சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல
அடுத்த ஆண்டு அதே மருத்துவக் கல்லூரியில்
முப்பெரும் விழாவிற்கு கவிஞர் வாலி அவர்களை
அழைத்திருந்தார்கள்
கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும்
மக்கள் திலகம் அவர்களுக்கும் கருத்து முரண் ஏற்பட்டு
மக்கள் திலகம் அவர்களின் படங்களுக்கெல்லாம்
கவிஞர் வாலி அவர்களே பாடல்கள் எழுதி
பிரபலமடைந்திருந்த காலம்.
என்னைப் போலவே மாணவர்களிடத்தும்
கவிஞர் அவர்களின் பேச்சு கேட்க அதிக
ஆர்வம் இருந்ததால் கூட்டமும் அதிகம் இருந்தது
சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின் வாலி
அவர்கள் பேச எழுந்தார்கள்.
திரைப் படங்களுக்கு எளிமையான
வார்த்தைகளைப் போட்டு மக்கள் மனங்களைக்
கொள்ளை கொண்டிருந்த கவிஞர் அவர்கள்
மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம்
பேசப் போகிறோம்என்பதாலோ என்னவோ
மிகக் கனமாகவும் மிகப் பிரமாதமாகவும்
சொற்பொழிவைத் தயாரித்துவந்திருந்தார் என்பது
அவர் பேசத் துவங்கியதுமே புரிந்தது
மருத்துவர்கள் உடலுக்கு வைத்தியம் பார்த்தால்
கவிஞர்கள் மனதிற்கு மருத்துவம் பார்க்கிறார்கள்
இரண்டு துறைகளும் ஓசையினை அடிப்படையாகக்
கொண்டவை (சந்தம் மற்றும் இருதய ஒலி )
கவிஞர்கள் துயருக்கு காரணம் முன் வினை
எனச் சொல்லிப்போவோம்.நீங்களும் அதைத்தான்
வேறு விதமாக மைசின் மைசின் என்ற
பெயரோடு முடியும்மாத்திரைகளைக் கொடுத்து
குணப்படுத்த முயல்கிறீர்கள் என
மருத்துவர்களுக்கும் கவிஞர்களுக்கும்
உள்ள ஒற்றுமை,கவிதைக்கும்
மருந்துவத்துக்குமான பிணைப்பு என
அவர் அடுத்து அடுத்து கொண்டபொருள் விட்டு
விலகாமல் பேசிப்போனவிதம் பிரமிக்க வைத்தது
கவிஞரசு கண்ணதாசன் அவர்களின் பேச்சு
ஆபரணம் எனச் சொன்னால் நிச்சயம்
கவிஞர் வாலி அவர்களின் பேச்சு
சுத்தத் தங்கம் கெட்டித் தங்கம்
ஆனால் அந்தப் பேச்சின் கனத்தைத் தாங்கக் கூடிய
இலக்கிய பரிச்சியமோ ஆர்வமோ அன்றைய
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இல்லை
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வினோத
சப்தங்கள் எழுப்பவும் கூச்சலிடவும்
கலாட்டா செய்து அவர் தொடர்ந்து பேசவிடாமலும்
ரகளையில் ஈடுபடத் துவங்கிவிட்டார்கள்
ஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாத நிலை
ஏற்பட்டுப்போக கவிஞர் அவர்கள் தன் பேச்சை
முடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்
கவிஞரின் பேச்சில் மயங்கிக் கிடந்த என்னைப்
போன்றவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாய்
இருந்தது.என்ன செய்வதென்றுதெரியாமல் நாங்கள்
விழித்துக் கொண்டிருந்த வேளையில் மேடையில்
பின் வரிசையில் இருந்த நடிகர் கோபாலகிருஷ்னன்
அவர்கள் மாணவர்களை சமாதானப் படுத்தும் நோக்கில்
மேடை முன் வந்து மைக் முன் நின்றார்
சப்தம் கூடுதலாகத் துவங்கியது
எனக்கும் கூட அவர் முயற்சிப்பது வீண் எனப்பட்டது
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கையில் பிய்ந்த காகிதம்
என்னாகும் எனத்தான் எனக்குப் பட்டது
ஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்
இன்றுவரையில் எனக்கு மறக்க முடியாத
ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது
(தொடரும்)
35 comments:
ayya !
suspencaa. ....?
pochi !
thookkam varumo!
varaatho!?
