Friday, September 20, 2013

சினிமா- ஒரு மாய மோகினி

எப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்
வந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்
அனுமானிக்க முடியவில்லை

எங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்
நாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்
ஹரிச்சந்தரா நாடகமும்.தெரிந்த கதைதான்
என்றாலும் கூட எங்களூர் "பெருசுகள் "
ஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்
எந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ
அவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்
செய்வார்கள்

அவர்களுக்கு ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்
பாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்
எனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை
உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

பல சமயங்களில்  வள்ளி திருமணத்தில்  வள்ளிக்கும்
முருகனுக்குமான  இறுதி தர்க்கம் முடிவடையாது
வள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்
அதன் தொடர்சியாய் "பெருசுகள் " அப்படி
மாலை வாங்காமல் போனால் ஊருக்கு
ஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி
மேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த
நிகழ்வுகள் இப்போது  கூடஎன்னுள் நிழற்படமாய்
ஓடிக் கொண்டுதான்  இருக்கிறது

அந்த சமயத்தில் "புதுமையும் புரட்சியுமே " எங்கள்
மூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த
சிலரும்படித்து வேலை கிடைக்காமல்
அலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்
 இருந்தோம்

.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள்  இப்படியே
விட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்
ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்
கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்
உடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை
உள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

என்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்
கொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்
ஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்
செய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக
ஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்

(தொடரும் )

31 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதுமையும் புரட்சியுமாய் நல்ல ஆரம்பம் ஐயா... தொடர்கிறேன்...

கிரேஸ் said...

அட, ஆவலாய் இருக்கிறதே..

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம். தொடருங்கள்.

கே. பி. ஜனா... said...

ஆஹா! தொடர்க!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நாடக ஆரம்பமே சுவாரஸ்யமாக உள்ளது. தொடருங்கள்.

இளமதி said...

அடாடா... நாடக அனுபவாமா ஐயா.. ஆவலாயுள்ளேன்.
தொடருங்கள்!...

T.N.MURALIDHARAN said...

யாராக இருந்தாலும் சினிமா வந்தபின் வாழ்வில் ஒரு முறையாவது ஈர்த்திருக்கும். அனுபவங்களை சுவாரசியமாக சொல்லும் வல்லமை பெற்றவர் தாங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.

T.N.MURALIDHARAN said...

த. ம. 5

கோமதி அரசு said...

ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்//
சொந்தமாக நாடககுழு ஆரம்பிப்பது பெரிய காரியம் அல்லவா!
உங்கள் அனுபவங்களை வாசிக்க காத்து இருக்கிறோம்.
என் தாய் மாமா நிறைய நாடகங்கள் போடுவார்கள், கோவில் திருவிழாக்கள், பொருட்காட்சி இவற்றில் எல்லாம் , அவர்கள் நாடககுழு அமைத்தது, அதை வெற்றிகரமாக நடத்தி செல்லுவது எப்படி என்று எல்லாம் சொல்வார்கள் நாங்கள் சிறு வயதில் மாமாவை சுத்தி உட்கார்ந்து கொண்டு ஆ என்று கேட்போம்.
சமூக நாடகம்
என்ன போட்டீர்கள் என்று அறிய ஆவல்.

Anonymous said...

வணக்கம்
ஐயா
சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

குடும்பத்தில் மட்டும்மல்ல பற்று சமுகத்தின் மீதுள்ள பற்றும் மிக தெளிவாக இயம்பியுள்ளீர்கள் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல ஆரம்பம் தொடருங்கள். தொடர்ககிறேன் நன்றி

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாகத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடருங்கள்.

வேடந்தாங்கல் - கருண் said...

ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்/// ஆரம்பம் அருமை தொடரவும்..

G.M Balasubramaniam said...


நான் சிறு வயதில் அரக்கோணத்தில் பார்த்த தெருக்கூத்து நாடகங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது இப்பதிவு. நாடகக் கம்பனி நடத்திய அனுபவம் பகிரக் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

உஷா அன்பரசு said...

சமூக நோக்கத்தோடு நீங்கள் நாடக குழுவை அமைத்தது பாராட்ட வேண்டிய விஷயம். நிச்சயம் நல்ல சிந்தனைகளை விதைத்திருப்பீர்கள்.

சீனு said...

அட நீங்களும் தொடர் எழுத தொடங்கியாயிற்றா அமர்க்களம்

s suresh said...

சுவையாக இருக்கிறது உங்கள் நாடக குழுவின் ஆரம்பம்! தொடர்கிறேன்! நன்றி!

மனோ சாமிநாதன் said...

ஆரம்பம் மிக சுவார்சியம்! தொடருங்கள்!!

vanathy said...

What happened next? Waiting.

Suresh Kumar said...

ஆஹா அருமை, அந்த வயதிலேயே சமூக நாடகம் நடத்த முனைந்து இருக்கிறீர்களா, ஆரம்பமே அசத்தல்.... தொடர்கிறேன் !

