Friday, July 20, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-5


அனேகமாக அது 1962ஆம் ஆண்டாக இருக்கலாம்
பாரதப் பிரதமர் நேரு அவர்கள் அவருடைய
பிறந்த நாள் அன்றுஅவர் மதுரையில்
இருக்கும்படியானஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருந்தது.
அதனைமிகச் சிறப்பாகக் கொண்டாட மதுரையில்
ஏற்பாடு செய்திருந்தார்கள்

நேரு அவர்களுக்கு படகு ஓட்டுதல் ஒரு
விருப்பமான பொழுது போக்கு என்பதால்
தற்போது மா நகராட்சி இருக்கும் இடத்தில்
(அப்போது அது கண்மாயாக இருந்தது )
படகு ஓட்டவும் ஒரு மாபெரும் வரவேற்புக்கும்
ஏற்பாடு செய்திருந்தார்கள்

வழக்கம்போல சிறுவர்கள் குழுவையும்
வரவேற்புக்குத் தயார் செய்தார்கள்.
இந்த முறை வித்தியாசமாக அவருடைய
வயதுக்குரிய எண்ணிக்கையில் மாணவர்களைத்
தேர்ந்தெடுத்து அனைவருக்கும்
நேரு அவர்களைப் போலவே வேடமிட்டு
விமான நிலையத்தில் நிறுத்தினார்கள்
இந்த முறை மதுரை நகரில் உள்ள
அனைத்துப் பள்ளிகளிலும் இருந்து
மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
முடிவு செய்தபடியால் போட்டி
கடுமையாக இருந்தது

கொஞ்சம் நீண்ட முகம்.நீண்ட மூக்கு
நல்ல சிவப்பு நிறம் என மாவட்டக் கல்வி
அலுவலக்த்தில் இருந்து குறிப்பு வந்திருந்தது
எனக்கு தெய்வாதீனமாக இவை அனைத்தும்
எனக்குப் பொருந்தியிருந்ததால்
இம்முறையும் எனக்கு அதில் கலந்து கொள்ளும்
வாய்ப்புக் கிடைத்தது.

விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும்
அவர் சிறிது ஓய்வெடுத்துக் கிளம்பும் முன்பாக
எங்களையெல்லாம் அவர் வருகிற பாதையில்
வரிசையாக ஒரு பர்லாங் தூரத்திற்கு
ஒருவர் என நிறுத்தி இருந்தார்கள்.
மொத்தக்கூட்டமும் எங்களை அதிசயமாகப் பார்த்ததால்
எங்களுக்கெல்லாம் பெருமை பிடிபடவில்லை

மாலையில் பிரதமர் அவர்கள் காரில் நின்றபடி
பவனி வர கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத
உற்சாகமும் கூச்சலும் விண்ணைத் தொட்டது
" பாரதப் பிரதமருக்கு ஜே. நேருஜிக்கு ஜே "
என மொத்தக் கூட்டமும் எழுப்பிய கோஷமும்
 உற்சாகக் கூச்சலும் விண்ணைத் தொட
அந்தச் சூழலே ஏதோ புதிய உலகில் இருப்பதைப்
போன்று இருந்தது

நேரு அவர்கள் இளமைத் துள்ளலுடன்
காரின் பின் இருக்கையில் நின்றபடி மலர் மாலைகளை
கூட்டத்தினரை நோக்கி வீசிக் கொண்டே வந்தார்
எங்களுக்கு பெருமாள் கோயில் இடதுபுறம்
இடம் ஒதுக்கப் பட்டிருந்தது,பிரதமர் அவர்கள்
இடது புறம் பார்க்காமலும் மாலை வீசாமலும்
வலது புறமே கைக்கு வாகாக இருந்ததாலோ என்னவோ
வீசிக்கொண்டே வந்தார்.எங்கள் பகுதியில்
இருந்தவர்களுக்கு எல்லாம் பெரும் ஏமாற்றமாக
இருந்தது

திடுமென என அருகில் நின்றிருந்த நூர்ஜஹான் டீச்சர்
ஆசிய ஜோதிக்கு ஜே 'எனக் கத்துடா  என்றார்
நானும் சப்தமாக ஆசிய ஜோதிக்கு ஜே எனக் கத்த
கூட்டமும் சப்தமாய் கத்த சட்டென பிரதமர் அவர்கள்
எங்கள் பக்கம் திரும்பி மாலையை வீசியதுடன்
காரை விட்டு இறங்கி எங்கள் பக்கமாக நடந்து வந்து
மூங்கில் அடைப்புக்கு வெளியில் இருந்தவர்கள்
சிலரின் கைகளையும் குலுக்கிப் போனார்.
அவருடைய உடையில் இருந்ததாலோ என்னவோ
என் கையைப் பிடித்தும் குலுக்கினார்

இந்த நிகழ்வு எனக்கு மிகப் பெரிய அதிசயமாகவும்
அபூர்வமானதாகவும் ஆச்சரியமாகவும் பட்டது
பலவருடம் கழித்து கல்லூரி நாட்களில்
நூர்ஜஹான் டீச்சரைச் சந்தித்தபோது இது
விஷயம் ஞாபகப் படுத்தி எப்படி உங்களுக்கு
மட்டும் எப்படி "ஆசிய ஜோதிக்கு ஜே :எனச்
சொல்லச் சொல்லுப்படி தோன்றியது எனக் கேட்டேன்

" பாரதப் பிரதமருக்கு வழங்கப் பட்ட பட்டங்களில்
அவருக்கு பிடித்தமான பட்டம்  ஆசிய ஜோதி
என்பதுதான்.எப்போதுமே முக்கியப் பிரமுகர்களை
சந்திக்க நேரும் போது அவர்கள் விருப்பம் ஆர்வம்
இவைகளைத் தெரிந்து கொண்டு நீ தொடர்பு கொண்டால்
அந்தத் தொடர்பு  உனக்கு பயனுள்ளதாக இருக்கும் "என்றார்

இது சாதாரணச் செய்தியாக இல்லை.பல சமயங்களில்
முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கையில் இந்த நோக்கில்
தயாரிப்புடன் சென்றது பல புதிய அனுபவங்களைக்
 கற்றுத் தந்தது.


32 comments:

Avargal Unmaigal said...

//எப்போதுமே முக்கியப் பிரமுகர்களை
சந்திக்க நேரும் போது அவர்கள் விருப்பம் ஆர்வம்
இவைகளைத் தெரிந்து கொண்டு நீ தொடர்பு கொண்டால்
அந்தத் தொடர்பு உனக்கு பயனுள்ளதாக இருக்கும்//

மிக மிக உண்மை

கோவை நேரம் said...

நல்ல அனுபவம்...அருமை

முத்தரசு said...

அனுபவ பகிர்வுக்கு நன்றி

CS. Mohan Kumar said...

அருமை. என்னா மாதிரி அனுபவம் எல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்கு

senthil said...

"அனேகமாக அது 1965ஆம் ஆண்டாக இருக்கலாம்
பாரதப் பிரதமர் நேரு அவர்கள் அவருடைய
பிறந்த நாள் அன்றுஅவர் மதுரையில்
இருக்கும்படியானஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருந்தது."

1965 ஆம் ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை. நேரு அவர்கள் இறந்த திகதி 27-05-1964.

Yaathoramani.blogspot.com said...

senthil //

தகவலுக்கு மிக்க நன்றி
நான் ஏழாவது படிக்கையில் என்கிற நினைவில்
வருடத்தைக் கூட்டிப்போட்டேன்.என் நண்பனும் போன் செய்து
ஐந்து அல்லது ஆறாவது படிக்கையில் இருக்கலாம்
எனச் சொன்னான்.நிகழ்வை ஞாபகம் வைத்திருக்கிற
அளவு மிகச் சரியான வருடம் அவனுக்கும்
ஞாபகமஇல்லை.இப்போதும் யூகமாகவே வருடத்தை
மாற்றியுள்ளேன்.அதனால்தான் அனேகமாக
என்கிற வார்த்தையை எடுக்கவில்லை
மிகச் சரியான வருடம் கிடைத்ததும் சரிசெய்துவிடுகிறேன்
தகவலுக்கு மீண்டும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை நேரம் //

நல்ல அனுபவம்...அருமை//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார்//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Admin said...

