படித்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை
கருத்தூன்றி கவனமாய்
பாடத்துடலில் ஒளிந்திருக்கும் ஜீவனை
உணர்ந்து தெளிந்தவனே புத்திசாலி
வயிறு முட்டவிழுங்கி
முழு ஏப்பம் விடுபவனெல்லாம்
உண்ணத் தெரிந்தவன் இல்லை
ஒவ்வொரு கவளத்தையும்
சுவைத்து ரசித்துச் சிலிர்ப்பவனே
நிஜமான ரசிகன்
இருபதாண்டுக் காலம்
செக்கினைச் சுற்றுகிற மாட்டுக்கு
எத்தனைபடி எள்ளுக்கு
எத்தனைபடி எண்ணையென
தெரியவா செய்யும் ?
கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும்?
நெடுங்காலம் வாழ்ந்தவனெல்லாம்
அனுபவஸ்தன் இல்லை
காற்றோ மழையோ
பாலையோ சோலையோ
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்
ஏனையோரெல்லாம்
வெ ற்று எண்ணிக்கையைத்
தகுதியாய்ச் சுமந்து திரிந்து
பெருமிதம் கொள்பவர்களே
நடமாடும் பெருஞசுமைகளே
கருத்தூன்றி கவனமாய்
பாடத்துடலில் ஒளிந்திருக்கும் ஜீவனை
உணர்ந்து தெளிந்தவனே புத்திசாலி
வயிறு முட்டவிழுங்கி
முழு ஏப்பம் விடுபவனெல்லாம்
உண்ணத் தெரிந்தவன் இல்லை
ஒவ்வொரு கவளத்தையும்
சுவைத்து ரசித்துச் சிலிர்ப்பவனே
நிஜமான ரசிகன்
இருபதாண்டுக் காலம்
செக்கினைச் சுற்றுகிற மாட்டுக்கு
எத்தனைபடி எள்ளுக்கு
எத்தனைபடி எண்ணையென
தெரியவா செய்யும் ?
கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும்?
நெடுங்காலம் வாழ்ந்தவனெல்லாம்
அனுபவஸ்தன் இல்லை
காற்றோ மழையோ
பாலையோ சோலையோ
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்
ஏனையோரெல்லாம்
வெ ற்று எண்ணிக்கையைத்
தகுதியாய்ச் சுமந்து திரிந்து
பெருமிதம் கொள்பவர்களே
நடமாடும் பெருஞசுமைகளே
82 comments:
மிக மிக உண்மை. அனுபவம் என்பது கருத்துக்களை சாரங்களை உள்வாங்கித் தெளிவது. மற்றையோரெல்லாம் வயதானவர்களே அன்றி அனுபவஸ்தர்களில்லை. மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது உங்கள் சிந்தனை. சூப்பர்.
மிகவும் பிடித்த வரிகள் :
/// கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும் ?///
கீழே உள்ள பாடல் ஞாபகம் வந்தது..
இருட்டினில் வாழும் இதயங்களே...
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்...
நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான், என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான், என்பதை உணர்ந்தால்...
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...
(திரைப்படம் : நான் ஆணையிட்டால்)
நன்றி. (த.ம. 2)
Aiya Ethu ungal anubavathai prathibalipathagave ullathu ovvaru varium arumai aiya
ஏனையோரெல்லாம்
வயதானவர்களே// ஆமாம், வெறுமனே எண்களைச் சுமப்பவர்கள். அருமை சார்.
// அந்த அந்த நொடியில் எதையும்
அனுபவித்துத் தெளிபவனே அனுபவஸ்தன் //
உங்கள் பதிவைப் படித்ததும் ஓ ரசிக்கும் சீமானே என்று உங்களைப் பாடத் தோன்றியது. கணக்கில் லட்சக் கணக்கில் வைத்திருக்கும் ஒருவனை விட, அதனை எடுத்து செலவு செய்பவனே உண்மையில் அனுபவிக்கிறான்.
இருபதாண்டுக் காலம்
செக்கினைச் சுற்றுகிற மாட்டுக்கு
எத்தனைபடி எள்ளுக்கு
எத்தனைபடி எண்ணையென
தெரியவா செய்யும் ?
///எப்படியெல்லாம் சிந்திக்கின்றீர்கள்!!!!!!!!!!!
மிக மிக உண்மை..பாராட்டுக்கள்
நல்ல கருத்துக்கள்தான் ஐயா…ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் உதாரணங்கள் மீது எனக்கு சில ஐயங்கள்…தவறாக இருந்தால் மன்னிக்கவும்…விளங்கவைக்கவும்..தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.
அனுபவம் என்பது என்ன?
நமக்கு முன்னர் சிலர் சொல்லி சென்றதையே பின்பற்றி நாமும் நம் சிந்தனையை வளர்த்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு கவளமாக ரசித்து உன்பது மட்டுமே ரசமான அனுபவம் என்று நாம் நினைத்து கொள்கிறோம் ஏன்?
வயிறு நிறைய தின்றுவிட்டு ஏப்பம் விடுவதும் ஒரு வகை நல்ல அனுபவம்தான் என்பதை ஏற்க மறுக்கிறோம் ஏன்?
அப்படி தின்பவனுக்கு அதுவே சுகம் என்றால் அவனை பொறுத்தவரைக்கும் அதுவே ரசமான அனுபவம்தானே?
நமக்கு தெரிந்தது எத்தனை படி எள்ளுக்கு எத்தனை படி எண்ணெய் என்பதுதான், ஆனால் அது நம்முடைய அறியாமையால் இருக்கலாம் அல்லவா?
அந்த மாட்டின் அனுபவம் நமக்கு என்ன தெரியும்?
செக்கினை சுத்தும் மாடு நினைக்கலாம் அல்லது அதற்கு நாம் புத்திசாலிதனம் என நினைப்பவை அனைத்தும் முட்டாள்தனமாக தெரியலாம். நம்மை பார்த்து எதற்கடா இந்த ஆட்டம் என கேட்க முடியாவிட்டாலும், அதனுடைய அனுபவம் அதற்கு சிறந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
நமக்கு தெரியலாம்…பாறைக்கு என்ன தெரியும் என்று… ஆனால் அந்த பாறைக்கு தெரியும் காற்று, நீர் எல்லாமே அதன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவம் என்றும் அந்த பாறையை செப்பனிட வந்தவை என்றும் அதை ஏற்றுகொள்வதுதான் அதன் இயல்பு என்றும்….பாவம் நமக்குதான் தெரியாது அந்த கங்கைக்கு பாறை எப்படியோ? அது போலவே அந்த பாறைக்கு கங்கையும் என்று.
அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள், ரசனைகள், வாழ்க்கை போன்றவற்றை மனிதர்கள் நாம் நம் சிறிய அறிவுக்கு வசதியான வகையிலையே பார்க்கிறோம்……..அன்றி பாறை, மாடு, கங்கை, இன்னொரு மனிதன் அல்லது விலங்கு போன்றவற்றில் பொருத்தி பார்க்க மறுக்கிறோம்.
ஒரு பாடத்தை படித்தவெனெல்லாம் எல்லாம் அதனைப் புரிந்தவன் இல்லை…..கவனமாய் கருத்தூன்றி பாடத்துடலில் ஓளிந்திருக்கும் ஜீவனை உணர்ந்து தெளிந்தவனே புரிந்தவன்…அவனும் எல்லாம் தெரிந்தவனில்லை.
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
ஏனையோரெல்லாம்
வயதானவர்களே// ஆமாம், வெறுமனே எண்களைச் சுமப்பவர்கள். அருமை சார்.//
உங்களுடைய எண்ணிக்கையைச் சுமப்பவர்கள்
என்கிற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது
உட்ன் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன்
உடன் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
// அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்
// நிச்சயமாக சார் ... அனுபவித்து அறிபன் புத்திசாலி பிறர் அனுபவத்தில்
இருந்து அறிபவன் திறமை சரி என்ற வாசகங்கள் மிகவும் பிடிக்கும்
வல்லத்தான்//
அருமையாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள்
சுவை என்பது நாவு சம்பத்தப்பட்ட்டது
சுகம் என்பது மனம் சம்பத்தப் பட்டது
சுகம் சுவையென அவ்ர் கருதினால்
அது அவர் மட்டும் சரிதான்
அறிதலுக்காக படிப்பது
அது பட்டத்திற்காக என ஒருவன்
நினைத்துப் படித்தால்
அது அவனைப் பொருத்தமட்டில் சரிதான்
பாறை உணர்வற்றது என்கிற நிலையில்
அதைப் பயன்படுத்தியுள்ளேன்
பாறையும் உணரும் எனக் கொண்டால்
அதுவும் சரிதான்
பாரதி போல் இயற்கையையும்
தன்னைப்போல் உணரும் தன்மை உடையவர்
எனப் புரிந்து கொள்வேன்
இங்கு அந்த அந்த நொடியில் வாழுதலே வாழுதல்
மற்றதெல்லால் உயிரோடிருத்தல் என்வே
கொள்ளப்படும் என்கிற பொருளில் எழுதியுள்ளேன்
தங்கள் கருத்தைப் படிக்க இன்னும் சரியாகச்
சொல்லியிருக்கலாமோ எனப் படுகிறது
இன்னும் சரியாகச் சிந்திக்கவும் சரியாகத் தரவும்
முயல்கிறேன்
தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மிக உண்மை! அருமையான கவிதை (TM 6)
சுவைத்து ரசித்துச் சிலிர்ப்பவனே
நிஜமான ரசிகன்
நெடுங்காலம் வாழ்ந்தவனெல்லாம்
அனுபவஸ்தன் இல்லை
காற்றோ மழையோ
பாலையோ சோலையோ
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்//
நல்ல கவிதை.
சகிப்பு தன்மை, விட்டுக் கொடுத்தல், இருந்தால் தான் வாழ்வு வளம் பெறும்.
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்
உயிர்ப்புடன் ஒளிரும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
உண்மை!
வலைஞன் //
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது உங்கள் சிந்தனை. சூப்பர்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
மிகவும் பிடித்த வரிகள் ://
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Payana Priyan //
Aiya Ethu ungal anubavathai prathibalipathagave ullathu ovvaru varium arumai aiya//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
லட்சக் கணக்கில் வைத்திருக்கும் ஒருவனை விட, அதனை எடுத்து செலவு செய்பவனே உண்மையில் அனுபவிக்கிறான்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
மிக மிக உண்மை..பாராட்டுக்கள்/
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
மிக உண்மை! அருமையான கவிதை//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு//
நல்ல கவிதை.
சகிப்பு தன்மை, விட்டுக் கொடுத்தல், இருந்தால் தான் வாழ்வு வளம் பெறும்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //.
உயிர்ப்புடன் ஒளிரும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துளசி கோபால் //
.
உண்மை!//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தம் இல்லையோ என்றும் சிந்திக்க வைக்கிறது. CHRONOLOGICAL AGE HAS NOTHING TO DO WITH REAL EXPERIENCE.
பாராட்டுக்கள்.
வாழ்வின் அனுபவ அடுக்குகளில் செருகப்படுகிற சீட்டுகளில் தங்களது பதிவு முக்கிய இடம் பெறுவதாக/
இந்தக்கவிதை பார்த்ததும் சந்திரபாபுவின் பழய பாடல் ஒன்னு தான் நினைவில் வந்தது வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
வயதும் அனுபவமும்... வாழ்க்கைக்குத் தேவையானது...
உண்மைதான் சார்
படித்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை
கருத்தூன்றி கவனமாய்
பாடத்துடலில் ஒளிந்திருக்கும் ஜீவனை
உணர்ந்து தெளிந்தவனே புத்திசாலி//
சுர்ர்ர்ர்ர்"ன்னு உரைக்கிற மாதிரி சொல்லிட்டீங்க குரு அசத்தல்....!
படிப்பு ஒன்றே புத்திசாலித்தனத்தை தந்துவிடாதுன்னு பொட்டிலறைந்த மாதிரி சொல்லீட்டீங்க. பகிர்வுக்கு நன்றி ஐயா
கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும்?// அருமையான உவமை நிஜம் அதுதான் !அனுபவம் போல ஆசான் ஏது!
நெடுங்காலம் வாழ்ந்தவனெல்லாம்
அனுபவஸ்தன் இல்லை
காற்றோ மழையோ
பாலையோ சோலையோ
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்
மிக அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!....
தொடர வாழ்த்துக்கள் .
G.M Balasubramaniam //
வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தம் இல்லையோ என்றும் சிந்திக்க வைக்கிறது.//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
வாழ்வின் அனுபவ அடுக்குகளில் செருகப்படுகிற சீட்டுகளில் தங்களது பதிவு முக்கிய இடம் பெறுவதாக/
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Excellent Sir, Best wishes
Excellent Sir, Best wishes
த.ம.12
சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!
வெ ற்று எண்ணிக்கையைத்
தகுதியாய்ச் சுமந்து திரிந்து
பெருமிதம் கொள்பவர்களே
நடமாடும் பெருஞசுமைகளே“
உள்ளார்ந்த வரிகள்.
வணங்குகிறேன் ரமணி ஐயா.
சங்கவி//
..
வயதும் அனுபவமும்... வாழ்க்கைக்குத் தேவையானது..//
அனுபவங்கள் தாங்கிய வயது அதிக
பயனுள்ளது என நினைக்கிறேன்
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //
உண்மைதான் சார்//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
சுர்ர்ர்ர்ர்"ன்னு உரைக்கிற மாதிரி சொல்லிட்டீங்க குரு அசத்தல்....!//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி ///
.
படிப்பு ஒன்றே புத்திசாலித்தனத்தை தந்துவிடாதுன்னு பொட்டிலறைந்த மாதிரி சொல்லீட்டீங்க. பகிர்வுக்கு நன்றி ஐயா//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமை.
தனிமரம் //.
அருமையான உவமை நிஜம் அதுதான் !அனுபவம் போல ஆசான் ஏது!//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
மிக அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!....
தொடர வாழ்த்துக்கள் //
.தங்கள் உடன் வரவுக்கும்வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
live life ..live every moment ..
சகோ இதை நீங்கள் சொன்ன விதம் மிகவும் ரசித்தேன் ...
வாழ்த்த நான் யார் சகோ ... அன்புடன் நன்றி சொல்லி நாளை வர்வேன்
"அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்" நன்றாகச் சொன்னீர்கள்.
சிறப்பான கவிதை ரமணி சார்...
///// கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும் ?/////
சிறப்பான வரிகள்...
த.ம. 15
R.Ravichandran //
Excellent Sir, Best wishes//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரஹீம் கஸாலி //.
தங்கள் வரவுக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
உள்ளார்ந்த வரிகள்.
வணங்குகிறேன் ரமணி ஐயா.//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
.
அருமை.//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரியாஸ் அஹமது //
live life ..live every moment ..
சகோ இதை நீங்கள் சொன்ன விதம் மிகவும் ரசித்தேன் //...
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
நன்றாகச் சொன்னீர்கள்.//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
சிறப்பான கவிதை ரமணி சார்.../
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
வெங்கட் நாகராஜ் //
சிறப்பான வரிகள்... //
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/
//கங்கைக் கரையோரம்
பல்லாண்டு நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும்?//
கங்கையில் மிதக்கும் பிணங்களுக்கு கங்கை புனிதம் என்று தெரிந்திருக்கிறதே போதாதா ? :)
எதையும் அளவுக்கு மிஞ்சி புனிதப்படுத்தினால் அதன் தன்மை களங்கப்பட்டுவிடும்.
மதிப்பு அறியாமைக்கு பன்றிகளுக்கு முன் முத்துகளை சிந்தாதீர்கள் என்று கூறுவார்கள்.
கங்கை (மட்டும்) புனிதமா ? என்னைக் கேட்டால் ஆறுகள் அனைத்தும் புனிதமாகப் போற்றப்பட வேண்டும், மனிதனுக்கு நீர் ஆதாரம் மிக மிக முக்கியம். ஆனால் இந்த புனிதத் தன்மைகள் குறித்து நான் நம்பிக்கைக் கொள்வதில்லை.
பதிவு பிரமாதம். வல்லத்தானின் கருத்தும் பிரமாதம். இதை விட அழகாக 'சிந்தனையை தூண்டும் பதிவு' என்று எப்படி சொல்ல?
ayya!
vaazhviyal thathuvam sir!
கோவி.கண்ணன்//
எந்த முதல் வாதத்தில்
நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும்
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழுதல் அவசியமென
சொல்லயெண்ணிய நான் அதற்கான
உதாரணங்களாக யோசித்தபோது
கங்கைதான் எனக்குச் சரியாகப் பட்டது
தங்கள் வரவுக்கும் அருமையான
சிந்திக்கத் தூண்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
bandhu //
பதிவு பிரமாதம். வல்லத்தானின் கருத்தும் பிரமாதம். இதை விட அழகாக 'சிந்தனையை தூண்டும் பதிவு' என்று எப்படி சொல்ல?//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
.
ayya!
vaazhviyal thathuvam sir!//
.தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல கருத்துகள்.. அருமை
அமைதிச்சாரல் //
நல்ல கருத்துகள்.. அருமை//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சொல்ல வந்த கருத்தைப் புரிய வைக்க சொல்லியுள்ள வரிகள் மிக அருமை.
ஸ்ரீராம். //
சொல்ல வந்த கருத்தைப் புரிய வைக்க சொல்லியுள்ள வரிகள் மிக அருமை.//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
’இருபதாண்டுக் காலம்
செக்கினைச் சுற்றுகிற மாட்டுக்கு
எத்தனைபடி எள்ளுக்கு
எத்தனைபடி எண்ணையென
தெரியவா செய்யும் ?’
பழமொழிபோலவே அனுபவதோட சிந்திச்சு எழுதிற உங்கள் ஒவ்வொரு கவிதைகளும் முத்துக்கள் !
சோர்ந்துறங்கும் பிள்ளையைத் தட்டி எழுப்பி சோறு போடும் தாயின் பரிவினைப் போல் ஒவ்வொரு முறையும் சோர்விலிருந்து எனை மீட்டு புத்துணர்வளிக்கின்றன உங்கள் கவி வரிகள். நன்றியும் பாராட்டும் ரமணி சார்.
ஹேமா //
பழமொழிபோலவே அனுபவதோட சிந்திச்சு எழுதிற உங்கள் ஒவ்வொரு கவிதைகளும் முத்துக்கள் !//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
சோர்ந்துறங்கும் பிள்ளையைத் தட்டி எழுப்பி சோறு போடும் தாயின் பரிவினைப் போல் ஒவ்வொரு முறையும் சோர்விலிருந்து எனை மீட்டு புத்துணர்வளிக்கின்றன உங்கள் கவி வரிகள். நன்றியும் பாராட்டும் ரமணி சார்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
தொடர்ந்து எழுதஉற்சாகமூட்டிப்போகும்
தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
750வது ஆக்கம் முடித்த எனக்கு இது பொருத்தமாக உள்ளது சகோதரா. நல்ல கருத்துத் தெளித்துள்ளீர்கள் தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
750வது ஆக்கம் முடித்த எனக்கு இது பொருத்தமாக உள்ளது சகோதரா. நல்ல கருத்துத் தெளித்துள்ளீர்கள் தொடரட்டும் பணி.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
தொடர்ந்து எழுதஉற்சாகமூட்டிப்போகும்
தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கிடைத்ததை படித்த அனுபவத்திற்கும் விரும்பித் தேடிப்படித்த அனுபவத்திற்குமான வேறுபாடாய் தெரிகிறது! எனது கண்ணோட்டம் சரியா Sir!!!
Post a Comment