சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
உன்னைத் தாண்டும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா
இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
உயரப் பறக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா
வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வரிகள்
நீயும் எழுத மாட்டியா
கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல நீயும்
உரத்துக் கதற மாட்டியா
விதையாய் கவிதை அனை வரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே
மீள்பதிவு
உன்னைத் தாண்டிப் போனா
உன்னைத் தாண்டும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா
இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
உயரப் பறக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா
வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வரிகள்
நீயும் எழுத மாட்டியா
கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல நீயும்
உரத்துக் கதற மாட்டியா
விதையாய் கவிதை அனை வரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே
மீள்பதிவு
60 comments:
//விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே//
அந்த நுட்பம் இது போன்ற கவிதைகளை படித்தால்தான் புரியத் தொடங்கும்
த. ம.
அப்போ படிக்கலை இப்போ தான் படிக்கிறேன் அருமை
//விதையாய் கவிதை அனை வரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே//
அருமையான வரிகள்!!
வண்ணங்களைக் குழைத்து நகாசு வேலைகள் செய்து பார்த்தாலும் கற்பனையும் ஜீவனும் முழுமையாகக் கலந்தால்தான் மட்டுமே உயிர்துடிப்புள்ள ஓவியங்களைப் படைக்க முடியும்.
கவிதைகள் பிறப்பது கூட அப்படித்தான்!
கை விரல்களில் கைவரப் பெற்றிருக்கும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை உங்களைப்போல!!
இனிய வாழ்த்துக்கள்!!
// விதையாய் கவிதை அனைவரிடத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது //
உங்கள் எண்ணம் வீணாகாமல் இருக்க உங்களைப் போன்றவர்கள் கவியரங்கக் கூட்டத்தினை அடிக்கடி நடத்தி புதிய கவிஞர்களை உருவாக்கலாம்.
கவிதை கலக்குது...
சொல்லில் குழைத்துப் பார்க்கும் நுட்பம்... அது கைவந்து விட்டால்... வார்த்தை வசப்பட்டு விட்டால் அனைவரும் கவிஞர்களே... அருமை ஐயா. இந்த அழகான சிந்தனையை இப்போதுதான் படிக்கிறேன். நன்றி.
கவிதை எழுத எல்லாருக்கும் கைவந்துவிடாதே.
கவிஞன் உருவாகும் காரணம் அனைத்தும் சொன்ன பதிவு அருமை... மீள் பதிவில் படிக்காமல் விட்டதையும் படிக்கிறோம் நன்றி
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே.
உண்மைதான் ஐயா எல்லோருக்கும் கவிதை வரும்.
நல்ல கவிதை :)
எங்களையும் கவிஞர் ஆக்கி விடுவீர்கள் போல :)
மீள் பதிவு-நான் படித்ததில்லை-இப்போது தான்.
முயற்சி செய்தால் கவிதை வரும். (துன்பம் வரும் போது இன்னும் நிறைய வரும்).
நன்றி.
(த.ம. 10)
கலக்கல் கவிதை சார்.
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வரிகள்
நீயும் எழுத மாட்டியா
(ஆஹா நீங்கள் என்னைத் தானே கேட்கின்றீர்கள்?.... :):) )
விதையாய் கவிதை அனை வரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில் -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே
இது இதுதான் நாம் வந்த வழி!!..அருமை!..
தொடர வாழ்த்துகள் ஐயா .
சரியாகச்சொன்னீர்கள் ஐயா...எல்லோர்ரும் கவிஞர்களே!!!!!!வாழ்த்துக்கள் ஐயா.
மீள் பதிவு என்றாலும் கவிதை கவிதைதானே சார்.......
எப்போது படித்தாலும் திவட்டாத வரிகள்
tha.ma.12
அருமையான கவிதை ஐயா.
“உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல நீயும்
உரத்துக் கதற மாட்டியா“
அவர் போல் மரபில் கதற கொஞ்சம் கஷ்டம் தான் ரமணி ஐயா.
//-உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே//
கிளிகொஞ்சும் வரிகள். பாராட்டுக்கள். vgk
இப்போதுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன்...கவிதை அருமை...இனி தொடர்ந்து வருவேன்...
திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்)அவர்களிடமிருந்து தாங்கள் “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
super..