அட சஸ்பென்ஸா முடிந்திடுச்சே... நாளை வரை காத்திருக்கவேண்டும்..... ம்ம்ம்... காத்திருத்தலும் ஒரு இனிமை தான்!
மினி பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததைப் பற்றி மோகன்குமார் எழுதி இருந்தார். அதைப் படித்ததும் தங்கள் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. நீங்கள் அனுபவங்களை அழகாகக் கோர்த்து பதிவிடுவது எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.
தொடரட்டும் நற்பணி
த.ம 3
வாலி அவர்கள் மிகவும் மரியாதைக்கு உரிய கவிஞர் அவருக்கு இப்படி ஒரு அனுபவமா? என்ன தான் நடந்தது கொஞ்சம் சிக்கிரம் சொல்லுங்க சகோ ... நான் எப்பவும் கடைசி பக்கத்தை முதலில் படித்து விடும் பொறுமை இல்லாதவன் ஹி ஹி
த.ம 4
உங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ
//Avargal Unmaigal said...
உங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ //
Repeattu !!
மருத்துவ கல்லூரியில் நீங்கள் படித்தீர்களா சார் ?
வி.கோபாலகிருஷ்ணன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்றும் நல்ல சொல்லாற்றல் பெற்றவர் என்றும் கேள்விப்பட்டதுண்டு. அவர் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருப்பார் என்பது என் துணிபு. பார்க்கலாம். வாலி பயன்படுத்திய ‘மை சின்’ சொல்லாடலை வியந்து நிற்கிறேன். வார்த்தை விளையாட்டில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை...
என்ன சுகமான சுவாரசியமான அனுபவங்கள் உங்க மோலமா எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்குது
கொஞ்சம் அவசரமாகத்தான் இருக்கிறோம் அடுத்து பதிவிற்கு.
அருமையான வரிகள் (TM 9)
வாலியின் பேச்சுத் திறமை வியக்க வைக்கிறது, உங்கள் அனுபவம் பல சுவைகளைக் கொண்டு இருக்கிறது தொடருங்கள்
ஒரு அருமையான அனுபவப் பகிர்வு!.....வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா .
மாணவர்கள் எதற்கு வாலிபக் கவிஞர் வாலியைப் பேச விடாமல் அடித்தார்களோ? சொற்சிலம்பம் ஆடுபவர் வாலி. இப்போதும் அவர் எழுதும் எனக்குள் எம் ஜி ஆர் தொடரை சுவாரஸ்யமாக வாசித்து வருகிறேன். கோபாலக்ருஷ்ணந்தான் வாலி வாழ்வில் விளக்கேற்றியவர், திரையுலகில் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் என்று வாலி சொல்லியிருக்கிறார்.
என்ன சார் தொலைக்காட்சி நாடகம் போல சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே இது நியாயமா? அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தாமதமான வருகைக்கு மன்னித்துகொள்ளுங்கள்.
அருமையான ஞாபகங்கள்!
Seeni //
தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
அட சஸ்பென்ஸா முடிந்திடுச்சே... நாளை வரை காத்திருக்கவேண்டும்..... ம்ம்ம்... காத்திருத்தலும் ஒரு இனிமை தான்!//
நான் அனுபவித்த சுவையை அனைவரும்
அனுபவிக்கும்படியாகச் சொல்ல முயல்கிறேன்
பதிவு ஓரளவுக்கு மேல் நீளம் போனால்
படிப்பவர்களுக்கு கடினமாக இருக்கும்
என்பதையும் உணர்ந்து நிறுத்திவிடுகிறேன்
பிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN//
நீங்கள் அனுபவங்களை அழகாகக் கோர்த்து பதிவிடுவது எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.
தொடரட்டும் நற்பணி//
தங்கள் ரஸனையான பின்னூட்டம்
எனக்கு கூடுதல் தெம்பளித்துப்போகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரியாஸ் அஹமது //
வாலி அவர்கள் மிகவும் மரியாதைக்கு உரிய கவிஞர் அவருக்கு இப்படி ஒரு அனுபவமா? என்ன தான் நடந்தது கொஞ்சம் சிக்கிரம் சொல்லுங்க சகோ ... நான் எப்பவும் கடைசி பக்கத்தை முதலில் படித்து விடும் பொறுமை இல்லாதவன் ஹி ஹி//
நான் அனுபவித்த சுவையை அனைவரும்
அனுபவிக்கும்படியாகச் சொல்ல முயல்கிறேன்
பதிவு ஓரளவுக்கு மேல் நீளம் போனால்
படிப்பவர்களுக்கு கடினமாக இருக்கும்
என்பதையும் உணர்ந்து நிறுத்திவிடுகிறேன்
பிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
உங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ//
எழுதிகொண்டு போகும்போதே
இயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்
நிறுத்திவிடுகிறேன்.அவ்வளவே
பிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மோகன் குமார் //
எழுதிகொண்டு போகும்போதே
இயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்
நிறுத்திவிடுகிறேன்.அவ்வளவே
பிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே
என்னுடைய நண்பர்கள்
மருத்துவக் கல்லூரியிலும் படித்தார்கள்
அவர்கள் எந்த இலக்கிய நிகழ்வானாலும்
எனக்கு தகவல்கொடுத்துவிடுவார்கள்
நானும் எந்த இலக்கிய நிகழ்வுகளையும்
தவறவிடுவதில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
வி.கோபாலகிருஷ்ணன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்றும் நல்ல சொல்லாற்றல் பெற்றவர் என்றும் கேள்விப்பட்டதுண்டு. அவர் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருப்பார் என்பது என் துணிபு. பார்க்கலாம். வாலி பயன்படுத்திய ‘மை சின்’ சொல்லாடலை வியந்து நிற்கிறேன். வார்த்தை விளையாட்டில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை./
/உங்கள் கணிப்பு நூற்றுக்கு நூறு சரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
..
Lakshmi //
என்ன சுகமான சுவாரசியமான அனுபவங்கள் உங்க மோலமா எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்குது
தங்கள் பின்னூட்டம் எனக்கு
அதிக உற்சாகமளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
கொஞ்சம் அவசரமாகத்தான் இருக்கிறோம் அடுத்து பதிவிற்கு.//
தங்கள் ரஸனையான பின்னூட்டம்
எனக்கு கூடுதல் தெம்பளித்துப்போகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள்//
.
அருமையான வரிகள்//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சீனு//
வாலியின் பேச்சுத் திறமை வியக்க வைக்கிறது, உங்கள் அனுபவம் பல சுவைகளைக் கொண்டு இருக்கிறது தொடருங்கள்//
தங்கள் ரஸனையான பின்னூட்டம்
எனக்கு கூடுதல் தெம்பளித்துப்போகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
.
ஒரு அருமையான அனுபவப் பகிர்வு!.....வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //.
மாணவர்கள் எதற்கு வாலிபக் கவிஞர் வாலியைப் பேச விடாமல் அடித்தார்களோ? சொற்சிலம்பம் ஆடுபவர் வாலி. இப்போதும் அவர் எழுதும் எனக்குள் எம் ஜி ஆர் தொடரை சுவாரஸ்யமாக வாசித்து வருகிறேன். கோபாலக்ருஷ்ணந்தான் வாலி வாழ்வில் விளக்கேற்றியவர், திரையுலகில் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் என்று வாலி சொல்லியிருக்கிறார்//
என்னாலும் இதுவரை யூகிக்க முடியவில்லை
ஜாலியாக பொழுது போக்கலாம்
என நினைத்தவர்களுக்கு
கொஞ்சம் கனமான விஷயம்
எடுத்தவுடன் கொடுத்ததால்
அரண்டு போயிருக்கலாமோ?
மற்றபடி தாங்கள் குறிப்பிடுகிற
விஷயங்க்கள் எல்லாம் சரி
நானும் கேள்விப்பட்டவையே
தங்கள் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
Gobinath//
என்ன சார் தொலைக்காட்சி நாடகம் போல சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே இது நியாயமா? அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்//
எழுதிகொண்டு போகும்போதே
இயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்
நிறுத்திவிடுகிறேன்.அவ்வளவே
பிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
அருமையான ஞாபகங்கள்!//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அதற்குப்பின் நடந்த நிகழ்வுகள்......??????
G.M Balasubramaniam //
அடுத்த பதிவு போட்டுவிட்டேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment