Thursday, June 7, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)

பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள மூவரும்
காலியாகக் கிடந்த இடத்தை மிகச் சரியாகப்
புரிந்து கொண்டு களமிறங்கியதால்தான் அவர்களால்
வெகு நாட்கள் நீடித்து திரையுலகில் பவனி வர
முடிந்தது என்பதை தற்போதைய இளைஞர்கள்
ஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான் கொஞ்சம் விரிவாகவே
இந்தப் பதிவைத் தொடர்கிறேன்

திரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து
மிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்
புரட்சி நடிகர் அவர்கள்.

திரைப்படம் என்பது பொழுது போக்கு
அம்சத்திற்கானதேபாடுபட்டு பல்வேறு
துயருக்கிடையில் அவதியுறும்
பாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்
 போகும் இடம்திரைப்படம் எனப்தில்
அவர் திட்டவட்டமாக இருந்தார்

கலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்
கலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்
அதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்
தனக்கென ஒரு புதிய பாணியை அவர்
அமைத்துக் கொண்டதால்தான் கடைசிவரையில்
திரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே
இருக்க முடிந்தது

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்
இருக்கும்படியாகவும் (செக்ஸ் இல்லாதபடியும் )
அதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்
ஏழைகளிடம் பரிவு கொள்ளுதல்
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு
பொய்யும் பித்தலாட்ட்டமும்
இறுதியில் தோற்றே தீரும் முதலான
 விஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து
ஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட
படங்களைத் தொடர்ந்து தந்தாலும் நடிகர் திலகம் போல்
கதாபாத்திரத்தில் தன்னை ஒளித்துக் கொள்ளாமல்
கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .

ஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற
திருடனாக நடித்திருப்பார்.அவர் ஜெயிலில்
இருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை
 ஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்
சூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்
அருகில் இருந்த தள்ளுவண்டிக்காரனிடம்
அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி
நூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போதே
குழந்தைகளின் பெற்றோர் "திருடனிடமா
வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் "என குழந்தைகளை
அடித்து இழுத்துப் போவார்கள்.வியாபாரம்
ஆகாத சோகத்தில் தள்ளுவண்டிக்காரன்
நூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்

அந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்
"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை
திருப்பி வாங்கிப் பழக்கமில்லை "எனஓங்கி ஒலிக்கிறது

அவன் சொன்னது போலவே வேண்டாம்
வைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு
எம்.ஜி ஆர்.நடக்கத் துவங்கிவிடுகிறார்
தியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது

காவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான
சண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது
அவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை
உடைத்துக் கொண்டு செல்லும் .
கண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன
ஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்
அவர் கையைக் கவனிக்காமல் கையில்
கட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா
எனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க
அவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்

அவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்
திரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்
தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.

இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)

சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது
மற்றபடி எந்தக் காட்சி என்றாலும்
முன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது
படர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது
உண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு
நெஞ்சைத் தொட்டுக் காட்டுவது.,
அம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது
காதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து
விஷமப் புன்னகை பூப்பது,
கோபம் எனில் பற்களைக் கடிப்பது
அழுகை என்றால் எதையாவது வைத்து
முகத்தை மறைத்துக் கொள்வது அல்லது
தூணில் மறைந்து கொள்வது
மற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்
மிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்
என்பதில் மிகச் சரியாக இருந்தார்
கதைக்கும் அவரது ரசிகர்களுக்கு அதுவே
போதுமானதாகவே இருந்தது

அவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்
ஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்
மாறுபட்ட கதாபாத்திரமும்
புத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்
அவர் படத்தின் பால் எப்போதும் ஒரு
அதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன

இப்படி மக்கள் திலகமாகவும் நடிப்புத் திலகமாகவும்
இருந்த இரு துருவங்களுக்கிடையில்
நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களும்
காதல் மன்னன் ஜெமினி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ் ஆர் அவர்களும்
மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்ததும் அவர்கள்
நடித்த படங்கள் மிகச் சிறப்பாக ஓடியதும்தான்
மிகுந்த சுவாரஸ்யமான விஷயமே

(தொடரும்)

52 comments:

பா.கணேஷ் said...

எம்.ஜி.ஆரின் படங்கள் திரைக்கதையில் குழப்பம் இல்லாமல் (லாஜிக்கைப் பற்றி கவலைப்படாமல்) பாமரனுக்கும் புரியும் வண்ணம் இருக்கும். அவரது கதாபாத்திரப் பெயர்களும் ராமு, முருகன் என்று மிக எளிமையாகவே வைத்துக் கொள்வார். இப்படிப் பல விஷயங்களிலும் பார்த்துப் பார்த்துச் செய்ததால்தான் அவர் சிகரம். நல்ல நல்ல கருத்துக்களை தன் கதாபாத்திரங்களின் வழியாகவும் பாடல்கள் மூலமாகவும் போதித்தது அவரின் தனிச்சிறப்பு.

பா.கணேஷ் said...

த.ம.2

Anonymous said...

ராமராஜனும்...மணிவண்ணனும்...மோகனும் எனக்கு அவ்வளவாக பரிச்சியம் இல்லாதவர்கள் ரமணி சார்...

ஜெமினி கணேஷ் வெற்றி ஆச்சர்யம் தான்...

கோவி said...

முடிந்தால் எம் ஆர் ராதா பற்றி கொஞ்சம் விரிவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்..

சென்னை பித்தன் said...

எம்.ஜி.ஆரின் வெற்றி பற்றிய விரிவான அலசல்.

சென்னை பித்தன் said...

த.ம.5

Seeni said...

நல்ல எதார்த்தங்கள்!

வரலாற்று சுவடுகள் said...

பதிவை, அருமையாக கொண்டு செல்கிறீர்கள். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்ட இப்போதைய சூழ்நிலைகளில் பிறக்கும் குழந்தைகள் கூட எம்.ஜி.ஆர் படத்தை விரும்பிபார்க்கவே செய்கிறார்கள்., அவருக்கு இன்னமும் இருந்துகொண்டிருக்கும் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

tha.ma=7

மகேந்திரன் said...

மக்கள் திலகம் பற்றிய விரிவான
விவாதம் மிக நன்று நண்பரே...

வவ்வால் said...

ரமணி சார்,

//அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)//

இதுவே எனது கருத்தும், ஒத்த சிந்தனை என நானே எனக்கு பாராட்டிக்கிறேன் :-))

//கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .//

இதனை இயாக்குனர் பாலச்சந்தர் அவர்களின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதை படித்த நினைவு எனக்கு இருக்கு,

என் கடமை படத்திற்கு பாலச்சந்தர் அவர்கள் தான் வசனம் எழுதினாராம்,அப்போ ஆர்.எம்.வீ கூப்பிட்டு மாறன் என்ற கதாப்பாத்திரத்திற்கு வசனம் எழுதுவதாக நினைத்து எழுதாமல் ,எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எழுதுகிறோம் என நினைவில் வைத்து எழுதுங்கள் என்று நினைவுப்படுத்தினாராம்.

படத்தில் எல்லாம் ரொம்ப சாதாரணமாக தெரிந்தாலும் பல முன்னேற்பாடுகள் செய்துக்கொண்டு தான் களம் இறங்குவார் எனப்படித்துள்ளேன்.

எம்ஜிஆருக்கு பிறகு அந்த ஃபார்முலாவில் வெற்றிகரமாக பயணிப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே.

தி.தமிழ் இளங்கோ said...

எம்ஜிஆர் படங்களில் அவரை ரொம்பவே ரசித்து இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரைப் பற்றியும் தனித்தனி தலைப்புகளிலேயே பதிவுகளை போட்டு இருக்கலாம்.

கரிகாலன் said...

விரிவான கருத்துக்கள் நன்றி .இயக்குனர் சுந்தர்ராஜன்
னை விட்டுவிட்டிர்கள் .
(பொம்பிளைங்க காதலைதான் நம்பி விடாதிங்க பாடல்புகழ் )

கரிகாலன்

பா.கணேஷ் said...

@ வவ்வால்...
சார்... நீங்கள் குறிப்பிட்டபடி ஆர்.எம்.வீ. பாலச்சந்தரிடம் செர்ன்ன படம் தெய்வத்தாய். என் கடமை அல்ல என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமேஷ் வெங்கடபதி said...

நல்லதொரு அலசல்.தொடருங்கள்!

பலதரப்பட்ட மக்களின் பலதரமான ரசனைகளுக்கு தீனி போட்ட நடிகர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்! என்ன, அவர்களால் எம்ஜிஆரைப் போல உச்சம் தொட முடியவில்லை! அவரவர்க்கென ஒரு ரசிகவட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது!

ஒவ்வொரு ரஸிகனும் திரையில் வரும் நாயகனின் இடத்தில் தன்னையே பொருத்தி வைத்தே ரஸிப்பான்! விசில் பார்ட்டிகள் தன்பக்கம் அதிகம் என்பதால், எம்ஜிஆரால் மற்றவரை பின் தள்ளிவிட்டு ரேஸில் முன்னேற முடிந்தது!

Avargal Unmaigal said...

பழைய செய்திகளை மிக அழகாக இந்த புதிய உலகத்திற்கு மிக தெளிவாக சொல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ரமனி சார்.


எம்ஜியார் படங்களில் பாடல் மிக முக்கியம். அந்த காலத்தில் பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர் மற்றும் எம்ஜியார் எல்லோரும் சேர்ந்து பல நாட்கள் உட்கார்ந்து பேசி ஒரு பாடலை இறுதி நிலைக்கு கொண்டுவருவார்கள். சில சமயங்களில் பாடல் முடிந்ததும் சில சம்யங்களில் அந்த பாடல் சரியெல்லை என்று நினைத்து புதிய பாடலை இயற்றிவிடுவார்கள். அதனால்தான் என்னவோ பாடல்கள் இன்றுவரை நிலைத்து இருக்கிறது

வவ்வால் said...

கணேஷ் சார்,

நன்றி! ஹி..ஹி நினைவில் ஏதோ கொஞ்சம் நஞ்சம் ஒட்டியிருப்பதை வைத்து ஒப்பேற்றினேன். உங்க அளவுக்கு துல்லியமாக எல்லாம் எனக்கு நினைவில் இருப்பதில்லை.

எம்ஜிஆர் படங்கள் கமர்சியல் மசாலா படங்கள் என்றப்போதிலும் அவர் அனைத்திலும் ஒரு கவனம் வைத்திருப்பார் என்பதை குறிப்பிடவே சொன்னேன், ரமணி சாரும் வெற்றிக்கு அதனையே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம், பலன் கிடைக்கும் அது மசாலா படமாக இருந்தாலும் என்பதற்கு சாட்சி எம்ஜிஆரே!

சின்னப்பயல் said...

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்

Sasi Kala said...

இன்னமும் எம் .ஜி .ஆர் பாடல்கள் நமக்கு படிப்பினையாக உங்கள் பார்வையில் நாங்களும் ரசிக்கிறோம் .

Sasi Kala said...

ஐயா முடிந்தால் என் .எஸ் . கிருஷ்ணன் பற்றி அறிய ஆவல் .
த.ம .10 .

anbalagangomathi said...
This comment has been removed by a blog administrator.
ஹ ர ணி said...
This comment has been removed by the author.
ஹ ர ணி said...

nbalagangomathi said...
ரமணி சார்...

அருமை. இந்த ஒற்றைச் சொல்லால் மட்டும் நிறைவுபட்டுக்கொள்ளமுடியாது உங்களின் இந்த சினிமா குறித்த பதிவை. மிகச் சரியான காலக்கட்டத்தில் மிகச் சரியான பதிவு என்று நினைக்கிறேன். ஏனென்று சொன்னால் இன்றைய இளைஞர்களுக்கு சினிமா என்பதற்கான விளக்கம் வேறுவிதமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. பழையன கழிதல் என்பதை இங்கு பழையன நினைவுகூரல் அதனை உணரல் என்பதை உங்கள் கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கத் தொடங்கியிருக்கிறது. விரிவாகப் போனால் போகட்டும். எழுதுங்கள். சரியான சமயத்திற்குத் தேவையான மருந்து இக்கட்டுரை. உங்களின் கணிப்பும் சரியான தளத்தில் தொட்டுப்போகிறது.

மக்கள் திலகம் குறித்த உங்கள் பார்வை சரியான பார்வை. அவர் ஒரு சகாப்தம் என்றே சொலலலாம். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவரின் செயற்பாடுகள் ஒரு தேர்ந்த் வரலாற்றுக்குரியவை.

எனவே உங்கள் கட்டுரையைத் தொடருங்கள். அதனை நுர்லாக வடிவங்கொள்ளும்ளவுக்கு தகவல்கள் வந்தவுடன் நிறுத்திக்கொள்ளலாம்.

ராமராஜன் மணிவண்ணன் மோகன் இப்படியொரு கோணத்தில் இருந்து யாரும் பார்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

எனக்கும் இதுபோன்ற பல ஐயங்கள் உண்டு. வெண்ணிற ஆடை மூர்த்தி...எஸ்எஸ்.சந்திரன்...ஒருவிரல கிருஷ்ணாராவ்...தற்போது தொலைக்காட்சி நாடகத்தில் வரும் கோவை அனுராதா... இப்படி பல பேர் நடிகர் என்கிற அடையாளத்தில் இருந்தாலும் இவர்கள் யாருக்குமே நடிப்பு என்பது சுத்தமாக கிடையாது. ஆனாலும் இவர்கள் தொடர்ந்து இருப்பதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள அது என்ன எனப்தை அறிதல் வேண்டும்.

இது மட்டுமன்றி சில பிரபலமான நடிகர்கள் பண்பான நடிகர்களும் உண்டு. இவர்கள் குறிப்பிட்ட பார்முலா அசைவுகளைத் தவிரஎதையும் செய்யத் தெரியாதவர்கள். ஆனாலும் இவர்களையும் ரசித்திருக்கிறோம். அவற்றையும் நாம் ஆராயவேண்டிய தளத்தில் இருக்கிறோம்.

உங்கள் பதிவு பல சிந்தனைகளை உருவாக்கி வைக்கிறது. தொடருங்கள்.

ஹ ர ணி said...

ரமணி சார்... என்னுடைய கருத்துரைக்கு மேலே உள்ளதும் என்னுடைய இன்னொரு ஈமெயில் முகவரி. எனவே அதனை அழித்துவிடவும். நன்றி.

AROUNA SELVAME said...

சினிமா உலகைக் கண்முன் கொண்டு வருகிறீர்கள். என்னைப் போல் நிறைய சினிமா பார்க்காதவர்களுக்கு நிறைய நல்ல தகவல்கள் கிடைக்கின்றன.
நன்றிங்க ரமணி ஐயா.

வருண் said...

***இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)***

பாட்டாளிமக்கள் மட்டுமல்லாமல் நெறைய படித்தவர்கள் பலர் எம் ஜி ஆர் ரசிகர்கள். என்னால எம் ஜி ஆர் "நடிப்பை" ரசிக்க இயலாது. ஆனால், நான் மேலே சொன்னதுபோல் படித்தவர்கள் பலரும், பாட்டாளிகள் பலரும் ரசிப்பதை பார்த்து இருக்கிறேன். இப்படி பலரால் ரசிக்க முடிவதால், அவர் நடிப்பை விமர்சிப்பதை நிறுத்தியே ஆகவேண்டிய நிலைமை. பலருடைய ரசனைக்கு நாம் மரியாதை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்.

அதேபோல் இன்று, எம் ஜி ஆரை -அவருடைய பாஸிடிவ் பாயிண்ட்ஸை தேடிக் கண்டுபிடித்து, விரும்பியோ விரும்பாமலோ- புகழ்ந்து எழுதியே ஆகவேண்டிய ஒரு நிலைமை உருவாகிவிட்டது.

எம் ஆர் ராதா எல்லாம் ஜீனியஸ், இன்னொரு எக்ஸ்ட்ரீம் அவர், எம் ஜி ஆர் போல மக்களை எப்படி கவருவது, ஹீரொயினை எந்த ஆங்கிள காட்டுவது, காதல் சீன்ல ஹீரோயின் உடம்பில் எப்படி கைவைத்தால் ரசிகன் ரசிப்பான் என்றெல்லாம் ரிசேர்ச் செய்து, அதை செயல்ப்படுத்தி, என்ன வசனம் பேசுவது, என்று யோசித்து ஊருக்காக நடிக்காமல், "வெற்றி"யை மட்டும் மனதில் கொள்ளாமல், he expressed his own thoughts HONESTLY.

ஆனால், sadly, அந்த எம் ஜி ஆர் - எம் ஆர் ராதா காலத்திலும் சரி, இப்போ இருக்கிற வலைதள உலக வாழ்க்கையிலும் சரி, எம் ஜி ஆர் போல் உண்மையோ அல்லது ஜோடிக்கப்பட்ட உண்மையோ, பொய்யோ, ஆனால் மக்களுக்கு பிடித்ததை கொடுப்பவன்ந்தான் "வெற்றி" யடைவான். தன் உண்மையான கருத்தை எண்ணத்தை பகிர்பவன் வெற்றியடைவதில்லை! :)

ஸ்ரீராம். said...

செக்ஸ் இல்லாமல்.... ம்...ஹூம்... பிறகு வந்த அவர் படங்கள் நாளை நமதே போன்ற படங்களின் பாடல் காட்சிகள் பாடல் ரசிக்கும்படி இருந்தாலும் காட்சியைக் காண முடியாது!

அழுகை என்றால் எதையாவது வைத்து முகத்தை மறைத்துக் கொள்வது....... :)) உண்மை...உண்மை...

ஜெமினி கணேஷின் வெற்றி அந்தந்தப் படக் கதைகளின் வெற்றிகள்!

அப்பாதுரை said...

சுவாரசியமான தொடர்.
எம்ஜிஆருக்கு நடிக்க வராது என்பதால் ஒரு குறையும் இல்லை :) தைரியமாகச் சொல்லுங்கள். கத்திப் பேசுவது நடிப்பென்றால் கத்தி வீசுவதும் நடிப்புத்தான் என்றவராச்சே? ரிட்சாகாரன் படத்துக்கு அவார்ட் வாங்கியதின் பின்னணியில் அரசியல் தான் அதிகம் என்று படித்திருக்கிறேன்.
எம்ஜிஆரின் வெற்றி நீங்கள் சொல்வது போல் அவருடைய ரசிகர்களின் நாடியை துல்லியமாக அறிந்தவர். மற்ற நடிகர்களை விடப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது பெரிய காரணம். தொப்பையும் தொந்தியும் காசு கொடுத்து பார்க்க முடியாது சாமி.. அதுவும் ஆம்பிளைத் தொந்தி.. தேவையா?. இதை உணர்ந்த நடிகர்கள் எம்ஜிஆர், முத்துராமன், பிறகு சிவகுமார் (ஓரளவுக்கு), கமல்ஹாசன். ரஜினிகாந்த் is an odd success.
தொடருங்கள். விரும்பிப் படிக்கிறேன்.

அப்பாதுரை said...

செக்ஸ் இல்லாமல் எம்ஜிஆர் படமே இல்லை என்பது என்று நினைக்கிறேன். கதாநாயகிகளை அவர் தொடும் இடங்களும் விதங்களும் தணிக்கையிலிருந்து தப்பியது அவருடைய செல்வாக்கினால் என்றே நினைக்கிறேன். செக்ஸ் காட்சியில் இருக்கும், அல்லது பாடல் கருத்தில் இருக்கும்.

ஸ்ரீராம். said...

எம் ஜி ஆர் சினிமாவைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே கருத்துதான் கொண்டிருந்தார். மக்களை நம்பச் செய்வதுதானே என்பாராம். அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபோது முதலில் ஆஸ்பத்திரி வரவே மறுத்தாராம் . இமேஜ்! தான் தன் உடம்பை மெயின்டெயின் செய்யும் விதத்தில் தனக்கு ஒன்றும் நேராது என்று மிக நம்பினாராம். மற்ற நடிகர்கள் போல பவர் கிளாஸ் அணிந்து நடித்த எம் ஜி ஆர் படம் ஏதாவது உண்டா? எனக்குப் பார்த்த ஞாபகம் இல்லை!

ஸ்ரீராம். said...

