Monday, July 16, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)

நிலவும் ஒளியும் மல ரும் மணமும்  
என்பதைப் போல மதுரையும் தமிழும் எனச்
சொல்லக் கூடிய அளவு இப்போதைப் போலவே
என்னுடைய கல்லூரி நாட்களிலும்
மதுரையில் தமிழ் தேனாறு பெருக்கெடுத்தோடும்

அரசமரம் பிள்ளையார் கோவிலில் நடக்கும்
குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையிலான
பட்டிமண்ட்பமாயினும் சரி அன்று கல்லூரிகள்
ஆண்டு முடிவில் போட்டி போட்டுக் கொண்டு
 நடத்தும் முப்பெரும் விழாவாயினும் சரி
சிறந்த  பேச்சாளர்கள் கலந்து கொள்கிற
எந்த அரசியல் கட்சிக் கூட்டமாயினும் சரி
நான் தவற விடுவதே இல்லை

ஒரு சமயம் மதுரை மருத்துவக் கல்லூரியில்
நடந்த முப்பெரும் விழாவில் கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்  பேச்சைக் கேட்கும்வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது.அந்த்க் கூட்டத்தில்தான்
அவருக்கு மது முதல் எதுவரை என்கிற தலைப்பை
அவர் பேச எழுந்த சமயத்தில் கொடுத்து
பேசச் சொன்னார்கள்

கண்ணதாசன் அவர்கள் சிறிது நேரம் கூட யோசிக்க
எடுத்துக் கொள்ளாமல் மட மட வென
மது முதலானால் மயானம் முடிவு
ஆசை முதலானால் அடக்கம் முடிவு எனத் துவங்கி
ஒரு ஐந்து நிமிடம் கூட்டத்தினரை தன்பேச்சால்
கிறங்கச் செய்துவிட்டார்

. ஒரு ஐந்து நிமிடம்
மிக உணர்சிகரமாகப் பேசியபிறகு  "இதெல்லாம்
உங்களுக்குசரிப்பட்டு வராது கொஞ்சம்
ஜாலியாகப் பேசுவோம்  "எனச் சொல்லி
தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்கள்
சினிமா அனுபவங்கள் என பேசத் துவங்கினார்

அரை மணி நேரம் பேசுவதாகவும் பின்
கவிய ரங்க நிகழ்ச்சி இருப்பதாகவும்
சொல்லிப் பேசத்துவங்கினார்

அரை மணி நேரம் முடிந்தது . பேச்சின் சுவையில்
கிறு கிறு த்துப்போன  மாணவர்கள் இன்னும்
அரைமணி நேரம் எனக் கூச்சலிட தொடர்ந்து
மீ ண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினார
இப்படித் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம்
பேசியும்  கூ ட இன்னமும் பேசிக்கேட்கவேண்டும்
என்கிற ஆவலே நான் உடபட அங்கிருந்த
 அனைவருக்கும் இருந்தது

இத்தனைக்கும் அந்தப் பேச்சு ஒரு பொருள்
குறித்த சொற்போழிவோ   ஒரு இலக்கியத் தரமான
சொற்பொழிவோ இல்லையென்பதுதான் ஒரு
ஆச்சரியமான விஷயம்

அவர்கூ  ட்டம் சிரிக்கவேண்டும் என நினைத்தால்
கூட்டம் சிரித்தது.உணர்ச்சிவசப்பட்டு
 உச்சுக் கொட்டவேண்டுமேன்றால் உச்சுக் கொட்டியது
அமைதி   காக்கவேண்டும்  என விரு ம்பினால்
அமைதி காத்தது

மிகச் சரியாக கூ ட்டத்தினரின் இயல்பைப்
 புரிந்து கொண்டுஅலட்டிக் கொள்ளாமல்
 ஒரு  கைதேர்ந்த மகுடிபோல்
கூட்டத்தை தன போக்கில் ஆ ட்டிவைத்ததை
 இ ன்று  நினைத்தாலும்  ஆச்சரியமாகத்தான் உளளது

கிராமங்களில் செட் டியார்   முறுக்கா
 சரக்கு முறுக் கா எனறு ஒரு சொலவடை உணடு
 .அந்த  வகையில்  பார்த்தால்
கவியரசர் அவரகளின்   பேச்சு அனறு செட்டியார்
முறுக்கு என்பதாகத்தான்    இருந்தது

அதே சமயம்  அதே கல்லூரியில்  அடுத்த வருடம்
இதே  நிகழ்ச்சியில் பேச கவிஞர் வாலி  அவர்களை
அழைத்திருந்தார்கள்.அப்போது நடந்த
மறக்கமுடியாத நிகழ்வை மிகச் சரியாக அனைவரும்
புரிந்து கொள்வதற்கு முன்னுரைதான் இந்தப்பதிவே
 அதை  நாளை  பதிவு செய்கிறேன்     

                   (தொடரும் )




67 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். இந்த விழாவில்தானா அல்லது வேறொரு கல்லூரி விழாவிலா, கவியரசர் தான் எழுதிய கவிதையை ஒரு மாணவன் மூலமும், மாணவர் எழுதிய கவிதையை தானும் வாசித்தது? அடுத்தது வாலியா... பலே! தொடருங்கள். பட்டிமண்டபம் - பட்டிமன்றம் என்ன வித்தியாசம்?

தமிழ்மணம் இன்னும் சப்மிட் செய்யவில்லையா?

ஸ்ரீராம். said...

Now voted!

Unknown said...

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !! உங்கள் பதிவுகள் மென்மேலும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரி
அந்தக் கூட்டத்தில்தான் தன்னுடைய கவிதையை
ஒரு மாணவனிடம் கொடுத்து படிக்கச் செய்து
அந்த மாணவனின் கவிதையை தன்னுடைய
கவிதை போல் படித்தார்.அவர் எதிர்பார்த்ததைப் போலவே
கண்ணதாசன் படித்த மாணவனின் கவிதைக்குத்தான்
கைத்தட்டல் அதிகம் இருந்ததுமாணவன் படித்த கண்ணதாசன் அவர்கள்
கவிதையை யாரும் அவ்வளவாக யாரும்
கண்டு கொள்ளவில்லை
பதிவின் நீளம் கருதி இதைச் சொல்லவில்லை
மிகச் சரியாக இதைக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

அனுபவங்கள் படிக்க நன்றாக உள்ளன.

தி.தமிழ் இளங்கோ said...

“ இந்த வார நட்சத்திரம் – தமிழ் மணத்தில் மின்னும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பிரதான பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கண்ணதாசன் பேச்சிலும் பாடிய பாடலிலும், எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாவிலும் மாணவர்கள் கிறங்கிப் போய்தான் இருந்தார்கள். தொடக்கம் அருமை! தொடரட்டும் புதுமை!

மின் வாசகம் said...

தமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ... தொடருங்கள் !!!

Unknown said...

முதற்கண் நட்சத்திரப் பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
கண்ணதாசன் பேச்சை பலமுறை கேட்டிருக்கிறன்!எப்போதும் சுவையாகத்தான் இருக்கும்
சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 5

சா இராமாநுசம்

Subramanian said...

அவரது பேச்சை தாங்கள் நேரில் கண்டு ரசித்ததைப்போல என்னாலும் கண்டு ரசிக்க முடியவில்லையே என்பதை நினைக்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அனுபவ பகிர்வுக்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நாங்கள் கேட்டறியாத தகவல்களை பதிவாகி இருக்கிறீர்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது.கண்ணதாசன் என்ற மேதையின் மேதாவிலாசத்தை இன்னும் சொல்லுங்கள் காத்திருக்கிறோம்
த.ம.6

வெங்கட் நாகராஜ் said...

முதற்கண் இந்த வார நட்சத்திர பதிவராக இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நாங்கள் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வின் சுவையை எங்களுக்கும் பருகத் தந்த உங்கள் நல்லுள்ளத்திற்கு ஒரு பூங்கொத்து!

த.ம. 6. தொடர்ந்து அசத்துங்கள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆறாவது ஓட்டை நான் போடுமுன் நண்பர் சுப்பிரமணியம் முந்திவிட்டார். நான் ஏழாவது ஓட்டுதான் போடமுடிந்தது..

இராஜராஜேஸ்வரி said...

இந்த வார தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

கற்றுக் கொண்டதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் பாராட்டுக்கள் ஐயா..

Unknown said...

அருமை சகோ ... நாளை வாலி ஐயா பற்றி படிக்க ஆவல் பெருகுது சீக்கிரம் தொடருங்கள் ,,,அருமையான பதிவு

பால கணேஷ் said...

கண்ணதாசன் பேச்சிலும் வல்லவர் என்பைதை கேள்விப்பட்டதுண்டு. இப்போது உங்களின் மூலம் மற்றொரு நிரூபணம். காவியக் கவிஞரின் பேச்சைப் பற்றிச் சொல்வதாக ஆவலைத் தூண்டிவிட்டு காத்திருக்கச் செய்து விட்டீர்களே தமிழ்மண நட்சத்திரமே... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். (9)

குறையொன்றுமில்லை. said...

தமிழ் மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள் சுவாரசியமான சொற்பொழிவுகள் கேட்க கொடுத்துவைத்தவர் நீங்கள் அதை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது இன்னமும் சந்தோஷம்

கோவி.கண்ணன் said...

என்றோ நடந்ததை எடுத்து அப்படியே நிகழ்வு மாறாமல் எழுதும் திறமை சிலருக்கு தான் வரும், பாராட்டுகள்

சாந்தி மாரியப்பன் said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கண்ணதாசன் அவர்கள் சிறிது நேரம் கூட யோசிக்க
எடுத்துக் கொள்ளாமல் மட மட வென
மது முதலானால் மயானம் முடிவு
ஆசை முதலானால் அடக்கம் முடிவு எனத் துவங்கி
ஒரு ஐந்து நிமிடம் கூட்டத்தினரை தன்பேச்சால்
கிறங்கச் செய்துவிட்டார்// ;)))))

கற்றுக் கொண்டதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் பாராட்டுக்கள்.

இந்த வார தமிழ்மண நட்சத்திரப் பதிவராக ஜொலிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

MARI The Great said...

இந்த வார தமிழ்மண ஸ்டார்க்கு வாழ்த்துக்கள் (10)

நிகழ்காலத்தில்... said...

தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதிற்கு முதலில் வாழ்த்துகள்..

கண்ணதாசனின் சொற்பொழிவை நீங்கள் எழுதிய விதமே அலாதி...தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவங்கள் அருமை... புதுமை...

தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.12)

CS. Mohan Kumar said...

தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்

சார் அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதவும். உங்களிடம் இது போன்று சம்பவங்கள் குறைந்தது ஆயிரமாவது உண்டு என தெரியும் ! அறிந்து கொள்ள மிக ஆவல்

sathishsangkavi.blogspot.com said...

தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்....

Admin said...

தமிழ்மண நட்சத்திர பதிவரே..வாழ்த்துகள்..நாளையும் தொடர்கிறேன்..

அருணா செல்வம் said...

வாழ்த்தி வணங்குகிறேன் ரமணி ஐயா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் .

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நட்சத்திர வாரத் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்..

தொடருங்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது தலைவரே...

நட்சத்திர வாழ்த்துக்கள்...

arasan said...

தொடருங்க ... கவியரசரை பற்றி சிறிது அறிந்து கொண்டேன் .. நன்றிகள்

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவர் கண்ணோட்டத்தில் அறியப் படுவது தனி சுவை தரக் கூடியதே. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

தருமி said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே ...

நன்றி.

மாதேவி said...

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் வாரம்.

கற்றுக்கொண்டவற்றை பகிர்வது அருமை.

Anonymous said...

தமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ரமணி சார்...கற்றுக்கொண்டவற்றை தொடருங்கள்...

Ganpat said...

ரமணி ஸார்..
உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு என் வாழ்த்துக்கள்..

கண்ணதாசன் ,ஜெயகாந்தன் ஆகிய இருவர்களுடைய மேடை பேச்சையும் கேட்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது..
சுருக்கமாக சொன்னால் மதுவை விட போதை தருபவை இவை.நான் தமிழன் என்ற கணநேர கர்வத்தையும் ஏற்படுத்துபவை.அதே சமயம் நம்மால் இம்மாதிரி பேச முடியாதா எனும் ஏக்கத்தையும் ஏற்படுத்துபவை.

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar //

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

அனுபவங்கள் படிக்க நன்றாக உள்ளன.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
“ இந்த வார நட்சத்திரம் – தமிழ் மணத்தில் மின்னும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பிரதான பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கண்ணதாசன் பேச்சிலும் பாடிய பாடலிலும், எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாவிலும் மாணவர்கள் கிறங்கிப் போய்தான் இருந்தார்கள். தொடக்கம் அருமை! தொடரட்டும் புதுமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணன் கோபால் //
.
தமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ... தொடருங்கள் !!!//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //
.
முதற்கண் நட்சத்திரப் பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்//!

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வே.சுப்ரமணியன்//

.
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //
..
நாங்கள் கேட்டறியாத தகவல்களை பதிவாகி இருக்கிறீர்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//

முதற்கண் இந்த வார நட்சத்திர பதிவராக இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நாங்கள் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வின் சுவையை எங்களுக்கும் பருகத் தந்த உங்கள் நல்லுள்ளத்திற்கு ஒரு பூங்கொத்து!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி//
.
இந்த வார தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது //
.
அருமை சகோ ... நாளை வாலி ஐயா பற்றி படிக்க ஆவல் பெருகுது சீக்கிரம் தொடருங்கள் ,,,அருமையான பதிவு//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ்//

தமிழ்மண நட்சத்திரமே... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi//

தமிழ் மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள் சுவாரசியமான சொற்பொழிவுகள் கேட்க கொடுத்துவைத்தவர் நீங்கள் அதை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது இன்னமும் சந்தோஷம்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி.கண்ணன் //

என்றோ நடந்ததை எடுத்து அப்படியே நிகழ்வு மாறாமல் எழுதும் திறமை சிலருக்கு தான் வரும், பாராட்டுகள்//

தங்கள் பாராட்டு எனக்கு அதிக
உற்சாகமளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //
.
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //..

இந்த வார தமிழ்மண நட்சத்திரப் பதிவராக ஜொலிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்//.

தங்கள் பாராட்டு எனக்கு அதிக
உற்சாகமளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //
.
இந்த வார தமிழ்மண ஸ்டார்க்கு வாழ்த்துக்கள் /


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

நிகழ்காலத்தில் சிவா //
.
தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதிற்கு முதலில் வாழ்த்துகள்.//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

அனுபவங்கள் அருமை... புதுமை...
தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார்//
..
தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்
சார் அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதவும். உங்களிடம் இது போன்று சம்பவங்கள் குறைந்தது ஆயிரமாவது உண்டு என தெரியும் ! அறிந்து கொள்ள மிக ஆவல்//

தங்கள் பாராட்டு அதிக சந்தோஷத்தையும்
அதே சமயம் அதிக பொறுப்பையும்
உணர்த்திப் போகிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சங்கவி//

தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்..//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தமிழ்மண நட்சத்திர பதிவரே..வாழ்த்துகள்..நாளையும் தொடர்கிறேன்.//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //
.
நட்சத்திர வாழ்த்துக்கள் //.

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

அறிவன்#11802717200764379909 //
.
நட்சத்திர வாரத் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்..//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் //
.
நட்சத்திர வாழ்த்துக்கள்...//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

அரசன் சே //
.
தொடருங்க ... கவியரசரை பற்றி சிறிது அறிந்து கொண்டேன் .. நன்றிகள்//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவர் கண்ணோட்டத்தில் அறியப் படுவது தனி சுவை தரக் கூடியதே. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.//

தங்கள் பாராட்டு எனக்கு அதிக
உற்சாகமளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தருமி //

அந்த நாள் ஞாபகம் வந்ததே ...//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் வாரம்.கற்றுக்கொண்டவற்றை பகிர்வது அருமை.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

ரமணி ஸார்..
உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு என் வாழ்த்துக்கள்..//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
விரிவான
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment