இதில் இவ்வளவு இருக்கா !
சும்மாவே ஆடுபவன் கொட்டடித்தால்
கேட்கவா வேண்டும் எனப் பழமொழி உண்டு
அதைப்போல சிறு வயது முதலே
கவிதை எழுதுவது ஊரில்
திருவிழாக்காலங்களில் நடக்கும் நாடகங்களுக்கு
கதை வசன்ம் எழுதுவது,தெருக் கூத்துப் பயிற்சி
நாடகப் பயிற்சி,எனத் திரிந்து கொண்டிருந்த எனக்கு
சினிமா ஆசை வராமல் இருந்தால்தான்
ஆச்சரியம்.எனவே சில காலம்
அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டேன்
பாரதிராஜா அவர்கள் சினிமாவை செட்டை விட்டு
கிராமத்திற்கு பெயர்த்துக் கொண்டு வந்தார் என பலர்
பெருமையாகச் சொல்வார்கள்.அதை தொடர்ந்து
எத்தனை பேர் சினிமா ஆசை கொண்டு
கிராமங்களைவிட்டு சென்னை நகருக்கு வந்து
தன் எதிர்காலத்தைத் தொலைத்து
சீரழிந்து போனார்கள் என்பதை அதிகமாக
யாரும் பதிவு செய்யவில்லை.
(பின்னாளில் எழுத உத்தேசமிருக்கிறது)
நான் நாடக இயக்கங்களில் பங்கு கொண்டும்
வேலைபார்த்துக் கொண்டும் அவ்வப்போது
விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை வந்து
முன்னணி சினிமா இயக்குநர்களைச் சிந்தித்து
வாய்ப்புக்குஅலைந்து கொண்டிருந்தேன்
அப்போது உச்சத்தில் இருந்த ஒரு இயக்குநரைச்
சந்திக்கவும் அவர் என்னை தன் குழுவில் சேர்த்துக்
கொள்ளவும் சம்மதித்தார்அவரிடன் ஏற்கெனவே
15 பேர் துணை இயக்கு நர்களாக இருந்தார்கள்
அதில் 7 பேரை மட்டும் சினிமாவில் எழுத்தில்
அறிமுகப் படுத்துவார்.அதில் எழுத்தில்
அறிமுகப் படுத்தப்படாத ஒரு துணை இயக்குநர்
எனக்கு அதிக நெருக்கம் ஆகிப் போனார்.
அவருடன் பல முக்கிய சினிமா இயக்குநர்களைச்
சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
அதில் குறிப்பிடத் தக்கவர் இயக்குநர்
கே சங்கர் அவர்கள்.ஆலயமணி ஆண்டவ கட்டளை
முதலான காலத்தால் அழியாத படங்களைக்
கொடுத்த அவரை யாரும் அவ்வளவு எளிதில்
மறந்திருக்கமாட்டோம்
அவரிடம் நண்பர் என்னை அறிமுகப் படுத்தியதும்
அவர் அவ்வளவாக என்னுடன் உரையாடுவதில்
ஆர்வம் காட்டவில்லை.பின் நானாக அவருடைய
திரைப்படங்களின் கதை அமைப்பின் சிறப்பு குறித்தும்
குறிப்பாக கதாபாத்திரங்க்களின் சித்தரிப்பு குறித்தும்
பேச கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார்
நான் மிக விரிவாக ஆண்டவன் கட்டளையில்
அந்த ப்ரொஃபஸர் கிருஷ்ணன் கதாபாத்திரத்தின்
அறிமுகம் குறித்து மிக விரிவாகப் பேச
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்
ஆண்டவன் கட்டளையில் ப்ரொஃப்ஸர் கிருஷ்ணனாக
நடிகர் திலகம் அவர்கள் மிகச் சிறப்பாக
நடித்திருப்பார். நேரம் தவறாதவர் அவர் என
அவரை அறிமுகம் செய்ய அவர் வருவதைப்
பார்த்துக் கடையில் கடிகார நேரத்தைச்
சரிசெய்வார்கள்மதிப்பு மிக்கவர் என்பதைக்
குறிப்பிட்டுச் சொல்வதற்காக
போக்குவரத்து போலீஸ் அனைத்து
போக்குவரத்தையும்நிறுத்தி அவரைமட்டும்
சாலையக் கடக்க விடுவார்.
இந்தக் காட்சியைரசித்துச் சொன்னவுடன்
அவர் உற்சாகமானார்.
"இவ்வளவு கவனித்திருக்கிறீர்களே
நான் இயக்கம் என்றுஎன் பெயரை எதில் காட்டுவேன்
எனத் தெரியுமா ? "என்றார்
எனக்கு அது நன்றக நினைவில் இருந்தது
அதை அந்த போக்குவரத்து போலீஸ்காரரின்
கையில் இருந்த ஸ்டாப் என்கிற போர்டில் காட்டுவார்
நான் அதைச் சொல்ல சந்தோசப் பட்டவர்
"அதில் ஏன் காட்டினேன் எனத் தெரியுமா"
எனக் கேட்டார்
உண்மையில் எனக்குத் தெரியவில்லை
(தொடரும்)
12 comments:
//
கற்றுக் கொண்டவைகள் -பிரதானப் பதிவு -6
இதில் இவ்வளவு இருக்கா !////
இவ்வளவு திறமை உங்களிடம் இருக்கா !
நாம் நேரில் சந்தித்த போது இந்த சம்பவம் பகிர்ந்து கொண்டீர்கள் எனவே பதில் தெரியும் என்றாலும் அதை நீங்களே சொல்வது தான் அழகு
// அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை வந்து முன்னணி சினிமா இயக்குநர்களைச் சந்தித்து வாய்ப்புக்கு அலைந்து கொண்டிருந்தேன் //
கவிஞர் ரமணியின் வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கும் ரசனையான அனுபவங்கள் இன்னும் எத்தனையோ?
அட இம்புட்டு விடயம் இருக்கா சொல்லுங்க தெரிந்து கொள்கிறேன்
நீங்க எல்லாம் விவரமாகச்சொல்வதால் எங்களுக்கும் உங்களைப்புரிந்து கொள்ள முடிகிரது. நன்றி. வாழ்த்துகள்
சொல்லுங்க..தெரிஞ்சுக்கலாம்.
நசத்திரவாழ்த்துக்கள்!
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து!
அறிந்திராத விஷயங்கள்..ஆவலைத் தூண்டுகின்றன!
பதிவைப் படிக்க அன்பர்களை ஈர்ப்பது எப்படி..என்பதை விளக்கிச் செல்லும் வகுப்புப் பாடம் இது எனில் மிகையில்லை!
தொடரட்டும்..எழுத்துப்பணி! வாழ்த்துக்கள்!
ரசனையாக எழுதியுள்ளீர்கள். தொடரட்டும்.
சுவாரஸ்யமான தகவல்! ஆர்வத்தை தூண்டுகிறது உங்கள் எழுத்து!
சுவாரசியமான தகவல். அடுத்த பகுதிக்கு இதோ வந்துட்டே இருக்கேன்....
த.ம. 8
Post a Comment