இங்கு காணல் நீர் வாழ்க்கை வெகு சிலருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.அதில் விதையாய் ஊண்யுள்ள பல விஷயங்கள் தெரியாமல் போவது ஆச்சரியமே/
நல்ல கவிதை.
அருமையாக உள்ளது! எல்லோரும் கவிஞர்கள் எல்லோரும் கலைஞர்கள்.... சிந்தனை சிறகும் கற்பனை குதிரையும் தொடங்கிவிட்டால்....
அன்றே...
கவியரசர்..
"ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா"
என சொல்லி வைத்தார்...
அவர் சொன்ன துடிப்புக்கு இவ்வளவு பொருளா.. என்று
தங்கள் கவிதையில் இருந்து அறிந்துகொண்டேன்..
உணர்வுள்ள சொற்கள் ஒவ்வொன்றும்
கவிதைக்குச் சமமே...
குருவே, ஆயிரம் வருஷம் தவமிருந்தாலும் எழுத்து நடைக்கு உங்கள் கால் தூசு பக்கம் கூட நம்மால் வரமுடியாது...! அசத்தல்...!
வாழ்த்துகள்....!
அருமை. உணர்வில் கிளர்ந்தெழும் வரிகளே கவிதை என்று அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மீள்பதிவு என்று சொன்னாலும் இப்போதுதான் நானும் படிக்கிறேன்.
ரமணி சார்,
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானுமதுவாகப் பாவித்து தன்
பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
இந்தக் கவிதை என் நிலையைத் தெளிவாக படம் போட்டுக் காட்டுகிறது.
நல்ல கவிதை :)
http://kovaikkavi.wordpress.com/2010/12/20/185/
தானாகவும் எழும் பொறியுமன்றோ ...நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
T.N.MURALIDHARAN //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மோகன் குமார் //
அப்போ படிக்கலை இப்போ தான் படிக்கிறேன் அருமை//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
கவிதைகள் பிறப்பது கூட அப்படித்தான்!
கை விரல்களில் கைவரப் பெற்றிருக்கும் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை உங்களைப்போல!!
இனிய வாழ்த்துக்கள்!! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சீனு //
கவிஞன் உருவாகும் காரணம் அனைத்தும் சொன்ன பதிவு அருமை..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
உண்மைதான் ஐயா எல்லோருக்கும் கவிதை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள்
நல்ல கவிதை ://
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Veera//
எங்களையும் கவிஞர் ஆக்கி விடுவீர்கள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
முயற்சி செய்தால் கவிதை வரும்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையாபின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
கலக்கல் கவிதை சார்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
இது இதுதான் நாம் வந்த வழி!!..அருமை!..
தொடர வாழ்த்துகள் ஐயா .'//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Athisaya //
சரியாகச்சொன்னீர்கள் ஐயா...எல்லோர்ரும் கவிஞர்களே!!!!!!வாழ்த்துக்கள் ஐயா.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //.
எப்போது படித்தாலும் திவட்டாத வரிகள்/
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
அருமையான கவிதை ஐயா./
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன்//
கிளிகொஞ்சும் வரிகள். பாராட்டுக்கள். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
NKS.ஹாஜா மைதீன் //
இப்போதுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன்...கவிதை அருமை...இனி தொடர்ந்து வருவேன்.../
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தாங்கள் “SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
நல்ல கவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ayeshaFAROOK //
அருமையாக உள்ளது!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன்//
உணர்வுள்ள சொற்கள் ஒவ்வொன்றும்
கவிதைக்குச் சமமே...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
குருவே, ஆயிரம் வருஷம் தவமிருந்தாலும் எழுத்து நடைக்கு உங்கள் கால் தூசு பக்கம் கூட நம்மால் வரமுடியாது...! அசத்தல்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம்.//
அருமை. உணர்வில் கிளர்ந்தெழும் வரிகளே கவிதை என்று அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பழனி.கந்தசாமி //
தங்கள் கூற்று என்னைப்
பாராட்டுவதற்காக சொல்லப்பட்டவை
என மட்டும் எடுத்துக் கொள்கிறேன்
ஏனெனில் தங்களைப்போல பயனுள்ள பொறுப்பான
பதிவுகள் எழுத முயன்று தோற்ற்க் கொண்டிருக்கும்
தங்கள் எழுத்தின் ரசிகன் நான
வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையாபின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment