு வைரமுத்த கவிதையின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...

சூரியனைப் படைக்க சொன்ன வரிகளைப் போல் ..இவ்வரிகளும்

தனிமரம் said...

நம்பிக்கையில் நானும் கற்காலம் தான் ரமனி ஐயா!

அம்பாளடியாள் said...

முயன்றால் எதுவும் முடியாதென்பது இல்லை
அதிலும் நம்பிக்கை இருந்தால் போதும்
எதுவும் சாத்தியம் ஆகும் .இதுவே எனது
கருத்தும் .அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
ஐயா ......

Ramani said...

சென்னை பித்தன் //
.
நம்மால் முடியும் என்று நம்பவேண்டும் அல்லவா?!அருமை ரமணி!//

நிச்ச்யமாக
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

சிட்டுக்குருவி//
.
சார் எனக்கு வைரமுத்த கவிதையின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

தனிமரம்//

நம்பிக்கையில் நானும் கற்காலம் தான் ரமனி ஐயா!//

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த பின்னூட்டத்திற்கும்
மனமர்ந்த நன்றி

Ramani said...

அம்பாளடியாள்//

முயன்றால் எதுவும் முடியாதென்பது இல்லை
அதிலும் நம்பிக்கை இருந்தால் போதும்
எதுவும் சாத்தியம் ஆகும் //

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

ரமேஷ் வெங்கடபதி said...

நம்பிக்கை ஒன்றே நம்மை வழிநடத்தும் சக்தி!
நன்று! வாழ்த்துக்களுடன்!

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி//

நம்பிக்கை ஒன்றே நம்மை வழிநடத்தும் சக்தி!
நன்று! வாழ்த்துக்களுடன்!

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

ஸாதிகா said...

வித்த்யாசமான தலைப்பில் வித்தியாசமான கட்டுரை

G.M Balasubramaniam said...

வட்டத்தை ஏன் நேராக்க வேண்டும்.?வட்டம் அழகானது. மூலைகள் இல்லாதது. ஆதி அந்தம் அறியப் படாதது, கடவுளுக்கு ஒப்பானது. அதன் நுணுக்கங்கள் புரியாததால் அதை நேராக்கினால் என்ன என்று தோன்றுகிறது. தேடலின் ஒரு வெளிப்பாடே இம்மாதிரி சிந்தனைகள். வாழ்த்துக்கள்.( பதிவுகளின் பக்கம் LOAD ஆக பல தடவை முயல வேண்டி இருக்கிறது. )

Ramani said...

ஸாதிகா //

வித்த்யாசமான தலைப்பில் வித்தியாசமான கட்டுரை//

தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

தேடலின் ஒரு வெளிப்பாடே இம்மாதிரி சிந்தனைகள். வாழ்த்துக்கள்.//


தங்கள் வ்ரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Post a Comment