பால கணேஷ் said...

சி­ல ­­வி­ஷ­யங்­க­ளை ­உங்­க­ளை ­போன்­ற­­வர்­கள் ­சொல்­லு­கை­யில், ­­ப­டிப்­ப­வர் ­தம் ­வாழ்வோ­டு ­ஒப்ப்­பிட்­டு ­ம­ல­ரும் ­நி­னை­வு­க­ளை ­மீட்­ட ­இ­ய­லு­கி­ற­து! அந்­த ­வ­கை­யில் ­இ­து­வும் ­­­ப­டிப்­ப­வ­ரை ­உள்­ளே ­இ­­ழுக்­கி­ற ­வ­கை­யில் ­சு­வா­ரஸ்­ய­மா ­ஆ­ரம்­பிச்சி­ருக்க்­கீங்­க. தொ­ட­ருங்­கள் ­­ஐ­யா...!

Anonymous said...

ஓ அப்படியா ? அப்புறம் ?

கவியாழி கண்ணதாசன் said...

உங்களின்சினிமாபற்றியபுரிதல்எல்லோருக்கும்பயனாய்இருக்கட்டும்

கவியாழி கண்ணதாசன் said...

உங்களின்சினிமாபற்றியபுரிதல்எல்லோருக்கும்பயனாய்இருக்கட்டும்

மாதேவி said...

நாடகஆரம்பம் சுவாரஸ்யம். அப்புறம்.....

Bagawanjee KA said...

சீக்கிரம் நாடகத்தை போடுங்கள் ...ஆவலோடு இருக்கிறோம் !

Anonymous said...

ஓ! நாடக நடிகனா?...சொல்லுங்கோ!..சொல்லுங்கோ....! வாசிக்க ஆவலாக உள்ளது... ஆரம்பமே நன்று..நன்று....
இனிய வாழ்த்து....
வேதா. இலங்காதிலகம்.

புலவர் இராமாநுசம் said...

முன் வரிசையில் நான் இப்பொழுதே இடம் பிடித்து விட்டேன்!

விமலன் said...

இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறது விதை விட்டிருக்கிறது எல்லாமும்,
இன்று இயக்கமாய் பெருவிருட்சம் கண்டுள்ள பலவற்றில் இருக்கிற முக்கிய நபர்கள் இப்படி வந்தவர்களே/இதற்கு முக்கிய காரணியாய் சொல்லப்படுவது 80 களில் தலைவிரித்தாடிய வேலை இல்லா த்திண்டாட்டம் ஒருமிகப்பெரிய காரணம் என.எங்கேஜ் அற்ற வெற்றிடமான மனது விதைத்ததை முளைக்கச்செய்துவிடும் தன்மைகொண்டதாய்.அப்படியான தன்மைகளில் ஒன்றே வள்ளிதிருமண நாடகத்திலிருந்து வெளியேறி வேற்று தேடவைத்திருக்கிறது,தவிர ஒரு மாற்று தேடுகிற இளம் உள்ளமும் காரணமாய் இருந்திருக்கிறது.குறிப்பாக 80களில் கலை இலக்கியம்,அரசியலில் மட்டுமல்ல, அனைத்திலும் ஒரு மாற்று வந்தது, டெய்லரிங்கில்,பெய்ண்டிங்கில்,வால்போஸ்டரில்,சுவர் விளம்பரங்களில்,நாம் உடுத்துகிற சட்டை பேண்ட்டில்,,,,,இன்னும்,இன்னமுமான நிறைய விஷயங்களில்(அதுவும் உங்களது ஊரில் சொல்லவே வேண்டியதில்லை) தென்பட்ட மாற்றம் வள்ளி திருமணத்தையும் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது,பொதுவாக உங்களது பதிவில் ஒரு கால நிகழ்வை பதிவு செய்கிற நோக்கம் அல்லது அவசியம் தெரிகிறது,அதை முடிந்தால் கதையாக உருமாற்றம் செய்யலாம் என்பது எனது ஒரு சின்ன விருப்பம்,நண்பருக்காய் நீங்கள் மருத்துவமனையில் குடிகொண்டிருந்த நிகழ்வு இன்னும் உங்களது எந்த பதிவை படிக்க நேர்கிற சமயத்திலும் வந்து போகிற ஒன்றாய்.,,,,,,/அதுதான் எழுத்தின் பலம் என நினைக்கிறேன்,வாழ்த்துக்கள் சார்,நன்றி வணக்கம்/

தி.தமிழ் இளங்கோ said...

// இந்தப் பெருசுகள் இப்படியேவிட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும் ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். //

பொன்னர் – சங்கரை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல இடங்களில் இந்த கூத்துக்கள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

Ranjani Narayanan said...

அட! நாடகக் குழு ஒன்று ஆரம்பித்தீர்களா? எங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது, என்று சொல்லுங்கள். தொடர்கிறேன்.

Post a Comment