" பாரதப் பிரதமருக்கு வழங்கப் பட்ட பட்டங்களில்
அவருக்கு பிடித்தமான பட்டம் ஆசிய ஜோதி
என்பதுதான்.ஆம்..எங்கேயோ படித்த ஞாபகம்..

பால கணேஷ் said...

அந்த ஆசிரியர் போதித்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்கும பயன்தரக் கூடிய அனுபவ உண்மை. அனுபவப் பகிர்வு வெகு சுவை.

G.M Balasubramaniam said...

கற்றுக் கொள்ள முனைபவருக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு பாடமிருக்கும். வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//எப்போதுமே முக்கியப் பிரமுகர்களை
சந்திக்க நேரும் போது அவர்கள் விருப்பம் ஆர்வம்
இவைகளைத் தெரிந்து கொண்டு நீ தொடர்பு கொண்டால்
அந்தத் தொடர்பு உனக்கு பயனுள்ளதாக இருக்கும் ”//

உண்மையே ரமனி சார்.

சீனு said...

உண்மையிலேயே நீங்கள் பாக்கியசாலி தான் ரமணி சார்

சீனு said...

த ம 5

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு அனுபவம் சார் !வாழ்த்துக்கள் !
(த.ம. 7)

சசிகலா said...

காரை விட்டு இறங்கி எங்கள் பக்கமாக நடந்து வந்து
மூங்கில் அடைப்புக்கு வெளியில் இருந்தவர்கள்
சிலரின் கைகளையும் குலுக்கிப் போனார்.
அவருடைய உடையில் இருந்ததாலோ என்னவோ
என் கையைப் பிடித்தும் குலுக்கினார்.

உண்மையில் மிகுந்த மகிழ்வளித்த செய்தி பகிர்வுக்கு நன்றி ஐயா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்போதுமே முக்கியப் பிரமுகர்களை
சந்திக்க நேரும் போது அவர்கள் விருப்பம் ஆர்வம்
இவைகளைத் தெரிந்து கொண்டு நீ தொடர்பு கொண்டால்
அந்தத் தொடர்பு உனக்கு பயனுள்ளதாக இருக்கும்"//

மிகவும் முக்கியமானதொரு பாய்ண்ட் தான்.

ஆசிய ஜோதியுடன் கைகுலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்த தங்களுக்கு ஓர் ஜே! ;)))))

ஆத்மா said...

அழகான பகிர்வு...இப்படி முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு சிறிசிலோ பெரிசிலோ எனக்கு கிடைத்தது கிடையாது...:(

அருணா செல்வம் said...

எனக்கு உங்களைப் பார்த்துக் கைக்குலுக்க வேண்டும் என்று ஆவல் துர்ண்டுகிறது ரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ்//

அந்த ஆசிரியர் போதித்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்கும பயன்தரக் கூடிய அனுபவ உண்மை. அனுபவப் பகிர்வு வெகு சுவை//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

கற்றுக் கொள்ள முனைபவருக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு பாடமிருக்கும். வாழ்த்துக்கள்.//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //


..தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சீனு //

உண்மையிலேயே நீங்கள் பாக்கியசாலி தான் ரமணி சார்


தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன்//

நல்லதொரு அனுபவம் சார் !வாழ்த்துக்கள் !//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

உண்மையில் மிகுந்த மகிழ்வளித்த செய்தி பகிர்வுக்கு நன்றி ஐயா.//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மிகவும் முக்கியமானதொரு பாய்ண்ட் தான்.
ஆசிய ஜோதியுடன் கைகுலுக்கும் சந்தர்ப்பம் கிடைத்த தங்களுக்கு ஓர் ஜே//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //
.
அழகான பகிர்வு//


தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //
.
எனக்கு உங்களைப் பார்த்துக் கைக்குலுக்க வேண்டும் என்று ஆவல் துர்ண்டுகிறது ரமணி //


தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்கள். தொடர்ந்து பகிருங்கள் ஜி!

த.ம. 10

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
உங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்கள். தொடர்ந்து பகிருங்கள் ஜி!//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Post a Comment