அப்பாஜி.... சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இரண்டாம் பகுதி (என்று நினைக்கிறேன்) பதிவில் உங்கள் கமெண்ட்டுக்குக் காத்திருந்தேனே...!! :))

வருண் said...

***தொப்பையும் தொந்தியும் காசு கொடுத்து பார்க்க முடியாது சாமி.. அதுவும் ஆம்பிளைத் தொந்தி.. தேவையா?. ***

அப்பாதுரை அண்ணாச்சி! நீங்க எம் சி யாரு ரசிகரா இருந்துட்டுபோங்க. அவரை ரசிங்க. விசிலடிங்க!, அவருடைய காதல் லீலைகளை எல்லாம் என்சாய் பண்ணுங்க! இன்னொரு நடிகரை புடிக்கலையா ஒதுங்கிப் போங்க. ஆனால் நீங்க கடுமையாக விரமர்சித்தால்.. அப்புறம் உஙக அபிமான நடிகரும் கடுமையா விமர்சிக்கப்படுவார். எதுக்கு இதெல்லாம் சார்? Please stick with what you love about your favorite and leave favorite actors of others- not criticizing them. Thanks!

வருண் said...

***சிவாஜி பற்றி ரமணி சார் எழுதியிருந்த இரண்டாம் பகுதி (என்று நினைக்கிறேன்) பதிவில் உங்கள் கமெண்ட்டுக்குக் காத்திருந்தேனே...!! :)) ***

Mr. Sriram!

I suggest Mr. appadurai to just worship his idol and keep off from Sivaji as he does not know how to respect others' feelings! Thanks.

Ganpat said...

மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்..ரமணி ஸார்..you rock!

தர்மம் தலைகாக்கும்..இப்படத்தில் எம்.ஜி.ஆர்.ஒரு டாக்டர்.தர்ம ஆஸ்பத்திரி ஒன்று நடத்துவார்.முதலில் ஒரு "கொழுத்த" நபர வந்து தனக்கு பலநாட்களாக தூக்கம் வருவதில்லை என சொல்ல, அதற்கு

"சாப்பிட்டு சாப்பிட்டு உட்கார்ந்திருந்தால் எப்படி தூக்கம் வரும் ஓடி ஆடி வேலை செய்யுங்க.."
என பதிலளிப்பார்.
வந்தவர் பணம் கொடுக்காமல் வெளியேற முயல,"பீஸ்?" என்று எம்.ஜி.ஆர்.வினவுவார்..

"இது தர்ம ஆஸ்பத்திரிதானே!!" என அவர் இழுக்க ,இவர் சொல்லுவார்
"அது இல்லாதவர்களுக்கு!உமக்கு இல்லை" என்று.அவரும் ஒரு ஐந்து ரூபா தாளை எடுத்து கொடுக்க..(இப்போதான் எம்.ஜி.ஆர் சாதுர்யம் வருகிறது).."அதை அங்கே வைங்க" என மேஜையின் மூலையை காண்பிப்பார்.பணம் அங்கே வைக்கப்படும்.அடுத்து வரும் நோயாளி ஒரு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி."டாக்டர் ரொம்ப சோர்வாக இருக்கு!வேலையே செய்ய முடிவதில்லை" என பரிதாபமாக சொல்வார்..பரிசோதனை செய்தபிறகு டாக்டர் சொல்லுவார்..
"உங்கள் உடம்பில் குறையில்லை.நல்ல சத்தான உணவு சாப்பிடுங்கள்"
அவர் விரக்தியுடன் ,
"உணவிற்கே வழியில்லை!சத்திற்கு எங்கு போவது?" என்று வெளியேற எத்தனிப்பார்.அப்போ டாக்டர்,
"அந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என மேஜை ஓரத்தில் இருக்கும் ரூபா தாளை தன் விரலால் சுட்டிக்காட்டுவார்!!!
இதைவிட ஒரு visual media(m) ததை பிரமாதமாக பயன்படுத்த முடியாது.

"நிற்பதற்கு ஒரு இடமும்,தேவையான அளவிற்கு நீளமான ஒரு கழியும் கொடுங்கள்.நான் இந்த பூமியை நகர்த்தி காட்டுகிறேன்!"இது ஆர்கிமிடிஸ் சொன்னது.

"ஒரு ாமிராவையும்,விஸ்வனாதனையும்,
வாலியையும்,சௌந்தரராஜனையும் கொடுங்கள். நான் ஒரு மாநிலத்திற்கே முதலமைச்சர் ஆகி காட்டுகிறேன்!"
இது எம்.ஜி.ஆர்.சொல்லாதது (ஆனால் செய்து காண்பித்தது)
நன்றி.
பின் குறிப்பு:திரு அப்பாதுரையின் பின்னூட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.சத்தியமாக அவரிடமிருந்து இப்படி ஒரு எழுத்தை நான் எதிர்பார்க்கவில்லை."அப்பா" மீது அன்பிருக்கலாம் ஆனால் "துரை"யை மதிக்கவேண்டாமா?
ம்ம்ம்..என்றுதான் நாம் கங்கையைப்பழிக்காமல் காவிரியை புகழ கற்றுக்கொள்ளப்போகிறோமோ!

Ramani said...

பா.கணேஷ் //

எம்.ஜி.ஆரின் படங்கள் திரைக்கதையில் குழப்பம் இல்லாமல் (லாஜிக்கைப் பற்றி கவலைப்படாமல்) பாமரனுக்கும் புரியும் வண்ணம் இருக்கும். அவரது கதாபாத்திரப் பெயர்களும் ராமு, முருகன் என்று மிக எளிமையாகவே வைத்துக் கொள்வார். //

அருமையான தகவல்
தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரெவெரி //

ஜெமினி கணேஷ் வெற்றி ஆச்சர்யம் தான்..//

அடுத்த பதிவில் அவர் வெற்றி ரகசியத்தை
விளக்கலாம என உள்ளேன்
தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவி //

முடிந்தால் எம் ஆர் ராதா பற்றி கொஞ்சம் விரிவாக பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.//

அவர் ஒரு ஆச்சரியப்படத்தக்க
அதிகம் பேசப்படவேண்டிய நடிகர்
அடுத்த பதிவில் சிறிது சொல்லிப்போக நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Ramani said...

சென்னை பித்தன் //

எம்.ஜி.ஆரின் வெற்றி பற்றிய விரிவான அலசல்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //
.
நல்ல எதார்த்தங்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //

பதிவை, அருமையாக கொண்டு செல்கிறீர்கள். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்ட இப்போதைய சூழ்நிலைகளில் பிறக்கும் குழந்தைகள் கூட எம்.ஜி.ஆர் படத்தை விரும்பிபார்க்கவே செய்கிறார்கள்., அவருக்கு இன்னமும் இருந்துகொண்டிருக்கும் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன் //

தங்கள் வரவுக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //

மக்கள் திலகம் பற்றிய விரிவான
விவாதம் மிக நன்று நண்பரே...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வவ்வால் //

படத்தில் எல்லாம் ரொம்ப சாதாரணமாக தெரிந்தாலும் பல முன்னேற்பாடுகள் செய்துக்கொண்டு தான் களம் இறங்குவார் எனப்படித்துள்ளேன் //

மிகச் சரியான கருத்து
தங்கள் வரவுக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பா.கணேஷ் //
.
@ வவ்வால்...
சார்... நீங்கள் குறிப்பிட்டபடி ஆர்.எம்.வீ. பாலச்சந்தரிடம் செர்ன்ன படம் தெய்வத்தாய். என் கடமை அல்ல என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.//

உடன் பின்னூட்டங்களைப் படித்து பதில்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
அந்தப் படத்தில் கே. பாலச்சந்தர் வசனம் என்பது
நிறைய பேருக்குத் தெரியாது
சூரியனின் அதீத ஒளியில் அனைத்தும்
மறைந்து போவதைப் போல
தலைவர் படத்தில் பணியாற்றிய பல
கலைஞர்கள் கண்டுபிடித்துத்
தெரிந்துகொள்ளும்படியாகத்தான் இருப்பார்கள்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

நல்லதொரு அலசல்.தொடருங்கள்!

பலதரப்பட்ட மக்களின் பலதரமான ரசனைகளுக்கு தீனி போட்ட நடிகர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்! என்ன, அவர்களால் எம்ஜிஆரைப் போல உச்சம் தொட முடியவில்லை! அவரவர்க்கென ஒரு ரசிகவட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது//

!மக்களின் ரசிப்புத் தன்மையை நாடிபிடித்து
மிகச் சரியாக தெரிந்து
அதன் போக்கில் தன்னை
மாற்றிக் கொண்டதால்தான் அவரால்
கடைசிவரையில் முன்னனியில் இருக்க முடிந்தது.
தங்கள் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

பழைய செய்திகளை மிக அழகாக இந்த புதிய உலகத்திற்கு மிக தெளிவாக சொல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ரமனி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரைப் பற்றியும் தனித்தனி தலைப்புகளிலேயே பதிவுகளை போட்டு இருக்கலாம்.//

தங்கள் கருத்து மிகச் சரி
எனக்கும் கூட பின்னூட்டங்களைப் படித்த பின்புதான்
அப்படிச் செய்திருக்கலாமோ எனப் பட்டது
தங்க்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கரிகாலன் //

விரிவான கருத்துக்கள் நன்றி .இயக்குனர் சுந்தர்ராஜன்
னை விட்டுவிட்டிர்கள் //.

அவரையும் மனோ பாலா அவர்களையும்
ஒப்பிட்டு ஒரு பதிவு போடலாமா என ஒரு
எண்ணம் இருக்கிறது
தங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சின்னப்பயல் //

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான் //

அதை நேரடியாகக் கேட்டு அனுபவித்து ரசித்தவன்
அதனால்தான் இத்தனை ஆண்டு காலமாயினும் அதனை
மறக்க முடியவில்லை
தங்கள் வரவுக்கும் பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala //

இன்னமும் எம் .ஜி .ஆர் பாடல்கள் நமக்கு படிப்பினையாக உங்கள் பார்வையில் நாங்களும் ரசிக்கிறோம் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala s//

ஐயா முடிந்தால் என் .எஸ் . கிருஷ்ணன் பற்றி அறிய ஆவல் .//

நிச்சயமாக.
தங்கள் வரவுக்கும் பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹ ர ணி //.

மக்கள் திலகம் குறித்த உங்கள் பார்வை சரியான பார்வை. அவர் ஒரு சகாப்தம் என்றே சொலலலாம். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவரின் செயற்பாடுகள் ஒரு தேர்ந்த் வரலாற்றுக்குரியவை.//

தாங்கள் குறிப்பிடுகிற எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்
என்கிற வார்த்தை மிகப் பொருத்தமானதே
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //

சினிமா உலகைக் கண்முன் கொண்டு வருகிறீர்கள். என்னைப் போல் நிறைய சினிமா பார்க்காதவர்களுக்கு நிறைய நல்ல தகவல்கள் கிடைக்கின்றன.
நன்றிங்க ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //
..
மிகவும் ரசித்தேன்..மிகவும் ரசித்தேன்..ரமணி ஸார்..you rock! //

ம்ம்ம்..என்றுதான் நாம் கங்கையைப்பழிக்காமல் காவிரியை புகழ கற்றுக்கொள்ளப்போகிறோமோ!//

அருமையான விரிவான பின்னூட்டம்
கொஞ்சம் விரிவாகவே
பின்னுட்டமிட நினைத்தேன் அதனால
கால தாமதமாகிவிட்டது
சிறுவயது முதலே நான் இந்த அவஸ்தையை
அனுபவித்திருக்கிறேன்
சிவாஜியைப் புகழ்ந்தால் என்ன கட்சி மாறிவிட்டாய
என எம்.ஜி.ஆர் ரசிகர்கள் முறைக்க ஆரம்பிித்துவிடுவார்கள்
அப்போதிருந்தே நடு நிலை என்பது
சினிமா ரசிகர்களிடம் ஏனோ இல்லை
தாங்கள் குறிப்பிட்டுள்ள தர்ம்ம் தலைகாக்கும்
பட உதாரணம் அவருடைய நிஜ குணத்திற்கு
ஒரு நல்ல உதாரணம்
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment